யாராக இருந்தாலும் காரை ஒரு நொடி நின்னு பார்த்துட்டு போவாங்க!

மஹிந்திரா (Mahindra) நிறுவனத்தில் இருந்து சமீபத்தில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் பிஇ 6 (BE 6) மற்றும் எக்ஸ்இவி 9இ (XEV 9e) எலக்ட்ரிக் கார்கள் (Electric Cars)-க்கான டெலிவிரிகள் (Deliveries) துவங்கப்பட்டன. 2024 டிசம்பர் மாத துவக்கத்தில் இந்த எலக்ட்ரிக் கார்கள் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், கடந்த பிப்ரவரி மாதத்தில் இவற்றிற்கான புக்கிங்ஸ் (Bookings) துவங்கப்பட்டன. அனைத்து தரப்பு கஸ்டமர்களையும் கவரும் முயற்சியாக, மற்ற கார்களை போன்று இந்த புதிய மஹிந்திரா எலக்ட்ரிக் கார்களும் விலை குறைவான மற்றும் விலைமிக்க வேரியண்ட்களில் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

பள்ளம் தோண்டி புதைக்கப்பட்ட கார்.. இப்போ வெளியே!!

யுட்யூபில் (Youtube)இல் பார்வையாளர்களைக் கவர வேண்டும் என்பதற்காக யுட்யூபே கதியாக இருப்பவர்கள் விநோத செயலில் ஈடுபடுவது வழக்கமான ஒன்று. அந்தவகையிலேயே, ஓர் யுட்யூப் சேனலைச் சேர்ந்த சிலர் கடந்த ஓராண்டிற்கு முன்னர் புதைக்கப்பட்ட காரை இப்போது வெளியே எடுத்து அதை இயக்கி பார்த்திருக்கின்றார். இந்தியாவிலேயே இந்த விநோத நிகழ்வு அரங்கேறியிருக்கின்றது. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால் இந்த வேலையை பார்த்தது 'கிரேசி எக்ஸ்ஒய்இசட்' யுட்யூப் சேனல் ஆகும். விநோதமான செயல்களைச் செய்து அதுபற்றிய வீடியோவை பகிரக் கூடிய ஓர் யுட்யூப் சேனலே இந்த கிரேசி எக்ஸ்ஒய்இசட் ஆகும்.

ரெனால்ட் கார் ஷோரூம்களில் நிற்க கூட இடம் கிடைக்க போறது இல்ல!

ரெனால்ட் (Renault), பிரெஞ்சு நாட்டை சேர்ந்த பிரபலமான கார் நிறுவனம். ஆனால், இந்தியாவில் ஒரு நிலையான இடத்தை பிடிக்க தான் கடந்த பல வருடங்களாக போராடி வருகிறது. இந்தியாவில் ஒரு சமயத்தில் பல எண்ணிக்கைகளில் கார்களை விற்பனை செய்துவந்த ரெனால்ட் நிறுவனம் தற்சமயம் வெறும் 3 கார்களை மட்டுமே விற்பனை செய்கிறது. க்விட் (Kwid), டிரைபர் (Triber) மற்றும் கைகர் (Kiger) என்பன அந்த 3 ரெனால்ட் கார்கள் ஆகும். விற்பனை செய்வது வெறும் 3 கார்கள் மட்டும்தான் என்றாலும், அவை மூன்றிற்கும் ரெனால்ட் நிறுவனம் தற்போது ஏப்ரல் மாதத்திற்கான சலுகைகள் அறிவித்துள்ளது.

2.10 லட்ச ரூபா விலையில் ஹோண்டா ஹைனெஸ் பைக் அறிமுகம்..

முன்னணி இரண்டு சக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஹோண்டா (HMSI), ஹைனெஸ் சிபி 350 (Hness CB350) மற்றும் சிபி 350 ஆர்எஸ் (CB350RS) ஆகிய பைக் மாடல்களின் 2025 வெர்ஷனை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. ஓபிடி-2பி (OBD-2B) விதிகளுக்கு இணங்க அப்கிரேட் செய்தே இவற்றை ஹோண்டா விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. இத்துடன், புதிய நிற தேர்வுகளையும் இந்த பைக் மாடல்களில் ஹோண்டா செர்த்திருக்கின்றது. இதுபற்றிய கூடுதல் விபரங்களையே இந்த பதிவில் நாம் பார்க்க உள்ளோம். வாங்க விரிவான பதிவிற்குள் போகலாம்.
Advertisement

மகனுக்காக எம்எல்ஏ வாங்கிய விலையுயர்ந்த மெர்சிடிஸ் கார்!!

