ரூ.7 லட்சத்தில் வரும் புதிய ரெனோ பிரிட்ஜர் எஸ்யூவி!

இந்தியாவில் தனது வர்த்தகத்தை வலுவாக மாற்றும் முயற்சியில் ரெனோ கார் நிறுவனம் தீவிரமாக இறங்கி உள்ளது. அந்த வகையில், மிக அதிக வர்த்தக வாய்ப்பு இருக்கும் காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் சிறந்த தயாரிப்பை விரைவில் களமிறக்க திட்டமிட்டுள்ளது. அந்த வகையில், 4 மீட்டருக்குள் உருவாக்கப்பட்டுள்ள புதிய பிரிட்ஜர் (Bridger) எஸ்யூவியை வரும் ஆண்டு இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வருவதற்கு முடிவு செய்துள்ளது. இது இந்தியாவுக்காக வடிவமைத்து உருவாக்கப்படும் புதிய தலைமுறை நகர்ப்புற எஸ்யூவியாக வர இருக்கிறது.

ரூ.2.75 லட்சத்தில் புதிய ஹோண்டா சிபி500 மோட்டார்சைக்கிள்!

இந்தியாவின் பிரீமியம் மோட்டார்சைக்கிள் சந்தையில் தனக்கென தனி இடம் பிடித்துள்ள ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம், தனது புதிய சிபி500 (Honda CB500) மோட்டார்சைக்கிளை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. ராயல் என்ஃபீல்டு சந்தையை குறிவைத்து பாரம்பரிய டிசைன் தாத்பரியங்களுடன் இந்த மோட்டார்சைக்கிள் களமிறக்கப்பட்டு இருக்கிறது.

சென்னையில் ஷோரூம் திறக்கும் டெஸ்லா கார் நிறுவனம்

அமெரிக்காவின் பிரபல மின்சார கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா, இந்திய சந்தையில் எதிர்பார்த்த அளவு விற்பனையை பெறவில்லை. தற்போது விற்பனையை அதிகரிப்பதற்கான தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, வாடிக்கையாளர்களுக்கு நெருக்கமான சேவையை வழங்கும் வகையில், தனது நேரடி விற்பனை மையமான (Tesla Experience Center) எண்ணிக்கையை அதிகப்படுத்தும் முயற்சிகளில் தீவிரம் காட்டி வருகிறது.

ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 பைக்கில் வெள்ளை நிற தேர்வு

ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தனது மிகவும் பிரபலமான கிளாசிக் 350 மோட்டார்சைக்கிளில் புதிய 'சிக்னேச்சர் வொயிட்' (Signature White) என்ற வெள்ளை வண்ணத் தேர்வை அறிமுகம் செய்துள்ளது. பண்டிகைக் காலம் நெருங்கி வரும் வேளையில், வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் இந்த பிரீமியம் வண்ணத்தை சந்தையில் களமிறக்கியுள்ளது.
Advertisement

நல்ல காரியத்துக்காக ராயல் என்ஃபீல்டு ஏற்பாடு செய்த பைக் பேரண

ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தனது 125வது ஆண்டில் வெற்றிகரமாக அடியெடுத்து வைத்துள்ள நிலையில், உலக அளவில் மோட்டார்சைக்கிள் பிரியர்களை கொண்டு 'ஒன் ரைடு 2026' (One Ride 2026) என்ற சிறப்பு மோட்டார்சைக்கிள் பேரணியை நேற்று (செப்டம்பர் 20) மிகவும் பிரம்மாண்டமான முறையில் நடத்தியது.

சிட்ரோனுக்காக திருவள்ளூர் ஆலையை கைப்பற்றிய ஸ்டெல்லாண்டிஸ்!

இந்திய வாகன சந்தையில் தனது வர்த்தகத்தை வலுப்படுத்தும் வகையில் ஸ்டெல்லாண்டிஸ் வாகன குழுமம் மிக முக்கிய நடவடிக்கையை எடுத்துள்ளது. . சென்னை அருகே திருவள்ளூரில் அமைந்துள்ள பிர்லா குழுமத்திற்கு சொந்தமான ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் ஆலையின் முழு பங்குகளையும் வாங்கி, அதன் தனி உரிமையாளராக மாறியுள்ளது. இந்த ஆலையை மையமாகக் கொண்டு தனது உற்பத்தியை பெருமளவில் அதிகரிக்கவும் அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

ஆகஸ்ட்டில் அதிகம் விற்பனையான டாப்-10 EV ஸ்கூட்டர்கள்

இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சந்தை வேகமாக வளர்ந்து வரும் நிலையில், ஆகஸ்ட் மாதத்திலும் முன்னணி நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கு இடையே போட்டா போட்டி நிலவுகிறது. முன்னணி நிறுவனங்களின் பிரபலமான மாடல்களுடன், சமீபத்தில் அறிமுகமான ஸ்கூட்டர்களும் குறிப்பிடத்தக்க விற்பனையை பதிவு செய்துள்ளன.

