ஓலா ஸ்கூட்டரை வாங்க வந்த எல்லாரும் இதை வாங்க போறாங்க!

ஓலா எலக்ட்ரிக் (Ola Electric) நிறுவனத்தில் இருந்து மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரோட்ஸ்டர் எக்ஸ் (Roadster X) என்கிற புதிய எலக்ட்ரிக் பைக் (Electric Bike) விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது. இந்த ஓலா எலக்ட்ரிக் பைக் விலைகள் அறிவிக்கப்பட்டு சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால், இன்னும் சாலைகளுக்கு வரவில்லை. ஏனெனில், இந்த எலக்ட்ரிக் பைக்கின் டெலிவிரிகள் (Bike Deliveries) இன்னும் துவங்கப்படவில்லை. ஆனால், இந்த நிலை இன்னும் நீண்ட நாட்களுக்கு நீடிக்க போவது இல்லை. ஏனென்றால், ஓலா ரோட்ஸ்டர் எக்ஸ் எலக்ட்ரிக் பைக்குகள் ஷோரூம்களுக்கு (Showrooms) வர துவங்கியுள்ளன.

ஃபோக்ஸ்வேகன் டிகுவான் ஆர் லைன் அறிமுகம்..

உலக புகழ்பெற்ற கார் உற்பத்தி நிறுவனமான ஃபோக்ஸ்வேகன் (Volkswagen), டிகுவான் ஆர் லைன் (Tiguan R-Line) கார் மாடலை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. வழக்கமான டிகுவான் கார் மாடலைக் காட்டிலும் அதிகம் பிரீமியம் மற்றும் ஆற்றலை உருவாக்கும் திறன் கொண்டதாக இந்த டிகுவான் ஆர்-லைன் கார் மாடல் ஆகும். இதில் மட்டுமல்ல கவர்ச்சியான தோற்றத்தைத் தாங்கியிருப்பதிலும் மிக சிறந்த எஸ்யூவி (SUV) ரக காராக டிகுவான் ஆர் லைன் உள்ளது.

சொகுசு கார்களையே தூக்கி சாப்பிடும் மஹிந்திரா கார்!

இந்திய சந்தையில் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி ரக கார்களுக்கு எப்போதுமே நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இந்த செக்மெண்ட்டில் ஆதிக்கம் செலுத்தி கொண்டுள்ள கார்களில் ஒன்று மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ (Mahindra XUV 3XO). இந்த காரின் நடப்பு 2025ம் ஆண்டு மார்ச் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) தற்போது வெளியாகியுள்ளது. நாம் இதன்படி பார்த்தால், மஹிந்திரா நிறுவனம் நடப்பு 2025ம் ஆண்டு மார்ச் மாதம் 7,055 எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ கார்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது.

பரீட்சைக்கு ஸ்கூல் பசங்க போற மாதிரி வண்டி ஏறிபோன கார்கள்..

இந்தியாவில் இன்னும் ஒரு சில வாரங்கள் அல்லது மாதங்களில் புதுமுக கார் உற்பத்தி நிறுவனம் ஒன்று கால்தடம் பதிக்க இருக்கின்றது. வியட்நாமைச் சேர்ந்த வின்ஃபாஸ்ட் (Vinfast) நிறுவனமே அது ஆகும். இந்த நிறுவனம் இந்தியாவில் தன்னுடைய மிகப் பெரிய வாகன உற்பத்தி ஆலையை உருவாக்கிக் கொண்டிருக்கின்றது. தமிழகத்திலேயே நிறுவனத்தின் வாகன தயாரிப்பு ஆலை தயாராகிக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையிலேயே நிறுவனத்தின் முன்னணி கார் மாடல்கள் சில டிரக்கில் ஏற்றிச் செல்லப்படும் படங்கள் இணையத்தில் வாயிலாக வெளியாகி இருக்கின்றன.
Advertisement

இந்த காரை 18 பேர் தான் வாங்கியிருக்காங்க!

ரூ. 1.3 கோடிக்கு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட, பிரமிக்க வைக்கும் விவரக்குறிப்புகள் மற்றும் அம்சங்களைக் கொண்ட லக்ஸரி எலக்ட்ரிக் SUV, கியா EV9 ஐக் கண்டறியவும்.

