கண்கவர் தோற்றத்தில் ஜாவா 42 பாபர் ஸ்பெஷல் எடிசன் அறிமுகம்!

ஒற்றை இருக்கை அமைப்புடன் வடிவமைக்கப்படும் பாபர் வகை மோட்டார்சைக்கிள்கள் மேலை நாடுகளில் பிரபலமாக உள்ளது. குறிப்பாக பிரிமீயம் வகை மோட்டார்சைக்கிள்களில் இந்த வடிவமைப்புக்கு என தனி ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில், அதே ரசனை கொண்ட இந்தியர்களுக்கு கொடுக்க வேண்டும் என்ற நோக்கில் ஜாவா 42 பாபர் பைக் விற்பனையில் உள்ளது. இந்த நிலையில், இதனை மேலும் தனித்துவமாக்கும் நோக்கில் ஜாவா 42 பாபரின் ஸ்பெஷல் எடிசன் மாடல் இன்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பென்ஸ் எலெக்ட்ரிக் சைக்கிள்கள் இந்தியாவில் அறிமுகம்!

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் மோட்டார்ஸ்போர்ட்ஸ் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில், மெர்சிடிஸ் ஏஎம்ஜி பெட்ரோனாஸ் பிராண்டின் எலெக்ட்ரிக் சைக்கிள்கள் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. புனே நகரை சேர்ந்த இ-மோட்டாராட் நிறுவனம் இந்த புதிய எலெக்ட்ரிக் சைக்கிள்களை மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் கூட்டணியில் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. மிகவும் பிரிமீயம் ரகத்திலான இந்த எலெக்ட்ரிக் சைக்கிள்கள் மோட்டார்ஸ்போர்ட்ஸ் பிரியர்களின் கவரும் வகையில் இருக்கின்றன.

மாருதியை பின்னுக்குத் தள்ளி வின்ஃபாஸ்ட் அசத்தல்!

இந்தியாவில் எலெக்ட்ரிக் கார் சந்தை வேகமாக வளர்ந்து வரும் நிலையில், கடந்த ஆகஸ்ட் மாத விற்பனை புள்ளிவிவரங்கள் சந்தையில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் இருப்பதை வாகன் பதிவு தரவுகள் மூலமாக தெரிய வந்துள்ளது. குறிப்பாக, கடந்த ஆண்டு இந்தியாவில் புதிதாக களமிறங்கிய வியட்நாம் நாட்டை சேர்ந்த வின்ஃபாஸ்ட் நிறுவனம், நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி நிறுவனத்தைப் பின்னுக்குத் தள்ளி, மின்சார கார் சந்தையில் நான்காவது இடத்தை பிடித்துள்ளது.

ரூ.2.29 லட்சத்தில் ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 440 அறிமுகம்!

ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தனது பிரபலமான ஹிமாலயன் அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிளின் புதிய ஹிமாலயன் 440 மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. ஹிமாலயன் மோட்டார்சைக்கிள் அறிமுகமாகி 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், அதன் ஆரம்ப தலைமுறையின் எளிமையான வடிவமைப்பு மற்றும் நடைமுறை பயன்பாட்டை அடிப்படையாகக் கொண்டு இந்த புதிய மாடல் உருவாக்கப்பட்டுள்ளது. லடாக்கில் நடைபெற்ற முதல் ஹிமாலயன் பேஸ்கேம்ப் ( Himalayan Basecamp) என்ற நிகழ்ச்சியில் இந்த மோட்டார்சைக்கிள் அறிமுகமானது.
Advertisement

எத்தனாலில் இயங்கும் கியா சைரோஸ் காரின் கான்செப்ட் அறிமுகம்!

கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்கவும், வாகனங்களின் புகையிலிருந்து வெளியேறும் நச்சுப் புகையை கட்டுப்படுத்தும் நோக்கில் மாற்று எரிபொருளில் இயங்கும் வாகனங்களுக்கு மத்திய அரசு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. அந்த வகையில், மின்சார வாகன பயன்பாட்டை அதிகரிக்க சலுகைகளை வழங்குவதுடன், எத்தனால் கலந்த பெட்ரோல் வினியோகத்தையும் நடைமுறைப்படுத்தி உள்ளது.

