ஒரு கி.மீ பயணிக்க வெறும் ரூ1 தான் செலவு!

ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம் இந்தியாவில் களம் இறக்கப்போகும் ஆக்டிவா இ எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான குறைந்த விலை பேட்டரி அஸ் ஏ சர்வீஸ் திட்டத்தை அறிவித்துள்ளது. இதற்கு முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த திட்டம் அதிகமான விலையில் இருந்த நிலையில் இந்த புதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

ஷோரூமுக்கு வந்த கணவரை திக்கு முக்காட செய்த பாலிவுட் நடிகை!

காஷ்மேரா ஷா (Kashmera Shah), 1990களில் பாலிவுட்டில் பிரபலமாக இருந்த நடிகை. குறிப்பாக, திரைப்படங்களில் கதாபாத்திரங்களுக்கு நடிப்பதை காட்டிலும் குறிப்பிட்ட சில பாடல்களுக்கு நடனமாடவே காஷ்மேரா ஷா அதிகமாக அழைக்கப்பட்டார். இந்தி மொழி படங்கள் மட்டுமின்றி, மராத்தி, தெலுங்கு மலையாளம் மற்றும் தமிழ் திரைப்படங்களுக்கு கூட பாடலுக்கு நடனமாட நடிகை காஷ்மேரா ஷா அழைக்கப்பட்டார். ஆனால், கடந்த சில வருடங்களாக இவருக்கு திரைப்பட துறையில் பெரியதாக வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும், டிவி ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் போட்டியாளராகவும், விருந்தினராகவும் கலந்துக் கொள்ளும் வாய்ப்பு கிடைத்து வருகிறது.

தினமும் 700 பேர் இந்த காரை தேடி தேடி வாங்குறாங்க!

பிஒய்டி நிறுவனத்தின் அட்டோ 3 கார் 10 லட்சம் கார்கள் விற்பனையாகி புதிய சாதனையை படைத்துள்ளது. இதுவும் மிக குறுகிய காலத்தில் இந்த சாதனையை அந்நிறவனம் படைத்துள்ளது. மக்கள் அதிகமாக இந்த காரை தேர்வு செய்ய என்ன காரணம்? இந்த காரில் அப்படி என்ன இருக்கிறது? விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

கடைசியில் சீனாவிடமே கையேந்துவது தான் ஒரே வழியா?

உலகில் பல உலோகங்கள் பல துறைகளில் பயன்படுத்தப்படுகின்றன. நீங்கள் இதுவரை கேள்வியே படாத உலோகங்கள் எல்லாம் கூட பல்வேறு தொழில்களுக்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அதுமட்டுமின்றி, தொடர்ந்து அதிகரித்துவரும் தேவைக்காக புது, புது தனிமங்களை உருவாக்கி, அதன் மூலம் உலோகங்களை உருவாக்கும் ஆய்வு கண்டுப்பிடிப்புகளும் ஒருபக்கம் நடந்துக் கொண்டுதான் இருக்கின்றன. இதன் மூலமாகவே, பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு மாற்றாக எலக்ட்ரிக் வாகனங்கள் பயன்பாட்டிற்கு வந்தன என்பது பெரிய கதை ஆகும். எலக்ட்ரிக் வாகனங்களினால் பல நன்மைகள் உள்ளன. அதேநேரம் சில அசவுகரியங்களும், சில பற்றாக்குறைகளும் உள்ளன என்பதையும் மறுக்க முடியாது.
Advertisement

எகிறி அடிக்க போகும் டாடா! கலக்கத்தில் மாருதி!

இந்திய சந்தையில் வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் பிரீமியம் ஹேட்ச்பேக் (Premium Hatchback) ரக கார்களில் ஒன்று டாடா அல்ட்ராஸ் (Tata Altroz). இதன் நடப்பு 2025ம் ஆண்டு மே மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) வெளியாகியுள்ளது.

ஆட்டோமெட்டிக் காரில் பிரேக் ஃபெயிலியரை எப்படி சமாளிப்பது?

