ரூ.45 லட்சத்தில் வரும் டாடாவின் புதிய பிரிமீயம் EV கார்

இந்திய மின்சார கார் சந்தையில் அடுத்த பெரிய நகர்வுக்கு தயாராகி வருகிறது டாடா கார்ஸ் நிறுவனம். நெக்ஸான், பன்ச், கர்வ், சியாரா, ஹாரியர் உள்ளிட்ட மின்சார கார்களை விற்பனை செய்து வரும் அந்நிறுவனம், இனி அதிக விலை கொண்ட பிரீமியம் கார் பிரிவிலும் தனது கவனத்தை செலுத்த உள்ளது.

டிவிஎஸ் அப்பாச்சி, ரோனின் பைக்குகளில் புதிய அம்சங்கள்

பண்டிகை காலத்தில் புதிய பைக் வாங்க திட்டமிடுபவர்களை கவரும் வகையில், தனது பிரீமியம் மோட்டார்சைக்கிள் வரிசையில் பல்வேறு புதிய அப்டேட்டுகளுடன் டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்தியாவில் டிசைன் காப்புரிமை பெற்ற ஜேஎஸ்டபிள்யூ EV எஸ்யூவி

டாடா, மஹிந்திராவை போல வரவேண்டும் என்ற வேட்கையுடன் ஜேஎஸ்டபிள்யூ மோட்டார்ஸ் நிறுவனம் தனது பிராண்டில் புதிய கார்களை விரைவில் களமிறக்க உள்ளது. அந்த வகையில், சீனாவின் ஜேடூர் டி2 அடிப்படையிலான ஹைப்ரிட் காரை விரைவில் கொண்டு வர இருக்கும் அந்நிறுவனம் தற்போது அடுத்து ஒரு எலெக்ட்ரிக் எஸ்யூவிக்கு இந்தியாவில் டிசைன் காப்புரிமையை பெற்றுள்ளது.

மோட்டார்ஸ்போர்ட்ஸ் சிட்டி... உலக அரங்கிற்கு செல்லும் இந்தியா

சில ஆண்டுகளுக்கு முன்பு, ஜல்லிக்கட்டு போராட்டம் உச்சத்தில் இருந்த நேரத்தில் தமிழ்நாட்டின் மோட்டார்ஸ்போர்ட்ஸ் வரலாறு குறித்து ஒரு கட்டுரை எழுதியிருந்தோம். அப்போது சோழவரம் முதல் இருங்காட்டுக்கோட்டை வரை தமிழகத்தின் பந்தயப் பயணத்தைப் பற்றி பார்த்தோம். இன்று அதே கதைக்கு ஒரு புதிய திருப்பம் கிடைத்துள்ளது. சென்னையில் உலகத்தரமான மோட்டார்ஸ்போர்ட்ஸ் நகரம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement

சவூதி எண்ணெய் சப்ளையில் சிக்கல்... சைக்கிளை தூசி தட்டணுமா?

மத்திய கிழக்கில் நீடித்து வரும் பதற்றம் தற்போது எண்ணெய் சந்தையில் கடுமையாக எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது. சவூதி அரேபியாவின் முக்கியமான எண்ணெய் வினியோக குழாய் மீது ஈரானுக்கு ஆதரவான போராளிக் குழு நடத்திய ஆளில்லா விமானத் தாக்குதலைத் தொடர்ந்து, சில நாடுகளுக்கான கச்சா எண்ணெய் வினியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் உலக நாடுகளில் எரிபொருள் விலை மேலும் உயருமா என்ற கவலை உருவாகியுள்ளது.

கோவையில் வருகிறது டுகாட்டி ஷோரூம்... டீசரால் பைக் பிரியர்கள்

பிரிமீயம் கார்களுக்கு பெயர் போன கோவையில் தற்போது டுகாட்டி சூப்பர் பைக் ஷோரூம் திறக்கப்பட உள்ளது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது. இதற்கான டீசர் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி, கோவை பைக் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

டாடா ஹாரியர் EV காரில் கோளாறு... ரூ.23.98 லட்சம் தர உத்தரவு

புதிதாக வாங்கிய டாடா ஹாரியர் எலெக்ட்ரிக் காரில் தொடர்ந்து தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்பட்டதாக அளிக்கப்பட்ட புகாரை விசாரித்த ஹைதராபாத் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம், வாகனத்தை திரும்பப் பெற்று பணத்தைத் திருப்பி வழங்குமாறு சம்பந்தப்பட்ட டீலருக்கு உத்தரவிட்டுள்ளது. ரூ.28 லட்சம் மதிப்பில் வாங்கப்பட்ட அந்த டாடா ஹாரியர் எலெக்ட்ரிக் கார் தொடர்பான இந்த வழக்கில், 10 சதவீத தேய்மானத்தை கழித்த பிறகு சுமார் ரூ.23.98 லட்சத்தை உரிமையாளருக்கு திருப்பி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