கெத்தான ஆடம்பர காரில் வந்திறங்கி நிவின் பாலி!

மலையாள திரை உலகைச் சேர்ந்த முன்னணி நடிகர்களில் நிவின் பாலி-யும் ஒருவர். இவர் 'பிரேமம்' போன்ற பல முன்னணி மலையாள படங்களில் நடித்திருக்கின்றார். நிவின் பாலிக்கு மிகப் பெரிய அளவில் மார்க்கெட்டை ஏற்படுத்திக் கொடுத்ததில் இந்த படத்தின் பங்களிப்பு மிகவும் முக்கியமானதாக உள்ளது. குறிப்பாக, இந்த படத்தின் வாயிலாகவே அவர் தமிழ் திரை ரசிகர்களின் மனதிலும் இடம் பிடித்தார். குறிப்பாக மலர் டீச்சர் கதாபாத்திரத்தை அவர் காதலித்த விதத்திற்காகவே பலரின் மனதைக் கவர்ந்த நபராக மாறினார். இத்தகைய நடிகரே தற்போது மிகவும் சிம்பிளாக டொயோட்டா (Toyota) காரில் வந்திறங்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி இருக்கின்றது.

நம்பர் 1 விற்பனையில் எலெக்ட்ரிக் கார்! எந்த கம்பெனி?

MG மோட்டார்ஸ் மார்ச் 2025 இல், மின்சார வாகன விற்பனையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை அடைந்தது, இதற்கு வின்ட்சர் EV மற்றும் ZS EV ஆகியவை வழிவகுத்தன. இந்தியாவில் சந்தை போக்குகளை பிரதிபலிக்கிறது.

பல கோடி ரூபா கார்களை ஒன்னா பாத்ததும் மிரண்டு போன மக்கள்!

பாதுகாப்பு வாகனங்கள் புடை சூழ, மிகவும் விலை உயர்ந்த சொகுசு கார்கள் அணிவகுத்து செல்வதை பார்ப்பது என்பது, உண்மையிலேயே பிரம்மிப்பை ஏற்படுத்த கூடிய விஷயமாக இருக்கும். பொதுவாக பிரதமர் (Prime Minister), முதல் அமைச்சர்கள் (Chief Ministers) மற்றும் அமைச்சர்கள் (Ministers) போன்ற உயர் பொறுப்புகளை வகிக்கும் நபர்கள் பயணம் செய்யும் போது, இப்படியான வாகன அணிவகுப்பை காணலாம். இந்த வரிசையில் தற்போது ஒரு வாகன அணிவகுப்பின் வைரல் வீடியோ (Viral Video), சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

நமோ பாரத் ரயில் சோதனையோட்டம் தொடக்கம்!

இந்தியர்களின், குறிப்பாக, ரயில் பயண பிரியர்களின் நீண்ட கால எதிர்பார்ப்பாக டெல்லி - மீரட் இடையில் இயக்கப்பட இருக்கும் ஆர்ஆர்டிஎஸ் (Regional Rapid Transit System) ரயில் சேவை இருந்து வருகின்றது. இது இன்னும் ஒரு சில வாரங்கள் அல்லது ஓரிரு மாதங்களுக்குள் மக்களின் பொதுப் பயன்பாட்டிற்கு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இதை உறுதிப்படுத்தும் விதமாகவே தற்போது அந்த ரயிலின் சோதனை ஓட்ட பணிகள் நாட்டில் தொடங்கி இருக்கின்றன.

ஃபேமிலிமேன்களுக்கு ஏற்ற வண்டி சேல்ஸ்க்கு வந்துடுச்சு!

OBD-2B இணக்க இயந்திரம், புதுப்பிக்கப்பட்ட விலை மற்றும் ஒவ்வொரு ரைடரின் தேவைகளுக்கும் ஏற்ற பல வகைகள் கொண்ட புதிய ஹீரோ க்ளாமர் மோட்டார்சைக்கிளை ஆராயுங்கள்.

ஹைபிரிட் உடன் வருகிறது கியா செல்டோஸ் எஸ்யூவி!