கியா கார்னிவல் ஹைப்ரிட் கார் அறிமுகம் உறுதியானது

அதிக இடவசதியுடன் கூடிய எம்பிவி கார் வாங்க விரும்புவோரின் முக்கிய தேர்வாக கியா கார்னிவல் எம்பிவி இருந்து வருகிறது. மேலும், பிரீமியம் எம்பிவி பிரிவில் நிலைநிறுத்தப்பட்டுள்ள கியா கார்னிவல் கார் விரைவில் ஹைப்ரிட் மாடலிலும் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. இன்று கியா நிறுவனம் சொரென்டோ காரின் அறிமுக நிகழ்வின் போது, கார்னிவல் ஸ்ட்ராங் ஹைப்ரிட் மாடலின் வருகை குறித்தும் உறுதி செய்தது.

ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ் கார் மீண்டும் அறிமுகம்!

இந்திய கார் பிரியர்கள் மத்தியில் தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள பவர்ஃபுல்லான ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ் மீண்டும் விற்பனைக்கு வந்துள்ளது. கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட முதல் பேட்ச் எதிர்பார்த்ததைவிட அதிக வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது இந்தியாவுக்காக மேலும் 50 ஆக்டேவியா ஆர்எஸ் கார்களை ஸ்கோடா ஆட்டோ விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. இந்த காருக்கு ரூ.56.69 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. புக்கிங் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு அடுத்த வாரம் முதல் டெலிவரி கொடுக்கும் பணிகள் தொடங்கப்பட உள்ளன.

ரூ.27.99 லட்சத்தில் புதிய கியா சொரென்டோ கார் அறிமுகம்!

வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் ஆவலை ஏற்படுத்தி உள்ள கியா சொரென்டோ கார் இன்று அதிகாரப்பூர்வமாக இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. கியா மோட்டார் நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ள முதல் ஹைப்ரிட் கார் மாடலாக வந்துள்ள சொரென்டோ பெட்ரோல் ஹைப்ரிட் மற்றும் டீசல் எஞ்சின் தேர்வுகளில் கிடைக்கும். இந்த புதிய சொரென்டோ காருக்கு ரூ.27.99 லட்சம் ஆரம்ப விலையாக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.

கடுமையான சோதனைகளுடன் அறிமுகமாகிறது பாரத் என்சிஏபி 2.0!!

இந்தியாவில் விற்பனையாகும் கார்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட பாரத் என்சிஏபி (Bharat NCAP) கார் மோதல் பரிசோதனை பாதுகாப்புத் திட்டம், சாலைப் பாதுகாப்பை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. அத்துடன் புதிய கார் வாங்குவோர் மத்தியிலும் இந்த பாதுகாப்பு தர மதிப்பீடு குறித்த விழிப்புணர்வும் அதிகரித்துள்ளது.

சிம்பிள் வேவ் EV ஸ்கூட்டரின் வேரியண்ட் வாரியாக விலை!

குடும்ப பயன்பாட்டு அம்சங்களுடன் கூடிய வேவ் என்ற புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை சிம்பிள் எனெர்ஜி நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. இதன் சிறப்பம்சங்கள், ரேஞ்ச், விலை என அனைத்தும் வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த நிலையில், புதிய சிம்பிள் வேவ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான வேரியண்ட் வாரியான விலை விவரங்கள் தற்போது நிறுவனத்திடமிருந்து எமக்கு அதிகாரப்பூர்வமாக கிடைத்துள்ளன.

இந்த கிருஷ்ண ஜெயந்திக்கு கிருஷ்ணரோட முழு ஆசிர்வாதமும் கிடைக்க இத கண்டிப்பா பண்ணுங்க...!

சமஸ்கிருதத்தில் கிருஷ்ண ஜன்மாஷ்டமி என்று அழைக்கப்படுகிறது. உலகெங்கிலும் உள்ள இந்துக்கள் இந்த நாளில் நோன்பு மேற்கொள்வதன் மூலமும், கடவுளை வணங்குவதற்காக தங்கள் வீடுகளை அலங்கரிப்பதன் மூலமும், கோயில்களைப் பார்வையிடுவதன் மூலமும், பிரசாத் வழங்குவதன் மூலமும், ஏழைகளுக்கு நன்கொடை அளிப்பதன் மூலமும் இந்த விழாவைக் கொண்டாடுகிறார்கள்.

நாளை அறிமுகமாகிறது கியா சொரென்டோ, ஹிமாலயன் 440!