ரூ.13.99 லட்சத்தில் டாடா சியரா டார்க் எடிஷன் அறிமுகம்

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சியரா எஸ்யூவியின் புதிய டார்க் எடிஷன் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. சமீபத்தில் சியரா எஸ்யூவியின் லெஜென்ட் சீரிஸ் பதிப்பு அறிமுகமான நிலையில், அதனைத் தொடர்ந்து தற்போது இந்த பிரத்யேக கருப்பு வண்ணத்திலான தோற்றத்தில் சியரா எஸ்யூவி வந்துள்ளது

ரூ.6 லட்சத்தில் வரும் டாடாவின் புதிய செடான் கார் அறிமுக தேதி

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள புதிய டாடா ஏரிஸ் செடான் காரின் அறிமுக தேதி அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. வரும் 25ந் தேதி இந்த புதிய கார் சந்தைக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன், இந்த காருக்கான முதல் டீசரையும் டாடா கார்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. மாருதி டிசையர், ஹோண்டா அமேஸ், ஹூண்டாய் ஆரா கார்கள் உள்ள 4 மீட்டர் நீளத்திற்கும் குறைவான செடான் கார் பிரிவில் இந்த புதிய மாடல் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

2027ல் அறிமுகமாகும் இந்தியாவின் சொந்த புல்லட் ரயில்

இந்தியாவில் பல ஆண்டுகளாக எதிர்பார்க்கப்பட்ட அதிவேக புல்லட் ரயில் சேவை பணிகள் இறுதிக் கட்டத்தை நெருங்கி உள்ளன. மும்பை - அகமதாபாத் இடையே உருவாக்கப்பட்டு வரும் அதிவேக ரயில் பாதையில், வரும் 2027ஆம் ஆண்டு முதல் கட்ட சேவையை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்த சேவையில் முக்கிய திருப்பமாக, இந்தியாவிலேயே சொந்த தொழில்நுட்பத்தில் உருவாக்கப்படும் பி28 (B28) ரயில் பயன்படுத்தப்பட உள்ளது.

விமர்சித்தவர்களின் முகத்தில் கரியை பூசிய அஜித் ரேஸிங் அணி!

நடிகர் அஜித் குமாரின் ரேஸிங் பயணம் மீண்டும் கவனம் பெற்றுள்ளது. கடந்த வாரம் இங்கிலாந்தின் சில்வர்ஸ்டோன் ரேஸில் எதிர்பார்த்த முடிவு கிடைக்காமல் 38வது இடத்தில் நிறைவுசெய்த அஜித் ரெட்ஆண்ட் பை விராஜ் அணியை சமூக வலைதளங்களில் சிலர் கடுமையாக விமர்சித்தனர். ஆனால், அந்த முடிவுக்குப் பிறகு அடுத்த வாய்ப்பிலேயே அணி தனது திறமையை நிரூபித்துள்ளது.

கியா கேரன்ஸ், கேரன்ஸ் கிளாவிஸ் கார்களில் சிஎன்ஜி மாடல்கள்

இந்தியாவில் சிஎன்ஜி கார்களுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், கியா நிறுவனம் தனது 7 சீட்டர் கார்களான கேரன்ஸ் மற்றும் கேரன்ஸ் கிளாவிஸ் மாடல்களில் சிஎன்ஜி எரிபொருள் தேர்வை அறிமுகம் செய்துள்ளது. தொழிற்சாலையிலேயே சிஎன்ஜி எரிபொருளில் இயங்கும் அமைப்பு பொருத்தப்பட்டு வரும் இந்த புதிய மாடல்கள், குறைந்த எரிபொருள் செலவில் அதிக தூரம் பயணிக்க விரும்புபவர்களுக்கு கூடுதல் தேர்வாக அமைந்துள்ளன.
Advertisement

அடுத்த 10 நாட்களில் இந்தியாவில் களமிறங்கும் 6 புதிய கார்கள்!

