உங்கள் ஊர்களில் தற்போதைய வெப்பநிலை!

தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இன்று காலை 10.40 மணிக்குப் பதிவான வெப்பநிலை அளவுகள் (டிகிரி செல்சியஸில்) பின்வருமாறு: சென்னை-27; மதுரை-30; கோயம்புத்தூர்-28; திருச்சி-29; திருநெல்வேலி-31; திண்டுக்கல்-30; ஈரோடு-30; சேலம்-28; சிவகாசி-31; தஞ்சாவூர்-31; தூத்துக்குடி-33; திருப்பூர்-29; வேலூர்-29; ஊட்டி-16; கொடைக்கானல்-18; ஏற்காடு-23; ஏலகிரி-27; வேடந்தாங்கல்-29.

தங்கம் விலை சிறிது உயர்வு!

ஆபரணத் தங்கத்தின் விலை நேற்றை விட இன்று ஒரு கிராமுக்கு ரூ.8 அதிகரித்துள்ளது. 22 கேரட் தங்கம் தற்போது ஒரு கிராமுக்கு ரூ.2,944 ஆக விற்பனையாகிறது. ஒரு சவரன் 22 கேரட் தங்கத்தின் விலை ரூ.23,552 ஆகும். 24 கேரட் தங்கம் 10 கிராமுக்கு ரூ.30,910க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.40.00 ஆகும். ஒரு கிலோ வெள்ளிக் கட்டி ரூ.40,000 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

பங்குச் சந்தைகள் நல்ல உயர்வுடன் தொடக்கம்!

வார வர்த்தகத்தின் 3ஆவது நாளான இன்று பங்குச் சந்தைகள் நல்ல ஏற்றத்துடன் தொடங்கியுள்ளன. இன்று காலை வர்த்தகத் தொடக்கத்தில், மும்பை பங்குச் சந்தை (சென்செக்ஸ்) 191.98 புள்ளிகள் உயர்ந்து 37,482.65 புள்ளிகளாக இருந்தது. தேசியப் பங்குச் சந்தை (நிஃப்டி) 45.55 புள்ளிகள் அதிகரித்து 11,324.45 புள்ளிகளாக இருந்தது.

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் உயர்வு!

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு நொடிக்கு 8,483 கன அடியிலிருந்து 9,119 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர் மட்டம் 110.58 அடி; நீர் இருப்பு 79.23 டி.எம்.சி. ஆகும். டெல்டா பாசன வசதிக்காக அணையிலிருந்து நொடிக்கு 22,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது. கிழக்கு மற்றும் மேற்குக் கால்வாய் பாசனத்திற்காக அணையிலிருந்து வழக்கம்போல் நொடிக்கு 800 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.
Advertisement

ராதிகாவின் இரட்டை வேடம் ஓவர்: அடுத்து 7 வேடங்கள்!

சன் தொலைக்காட்சியில் ராதிகா இரட்டை வேடங்களில் நடித்து வரும் 'வாணி ராணி' தொடர் விரைவில் முடிவடைய உள்ளது. இதைத் தொடர்ந்து, அவருடைய ராடான் மீடியா ஒர்க்ஸ் தயாரிக்கும் 'சந்திரகுமாரி' தொடர் மிகவும் பிரம்மாண்டமாகத் தயாராகிக் கொண்டிருக்கிறது. இந்தத் தொடரில் 7 வேடங்களில் நடித்துக் கலக்கவிருக்கிறாராம் ராதிகா. அடுத்த மாத இறுதி முதல் சன் டி.வி.யில் ஒளிபரப்பாக உள்ளது 'சந்திரகுமாரி'.

சீறும் இந்தியா, இத்தனை வேகமா..!? - வாய்பிளக்கும் ஜி7 நாடுகள்..!

சமீபத்தில் இந்தியா தனது நாட்டின் பாதுகாப்பை மிகவும் பலப்படுத்தும் நோக்கத்தில் ஒரு முழு நீள, பல-அடுக்கு பல்லிஸ்டிக் ஏவுகணை பாதுகாப்பு அமைப்பை (Ballistic Missile Defence system) உருவாக்கும் நோக்கத்தில் வெற்றி அடைந்ததை நாம் அறிவோம் - அந்த வெற்றியானது அதிநவீன இந்திய ஏவுகணை தொழில்நுட்பத்தின் ஒரு சிறு பகுதி மட்டுமே.