நீங்கள் காரில் வேகமாக சென்று கொண்டிருக்கிறீர்கள் அப்பொழுது திடீரென காரில் பிரேக் ஃபெயிலியராகி விடுகிறது. அப்பொழுது காரை நிறுத்த வேண்டும் என்றால் பலரும் சொல்வது காரின் கிளட்சை மிதித்து கியரை டவுண் செய்து காரின் வேகத்தை குறைக்க வேண்டும் என்று சொல்வார்கள். ஆனால் மேனுவல் கியரே இல்லாத ஆட்டோமெட்டிக் கியர் கார்களில் இந்த சூழ்நிலையை எப்படி சமாளிப்பது விரிவாக காணலாம் வாருங்கள்.

டெஸ்லா கார் ஷோரூம் அமையும் இடம் சிட்டியில் படு பிசியான ஏரியா

டெஸ்லா (Tesla), அமெரிக்காவை சேர்ந்த முன்னணி எலக்ட்ரிக் கார் (Electric Car) நிறுவனம். அமெரிக்காவை தாண்டி வெளிநாடுகள் பலவற்றில் டெஸ்லாவுக்கு மார்க்கெட் உள்ளது. இவ்வளவு ஏன், சீனாவில் கூட டெஸ்லாவுக்கு கஸ்டமர்கள் உள்ளனர். பொதுவாகவே அமெரிக்க கார் நிறுவனங்கள் சீனாவில் நுழைவது இல்லை; அதேபோல், சீன கார் நிறுவனங்களும் அமெரிக்காவில் நுழைவது இல்லை. இதற்கு காரணம் என்ன என்பது உங்களில் நிறைய பேருக்கு தெரிந்திருக்கும் என நினைக்கிறேன். இருப்பினும், டெஸ்லா நிறுவனம் சீன நாட்டு மார்க்கெட்டிற்குள் நுழைந்தது மட்டுமில்லாமல், சீனாவில் அதிக எண்ணிக்கையில் எலக்ட்ரிக் கார்களை விற்பனை செய்யும் நிறுவனமாக உள்ளது.

எமன் கண்ணில் மண்ணை தூவி விட்டு தப்பித்த அதிசய மனிதர்கள்...

சமீபத்தில் ஏர் இந்தியா விமானம் ஆமதாபாத் விமான நிலையத்திலிருந்து டேக் ஆஃப் ஆன அடுத்த சில நிமிடங்களில் பூமியில் மோதியது, இந்த சம்பவத்தில் விமானத்தில் சுமார் 280 பேர் உயிரிழந்துள்ளனர். ஒருவர் மட்டுமே விமான விபத்திலிருந்து தப்பியுள்ளார். இந்த சம்பவம் உலகையே உலுக்கி போட்டுள்ளது. இப்படியாக உலகம் முழுவதும் இதற்கு முன்னர் நடந்த விமான விபத்துகளில் தனி ஆளாக உயிர் தப்பியவர்கள எத்தனை பேர்? அவர்கள் மட்டும் எப்படி தப்பினார்கள்? விமானம் எப்படி விபத்தில் சிக்கியது? விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

டாடா ஹெரியர் இவி எலக்ட்ரிக் காருக்கு 5-ஸ்டார் ரேட்டிங்!!

டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனத்தில் இருந்து புதிய எலக்ட்ரிக் கார் (Electric Car) ஆக ஹெரியர்.இவி (Harrier.ev) சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. டாடா நிறுவனத்தின் புதிய விலைமிக்க எலக்ட்ரிக் காராக விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ள ஹெரியர்.இவி-இன் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.21.49 லட்சத்தில் இருந்து நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஹெரியர் இவி எலக்ட்ரிக் காரின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், ஜூன் 23ஆம் தேதி இந்த டாடா எலக்ட்ரிக் காரின் மற்ற வேரியண்ட்களின் விலைகள் அறிவிக்கப்பட்டன. இந்த நிலையில், ஹெரியர் இவி எலக்ட்ரிக் கார் பாரத் என்சிஏபி கிராஷ் டெஸ்ட்டில் (Bharat NCAP Crash Test)-இல் உட்படுத்தப்பட்டு, தற்போது அதன் முடிவுகள் வெளியாகி உள்ளன.