இந்திய கார் சந்தையில் செப்டம்பர் மாதத்தின் கடைசி நாட்கள் பரபரப்பாக இருக்கப் போகின்றன. புதிய கார்கள் மட்டுமின்றி, ஏற்கனவே விற்பனையில் இருக்கும் சில மாடல்களின் ஃபேஸ்லிஃப்ட் மற்றும் புதிய வேரியண்ட்டுகளும் சந்தைக்கு வர உள்ளன. பண்டிகை கால விற்பனை தொடங்குவதற்கு முன்பாக இந்த புதிய மாடல்கள் வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்க உள்ளன.

புதிய தோற்றத்தில் மஹிந்திரா தார்! செப்டம்பர் 22ல் அறிமுகம்

ஆஃப்ரோடு பிரியர்களின் முதன்மையான தேர்வாக இருக்கும் மஹிந்திரா தார் எஸ்யூவியின் 3 டோர் மாடல் மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் விற்பனைக்கு வருகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ டீசர்களை அந்நிறுவனம் வெளியிட்டுள்ள நிலையில், வரும் செப்டம்பர் 22ஆம் தேதி புதிய தார் அறிமுகமாக உள்ளது.

டிகோருக்கு மாற்றாக வரும் புதிய டாடா ஏரிஸ் செடான் கார்!

டாடா கார்ஸ் நிறுவனம் தனது கார் மாடல்களை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில் பல்வேறு புதிய மாற்றங்களை செய்து வருகிறது. அந்த வகையில், நீண்ட காலமாக விற்பனையில் இருக்கும் டிகோர் காம்பேக்ட் செடானுக்கு மாற்றாக புதிய மாடலை அறிமுகப்படுத்த நிறுவனம் தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த காருக்கு ஏரிஸ் என பெயரிடப்படும் என்று கூறப்படுகிறது.

மாருதி ஸ்விஃப்ட், பலேனோ, டிசையர் கார்களில் CNG-AMT மாடல்!

இந்திய வாகனச் சந்தையில் முன்னணி நிறுவனமான மாருதி தனது பிரபலமான கார் மாடல்களான ஸ்விஃப்ட், டிசையர் மற்றும் பலேனோ ஆகியவற்றில் ஆட்டோமேட்டிக் சிஎன்ஜி தேர்வில் அறிமுகம் செய்துள்ளது. ஆட்டோ க்ரீன் மிஷன் என்ற திட்டத்தின் பெயரில் இந்த மூன்று கார்களையும் அந்நிறுவனம் சநதைக்கு கொண்டு வந்துள்ளது.

10 லட்சம் கார்களை ரயிலில் அனுப்பிய மாருதி சுஸுகி!

இந்தியாவில் கார் தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் மாருதி சுஸுகி, ஹரியானா மற்றும் குஜராத்தில் உள்ள தனது கார் உற்பத்தி ஆலைகளில் இருந்து ரயில் மூலம் 10 லட்சம் வாகனங்களை அனுப்பி புதிய மைல்கல்லை கடந்துள்ளது. வழக்கமாக புதிய கார்கள் தொழிற்சாலையில் இருந்து டிரக்குகளில் ஏற்றப்பட்டு பல்வேறு நகரங்களுக்கு கொண்டு செல்லப்படும்.

ரூ.9.39 லட்சத்தில் புதிய மஹிந்திரா XUV 3XO REVX அறிமுகம்

இந்திய காம்பேக்ட் எஸ்யூவி சந்தையில் ஏற்கனவே கவனம் பெற்றுள்ள மஹிந்திரா XUV 3XO மாடலின் REVX வரிசை தற்போது மேலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. புதிய REVX EDGE மற்றும் REVX EDGE (O) ஆகிய இரண்டு வேரியண்ட்களை மஹிந்திரா அறிமுகம் செய்துள்ளது. இதன் ஆரம்ப விலை எக்ஸ்ஷோரூம் விலை ரூ.9.39 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.

கொல்கத்தா போலீசில் இணைந்த அல்ட்ராவயலெட் EV பைக்குகள்!