இந்திய வாகன சந்தையில் அதிக ஆவலை ஏற்படுத்திய இரண்டு முக்கிய மாடல்கள் நாளை அறிமுகமாக இருக்கின்றன. நாட்டின் முன்னணி நிறுவனங்களான கியா மோட்டார் மற்றும் ராயல் என்ஃபீல்டு ஆகிய இரண்டு நிறுவனங்களும் தங்களின் புதிய மாடல்களை அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளன.
Advertisement

ரூ.9.99 லட்சத்தில் புதிய டாடா கர்வ் சீரிஸ் X கார் அறிமுகம்!

இந்திய சந்தையில் எஸ்யூவி கூபே மாடல்களுக்கு புதிய பரிமாணத்தை ஏற்படுத்திய டாடா கர்வ் கார், தற்போது Curvv Series X என்ற புதிய பெயரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சோலார் சன்ரூஃபை உருவாக்கிய FAW.. தினமும் 10 யூனிட் மின்சாரம்

எலெக்ட்ரிக் கார்களின் எண்ணிக்கை உலகம் முழுவதும் அதிகரித்து வரும் நிலையில், அவற்றுக்கான சார்ஜிங் தேவையை குறைப்பதற்காக வாகன நிறுவனங்கள் பல்வேறு புதிய தொழில்நுட்பங்களை உருவாக்கி வருகின்றன. அந்த வகையில், சீனாவைச் சேர்ந்த FAW Group என்ற பிரபல வாகனத் தயாரிப்பு நிறுவனம் தற்போது காரின் சன்ரூஃப் கண்ணாடியை மின்சாரம் உற்பத்தி செய்யும் சோலார் பேனலாக மாற்றும் புதிய முயற்சியில் இறங்கியுள்ளது.

தமிழ்நாட்டில் மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி அறிவிப்பு!!

தமிழ்நாட்டில் மோட்டார் ஸ்போர்ட்ஸை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் வகையில், புதிய மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி உருவாக்கப்படும் என்று முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிவித்துள்ளார். சென்னை நகரில் உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு கட்டமைப்புகளை உருவாக்கும் திட்டங்களின் ஒரு பகுதியாக இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஹோண்டா கார்களுக்கு ரூ.2.44 லட்சம் வரை சலுகை... முழு விபரம்

புதிய ஹோண்டா கார்களை வாங்கத் திட்டமிடுபவர்களுக்கு செப்டம்பர் மாதம் கூடுதல் சேமிப்பை வழங்கும் வகையில் சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக ஹோண்டா அமேஸ், சிட்டி மற்றும் எலிவேட் ஆகிய மூன்று மாடல்களுக்கும் கணிசமான ஆஃபர்களை பெறும் வாய்ப்பு உள்ளது. ஹோண்டா கார்ஸ் இந்தியாவின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள சலுகைகளின்படி அதிகபட்சமாக ரூ.2.45 லட்சம் வரை சேமிப்பு பலன்களை பெறும் வாய்ப்புள்ளது.

ரூ.9 லட்சத்தில் வரும் புதிய ஹூண்டாய் எஸ்யூவி சோதனை ஓட்டம்!!

இந்தியாவில் எஸ்யூவி கார்களுக்கான வரவேற்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், ஹூண்டாய் நிறுவனம் தனது எஸ்யூவி வரிசையை மேலும் விரிவுபடுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, வென்யூ மற்றும் கிரெட்டா ஆகிய இரு மாடல்களுக்கு இடையில் புதிய மாடலை களமிறக்க உள்ளது. இந்த புதிய மிட் சைஸ் எஸ்யூவி இந்திய சாலைகளில் வைத்து சோதனை செய்யப்பட்டு வருகிறது.

ரேஞ்ச்ரோவர் எலெக்ட்ரிக் கார் அறிமுகம்... 600கிமீ ரேஞ்ச்!!

உலக அளவில் பிரிமீயம் ஆஃப்ரோடு எஸ்யூவி மார்க்கெட்டில் ரேஞ்ச்ரோவர் முத்திரை பதித்த மாடலாக வாடிக்கையாளர்களின் தேர்வில் முதன்மையாக இருந்து வருகிறது. அறிமுகம் செய்யப்பட்டு கடந்த 56 ஆண்டுகளில் முதல்முறையாக தற்போது பேட்டரியில் இயங்கும் ரேஞ்ச்ரோவர் மாடல் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதுவரை பெட்ரோல், டீசல் மற்றும் ப்ளக் இன் ஹைப்ரிட் மாடல்களில் விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது முதல்முறையாக பேட்டரியில் இயங்கும் எலெக்ட்ரிக் மாடல் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