மாருதி (Maruti) நிறுவனத்தின் பொழப்பில் மட்டுமல்ல டொயோட்டா (Toyota) நிறுவனத்தின் பொழப்பிலும் மண்ணை அள்ளி போடும் பணியில் பிரபல கார் உற்பத்தி நிறுவனம் ஒன்று களமிறங்கி இருப்பது தெரிய வந்திருக்கின்றது. தென்கொரியாவைச் சேர்ந்த கார் உற்பத்தி நிறுவனமான கியா (Kia)-வே அது ஆகும். இந்த நிறுவனமே தன்னுடைய புகழ்பெற்ற கார் மாடல்களில் ஒன்றான செல்டோஸ் (Seltos)-இல் ஹைபிரிட் (Hybrid) அம்சத்தை அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்திருக்கின்றது. இதன் வருகை எப்போது அரங்கேற இருக்கின்றது என்பது பற்றிய விபரங்களே இப்போது வெளியாகி உள்ளன.

நடிகர் விஜய் மாலையுடன் வந்திறங்கிய காரை பார்த்தீர்களா?

ஏப் 14ம் அம்பேத்கர் ஜெயந்தியை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழக தலைவரும் நடிகருமான விஜய் எளிமையான காரில் வந்து அம்பேத்கரின் திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அவர் வந்த கார் எளிமையான காராக இருக்கிறது. இந்த கார் குறித்து பலர் பேசி வருகின்றனர். இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
Advertisement

ரெண்டே கால் கோடி ரூபா கார்ல போன இவங்க ஆபாச பட நடிகையா!

இந்தியாவில் ஒரு சில நடிகர், நடிகைகளின் அணுகுமுறை குறித்து எதிர்மறையான விமர்சனங்கள் இருக்கின்றன. அதாவது ரசிகர்களிடம் ஒரு சில நடிகர், நடிகைகள் திமிராக நடந்து கொள்வதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. இதை நிரூபிக்கும் வகையிலான வீடியோக்களும் அவ்வப்போது வெளியாகி கொண்டுதான் உள்ளன. இதற்கு அப்படியே நேர் எதிராக ஒரு சில நடிகர், நடிகைகளின் அணுகுமுறை இருக்கும். அதாவது திரையில் அவர்கள் எதிர்மறை கதாபாத்திரங்களில் நடித்தாலும் கூட, நிஜத்தில் மிகவும் எளிமையானவர்களாகவும், அன்பானவர்களாகவும் இருப்பார்கள். இதற்கு அந்த காலத்து எம்.என். நம்பியார் (M. N. Nambiar) ஒரு உதாரணம்.

யாருமே இந்த நல்ல காரை வாங்கல! ஏன் தெரியுமா?

2025 மார்ச் மாதத்தில், C3 மற்றும் eC3 மாடல்கள் விற்பனையில் அதிகரிப்பைக் கண்ட சிட்ரோயன் இந்தியா, ஆடம்பர C5 ஏர்‌க்ராஸ் மாடலின் விற்பனை பூஜ்ஜியமாக இருந்தது. எதிர்கால மாடல் குறிப்பிடத்தக்க வடிவமைப்பு மாற்றங்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட பவர்‌ட்ரெய்ன்கள், மின்சார மாறுபாடுகளை உள்ளடக்கியது.

மைலேஜ் கிங்கை வேற லெவலுக்கு அப்டேட் பண்ணிட்டாங்க..

ஏழை மற்றும் எளிய மக்களின் பிரியமான பைக் மாடலாக பஜாஜ் பிளாட்டினா 110 (Bajaj Platina 110) உள்ளது. இது சீக்கிரமே சில முக்கியமான அப்டேட்டுகளுடன் விற்பனைக்கு வர இருக்கின்றது. இதன் அறிமுகத்திற்கு இன்னும் சில தினங்களே உள்ளன. இந்த மாதிரியான சூழ்நிலையிலேயே விற்பனைக்கு வரும் முன்னரே இந்த பைக் ஷோரூம்களுக்கு வர தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆகையால், ஒரு சில நாட்கள் அல்லது வாரங்களிலேயே மிகப் பெரிய அப்டேட்டைப் பெற்றிருக்கும் பிளாட்டினா 110 விற்பனைக்கு வந்துவிடும் என்கிற நம்பிக்கை சந்தைக்கு உருவாகி உள்ளது.