மெர்சிடிஸ் (Mercedes) நிறுவனம் உருவாக்கும் கார்களிலேயே விலைமிக்கது மெர்சிடிஸ்-மேபக் (Maybach) கார்கள் ஆகும். மெர்சிடிஸ்-மேபக் கார்களில் இந்தியாவில் மிகவும் பிரபலமானது மெர்சிடிஸ்-மேபக் ஜி.எல்.எஸ்600 (GLS600) கார் ஆகும். சில வருடங்களுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்ட இந்த மேபக் காரை சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் தொடர்ச்சியாக வாங்கி வருகின்றனர். குறிப்பாக, பாலிவுட் சினிமா வட்டாரத்தில் இந்த காரை நிறைய பேர் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். கடந்த 2023, 2024ஆம் ஆண்டுகளில் மாதத்திற்கு குறைந்தப்பட்சம் ஒருவராவது இந்த காரை வரிசையாக வாங்கி போட்டனர்.

மொஹமத் சிராஜின் உடன் பிறவா தங்கை வந்த காரை பாத்தீங்களா!!

முன்னணி கிரிக்கெட் விளையாட்டு வீரரான மொஹமத் சிராஜ் உடன் டேட்டிங் சென்றதாக சொல்லப்படும் பெண், விலை உயர்ந்த ஆடம்பர காரில் வந்து அனைவரையும் கிரங்கிப் போக செய்திருக்கின்றார். ஸனாய் போஸ்லே, இவரே அந்த பெண் ஆவார். இவருக்கும், மொஹமத் சிராஜ்-க்கும் இடையிலேயே ரகசிய உறவு இருப்பதாக பலரும் வதந்தியாக பேசி வந்தனர். இந்த நிலையிலேயே, தங்களுக்கு இடையே இருப்பது என்ன மாதிரியான உறவு என்பதை வெளிப்படையாக சமீபத்தில் போட்டு உடைத்திருந்தார் ஸனாய் போஸ்லே.

இந்த ஏப்ரலில் ஹோண்டா கார் வாங்குபவர்களுக்கு ஜாக்பாட்!

ஹோண்டா கார்ஸ் (Honda Cars), இந்தியாவில் கார்களை விற்பனை செய்யும் முன்னணி நிறுவனங்களுள் ஒன்று. இருப்பினும், ஜப்பானை சேர்ந்த இந்த நிறுவனம் இந்திய கார்கள் மார்க்கெட்டில் ஒரு நிலையான இடத்தை பிடிக்க கடந்த பல வருடங்களாகவே போராடி வருகிறது. இதன் காரணமாகவே, புது, புது கார்களை அறிமுகம் செய்வதுடன், அவ்வப்போது கார்களுக்கு சலுகைகளையும் மறக்காமல் அறிவித்துவிடுகிறது. அந்த வரிசையில் தற்போது 2025 ஏப்ரல் (April) மாதத்தை முன்னிட்டு குறிப்பிட்ட சில ஹோண்டா கார்களுக்கு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

சேல்ஸில் பட்டைய கிளப்பிட்டு இருக்கு இந்த ஹூண்டாய் கார்..

இந்த காரை அடிச்சுக்க புதுசா ஒரு காரு பொறந்துதான் வரனும்னு சொன்ன காலம் மாறி, நிறைய பேரு (புது காரு) பிறந்து வந்துட்டாங்க, ஆனா இந்த கார அடிக்க முடியல என சொல்லும் அளவிற்கு வளர்ந்திருக்கின்றது ஹூண்டாய் (Hyundai) நிறுவனத்தின் கிரெட்டா (Creta) கார் மாடல். இந்திய எஸ்யூவி (SUV) கார் மார்கெட்டின் தலைவனாகவே இந்த கார் மாடல் மாறிவிட்டது. இன்னும் புரியும்படி சொல்ல வேண்டும் விற்பனையில் மற்ற எஸ்யூவி கார்களால் எட்ட முடியாத உயரத்தையே கிரெட்டா அடைந்திருக்கின்றது.