இந்தியாவின் முன்னணி மின்சார இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான அல்ட்ராவைலட், கொல்கத்தா காவல் துறைக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட புதிய X-47 ஸ்கைஃபோர்ஸ் என்ற எலெக்ட்ரிக் பைக்கை அறிமுகம் செய்துள்ளது. முதற்கட்டமாக 183 ஸ்கைஃபோர்ஸ் பைக்குகளை கொல்கத்தா லால்பஜார் காவல் துறை தலைமையகத்தில் நடைபெற்ற விழாவில் அதிகாரப்பூர்வமாக காவல்துறை வசம் ஒப்படைக்கப்பட்டன.

விற்பனையில் நம்பர் 1 இடத்தை பிடித்து டாடா பன்ச் அசத்தல்!

இந்திய கார் சந்தையில் மாருதி தயாரிப்புகள் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், ஆகஸ்ட் மாத விற்பனை பட்டியலில் எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டுள்ளது. டாடா கார்ஸ் நிறுவனத்தின் பன்ச் கார் 21,320 யூனிட்டுகள் விற்பனையாகி, நாட்டிலேயே அதிகம் விற்பனையான கார் என்ற பெருமையுடன் முதலிடத்தை பிடித்துள்ளது.
Advertisement

ரூ.11.99 லட்சத்தில் டாடா சியரா லெஜண்ட் சீரிஸ் அறிமுகம்

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சியரா எஸ்யூவியின் புதிய லெஜண்ட் சீரிஸ் (Legend Series) மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. ஏற்கனவே விற்பனையில் உள்ள சியரா மாடல்களுடன் இந்த புதிய வகைகள் கூடுதலாக விற்பனை செய்யப்பட உள்ளன. புதிய சீரிஸ் ரூ.11.99 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் இருந்து கிடைக்கும்.

E20 பெட்ரோலால் பழைய வாகனங்களில் பழுது வந்தால் எவ்வளவு செலவு?

நாடு முழுவதும் E20 பெட்ரோல் பயன்பாட்டுக்கு வந்துள்ள நிலையில், பழைய கார் மற்றும் இருசக்கர வாகனங்களை வைத்திருப்பவர்களுக்கு ஒரு முக்கியமான சந்தேகம் உள்ளது. E20 பெட்ரோல் காரணமாக வாகனத்தின் எரிபொருள் அமைப்பில் பாதிப்பு ஏற்பட்டால், அதை சரிசெய்ய எவ்வளவு செலவாகும் என்பதுதான் அவர்களுடைய பெரிய கவலையாக உள்ளது.

முற்றிலும் புதிய தளத்துக்கு மாறும் டாடா நெக்ஸான்

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் காம்பேக்ட் எஸ்யூவியாக வலம் வரும் டாடா நெக்ஸான், புதிய தலைமுறை மாடலாக மேம்படுத்தப்பட்டு அறிமுகம் செய்யப்பட உள்ளது. கடந்த சில மாதங்களாக இந்த புதிய தலைமுறை டாடா நெக்ஸான் கார் தீவிரமான சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு ஆய்வுகள் செய்யப்பட்டு வருகின்றன.

ரூ.15 லட்சத்திற்குள் 5 ஸ்டார் ரேட்டிங் கார்கள்!

புதிய கார் வாங்கும்போது விலை, மைலேஜ், வசதிகள் ஆகியவற்றுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தைப் போலவே, தற்போது பாதுகாப்புக்கும் அதிக கவனம் செலுத்தப்படுகிறது. குறிப்பாக பாரத் என்சிஏபி அமைப்பின் க்ராஷ் டெஸ்ட் முடிவுகள் வெளியாகத் தொடங்கிய பிறகு, விபத்து நேரத்தில் ஒரு கார் பயணிகளை எந்த அளவுக்கு பாதுகாக்கிறது என்பதை தெரிந்து கொள்ள வாய்ப்பாக அமைந்துள்ளது.

14 ஆண்டுகளில் 15 லட்சம் மாருதி எர்டிகா கார்கள் விற்று சாதனை!

இந்தியாவில் 7 சீட்டர் கார்களுக்கு எப்போதுமே நல்ல வரவேற்பு உள்ளது. குறிப்பாக குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக பயணம் செய்வதற்கு வசதியாகவும், தினசரி பயன்பாட்டுக்கு ஏற்றதாகவும் இருக்கும் கார்களுக்கு தனி வரவேற்பு இருக்கிறது. அந்த வகையில் பல ஆண்டுகளாக வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பெற்று வரும் மாருதி சுஸுகி எர்டிகா தற்போது முக்கியமான மைல்கல்லை கடந்துள்ளது.