தற்போது இந்தியா உலக நாடுகளுக்கு மத்தியில் தன்னுடைய அடுத்த கட்டத்திற்கு செல்கிறது..!

நள்ளிரவில் மழை: பெங்களூரு ஆனது சென்னை!

சென்னையில் நேற்று ஆங்காங்கே மழை பெய்து வந்த நிலையில், நள்ளிரவுக்கு மேல் பல இடங்களில் மீண்டும் பலத்த காற்றுடனும் இடி-மின்னல்களுடனும் மழை கொட்டியது. சென்னையின் புறநகர்ப் பகுதிகளிலும் கனமழை வெளுத்து வாங்கியது. இதையடுத்து சென்னை முழுவதிலுமே இன்று காலை அருமையான குளிர் நிலவுகிறது. இன்றும் ஒரு நல்ல மழையை சென்னை மக்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.

ஆசியக் கோப்பை 2018: அசத்திய ஹாங் காங்; இந்தியாவுக்கு வெற்றி!

ஆசியக் கோப்பை 2018 ஒருநாள் கிரிக்கெட் தொடரில் நேற்று இரவு நடந்த ஒரு ஏ-குரூப் ஆட்டத்தில், ஹாங் காங் அணியை 26 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்திய அணி. வெற்றி பெற 286 ரன்கள் என்ற கடின இலக்கை இந்திய அணி கொடுத்த போதிலும், புதிய ஹாங் காங் அணியின் வீரர்கள் இந்தியாவை வெலவெலக்கச் செய்து விட்டனர். ஸ்கோர்: இந்தியா-285/7 (50), ஹாங் காங்-259/8 (50).

இன்றைய சென்னை வானிலை!

சென்னையில் இன்றும் காலையில் அருமையான குளிர் நிலவியது. காலை 7.30 மணிக்கு 24 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. இது பகலில் அதிகபட்சமாக 32 டிகிரியாகவும், இரவில் குறைந்தபட்சமாக 26 டிகிரியாகவும் இருக்கும். இன்று பல இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும். இன்றைய சூரிய உதயம்: காலை 05:58, மறைவு: மாலை 06:08; சந்திர உதயம்: பிற்பகல் 02:13, மறைவு: பின்னிரவு 01:56.

இன்றைய பஞ்சாங்கம்!

விளம்பி ஆண்டு, புரட்டாசி 3; பிறை: வளர்பிறை; திதி: தசமி மறுநாள் நள்ளிரவு 12:31 வரை, பிறகு ஏகாதசி; நட்சத்திரம்: பூராடம் பிற்பகல் 01:26 வரை, பிறகு உத்திராடம்; யோகம்: அமிர்தயோகம்; சூலம்: வடக்கு; ராகுகாலம்: பகல் 12:00 முதல் 01:30 வரை; எமகண்டம்: காலை 07:30 முதல் 09:00 வரை; குளிகை: காலை 10:30 முதல் பகல் 12:00 வரை; நல்ல நேரம்: காலை 09:00-10:00; மாலை 04:00-05:00

இன்று காலை 07:20க்கு உங்கள் ஊர்களில் வெப்பநிலை!

தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இன்று காலை 7.20 மணிக்குப் பதிவான வெப்பநிலை அளவுகள் (டிகிரி செல்சியஸில்) பின்வருமாறு: சென்னை-24; மதுரை-26; கோயம்புத்தூர்-23; திருச்சி-28; திருநெல்வேலி-26; திண்டுக்கல்-24; ஈரோடு-23; சேலம்-25; சிவகாசி-25; தஞ்சாவூர்-26; தூத்துக்குடி-27; திருப்பூர்-24; வேலூர்-26; ஊட்டி-13; கொடைக்கானல்-14; ஏற்காடு-20; ஏலகிரி-22; வேடந்தாங்கல்-27.

இன்றைய ராசிபலன்!

ஒவ்வொரு ராசிக்குமான ராசிபலன்களின் விவரங்கள் பின்வருமாறு: மேஷம்-அனுகூலம்; ரிஷபம்-நன்மை; மிதுனம்-பீடை; கடகம்-மகிழ்ச்சி; சிம்மம்-பொறுமை; கன்னி-போட்டி; துலாம்-பெருமை; விருச்சிகம்-அன்பு; தனுசு-திறமை; மகரம்-தனம்; கும்பம்-தாமதம்; மீனம்-நற்செய்தி... ராசிக்கேற்ற பலன்கள் கிடைக்க அனைவரையும் வாழ்த்துகிறோம். 