கேப்டன் மாதிரி கார்ல சும்மா ஜம்முனு போய் இறங்கனுமா?

குடும்பத்துடன் பயணிக்கும் ரக கார்கள் தற்போது மார்கெட்டில் வெகு சிறப்பாக விற்பனையாகி வருகிறது. பலர் இந்த ரக கார்களை தான் விரும்புகிறார்கள்.அதிக நபர்கள் பயணிக்க வேண்டும். பயணம் வசதியாக இருக்க வேண்டும். அதே நேரம் அதிகமான பொருட்களை எடுத்து செல்லும் வசதி இருக்க வேண்டும் என்ற எண்ணம் பலருகஅகம் இருக்கிறது. அதேநேரம் இந்த கார்களை வாங்கும் உரிமையாளர்கள் பலர் நடுவரிசையில் உள்ள சீட்டில் அமர்ந்து பயணிக்கிறார்கள். அவர்களுக்க அந்த சீட் வசதி நிறைந்த சீட்டாக இருக்க வேண்டும் என கருதுகிறார்கள்.அதன்படி இந்தியாவில் விற்பனையாகும் 3 வரிசை சீட்டர் கொண்ட கார்களில் 2வது வரிசை சீட்டில் கேப்டன் சீட் கொண்ட கார்கள் குறித்த விபரங்களை காணலாம்.

பிரபல நடிகரின் மனதை பைக்கால் மயக்கிய ராயல் என்ஃபீல்டு!

ஹர்ஷ்வர்தன் ரானே (Harshvardhan Rane), 25க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த பாலிவுட் நடிகர் (Bollywood Actor). ஆரம்பத்தில் தெலுங்கு மொழி படங்களில் நடித்து வந்தவர், கடந்த 2020ஆம் ஆண்டில் இருந்து முழுவதுமாக இந்தி திரைப்படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். நம்ம ஊர் நடிகர் அர்ஜூன் (Arjun)-ஐ போன்று ஆக்‌ஷன் திரைப்படங்கள் (Action Movies)-இல் அதிகமாக நடிக்கக்கூடிய நடிகராக ஹர்ஷ்வர்தன் ரானே உள்ளார். இதனாலேயே, கரடு முரடான தோற்றம் கொண்ட கார் & பைக்குகள் என்றாலே இவருக்கு பிடித்துள்ளது.

விற்காமல் ஸ்டாக்கில் கிடக்கும் கார்களுக்கு செம தள்ளுபடி!

டாடா மோட்டார்ஸ், ஏப்ரல் 2025 இல் MY24 மாடல்களில் ரூ. 1.5 லட்சம் வரை கணிசமான தள்ளுபடிகளை வழங்கி வருகிறது. இதில் அல்ட்ரோஸ், ஹாரியர் மற்றும் சஃபாரி ஆகியவை அடங்கும்.

ரோல்ஸ் ராய்ஸ் கார்களையே இவ்ளோ வச்சிருக்காரா!

தாய் நாட்டை வேண்டாம் என உதறிவிட்டு வெளிநாடுகளுக்கு சென்ற இந்தியர்களில் ரியூபன் சிங்-ம் ஒருவர் ஆவார். இவர் தன்னுடைய உழைப்பால் இங்கிலாந்து நாட்டின் மாபெரும் பணக்காரர்களில் ஒருவராக வளர்ந்திருக்கின்றார். நல்ல பிசினஸ் மேன்கள் எங்கு சென்றாலும் பிழைத்துக் கொள்வார்கள் என்பதற்கு சான்றாக இவரின் வளர்ச்சி இருக்கின்றது. 1990இல் இவரின் அதீத வளர்ச்சியையும், திறனையும் கண்டு வியந்துபோன இங்கிலாந்து அரசாங்கம், அவரை அழைத்து தங்கள் நாட்டின் சிறு தொழில்துறைக்கு அட்வைசராக நிர்ணயம் செய்தது.
Advertisement