போலீஸ் பாதுகாப்போட 10 கோடி ரூபா கார்ல மாஸ் காட்றாரு!

இந்திய சாலைகளில் ஒரு சமயத்தில் மிகவும் பிரபலமாக இருந்த கார் மாருதி சுஸுகி ஆம்னி (Maruti Suzuki Omni). இது கடந்த 1984ம் ஆண்டு முதல் முறையாக இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. சுமார் 35 ஆண்டுகள் விற்பனையில் இருந்த நிலையில், கடந்த 2019ம் ஆண்டு அதன் உற்பத்தி நிறுத்தப்பட்டது.

ஹாரியர் இவி காரை விட கர்வ் இவியில் இவ்வளவு கிடைக்குமா?

டாடா நிறுவனம் தனது ஹாரியர் இவி காரின் வேரியன்ட் வாரியிலான விலை விபரங்களை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த கார் ரூ21.49 லட்சம் என்ற ஆரம்ப விலையில் விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளது. இந்த கார் அந்நிறுவனம் விற்பனை செய்யும் கர்வ் இவி காரை விட பிரிமியம் விலையில் இதை விற்பனைக்கு கொண்டுவந்துள்ளது. கர்வ் இவி காரின் டாப் மாடல் விலை இந்த காரின் பேஸ் மாடல் விலையை விட வெறும் ரூ50,000 தான் அதிகமாக உள்ளது. இங்கு நாம் கர்வ் காரின் டாப் மாடலில் உள்ள அம்சங்களையம் ஹாரியர் இவி காரின் பேஸ் மாடலில் உள்ள அம்சங்களையும் தான் ஒப்பீடு செய்யப்போகிறோம்.

ஹோண்டா ஆக்டிவாவுக்கு ரூ.14 லட்சம் செலவு எல்லாம் ரொம்பவே ஓவர்

ஃபேன்சி நம்பர் பிளேட் (Fancy Number Plate) கலாச்சாரம் இந்தியாவில் மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. உலகளவில் ஃபேன்சி நம்பர் பிளேட்டிற்கு கோடிக்கணக்கில் செலவழித்து வந்தாலும், இந்த விஷயத்தில் நம் இந்தியர்கள் கொஞ்சம் கட்டுப்பாடு உடனே செயல்பட்டு வந்தனர். அதாவது, ஃபேன்சி நம்பர் பிளேட்டிற்கு சில ஆயிரங்கள் வேண்டுமாயின் செலவழிக்க தயார், ஆனால் பல கோடிகளில் செலவழிக்க பெரும் பணக்காரர்கள் கூட தயாராக இல்லை. சில இலட்சங்களிலேயே விருப்பமான ஃபேன்சி நம்பர் பிளேட் இந்தியாவில் கிடைத்துவிடுவதும் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.
Advertisement

இந்த 2 இடத்துல மட்டும் ஈரான் குண்டு போட்டா கதையே முடிஞ்சுது!

உலகில் எலெக்ட்ரிக் வாகனங்கள் (Electric Vehicles) தற்போது மிக வேகமாக பிரபலமடைந்து வருகின்றன. எலெக்ட்ரிக் வாகனங்கள் சுற்றுச்சூழலுக்கு உகந்தவை என்பதுதான் இதற்கு மிகவும் முக்கியமான காரணம். இதன் காரணமாகவே உலகின் பல்வேறு நாடுகளின் அரசுகளும் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவித்து வருகின்றன.

ரோல்ஸ்-ராய்ஸ் உருவாக்குன எலக்ட்ரிக் கார் என்றால் சும்மாவா!!

