இதைவிட கம்மியான விலையில் தர முடியாது... 2025 ஹோண்டா டியோ 125

ஹோண்டா மோட்டார்சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா (Honda Motorcycle & Scooter India) நிறுவனத்தில் இருந்து அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்படும் ஸ்கூட்டர்களுள் ஹோண்டா டியோ 125 (Dio 125) ஒன்றாகும். இதனாலேயே அவ்வப்போது டியோ ஸ்கூட்டரை ஹோண்டா அப்டேட் செய்துவிடுகிறது.

இன்னும் 15 நாள் தான் டோல் கேட்டை எல்லாம் தூக்க போறாங்க!

இந்தியாவில் உள்ள சுங்கசாவடிகள் குறித்து அடுத்த 15 நாளில் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகவுள்ளதாக அமைச்சர் நிதின்கட்கரி கூறியுள்ளார். இந்திய மக்களுக்கு டோல் கேட்கள் மூலம் சுங்க சாவடிகள் அமைப்பது மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கிறது. இந்த பிரச்சனைகளுக்கு முற்றி புள்ளி வைக்கும் வகையில் புதிய அறிவிப்புகள் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் ஏற்ட்டுள்ளது. மத்திய அமைச்சர் சொன்ன புதிய அறிவிப்புகள் என்ன? எப்பொழுது இது வெளியாகும்? முழுமையான விபரங்களை காணலாம் வாருங்கள்.

ஃபெராரியில் சாலையை கிழித்துக் கொண்டு சென்ற தொழிலதிபர் மகன்!

ஆகாஷ் அம்பானி (Akash Ambani), இந்தியாவை சேர்ந்த உலகின் பெரும் தொழிலதிபரான முகேஷ் அம்பானியின் (Mukesh Ambani) மூத்த மகன். தந்தையின் பல நிறுவனங்களை நடத்திவரும் ஆகாஷ் அம்பானி, ஒரு ஆட்டோமொபைல் (Automobile) பிரியர் ஆவார். குறிப்பாக, விலையுயர்ந்த கார்களை ஓட்டி பார்ப்பதில் ஆர்வமிக்கவராக உள்ளார்.

விளம்பரத்தில் நடித்து ரூ4 கோடிக்கு கார் வாங்கினாரா சதீஷ்?

தமிழ் சினிமாவில் காமெடியன்களில் ஒருவராக இருப்பவர் சதீஷ், இவர் சமீபத்தில் சுடர்மணி நிறுவனத்தின் விளம்பரங்களில் அதிகம் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் சுடர்மணி நிறுவனத்தின் உரிமையாளர் தனக்கு கார் பரிசு வழங்கியதாக வெளியிட்ட வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது. அவரது காரை வைத்து இவர் இந்த வீடியோவில் காமெடி செய்துள்ளார். இதை பலரும் ரசித்து பகிர்ந்து வருகின்றனர். இந்த கார் குறித்து பலர் தேடி வரும் நிலையில் இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
Advertisement

அமெரிக்கா, ரஷ்யாவின் வாலை ஒட்ட நறுக்க போகும் இந்தியா!

உலகிலேயே கச்சா எண்ணெய்யை (Crude Oil) மிக அதிக அளவில் இறக்குமதி செய்யும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. தோராயமாக ஒரு ஆண்டுக்கு 230 மில்லியன் மெட்ரிக் டன் கச்சா எண்ணெய்யை இந்தியா இறக்குமதி செய்து கொண்டுள்ளது. இதற்காக ஒவ்வொரு ஆண்டும் சுமார் 130 பில்லியன் அமெரிக்க டாலர்களை இந்தியா செலவிட்டு வருகிறது. இது இந்தியாவின் பொருளாதாரத்தில் (Economy) மிகவும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக மிகப்பெரிய தொகையை செலவிடுவதால், இந்தியாவின் அந்திய செலாவணி (Foreign Exchange) கையிருப்பும் குறைகிறது.

61 வயதில் கார் வாங்கிய காமெடி நடிகர் ஆள் அடையாளமே தெரியல!!