உள்நாடு-வெளிநாடு 2லும் விற்பனையில் பட்டைய கிளப்பிட்டு இருக்க

உலக நாடுகள் அனைத்தும் இந்த நிறுவனத்தின் கையிலதான் என கூறலாம்போல, அந்த அளவிற்கே விற்பனையில் அசத்தோ அசத்து என அசத்திக் கொண்டிருக்கின்றது ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் (HMSI) உற்பத்தி நிறுவனம். இந்த நிறுவனம் கடந்த 2025 மார்ச் மாதத்தில் மட்டும் 4,01,411 யூனிட்டுகள் டூ-வீலர்களை விற்பனைச் செய்திருக்கின்றது. இது முந்தைய பிப்ரவரி மாதத்தைக் காட்டிலும் மிக அதிகம் ஆகும். 2025 பிப்ரவரி மாதத்தில் 3,83,918 யூனிட்டுகள் வரை மட்டுமே ஹோண்டா டூ-வீலர்கள் விற்பனையாகி இருந்தன என்பது கவனிக்கத்தகுந்தது.

குடும்பத்தோட 7 பேர் போகலாம்! 27 கி.மீ மைலேஜ் தரும்!

2024-25 நிதியாண்டில் மாரூதி சுசுகி ஈக்கோவின் விற்பனை செயல்திறன், அதன் அம்சங்கள் மற்றும் விலை விவரங்களை ஆராயுங்கள்.

6ஸ்கூட்டர், 6பைக் ஒரே நிறுவனத்திடம் இருந்து சேல்ஸ்க்கு வருது

சமீப சில காலமாகவே விற்பனையில் வீழ்ச்சியைச் சந்தித்து வந்த ஓலா எலெக்ட்ரிக் (Ola Electric) நிறுவனத்திற்கு கடந்த மார்ச் மாதம் ஆறுந்கதல் அளிக்கும் மாதமாக அமைந்திருக்கின்றது. இந்த ஒற்றை மாதத்தில் மட்டுமே 23,430 யூனிட்டுகள் ஓலா மின்சார இரண்டு சக்கர வாகனங்கள் விற்பனையாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. எனவே நிறுவனம் தற்போது கொண்டாட்டத்தில் மூழ்கி இருப்பதாகக் கூறப்படுகின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே ஓலா நிறுவனம் வாடிக்கையாளர்களைக் கவரும் புதுமுக வாகனங்களை அதிக எண்ணிக்கையில் இந்தியாவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தமிழ்நாட்டு டிவிஎஸ் கம்பெனி 20 வருஷத்துக்கு முன்ன போட்ட விதை

டிவிஎஸ் மோட்டார் (TVS Motor) நிறுவனத்தில் இருந்து பல்வேறு விதமான 2-வீலர்கள் (2-Wheelers) விற்பனை செய்யப்படுகின்றன. அவற்றுள், பிரபலமானது மற்றும் நாடு முழுவதும் கவனத்தை பெற்றது என்றால் அது டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் (Apache Bikes) ஆகும். 160சிசி என்ஜினில் இருந்து 310சிசி வரையிலான என்ஜின் ஆப்ஷன்களில் டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் விற்பனை செய்யப்படுகின்றன. இவை எல்லாம் துவங்கியது 2005ஆம் ஆண்டில் ஆகும். ஆக... டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் விற்பனைக்கு வந்து 20 வருடங்கள் ஆகிவிட்டன. இதனை டிவிஎஸ் நிறுவனம் கொண்டாடி வரும் நிலையில், இத்தனை வருடங்களில் எத்தனை அப்பாச்சி பைக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன என்பது குறித்த விபரங்களை தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

அஜித் மகன் ஓட்டிய கார்ல இவ்வளவு விஷயம் இருக்குதா?

