இந்தியாவில் EV ஸ்கூட்டருக்கு டீலர்களை தேடும் வின்ஃபாஸ்ட்!
ஆட்டோமொபைல்
- 1 day ago
வியட்நாமைச் சேர்ந்த மின்சார வாகன தயாரிப்பு நிறுவனமான வின்ஃபாஸ்ட் நிறுவனம், இந்தியாவின் மின்சார இருசக்கர வாகன சந்தையில் களமிறங்குவதற்கான அடுத்தகட்ட பணிகளை வேகப்படுத்தி உள்ளது. இதன் ஒரு பகுதியாக, இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மற்றும் மோட்டார்சைக்கிள்களை விற்பனை மற்றும் விற்பனைக்கு பிந்தைய சேவைகளை வழங்குவதற்கான டீலர்களை தேடும் பணியை துவங்கி இருக்கிறது.