மஹிந்திரா (Mahindra) நிறுவனத்தில் இருந்து அறிமுகம் செய்யப்பட்டு மக்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கும் எலக்ட்ரிக் கார்கள் (Electric Cars), பிஇ 6 (BE 6) மற்றும் எக்ஸ்.இ.வி 9இ (XEV 9e) ஆகும். இவற்றை புக் செய்த கஸ்டமர்களுக்கு டெலிவிரி கொடுக்கும் பணிகளை சமீபத்தில்தான் மஹிந்திரா துவங்கியுள்ளதால், சாலையில் தென்படும் இந்த புதிய மஹிந்திரா எலக்ட்ரிக் கார்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக, பணக்காரர்களும், சினிமா (Cinema) பிரபலங்களும் தான் அதிகமாக இந்த மஹிந்திரா எலக்ட்ரிக் கார்களை டெலிவிரி பெற்று வருகின்றனர்.

ரூ1.2 கோடி காரை இவ்வளவு பேர் வாங்கிட்டாங்களா?

டொயோட்டாவின் மார்ச் 2025 விற்பனை, 9,856 யூனிட்களுடன் இன்னோவா ஹைக்ராஸை முன்னணி விற்பனையாளராக காட்டுகிறது, அதே நேரத்தில் வெல்ஃபயர் விற்பனை 1721% அதிகரித்துள்ளது.

மஹிந்திரா தாரை உருமாற்றிய டிசி.. சாலையில் செல்லும் வீடியோ!

உலக புகழ்பெற்ற வாகன மாடிஃபிகேஷன் நிறுவனம் டிசி (DC2). திலிப் சப்பாரியா (Dilip Chhabria) என்கிற பெயரிலும் இந்த நிறுவனம் நாட்டில் அறியப்படுகின்றது. கார்களின் உருவத்தை மாற்றுவதில் கை தேர்ந்த நிறுவனமாக இது செயல்பட்டு வருகின்றது. ஓர் சாதாரண காரைகூட மிகுந்த ஆடம்பர காராக இந்த நிறுவனம் மாற்றி தரும். அதுமட்டுமல்ல எந்த மாதிரியான வாகனத்தையும் நாம் விரும்பும் ஸ்டைல் மற்றும் தோற்றத்திலும் அவர்கள் மாற்றி தருவார்கள்.

கார் மெக்கானிக்குகள் பலர் இதை பற்றி கூற மாட்டார்கள்!

கார் மொத்தமும் ஒரு இயந்திரம் என்பதை நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டும் என்றில்லை. இந்த இயந்திரம் இயங்குவதற்கான இருதயமாக என்ஜின் (Engine) செயல்படுகிறது. கார் இயங்கும்போது அதிக உழைப்பது காரின் சக்கரங்களும், அவற்றில் பொருத்தப்பட்டிருக்கும் டயர்களும், சஸ்பென்ஷனும் தான் என நம்மில் நிறைய பேர் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், கார் என்று மட்டுமின்றி எந்தவொரு வாகனத்திலும் அதிகமாக உழைப்பது அதன் என்ஜின் ஆகும். இதனால்தான், கொஞ்சம் நேரம் இயங்கினாலே காரின் என்ஜின் சூடாகி விடுகிறது. இவ்வாறு சூடாகும் என்ஜின் சிஸ்டத்தை குளிர்விப்பது அவசியமான ஒன்றாகும்.

பைக் மாதிரி மைலேஜ் தரும் டிசையர் ஹைபிரிட் கார் வந்துடுச்சு!

2025 சுஸுகி டிசயரின் புதிய ஹைப்ரிட் அம்சங்கள், விலை நிர்ணயம் மற்றும் மோட்டார் வாகன சந்தையில் அதன் போட்டி நன்மை பற்றி அறிந்து கொள்ளுங்கள்.

வெறும் 6 லட்சத்துக்கு 7 பேர் போற காரா!

இந்திய சந்தையில் 7 சீட்டர் கார்களுக்கான (7 Seater Cars) 'டிமாண்ட்' எப்போதும் அதிகமாகவே இருந்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு முன்னணி நிறுவனங்களும் 7 சீட்டர் கார்களை விற்பனை செய்து கொண்டுள்ளன. அப்படி ரெனால்ட் நிறுவனத்தால் விற்பனை செய்யப்பட்டு வரும் ஒரு 7 சீட்டர் கார்தான் ட்ரைபர் (Renault Triber). இது இந்தியாவில் மிகவும் பிரபலமான ஒரு காராக இருந்தாலும் கூட, நடப்பு 2025ம் ஆண்டு மார்ச் மாதம் விற்பனையில் மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது. தற்போது வெளியாகியுள்ள சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) மூலம் இது தெரிய வந்துள்ளது.