ஹீரோ பைக்குகளை வாங்க ஸ்விக்கி டெலிவிரி ஊழியர்களுக்கு வசதி

இந்திய இருசக்கர வாகனச் சந்தையில் பல ஆண்டுகளாகத் தனது ஆதிக்கத்தைச் செலுத்தி வரும் ஹீரோ மோட்டோகார்ப் (Hero MotoCorp) நிறுவனம், தற்போது தனது வர்த்தக எல்லைகளை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லத் தொடங்கியுள்ளது. இதன்படி, நாட்டின் முன்னணி உணவு மற்றும் டெலிவரி தளமான ஸ்விக்கியுடன் (Swiggy) கைகோர்த்துள்ளது. இதன்மூலமாக ஸ்விக்கி டெலிவிரி பார்ட்னர்கள் எளிதாக ஹீரோ பைக்குகளை வாங்குவதற்கான வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அடுத்த வாரம் அறிமுகமாகிறது மஹிந்திரா தார் 3 டோர் பேஸ்லிஃப்ட்

இந்தியாவில் ஆஃப்ரோடு எஸ்யூவி மார்க்கெட்டில் வாடிக்கையாளர்களின் முதன்மையான தேர்வாக மஹிந்திரா தார் உள்ளது. ஏற்கனவே 3 டோர் தார் பல ஆண்டுகளாக தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ள நிலையில், அதன் தோற்றத்தை மேலும் நவீனப்படுத்தும் வகையில் புதிய ஃபேஸ்லிஃப்ட் மாடலை மஹிந்திரா விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது.

FASTag ஸ்டிக்கரை மாற்றாமல் வங்கியை மாற்றும் வசதி அறிமுகம்!

ஃபாஸ்டேக் பயன்படுத்தும் வாகன உரிமையாளர்களுக்கு முக்கியமான வசதியை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இதுவரை கணக்கு உள்ள ஒரு வங்கியில் இருந்து மற்றொரு வங்கிக்கு ஃபாஸ்டேக் சேவையை மாற்ற வேண்டும் என்றால், பழைய ஃபாஸ்டேக் அக்கவுண்ட்டை மூடிவிட்டு புதிய ஃபாஸ்டேக் வாங்கி ஒட்ட வேண்டிய நிலை இருந்தது. இனி இந்த பிரச்னை இல்லாமல் அதே ஃபாஸ்டேக் ஸ்டிக்கரை தொடர்ந்து பயன்படுத்திக்கொண்டே, அதனுடன் இணைக்கப்பட்டுள்ள வங்கியை மட்டும் மாற்றும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

கியா அறிமுகப்படுத்திய பிரம்மாண்ட எலெக்ட்ரிக் வேன்!

மின்சார வாகன சந்தையில் கார்கள் மற்றும் எஸ்யூவிகளுக்கு அடுத்தபடியாக, எம்பிவி ரக பயணிகள் வாகனங்களுக்கும் வரவேற்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக, அதிக உறுப்பினர்களை கொண்ட குடும்பத்தினர் ஒன்றாக பயணிப்பதற்கு ஏதுவான எலெக்ட்ரிக் வாகனங்களுக்கும் வாடிக்கையாளர்கள் முக்கியத்துவம் கொடுக்கத் துவங்கி உள்ளனர். இதனை மனதில் வைத்து கியா மோட்டார் நிறுவனம் புதிய எலெக்ட்ரிக் வேனை அறிமுகம் செய்துள்ளது.

பாரத் என்சிஏபி டெஸ்ட்டில் அசத்திய மஹிந்திரா எக்ஸ்யூவி 7XO!

பாரத் என்சிஏபி அமைப்பு நடத்திய க்ராஷ் டெஸ்ட்டில் மஹிந்திரா எக்ஸ்யூவி 7XO காருக்கு அதிகபட்ச பாதுகாப்புத் தர மதிப்பீட்டை பெற்று அசத்தி உள்ளது. பெரியவர்கள் மற்றும் சிறியவர்கள் என இரண்டு பிரிவுகளிலும் சிறப்பான பாதுகாப்பை தரத்தை இந்த கார் வெளிப்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக, பாரத் என்சிஏபி அமைப்பு இன்று சோதனை முடிவுகளை வெளியிட்டுள்ளது.
Advertisement