பெட்ரோல், டீசல் விலைகளில் மாற்றமில்லை!

இன்று பெட்ரோல் விலை மாற்றமின்றி லிட்டருக்கு ரூ.85.41க்கு விற்கப்படுகிறது. டீசலின் விலையும் மாற்றமில்லாமல் லிட்டருக்கு ரூ.78.10 என விற்பனையாகிறது. இன்று காலை 6 மணி முதல் இந்த விலைகள் அமலுக்கு வருவதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. பெட்ரோல், டீசல் விலைகள் குறைய வேண்டும் என்பதே மக்கள் எண்ணம்!

வரலாற்றில் இன்று!

சிலி ராணுவ தினம். 1893 - சுவாமி விவேகானந்தர் சிகாகோ உலக சமய மாநாட்டில் உலகப் புகழ்பெற்ற சொற்பொழிவை நிகழ்த்தினார்.1893 - நியூசிலாந்து பெண்களுக்கு வாக்குரிமை வழங்கிய முதல் நாடானது.1957 - அமெரிக்கா, நிலத்துக்கடியே தனது முதலாவது அணுகுண்டுச் சோதனையை நடத்தியது. 1676 - வர்ஜீனியா, ஜேம்சுடவுன் நகரம் தீயிடப்பட்டு அழிக்கப்பட்டது.

யோகி பாபுவுக்கு இப்படி ஒரு வருத்தமா?...

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடியானாக கலக்கி வருபவர் யோகி பாபு. இவர் பரியேறும் பெருமாள் படத்தில் நடித்து குறித்து ஒரு பேட்டி அளித்துள்ளார். அதில், தன் வாழ்வில் உள்ள வருத்தம் குறித்து பேசியுள்ளார். இந்தப் படத்தில் கல்லூரி மாணவனாக நடித்தது மறக்க முடியாத அனுபவம். நானும் கல்லூரியில் படித்திருக்கலாமோ என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது என கூறியுள்ளார் 

விஜய் சொன்னதை பின்பற்றும் நயன்தாரா காதலன்!

நடிகை நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருவது அனைவரும் அறிந்ததே. இவரிடம் சமூக வலைதளங்களில் உங்களை கிண்டல் செய்வதை எப்படி பார்க்கிறீர்கள் என கேள்விக்கு நான் நடிகர் விஜய் கூறியதை பின்பற்றுகிறேன் என கூறியுள்ளார். விஜய் கூறிய Ignore Negativity அந்த விஷயத்தை நான் பாலோ செய்கிறேன் என கூறியுள்ளார். 
Advertisement

12 ராசிகளில் இன்று புதன் உச்சம் பெற்ற ராசிகள் யார் யார்?

உங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம். ஒவ்வொரு ராசிக்குமான அதிர்ஷ்ட எண், அதிர்ஷ்ட திசை, அதிர்ஷ்ட நிறம் ஆகியவற்றைத் தெரிநது கொண்டால் பாதி பிரச்னைகள் நமக்கு நீங்கும். எந்தெந்த இடங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் முதலில் உயர்ந்து கொள்ள வேண்டும்.

சசிகுமாருடன் இணையும் கீர்த்தி சுரேஷ்!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் முன்னணி நடிகர்களான விஜய், சூர்யா, விக்ரம் போன்ற நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், அவர் நடிகர் சசிகுமாருடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். சுந்தரபாண்டியன் படத்தை இயக்கிய பிரபாகரன இந்த படத்தை இயக்கவுள்ளார். படத்திற்கு கொம்பு வைச்ச சிங்கம் என பெயர் வைத்துள்ளனர். 

இசையில் ஸ்ருதி!

படவாய்ப்பு குறைந்திருப்பதால் இசையில் அதிக கவனம் செலுத்தி வருகிறார் ஸ்ருதி ஹாசன். கைவசமாக கமலின் சபாஷ் நாயுடு படம் மட்டுமே ஸ்ருதியின் கையில் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் தனது இசைக்குழுவான நியூ மியுசிக் மன்டே மூலம் அமெரிக்காவில் பல்வேறு இசைநிகழ்ச்சியில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டாராம் ஸ்ருதி ஹாசன்.