30 வருஷத்துக்கு முன் எவ்வளவு கனவுகளோட இந்தியா வந்துருப்பாங்க

மெர்சிடிஸ்-பென்ஸ் (Mercedes-Benz), உலகின் மிக பிரபலமான சொகுசு கார் உற்பத்தி நிறுவனங்களுள் ஒன்று. குறிப்பாக, நம் இந்தியாவில் விலையுயர்ந்த கார்களை அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யக்கூடிய நம்பர் ஒன் நிறுவனமாக மெர்சிடிஸ்-பென்ஸ் விளங்குகிறது. ஜெர்மனியை சேர்ந்த மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனத்துக்கு நம் இந்தியா மிக முக்கியமான சந்தை ஆகும். இதனாலேயே நம் நாட்டில் புனேவில் சாகான் என்கிற பகுதியில் மெர்சிடிஸ் நிறுவனத்துக்கு தொழிற்சாலை உள்ளது. மாருதி சுஸுகி (Maruti Suzuki), ஹூண்டாய் (Hyundai) நிறுவனங்கள் அளவிற்கு இல்லையென்றாலும் மெர்சிடிஸ் நிறுவனமும் இந்தியாவில் பிரம்மாண்டமான தொழிற்சாலையை கொண்டுள்ளது.
Advertisement

26 கி.மீ மைலேஜ் தரும் காரை நிறுத்தப்போறாங்களா?

சிஎன்ஜி பதிப்பை நிறுத்திய பிறகு, 2025 மாரூதி சுஸுகி கிராண்ட் விட்டாராவின் சமீபத்திய புதுப்பிப்புகள், பாதுகாப்பு மேம்பாடுகள் மற்றும் செயல்திறன் அம்சங்களை கண்டறியவும்.

தனியா விமானம் வாங்கி ஐயர வெச்சு பூஜை போட்ட தொழில் அதிபர்!

இந்தியாவை சேர்ந்த தொழில் அதிபர்கள் பலர் தற்போது உலக அரங்கில் கொடி கட்டி பறந்து வருகின்றனர். இவர்களில் பலர், மிகவும் எளிமையான குடும்ப பின்னணியில் இருந்து வந்தவர்கள் ஆவர். இருப்பினும் தங்களது கடின உழைப்பின் மூலம், உலக அரங்கில் இந்தியாவை பெருமைப்படுத்தும் வகையில், மிகப்பெரிய தொழில் அதிபர்களாக உயர்ந்துள்ளனர். இதற்கு கேரளாவை சேர்ந்த ரவி பிள்ளை (Ravi Pillai) ஒரு உதாரணம். இவர் ஆர்பி குழுமத்தின் (RP Group) நிறுவனர் (Founder) ஆவார். ரவி பிள்ளையின் ஆர்பி குழுமம், இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில், ஏராளமான தொழில்களை மேற்கொண்டு வருகிறது.

ரூ.22 லட்சத்தில் டாடாவின் புதிய எலக்ட்ரிக் கார் அறிமுகம்!!

டாடா கர்வ் இவி (Tata Curvv EV), இந்தியாவில் விற்பனை செய்யப்படும் மிகவும் சில எலக்ட்ரிக் கார்களுள் ஒன்று. டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனத்தில் இருந்து இந்த எலக்ட்ரிக் கார் கடந்த 2024ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிலையில் கர்வ் இவி எலக்ட்ரிக் காரின் விற்பனையை அதிகரிக்கும் முயற்சியாக, இந்த காரில் ஸ்பெஷல் எடிசன் (Special Edition) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ரூ.22.24 லட்சம் என்கிற எக்ஸ்-ஷோரூம் (Ex-Showroom) விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த ஸ்பெஷல் எடிசன் கர்வ் இவி காரை பற்றிய கூடுதல் விபரங்களை இனி பார்க்கலாம்.

ஆடம்பர காரை வாங்கிய இன்ஸ்டா பிரபலம்!

சமூக வலைதளங்களில் செல்வாக்கு மிக்கவர்கள் பெரும் பணக்காரர்களுக்கு இணையான ஆடம்பர கார்களை வாங்கும் நிகழ்வு இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாக மலையாள சமூக வலைதளங்களில் பெருத்த செல்வாக்கைக் கொண்டவராக வலம் வரும் சைத்தானியா பிரகாஷ் ஓர் விலை உயர்ந்த சொகுசு காரை வாங்கி இருக்கின்றார். இவருக்கு இன்ஸ்டா போன்ற சமூக வலைதளங்களில் ஃபேன்கள் மிக அதிகம். இதனாலேயே அவர் இப்போது நடிகையாகவும் மாறி இருக்கின்றார்.