கவனம் ஈர்க்கும் சபாநாயகர் ஜேசிடி பிரபாகரின் சொகுசு கார்

தமிழக அரசியல் களத்தில் அதிகம் கவனம் ஈர்க்கும் முகமாக உருவெடுத்திருக்கிறார் சபாநாயகர் ஜேசிடி பிரபாகர். சட்டப்பேரவை நடவடிக்கைகளை அவர் கையாளும் விதம் மட்டுமல்லாமல், அவரது கார் தேர்வும் தற்போது கவனம் பெற்றுள்ளது. அவர் பயன்படுத்தும் கார் எம்ஜி எம்9 எலெக்ட்ரிக் எம்பிவி சொகுசு கார் சபைக்கு வெளியிலும் அவரது செயல்பாட்டை திரும்பி பார்க்க வைத்துள்ளது. சாதாரணமாக ஒரு அரசியல் பிரமுகர் பயன்படுத்தும் சொகுசு கார்களைப் போல இல்லாமல், முழுமையான எலெக்ட்ரிக் வாகனத்தை அவர் பயன்படுத்துவது குறிப்பிடத்தக்கது.

ஆகஸ்ட்டில் இந்திய வாகன சந்தை படைத்த 'மாஸ்' சாதனை

இந்திய ஆட்டோமொபைல் சந்தை தொடர்ந்து வலுவான வளர்ச்சியை பதிவு செய்து வருகிறது. குறிப்பாக, கடந்த ஆகஸ்ட் மாதம் பயணிகள் வாகனங்கள், இருசக்கர வாகனங்கள் மற்றும் மூன்று சக்கர வாகனங்கள் என மூன்று முக்கிய பிரிவுகளும் சிறப்பான வளர்ச்சியை பதிவு செய்துள்ளன. இதுதொடர்பான ஆகஸ்ட் மாத அதிகாரப்பூர்வ தரவுகளை இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கமான சியாம் அமைப்பு (SIAM) இன்று வெளியிட்டுள்ளது.

அல்ட்ரா லக்சுரி EV கார்களை இந்தியாவில் களமிறக்கும் பிஒய்டி

உலகின் முன்னணி மின்சார வாகன உற்பத்தியாளரான பிஒய்டி (BYD) நிறுவனம், தனது உயர் ரக பிரீமியம் கார்களை தயாரிக்கும் துணை பிராண்டான 'டென்ஸா' (Denza) மூலமாக இந்தியாவின் அல்ட்ரா லக்சுரி கார் சந்தையில் மிக விரைவில் களமிறங்க திட்டமிட்டுள்ளது. நடப்பு ஆண்டின் இறுதிக்குள், 1,156 பிஎச்பி ஆற்றல் கொண்ட இசட்9 ஜிடி (Z9 GT) என்ற ஃபாஸ்ட்பேக் வகை சொகுசு எலெக்ட்ரிக் காரையும், டி9 (D9) என்ற எம்பிவி எலெக்ட்ரிக் காரையும் இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வர அந்நிறுவனம் ஆயத்தமாகி வருகிறது.

விரைவில் அறிமுகமாகும் ரெனால்ட் டஸ்ட்டர் ஹைபிரிட் மாடல்!!

இந்தியாவின் மிட்சைஸ் எஸ்யூவியில் முக்கிய மாடலாக இருக்கும் ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவி விரைவில் ஹைப்ரிட் தொழில்நுட்ப வசதியுடன் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. அதிக மைலேஜை எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்களை குறிவைத்து இந்த புதிய ஹைப்ரிட் தேர்வு களமிறக்கப்பட உள்ளது.

தமிழகத்தில் இனி டிஜிட்டல் ஓட்டுனர் உரிமம், வாகன பதிவுச் சான்

தமிழகத்தில் வாகன ஓட்டிகள் மற்றும் புதிய வாகனம் வாங்குபவர்களுக்கு முக்கியமான நடைமுறை இன்று முதல் அமலுக்கு வருகிறது. ஓட்டுநர் உரிமம் (Driving Licence) மற்றும் வாகனப் பதிவுச் சான்றிதழ் (RC) ஆகியவற்றை டிஜிட்டல் முறையில் உடனடியாகப் பெறும் வசதியை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்தியாவுக்கான புதிய எஸ்யூவியின் பெயரை அறிவித்தது ஹூண்டாய்

இந்திய சந்தையில் அறிமுகமாகவுள்ள ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய மிட்சைஸ் எஸ்யூவி மாடலுக்கு ஹூண்டாய் பேயான் (Hyundai BAYON) எனப் பெயரிட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படும் இந்த புதிய எஸ்யூவி கிரெட்டா எஸ்யூவியைவிட விலை குறைவான மாடலாக இருக்கும்.

விரைவில் வரும் டிவிஎஸ் மோட்டார்ஸின் முதல் எலெக்ட்ரிக் பைக்!

மின்சார இருசக்கர வாகனங்களுக்கான வரவேற்பு அதிகரித்துள்ள நிலையில், புதிய மின்சார பைக் மாடலை கூடிய விரைவில் அறிமுகம் செய்ய டிவிஎஸ் மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மிகவும் ஸ்போர்ட்டியான தோற்றத்தில் செயல்திறன் மிக்க மாடலாக இந்த புதிய மின்சார பைக் வர இருக்கிறது.