விற்பனையில் வளர்ச்சியை பதிவு செய்த ஸ்விஃப்ட்!

இந்திய சந்தையில் ஹேட்ச்பேக் கார்களை வாங்குபவர்களின் முதன்மையான தேர்வுகளில் ஒன்றாக இருப்பது மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் (Maruti Suzuki Swift). மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் கார் கடந்த 2005ம் ஆண்டுதான் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. அதாவது இந்த கார் விற்பனைக்கு வந்து 2 தசாப்தங்கள் (20 வருடங்கள்) கடந்து விட்டன. ஆனால் தற்போதும் கூட ஒவ்வொரு மாதமும் மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் சிறப்பான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்து வருகிறது. மாருதி சுஸுகி நிறுவனம் ஸ்விஃப்ட் காரை சீரான இடைவெளிகளில் அப்டேட் செய்து கொண்டே வருவதுதான் இதற்கு காரணம்.

இது தெரியாம மாருதி ஷோரூம் பக்கம் போயிடாதீங்க!

மருதி சுசுகி இந்தியா மார்ச் 2025 இல் e விட்டாரா மின்சார வாகனத்தை அறிமுகப்படுத்த உள்ளது, இது விற்பனையின் ஏற்ற இறக்கங்கள் மற்றும் சந்தை இயக்கவியல் மத்தியில்.

ஃபேமிலியா ஒரே கார்ல எல்லாரும் போகலாம்!

இந்தியாவில் குடும்பத்துடன் பயணிக்கும் ரக கார்கள் விற்பனை அதிகமாக இருக்கிறது. அதிக எண்ணிக்கையிலான சீட்டர் கொண்ட வாகனங்களுக்கு குடும்பத்தினர்கள் அதிகம் விரும்பம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் இந்திய மார்கெட்டில் பல்வேறு வாகன தயாரிப்பு நிறுவனங்கள் இந்த ரக கார்களை விற்பனை செய்து வருகின்றனர். இப்படியாக குறைந்த விலையில் இந்திய மார்கெட்டில் விற்பனையாகும் கார்கள் குறித்த விபரங்களை காணலாம்.

5 வருஷத்துக்கு பின் வரும் ஸ்கோடா சூப்பர்ப் கார்!!

ஸ்கோடா ஆட்டோ (Skoda Auto), செக் குடியரசு நாட்டை சேர்ந்த உலகின் முன்னணி கார் நிறுவனங்களுள் ஒன்று. குறிப்பாக, ஐரோப்பிய சந்தையில் பல தரமான கார்களை விற்பனை செய்யக்கூடிய பிரபலமான கார் நிறுவனமாக ஸ்கோடா விளங்குகிறது. இந்திய சந்தையை பொறுத்தவரையில், ஸ்கோடாவின் திட்டங்கள் சற்று வித்தியாசமாக உள்ளன. கடந்த சில வருடங்களாக, குறைந்த விலையில் எஸ்யூவி (SUV) ரக கார்களை இந்தியாவில் ஸ்கோடா அறிமுகம் செய்து வருகிறது. குஷாக் (Kushaq), கைலாக் (Kylaq) உள்ளிட்டவை அந்த வரிசையில் வந்த ஸ்கோடா எஸ்யூவி கார்கள் ஆகும்.

34 கிமீ மைலேஜ் குடுக்கற காரை இந்த ரேட்ல விக்கறாங்களா!

இந்திய சந்தையில் செடான் கார்களின் (Sedan Cars) விற்பனை நீண்ட காலமாகவே 'டல்' அடித்து கொண்டுள்ளது. மாறாக எஸ்யூவி கார்களின் (SUV Cars) தூள் கிளப்பி வருகிறது. இந்த எஸ்யூவி புயலில் சிக்கி சின்னாபின்னமாகாமல் ஒரே ஒரு செடான் கார் மட்டும் தப்பி பிழைத்து கொண்டுள்ளது. அது மாருதி சுஸுகி டிசையர் (Maruti Suzuki Dzire) ஆகும். மாருதி சுஸுகி டிசையர் கார் ஒவ்வொரு மாதமும் பிரம்மாண்டமான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்து வருகிறது. இது நடப்பு 2025ம் ஆண்டின் மார்ச் மாதமும் தொடர்ந்துள்ளது.
Advertisement

சீனால இருந்து வந்த கம்பெனி இவங்களயே அடிச்சு கீழ தள்ளிட்டாங்க

2025 பேங்காக் மோட்டார் கண்காட்சியில், BYD 10,353 ஆர்டர்களைப் பெற்றது, இது டொயோட்டாவை விஞ்சியது. மொத்த ஆர்டர்கள் 77,379 ஆக இருந்தன, இது மின்சார வாகன சந்தையில் BYD-யின் வளர்ந்து வரும் செல்வாக்கைக் காட்டுகிறது.