பிக்பாஸ் விஜயலட்சுமிக்கு ஓட்டு கேட்கும் இயக்குநர்

பிக்பாஸ்-2வில் ஒயில்கார்டு எண்ட்ரிமூலம் நுழைந்த நடிகை விஜயலட்சுமி தற்போது பிக்பாஸ் வீட்டில் ஐஸ்வர்யாவை கதறவிடுகிறார். இதில் இந்த வாரம் நாமினேட் செய்யப்பட்ட விஜயலட்சுமிக்கு வாக்களிக்குமாறு அவருடைய தந்தை பிரபல இயக்குநர் அகத்தியன் வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில், மகளுக்காக வாக்ககளிக்க தங்களிடம் கேட்பதில் மகிழ்வும் பெருமையும். விருப்பம் தங்களைச் சார்ந்தது" என்று கூறியுள்ளார்.

வரலட்சுமி பட தலைப்பு அனுமதி கொடுப்பாரா கமல்!

பார்வையற்ற பெண்ணாக வரலட்சுமி சரத்குமார் நடிக்க இருக்கும் புதிய படத்திற்கு ராஜபார்வை என்ற தலைப்பிட படக்குழு முடிவு செய்துள்ளதாம். ஏற்கெனவே கமல்ஹாசன் நடிப்பில் வெளியான ராஜபார்வை படத்தில் தலைப்பை பெற கொஞ்சம் சிரமம் என சொல்லப்படுகிறது. இது தொடர்பாக கமலை அனுக படக்குழு திட்டமிட்டுள்ளது.

ஆடியின் மின்சார கார் அறிமுகம்!

பிரபல காஸ்ட்லியான கார்களில் ஒன்றான ஆடி கார் நிறுவனம் முதன் முறையாக, மின்சாரத்தில் இயங்கக்கூடிய காரை அறிமுகம் செய்து வைத்துள்ளது. இ-டிரான் பெயரில் வெளியாக இருக்கும் இந்த கார் அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் சந்தையில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய ஆடி மின்சார காரின் விலை சுமார் ஐந்தரை கோடி ரூபாய் என தெரியவந்துள்ளது.

ஆசிய கோப்பை: இந்தியாவை விரட்டி வரும் ஹாங் காங் 175/1 (35)!

துபாயில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை ஒருநாள் தொடரின் ஹாங் காங் எதிரான போட்டியில் முதலில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 285 ரன்கள் குவித்தது. இதையடுத்து களமிறங்கிய ஹாங் காங் சற்றுமுன் வரை, 34 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் எடுத்துள்ளது. இதில் அதிகபட்சமாக நிஜாக்கத் கான் 92 ரன்கள் குவித்து விளையாடி வருகிறார்

தமிழிசை என்ன எலிசபெத் ராணியா?

தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தப் போது, அருகில் இருந்த ஆட்டோ ஒட்டுனர் டீசல் விலை உயர்வு குறித்து அவரிடம் கேள்வி எழுப்பினார். இதற்கு பா.ஜனதா தொண்டர்கள் ஆட்டோ ஒட்டுனரை சரமாறியாக தாக்கினர். இதற்கு கண்டனம் தெரிவித்த திமுக பொருளாளர் துரைமுருகன், கேள்வி கேட்பவர்களை தாக்குவதா? தமிழிசை என்ன எலிசபெத் ராணியா என கேள்வி எழுப்பியுள்ளார்.

தெலுங்கில் ஸ்ரத்தா கபூர்!

பிரபாஸ், ஸ்ரத்தா கபூர் ஜோடியாக நடித்து வரும் சாஹோ படத்தில் தானே சொந்த குரலில் தெலுங்கு பேச ஸ்ரத்தா கபூர் முடிவு செய்துள்ளார். இருப்பினும் படக்குழு இந்த முயற்சியை இன்னும் ஏற்கவில்லை என சொல்லப்படுகிறது. தெலுங்கில் நேரடியாக ஸ்ரத்தா கபூர் நேரடியாக நடிக்கும் முதல் படம் சாஹோ என்பது குறிப்பிடத்தக்கது.