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக இருப்பவர் அஜித்குமார். இவர் சினிமா மட்டுமல்லாமல் கார் ரேஸிலும் தற்போது கவனம் செலுத்தி வருகிறார். தற்போது அவரது மகன் ஆத்விக்கும் கார் ரேஸ் களத்தில் குதித்துள்ளார். தந்தை அஜித் குமாருடன் சேர்ந்து சென்னை கோ கார்ட் ரேஸ் டிராக்கில் அவரது மகன் ஆத்விக் கார் ரேஸ் பயிற்சி பெற்ற வீடியோ வைரலாக பரவி வருகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

புது மஹிந்திரா காரை பற்றி புட்டு புட்டு வெச்சிட்டாங்க!!

மஹிந்திரா (Mahindra) நிறுவனத்தில் இருந்து சமீபத்தில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் அறிமுகம் செய்யப்பட்ட எலக்ட்ரிக் கார் (Electric Car), எக்ஸ்.இ.வி 9இ (XEV 9e) ஆகும். கடந்த 2024ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் பிஇ 6 (BE 6) எலக்ட்ரிக் கார் உடன் எக்ஸ்இவி 9இ எலக்ட்ரிக் கார் அறிமுகம் செய்யப்பட்டது. கடந்த பிப்ரவரி மாதத்தில் இந்த புதிய மஹிந்திரா எலக்ட்ரிக் கார்களுக்கான முன்பதிவுகள் துவங்கப்பட்ட நிலையில், அதனை தொடர்ந்து டெலிவிரிகள் (Deliveries) கடந்த மார்ச் மாதத்தில் துவங்கப்பட்டன.

காஸ்ட்லியான காரில் ஏறி சென்றது இவரின் மாமியாரா?

இந்திய கிரிக்கெட்டில் ஜாம்பவானாக இருந்தவர் சச்சின் தென்டுல்கர், இவர் உலகம் முழுவதும் புகழ் பெற்றவராக இருக்கிறார். தற்போது இவரது மகள் சாரா தனது தாத்தா பாட்டியின் கையை பிடித்துக்கொண்டு காரில் கொண்டு ஏற்றும் வீடியோ வைரலாக பரவி வருகிறது. பலருக்கு இந்த வீடியோவில் இருக்கும் தாத்தா பாட்டி யார் என்று தெரியவில்லை. இது மட்டுமல்ல இவர்கள் பயணம் செய்த காரும் தற்போது சமூகவலைதளங்களில் அதிகம் பேசப்படுகிறது.

80 வருஷமா இதுக்கு தான் மஹிந்திரா காத்துக்கிட்டு இருந்துச்சு!

மஹிந்திரா & மஹிந்திரா (Mahindra & Mahindra), இந்தியாவின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்களுள் ஒன்று. ஆரம்பத்தில் கமர்ஷியல் வாகனங்கள் விற்பனையிலும், விவசாய உபகரணங்கள் விற்பனையிலும் ஈடுப்பட்டு வந்த மஹிந்திரா நிறுவனம், அதன்பின் கார்களை உற்பத்தி செய்து விற்பனை செய்யவும் ஆரம்பித்தது. கடந்த சில வருடங்களாக, கார்கள் விற்பனையிலும் மஹிந்திராவின் ஆதிக்கம் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. குறிப்பாக, கடந்த 2024ஆம் ஆண்டு ஆனது கார்கள் பிஸ்னஸில் மஹிந்திராவுக்கு மிகவும் சிறப்பான ஆண்டாக அமைந்தது. அதன் எதிரொலியாக, கடந்த 2025 பிப்ரவரி மாத கார்கள் விற்பனையில் 2வது இடத்தை மஹிந்திரா சொந்தமாக்கியது.
Advertisement

ஆறே வருஷத்துல மார்க்கெட்டை பிடிச்சுட்டாங்க...

தென் கொரியாவை சேர்ந்த பிரபலமான கார் நிறுவனங்களில் ஒன்று கியா (Kia). ஹூண்டாய் (Hyundai) நிறுவனத்தின் ஒரு அங்கமாக கியா செயல்பட்டு வருகிறது. அதாவது ஹூண்டாய்தான், கியா நிறுவனத்தின் தாய் நிறுவனம் ஆகும். கடந்த 2019ம் ஆண்டு இந்திய சந்தையில் காலடி எடுத்து வைத்த கியா நிறுவனம், மிக குறுகிய காலத்திலேயே வாடிக்கையாளர்களின் மனதில் இடம் பிடித்து விட்டது. இதன் மூலம் ஒவ்வொரு மாதமும் கியா நிறுவனம் மிகவும் சிறப்பான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்து வருகிறது.