ரோல்ஸ்-ராய்ஸ் (Rolls-Royce) நிறுவனத்திற்கும் அதன் கார்களுக்கும் அறிமுகமே தேவை இருக்காது என நினைக்கிறேன். ஏனெனில், அந்த அளவிற்கு பிரிட்டிஷ் நாட்டை சேர்ந்த ரோல்ஸ்-ராய்ஸ் நிறுவனத்தின் கார்கள் உலகளவில் பிரபலமாக உள்ளன. பிரபலமாக இருப்பது மட்டுமின்றி, ரோல்ஸ்-ராய்ஸ் கார் வைத்திருந்தாலே தனி கௌரவம் என செல்வந்தர்கள் பலர் நினைக்கும் அளவுக்கு ஒரு ஸ்டாண்டர்டை ரோல்ஸ்-ராய்ஸ் கார்கள் செட் செய்து வைத்துள்ளன. இதனால்தான், உலகின் பெரும் பணக்காரர்களுள் ஒருவராக இருக்கும் முகேஷ் அம்பானி (Mukesh Ambani) சுமார் 10க்கும் மேற்பட்ட ரோல்ஸ்-ராய்ஸ் கார்களை வைத்துள்ளார்.

இது தெரியாம செகண்ட் ஹேண்ட்ல இந்த காரை வாங்கிடாதீங்க!

டாடா நிறுவனம் தனது ஹாரியர் இவி காருக்கு பேட்டரிக்கான வாழ்நாள் வாரண்டியை வழங்கி வருகிறது. அதுவும் கி.மீ குறித்த கணக்கு இல்லாமல் இந்த வாரண்டியை வழங்குகிறது. ஆனால் இதில் ஒரு சூட்சுமம் இருக்கிறது. முதல் ஹேண்டில் இந்த காரை வாங்குபவர்கள் மட்டுமே இந்த வாரண்டியை அனுபவிக்க முடியும். செக்ண்ட் ஹேண்டில் இந்த வாகனம் மாறிவிட்டால் இந்த வாரண்டி என்பது குறைக்கப்படும். இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

தூத்துக்குடி கம்பெனி செய்த தரமான சம்பவம்!

இந்தியாவில் வின்ஃபாஸ்ட் நிறுவனம் விரைவில் தனது கார்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட திட்டமிட்ப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் உள்ள முக்கியமான மால்களில் அந்நிறுவனம் தனது VF6 மற்றும் VF7 ஆகிய கார்களை காட்சிப்படுத்தியுள்ளது. மக்கள் மத்தியில் இப்படி ஒரு கார் வரப்போகிறது என்ற விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த மார்கெட்டிங் யுக்தியை பயன்படுத்தியுள்ளனர். இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

25 லட்ச ரூபா காரை வாங்க 1 கோடி ரூபா காரில் வந்தது இவர்தானா?

மம்தா மோகன்தாஸ் (Mamta Mohandas), மலையாள நடிகையாக இருப்பினும் தென்னிந்திய அளவில் கவனத்தை பெற்றவர். தமிழில் நடிகர் விஷால் உடன் சிவப்பதிகாரம் திரைப்படத்தில் அறிமுகமாகியவர், அதன்பின் நடிகர் ரஜினியின் குசேலன், தடையற தாக்க, எனிமி உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். கடந்த ஆண்டில் திரைக்குவந்த நடிகர் விஜய் சேதுபதியின் மஹாராஜா திரைப்படத்தில் நடிகை மம்தா மோகன்தாஸ் முக்கியமான கதாபாத்திரத்தை ஏற்றிருந்தார். இவர் மலையாளத்தில் நடித்த திரைப்படங்களின் எண்ணிக்கை உடன் ஒப்பிடுகையில் தமிழில் மிகவும் குறைவுதான். அந்த அளவிற்கு மலையாளத்தில் 40க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் மம்தா மோகன்தாஸ் நடித்துள்ளார்.

வெறும் ரூ.3.99 லட்சத்தில் புதிய டாடா ஏஸ் வாகனமா?