"ராக்கி பாய்" இறங்கி வந்த கார்ல இவ்வளவு விஷயம் இருக்குதா?

கன்னட சினிமாவில் நடித்து இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த நடிகர் யஷ். இவர் நடித்த கேஜிஎஃப் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற நிலையில் அதன் இரண்டாம் பாகமும் வந்து பெரும் வரவேற்ப்பை பெற்றது. இந்நிலையில் இந்த திரைப்படத்தின் 3ம் பாகத்தை எடுக்கப்போவதாக இன்று அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் இந்த படத்தில் ஹீரோவாக நடித்த யஷ் தனது மனைவியுடன் காஸ்ட்லியான காரில் வந்திறங்கிய வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது.

கியா இவி6 எலெக்ட்ரிக் கார் ரிவியூ வீடியோ!

கியா (Kia) நிறுவனத்தின் புகழ்பெற்ற எலெக்ட்ரிக் கார் (Electric Car) மாடலாக இவி6 (EV6) இருக்கின்றது. இந்த காருக்கு இந்தியர்கள் மத்தியில், குறிப்பாக, பணக்காரர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த வரவேற்பை தக்க வைத்துக் கொள்ளும் நோக்கிலேயே கியா நிறுவனம் இவி6 மின்சார் கார் மாடலின் அப்டேட் செய்யப்பட்ட வெர்ஷனை இந்தியாவில் களமிறக்கி இருக்கின்றது. இதனையே சமீபத்தில் ஓட்டி பார்க்கும் வாய்ப்பு எங்களுக்கு கிடைத்தது. கியாவின் ஆந்திர ஆலையில் வைத்தே இந்த காரை ஓட்டி பார்த்தோம்.

டாடா ஒரே மாசத்துல 2வது இடத்துக்கு வந்துட்டாங்க!

மார்ச் 2025 ஆட்டோ துறையின் போக்குகளை ஆராயுங்கள், மாரூதி சுசுகி விற்பனையில் முன்னிலை வகிக்கிறது, அதே நேரத்தில் மாறிவரும் இயக்கவியலின் மத்தியில் டாடா மோட்டார்ஸ் மற்றும் மகிந்திரா வளர்ச்சியைக் காட்டுகின்றன.

லம்போர்கினி காரை கண்டுக்காம மஹிந்திரா காரை வாங்கிய பணக்காரர்

மஹிந்திரா (Mahindra) நிறுவனத்தில் இருந்து சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள பிஇ 6 (BE 6) மற்றும் எக்ஸ்இவி 9இ (XEV 9e) எலக்ட்ரிக் கார்களுக்கு (Electric Cars) மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பு கிடைத்து வருகிறது. கோடி ரூபாய்கள் அளவிற்கு இல்லாமல், சில இலட்ச ரூபாய்களில் விலைகளை கொண்ட இந்த புதிய மஹிந்திரா எலக்ட்ரிக் கார்களை பெரும் பணக்காரர்கள் கூட ஆர்வத்துடன் போட்டிப் போட்டு வாங்கி வருகின்றனர். அதாவது, ஏற்கனவே வீட்டில் ஒன்றுக்கு 2,3 சொகுசு கார்களை வைத்திருப்பவர்கள் கூட மஹிந்திராவின் இந்த புதிய எலக்ட்ரிக் கார்களை வாங்குவதை பார்க்க முடிகிறது.
Advertisement

கியா இவி6 எலெக்ட்ரிக் கார் ரைடு ரிவியூ!

தென்கொரியாவைச் சேர்ந்த பிரபல கார் உற்பத்தி நிறுவனமான கியா (Kia), இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போ 2025 (பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025) வாயிலாக தன்னுடைய புதுப்பிக்கப்பட்ட இவி6 (EV6) கார் மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. புதுப்பித்தலின்கீழ் பல்வேறு மாற்றங்களை இந்த காரில் கியா செய்திருக்கின்றது. குறிப்பாக, அதன் டிசைனில் லேசான மறு சீரமைப்பு கியா செய்திருக்கின்றது. இதுமட்டுமல்ல, புதிதாக அடாஸ் (ADAS) தொழில்நுட்பத்தையும் இந்த காரில் கியா வழங்கி இருக்கின்றது. மேலும், சற்றே இதன் பேட்டரி பேக் திறனையும் அது உயர்த்தியிருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது.