ஹோண்டாவின் இந்த பைக்கை வாங்கியவர்களுக்கு வர போகும் போன் கால்

ஹோண்டா மோட்டார்சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா (Honda Motorcycle & Scooter India) நிறுவனம் கடந்த காலங்களில் இருந்து பல்வேறு தரமான பைக்குகளையும், ஸ்கூட்டர்களையும் அறிமுகம் செய்துள்ளது. ஆனால், விலையுயர்ந்த பைக்குகளை அறிமுகம் செய்யும்போது ஹோண்டா சற்று சறுக்கல்களை காண்கிறது. ஏனெனில், பவர்ஃபுல்லான பைக்குகளை அறிமுகம் செய்வதில் ராயல் என்ஃபீல்டு (Royal Enfield), கவாஸாகி (Kawasaki) போன்ற நிறுவனங்கள் முன்னணியில் உள்ளன. அதுமட்டுமில்லாமல், ஹோண்டா நிறுவனம் குறைந்த சிசி என்ஜினை கொண்ட பைக்குகளை சற்று அதிக விலையில் விற்பனை செய்கிறது.

ஃபெர்ராரி காரின் எஞ்சினை கொண்டு உருவாக்கப்பட்ட பைக்..

விநோத உருவம் கொண்ட மற்றும் யாராலும் உருவாக்க முடியாத தனித்துவமான மோட்டார்சைக்கிள்களை உருவாக்கும் திறன் கொண்டவர் மேக்ஸ்வெல் ஹசன். இதற்காக அவர் கடந்த காலங்களில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளார். இந்த நிலையிலேயே, அவர் ஃபெர்ராரி ஸ்போர்ட்ஸ் காரின் எஞ்சினைக் கொண்டு விநோத பைக் ஒன்றை தயார் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த பைக்கும் டூ-வீலர் பிரியர்கள் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. காரணம் அதில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் அதிக ஆற்றலை உருவாக்கும் எஞ்சினே ஆகும்.

அஜித் காருக்குள்ள இருக்குற இந்த விஷயத்தை கவனிச்சீங்களா?

தற்போது நடிகர் அஜித் குமார் நடிப்பில் வெளியாகியுள்ள குட் பேட் அக்லி திரைப்படம் திரையங்குகளில் பெரும் வரவேற்ப்பை பெற்று ஓடி வரும் நிலையில், நடிகர் அஜித் குமார் மீண்டும் கார் ரேஸிற்கான பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். இவர் இந்த முறையில் தனது காரை சோதித்து பார்க்கும் வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. இந்த வீடியோ பலரை கவர்ந்துள்ளது. இந்த வீடியோவில் உள்ள அவரது கார் குறித்தும் விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

லிட்டருக்கு 19கிமீ மைலேஜ் தரும் காருக்கு பயங்கர டிமாண்ட்!!

ஹூண்டாய் (Hyundai) தென்கொரியா நாட்டை சேர்ந்த உலகின் மிக பெரும் கார் நிறுவனங்களுள் ஒன்று. இந்தியாவில் மாருதி சுஸுகிக்கு (Maruti Suzuki) அடுத்து அதிக எண்ணிக்கையில் கார்களை விற்பனை செய்யக்கூடிய நிறுவனமாக ஹூண்டாய் விளங்குகிறது. ஒவ்வொரு மாதமும் இந்தியாவில் விற்பனையாகும் ஹூண்டாய் கார்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனை வெளிக்காட்டும் வகையில் கடந்த மார்ச் மாதத்தில் ஹூண்டாய் விற்பனை செய்த கார்களின் எண்ணிக்கை குறித்த விபரங்கள் தெரியவந்துள்ளன. அவற்றை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.