டாடா மோட்டார்ஸ் (Tata Motors), இந்தியாவின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனம். கார்கள் விற்பனையில் மட்டுமின்றி, கமர்ஷியல் வாகனங்கள் விற்பனையிலும் டாடா மோட்டார்ஸ் முன்னிலையில் இருப்பது நம் எல்லாருக்குமே தெரிந்த விஷயமாகும். இன்னும் சொல்லப்போனால், ஆரம்பத்தில் கமர்ஷியல் வாகனங்கள் விற்பனையில் மட்டுமே ஈடுப்பட்டுவந்த டாடா நிறுவனம், அதன் மூலம் கிடைத்த நம்பிக்கையில்தான் கடந்த 1998ஆம் ஆண்டில் கார்கள் விற்பனையில் இறங்கியது. டாடா மோட்டார்ஸின் கமர்ஷியல் வாகனங்களை பொறுத்தவரையில், மக்கள் மத்தியில் மிக பிரபலமாக டாடா ஏஸ் (Ace) உள்ளது.

லாரி டிரைவராக ஆரம்பித்த வாழ்க்கை... பிராண்ட்-நியூ கார் உடன்!

ஒரு சிலர் அவர்களது அன்றாட வேலைகளை வீடியோவாக காட்சிப்படுத்தி சமூக வலைத்தள பக்கங்களில் அவ்வப்போது பதிவிடுவதை பார்த்து இருப்பீர்கள். அவ்வாறு, தனது லாரி டிரைவிங் வீடியோக்களை பதிவிடும் லாரி டிரைவர்கள் நம் தமிழ்நாட்டிலேயே ஏகப்பட்ட பேர் உள்ளனர். அப்படியிருக்கையில், ஒட்டுமொத்த இந்திய அளவில் எத்தனை பேர் இருப்பர் என்று யோசித்து பாருங்கள். அத்தகையவர்களுள் பிரபலமானவர், ராஜேஷ் ராவானி (Rajesh Rawani) என்கிற ஜார்காண்ட் மாநிலத்தை சேர்ந்த லாரி டிரைவர் ஆவார். இவர் தற்போது பல லட்ச ரூபாய் மதிப்பிலான மஹிந்திரா (Mahindra) காரை வாங்கி உள்ளார்.

ரேட் எல்லாம் சொல்லிட்டாங்க! இன்னும் என்ன வெயிட்டிங்?

டாடா நிறுவனம் தனது ஹாரியர் இவி காரின் ரியர் வீல் டிரைவ் காரின் முழு விலை பட்டியல் விபரங்களை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த காருக்கான புக்கிங் வரும் ஜூலை 2ம் தேதி முதல் துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி இந்த காரின் விலை விபரங்கள் குறித்த விரிவான தகவல்களை இங்கே காணலாம் வாருங்கள்.
Advertisement

ஷோரூமுக்கு வர துவங்கிவிட்ட வின்ஃபாஸ்ட் எலக்ட்ரிக் கார்கள்!!

வின்ஃபாஸ்ட் (Vinfast), வியட்நாம் நாட்டை சேர்ந்த மிக பெரும் ஆட்டோமொபைல் நிறுவனம். எந்த அளவிற்கு பெரியது என்றால், நம் இந்தியாவின் மாருதி சுஸுகி (Maruti Suzuki) போன்று இலட்சக்கணக்கில் வாகனங்களை விற்பனை செய்யக்கூடிய நிறுவனமாக வின்ஃபாஸ்ட் விளங்குகிறது. மாருதி சுஸுகியில் இருந்து இருசக்கர வாகனங்கள் விற்பனை செய்யப்படுவதில்லை, அதற்கென தனியாக சுஸுகி மோட்டார்சைக்கிள் (Suzuki Motorcycle) என்கிற நிறுவனம் உள்ளது. ஆனால், வின்ஃபாஸ்ட் நிறுவனத்தில் இருசக்கர வாகனங்களும் விற்பன செய்யப்படுகின்றன என்றால், இந்த வியட்நாம் கம்பெனி எந்த அளவிற்கு பிரம்மாண்டமானது என்பதை யோசித்து பாருங்கள்.