டொயோட்டா காரை வாங்கிய காந்தார பட நடிகர்!

கன்னட திரையுலகைச் சேர்ந்த முன்னணி நடிகர்களில் ரிஷப் ஷெட்டியும் ஒருவர் ஆவார். இவர் நடிகர் மட்டுமல்ல சிறந்த எழுத்தாளரும் கூட. இவரின் எழுத்துக்களில் உருவாகிய ஓர் திரைப்படமே கடந்த 2022 ஆம் ஆண்டில் வெளியாகிய காந்தாரா. பல்வேறு விருதுகளை வென்ற ஓர் இந்திய திரைப்படமே இது என்பது கவனிக்கத்தகுந்தது. இந்த ஒற்றை படத்தின் வாயிலாகவே அவர் தமிழ், தெலுங்கு, மற்றும் மலையாளம் உள்ளிட்ட திரை ரசிகர்களையும் தன்பக்கம் அவர் வளைத்து போட்டார். ரிஷப் ஷெட்டி, நடிகர் மற்றும் எழுத்தாளராக மட்டுமல்ல தயாரிப்பாளர் எனும் ரோலையும் ஆற்றி வருகின்றார்.

இந்தியாவிற்கு வரவே வராதுன்னு சொன்னாங்க! இப்ப வந்துடுச்சு!

2021ம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் நடந்த ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சி உலக அரங்கில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. சர்வேதச அளவில் ஆட்டோமொபைல் துறையை புரட்டி போடும் அளவிலான தயாரிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டன. இந்நிலையில் அந்த ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியில் பெரிய மற்றம் போல்டான கார் ஒன்று கண்காட்சியை காண வந்தவர்களின் கண்ணை பறித்தது. இந்த கார் எப்பொழுது சாலைக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் ஏற்படுத்தியது. அந்த கார் தான் கியா இவி 9 கான்செப்ட் கார்.

ரெண்டரை கோடி ரூபா கார்ல போனது அவங்களா!

இந்தியாவில் பிரபல மனிதர்கள் விவாகரத்து (Divorce) பெறுவது தற்போது அதிகரித்து கொண்டே வருகிறது. குறிப்பாக திரையுலக நட்சத்திரங்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள்தான் சமீப காலமாக அதிக அளவில் விவாகரத்து பெற்று வருகின்றனர். பிரபல மனிதர்களின் விவாகரத்து வழக்குகள் நீதிமன்றத்திற்கு வரும்போது, அனைவரும் கவனிக்க கூடிய ஒரு விஷயமாக இருப்பது ஜீவனாம்சம் (Alimony) ஆகும். இந்திய கிரிக்கெட் வீரர் யுசுவேந்திர சஹால் (Yuzvendra Chahal) மற்றும் அவரது முன்னாள் மனைவி தனஸ்ரீ வர்மா (Dhanashree Verma) ஆகியோர் சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக விவாகரத்து பெற்றனர்.

லட்சக்கணக்கான மக்கள் வாங்கும் பைக்கில் இப்படியொரு அப்டேட்டா?

ஹீரோ மோட்டோகார்ப் (Hero Motocorp), இந்தியாவின் முன்னணி 2-வீலர் நிறுவனம். ஒவ்வொரு மாதமும் லட்சக்கணக்கிலான இருசக்கர வாகனங்களை விற்பனை செய்யக்கூடிய பிரம்மாண்டமான 2-வீலர் நிறுவனமாக ஹீரோ மோட்டோகார்ப் விளங்குகிறது. இந்தியா போன்ற மக்கள் தொகை அதிகம் கொண்ட நாட்டில் செயல்படுவதினாலேயே உலகின் மிக பெரும் 2-வீலர் நிறுவனமாக ஹீரோ மோட்டோகார்ப் உள்ளது. ஹீரோ நிறுவனத்தின் அடையாளமே அதன் ஸ்பிளெண்டர் (Splendor) பைக்குகள் ஆகும். ஹீரோ நிறுவனம் விற்பனை செய்வதில் பாதிக்கும் மேல் ஸ்பிளெண்டர் பைக்குகள் ஆகும். இதனாலேயே, புது, புது மாடல்களில் ஸ்பிளெண்டர் பைக்குகளை கொண்டுவர ஹீரோ மோட்டோகார்ப் விரும்புகிறது.