புதிய தலைமுறை மிட்சுபிஷி பஜேரோ வெளியானது

இந்தியாவின் ஆஃப்-ரோடு எஸ்யூவி சந்தையில் தனக்கென தனி வாடிக்கையாளர் வட்டத்தை பெற்ற மாடல்களில் ஒன்றாக மிட்சுபிஷி பஜேரோ இருந்து வருகிறது. கடந்த 2021ம் ஆண்டு சர்வதேச சந்தையில் இருந்து விலக்கிக் கொள்ளப்பட்ட இந்த பிரபலமான ஆஃப்ரோடு எஸ்யூவி, தற்போது புதிய தலைமுறை மாடலாக மீண்டும் உலகளாவிய அளவில் வெளியிடப்பட்டு இருக்கிறது.

புதிய சிம்பிள் வேவ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்.. விபரம்

பெங்களூரைச் சேர்ந்த சிம்பிள் எனெர்ஜி நிறுவனம் இந்தியாவின் குடும்பப் பயன்பாட்டு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சந்தையில் புதிய மாடலுடன் களமிறங்கி உள்ளது. சிம்பிள் வேவ் என்ற பெயரில் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இன்று பெங்களூரில் நடந்த நிகழ்ச்சியில் சற்றுமுன் அறிமுகப்படுத்தியுள்ளது.
Advertisement

பெட்ரோல் நிரப்பும் நேரத்திலேயே EV காருக்கு சார்ஜ்!!

எலெக்ட்ரிக் கார்களை வாங்குவதற்கு பலர் தயங்குவதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று சார்ஜிங் நேரம். பெட்ரோல் அல்லது டீசல் கார்களில் சில நிமிடங்களில் எரிபொருளை நிரப்பிவிட்டு பயணத்தைத் தொடர முடியும். ஆனால், எலெக்ட்ரிக் கார்களில் பேட்டரியை சார்ஜ் செய்ய நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை இருப்பது இன்னும் ஒரு பெரிய சவாலாக உள்ளது.

மின்சார இருசக்கர வாகன சந்தையில் முதலிடத்தில் டிவிஎஸ்!!

இந்தியாவின் எலெக்ட்ரிக் இருசக்கர வாகன சந்தையில் போட்டி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக டிவிஎஸ் மோட்டார், பஜாஜ் ஆட்டோ, ஏத்தர் என முன்னணி நிறுவனங்கள் தொடர்ந்து அதிக எண்ணிக்கையிலான வாகனங்களை விற்பனை செய்து அசத்தி வருகின்றன. அதே நேரத்தில் ரிவர், பிகாஸ், சிம்பிள் எனெர்ஜி, மோட்டோவோல்ட் போன்ற வளர்ந்து வரும் நிறுவனங்களும் தங்களது இருப்பை வலுப்படுத்தி வருகின்றன.

தூத்துக்குடி ஆலையில் கார் உற்பத்தி தொடரும்: வின்ஃபாஸ்ட்

இந்தியாவில் வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின் கார் உற்பத்தித் திட்டம் தொடர்பாக கடந்த சில நாட்களாக வெளியான தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது அந்நிறுவனம் முக்கிய விளக்கம் ஒன்றை வெளியிட்டுள்ளது. தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் ஆலையில் VF 6 மற்றும் VF 7 எலெக்ட்ரிக் எஸ்யூவிகளின் அசெம்பிள் செய்யும் பணிகள் தொடர்ந்து நடைபெறும் என வின்ஃபாஸ்ட் நிறுவனம் உறுதி செய்துள்ளது.

ஏத்தர் கோனார்க் EV ஸ்கூட்டரின் உண்மையான ரேஞ்ச் இதுதான்

இந்தியாவின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சந்தையில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஏத்தர் கோனார்க் (Ather Konarc) எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் உண்மையான ரேஞ்ச் குறித்த முக்கியமான தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் காருக்கு 70,000 வரை சலுகை

இந்தியாவில் பிரபலமான ஹேட்ச்பேக் கார்களில் ஒன்றான ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் காரை வாங்கத் திட்டமிடுபவர்களுக்கு இந்த செப்டம்பர் மாதம் நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது. இந்த காருக்கு ரூ.70,000 வரை சிறப்பு சலுகைகளை ஹூண்டாய் நிறுவனம் அறிவித்துள்ளது. பண்டிகை காலம் நெருங்கி வரும் நிலையில், புதிய கார் வாங்க விரும்பும் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் இந்தச் சலுகைகள் வழங்கப்படுகின்றன.