மாருதி எஸ்குடோ எஸ்யூவி கார் சிக்கீரமே வரப்போகுது!

மாருதி நிறுவனம் இந்தியாவில் புதிய எஸ்யூவி காரை களம் இறக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த காருக்கு அந்நிறுவனம் எஸ்குடோ என பெயர் வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காரில் என்னென்ன அம்சங்கள் எல்லாம் இருக்கும்? இதை விலை எவ்வளவு இருக்கும்? மார்கெட்டில் உள்ள எந்த காருக்கு போட்டியாக இந்த கார் விற்பனையாகும்? விரிவான விபரங்களை இங்கே காணலாம் வாருங்கள்.

கை குழந்தையா உள்ள மகளுக்கு தந்தையின் ரோல்ஸ்-ராய்ஸ் கார்!!

ரோல்ஸ்-ராய்ஸ் (Rolls-Royce) கார்களை பிடிக்காதவர்கள் யார்தான் இருப்பார்கள்? உலகின் பெரும் பணக்காரர்கள் கூட எப்படியாவது ஒரு ரோல்ஸ்-ராய்ஸ் காரை ஆவது வாங்கிவிட வேண்டும் என நினைப்பர். ரோல்ஸ்-ராய்ஸ் கார் என்றாலே பிரபலமானவை என்றாலும், அவற்றுள் மிக பிரபலமானவை ரோல்ஸ்-ராய்ஸ் கல்லீனன் (Cullinan) கார் ஆகும். இந்தியாவின் பெரும் தொழிலதிபரான முகேஷ் அம்பானி (Mukesh Ambani) கிட்டத்தட்ட 10 ரோல்ஸ்-ராய்ஸ் கார்களை வைத்துள்ளார். அவற்றுள் மூன்று கார்கள் ரோல்ஸ்-ராய்ஸ் கல்லீனன் ஆகும். இந்த அளவிற்கு மிக பிரபலமான கல்லீனன் காரை இந்திய பெரும் தொழிலதிபர் ஒருவர் வாங்கியுள்ளார். இந்த ரோல்ஸ்-ராய்ஸ் காரை அவர் தற்போது வாங்கியதற்கான காரணம் நம்மை கவர்கிறது. அதனை பற்றி தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

20 லட்சம் பேர் இந்த ஸ்கூட்டரை வாங்கிட்டாங்க!

டிவிஎஸ் நிறுவனம் தனது என்டார்க் 125 ஸ்கூட்டரை 20 லட்சம் ஸ்கூட்டர்களை இந்தியாவில் விற்பனை செய்து புதிய மைல் கல்லை எட்டியுள்ளது. அதே போல இந்த ஸ்கூட்டர் 3 லட்சம் வாகனங்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டர் விற்பனை மற்றும் இதர விபரங்களை விரிவாகன காணலாம் வாருங்கள்.

உலகமே இப்ப தமிழ்நாட்டை தான் திரும்பி பார்க்குது!

மத்திய அரசு கடந்த மாதம் ஆப்ரேஷன் சிந்தூரை நட்தி யபிறகு இந்தியா எல்லை பாதுகாப்பு விஷயத்தில் எவ்வளவு தூரம் தொழிற்நுட்பத்தை நம்பியிருக்கிறது என்பது பலரு்கம் தெரியவந்தது. தற்போது இந்திய ராணுவ ஆப்ரேஷன்களில் தொழிற்நுட்பங்கள் மிகப்பெரிய உதவியை செய்து வருகுின்றனர். இந்த தொழிற்நுட்ப பாதுகாப்பு விஷயங்களை 3 விதமாக பிரிக்கலாம். டுரோன் பாதுகாப்பு, லேயர்டு ஆகாய பாதுகாப்பு, எலெக்ட்ரானிக் பாதுகாப்பு என இதை பிரிக்க முடியும்.