ஓலாவின் இடத்தை பிடிக்க ஒரே அடியா ரூ.13,000ம் குறைச்சுட்டாங்க
ஆட்டோமொபைல்
- 1 year, 4 month, 3 days ago
இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த சூழலைப் பயன்படுத்திக் கொண்டு வாடிக்கையாளர்களை தங்கள் பக்கம் ஈர்க்கும் நோக்கில் பிரபல மின்சார இரண்டு வாகன உற்பத்தி நிறுவனம் ஒன்று மாபெரும் விலை குறைப்பை அறிவித்திருக்கின்றது. வதோதராவை மையமாகக் கொண்டு இயங்கும் ஜாய் இ-பைக் (Joy e-Bike), இதுவே விலை குறைப்பைச் செய்திருக்கும் அந்த நிறுவனம் ஆகும். தன்னுடைய, குறிப்பிட்ட சில மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களின் விலையையே அது குறைத்திருக்கின்றது.