360 கிமீ வேக புல்லட் ரயில்: இந்தியாவுக்கு ரஷ்யாவின் ஆஃபர்!

இந்தியாவின் அதிவேக ரயில் கனவுக்கு ஜப்பானின் சின்கென்சென் தொழில்நுட்பம் ஏற்கனவே அடித்தளம் அமைத்து வரும் நிலையில், தற்போது ரஷ்யாவும் தனது புதிய அதிவேக புல்லட் ரயிலை வழங்க முன்வந்துள்ளது. ரஷ்யாவின் Transmashholding (TMH) என்ற நிறுவனம், இந்திய சந்தைக்காக இவோல்கா எஃப்ஜி (Ivolga FG) என்ற அதிவேக புல்லட் ரயில் கான்செப்ட்டை இந்தியாவுக்கு வழங்க தயாராக இருப்பதாக அறிவித்துள்ளது.
Advertisement

டெக்டான் 7 சீட்டர் எஸ்யூவியை விரைவில் களமிறக்குகிறது நிஸான்.

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் தனது வர்த்தகத்தை வலுப்படுத்த நிஸான் நிறுவனம் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. நடப்பு ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட நிஸான் டெக்டான் 5 சீட்டர் மிட்சைஸ் எஸ்யூவிக்கு இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், இதன் 7 சீட்டர் மாடலையும் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதனை நிசான் மோட்டார் இந்தியாவின் நிர்வாக இயக்குனர் சவுரப் வத்ஸா (Saurabh Vatsa) சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் பேசியதன் மூலமாக உறுதியாகி இருக்கிறது.

ஆகஸ்ட் விற்பனை: யாரும் எட்ட முடியாத உயரத்தில் மாருதி!

இந்தியாவின் கார் சந்தை கடந்த ஆகஸ்ட் மாதத்திலும் வலுவான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. நாட்டின் முக்கிய கார் நிறுவனங்களின் உள்நாட்டு மொத்த விற்பனை எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு பார்க்கும்போது, மொத்தம் 4,41,576 கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 3,27,719 கார்கள் விற்பனை செய்யப்பட்ட நிலையில், இந்த ஆண்டு 34.7 சதவீத வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.

ஜேஎஸ்டபிள்யூ பிராண்டில் அறிமுகமாகும் முதல் கார் இதுதான்

டாடா மோட்டார்ஸ், மஹிந்திரா நிறுவனங்களை போலவே இந்தியாவின் மிக முக்கியமான வாகன தயாரிப்பு குழுமமாக மாற வேண்டும் என்ற வேட்கையுடன் களமிறங்கி உள்ளது ஜேஎஸ்டபிள்யூ மோட்டார் நிறுவனம். சீனாவின் செயிக் குழுமத்தின் அங்கமாக செயல்பட்டு வரும் இங்கிலாந்து பிராண்டான எம்ஜி மோட்டார் நிறுவனத்தில் குறிப்பிடத்தக்க பங்குடன் ஏற்கனவே இந்திய சந்தையில் கால் பதித்து விட்ட ஜேஎஸ்டபிள்யூ மோட்டார் அடுத்து சொந்த பிராண்டிலும் கார்களை மிக விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது.

அஜித் அணி 3வது இடமா, 38வது இடமா? குழப்பத்திற்கான விடை இதோ!

இங்கிலாந்தின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் சர்க்யூட் மோட்டார் பந்தய களத்தில் நடைபெற்ற 2026ம் ஆண்டுக்கான மிச்செலின் லி மான்ஸ் கோப்பைக்கான கார் பந்தயத்தில் தமிழகத்தை சேர்ந்த நடிகரும், ரேஸருமான அஜித்குமார் நேற்று பங்கேற்றார். அஜித் குமார் பங்கேற்பாலும் தமிழக முதலமைச்சர் விஜய் நேரில் சென்று பந்தயத்தைத் தொடங்கி வைத்ததாலும் இந்தியாவில் அதிக கவனம் பெற்றது.

பிஒய்டி சீல் யு ஹைப்ரிட் கார் இந்தியாவில் சோதனை ஓட்டம்

இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களுக்கான சந்தையில் ஏற்கனவே வலுவான இடத்தை பிடித்துள்ள சீனாவை சேர்ந்த பிஒய்டி நிறுவனம், அடுத்த கட்டமாக Plug-in Hybrid (PHEV) வகை மாடல்களையும் அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. அந்த வரிசையில் நிறுவனத்தின் முதல் ப்ளக் இன் ஹைப்ரிட் மாடலாக BYD Seal U என்ற புதிய கார் மாடலை விரைவில் இந்தியாவில் களமிறக்க உள்ளது.