விற்பனையில் 'ஈ' அடிக்கும் பைக்கில் புதிய ஆப்ஷன் வர போகுதா!!

இந்திய இரண்டு சக்கர வாகன உலகின் ஜாம்பவான் நிறுவனமாக ஹீரோ மோட்டோகார்ப் (Hero MotoCorp) நிறுவனம் விளங்கிக் கொண்டிருக்கின்றது. இந்த நிறுவனத்தின் தேறாத பைக் மாடலாக கரிஷ்மா (Karizma) காட்சியளிக்கின்றது. இன்னும் புரியும்படி சொல்ல வேண்டும் என்றால் 2024 டிசம்பர் தொடங்கி 2025 பிப்ரவரி வரை என மூன்று மாதங்களில் ஒரு யூனிட் கூட விற்பனையாகவில்லை. ஆமாங்க, பூஜ்ஜியம் என்கிற நிலையிலேயே அதன் விற்பனை உள்ளது. இதற்கு முந்தைய மாதங்களிலும் இந்த பைக்கின் விற்பனை சொல்லும்படி இல்லை என்பதையும் நாம் இங்கே கவனத்தில் கொள்ள வேண்டும்.

குடும்பத்துடன் கார் ஷோரூமில் நிற்கும் கேரள பணக்காரர்!!

ஐடி (IT) வேலைக்கு தேவையான பயிற்சிகளை வழங்கும் பல்வேறு நிறுவனங்கள் இந்தியாவில் செயல்படுகின்றன. அவ்வாறு கேரளாவில் செயல்படும் ஐடி பயிற்சி நிறுவனங்களுள் ஒன்று, லூமினார் டெக்னோலேப் (Luminar Technolab) ஆகும். கொச்சி, கோழிக்கோடு மற்றும் திருவனந்தப்புரம் என 3 நகரங்களில் லூமினார் டெக்னோலேப்-க்கு சொந்தமான பயிற்சி மையங்கள் செயல்படுகின்றன. இந்த நிறுவனத்தின் சிஇஓ (CEO) ஆக இருப்பவர், ராகுல் எம் குமார் (Rahul M Kumar) ஆவார். இவர் தற்போது புதியதாக டிஃபெண்டர் (Defender) கார் ஒன்றை வாங்கி உள்ளார்.

ஹைப்பர் டெலிவரி திட்டத்தை தொடங்கிய ஓலா!!

ஓலா எலெக்ட்ரிக் (Ola Electric) நிறுவனத்தின் மின்சார வாகனங்கள் சமீப சில மாதங்களாக விற்பனையில் சரிவைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றது. ஆகையால், வாடிக்கையாளர்களைக் கவரும் முயற்சியில் அது தீவிரமாகக் களமிறங்கி இருக்கின்றது. இதன் அடிப்படையிலேயே தற்போது அது புதிய திட்டம் ஒன்றை தொடங்கி இருக்கின்றது. அதாவது, ஒரே நாளில் வாகனத்தின் பதிவை முடித்து, டெலிவரி கொடுக்கும் திட்டத்தையே அது தொடங்கியுள்ளது. இந்த திட்டத்தை ஹைப்பர் டெலிவரி (Hyper Delivery) என நிறுவனம் குறிப்பிடுகின்றது.

மஹிந்திரா மின்சார காரை வாங்கிய இவர் யாரு தெரியுதா?..

இந்தியர்கள் மத்தியில் புதிதாக ஓர் கார் மாடல் பிரபலமாகிக் கொண்டிருக்கின்றது. மாருதி சுஸுகி (Maruti Suzuki), டாடா மோட்டார்ஸ் (Tata Motors) தயாரிப்பு இல்லைங்க. மஹிந்திரா (Mahindra) நிறுவனத்தின் சமீபத்திய வெளியீடான எக்ஸ்இவி 9இ (XEV 9e) கார் மாடலே அது ஆகும். இது ஓர் எலெக்ட்ரிக் எஸ்யூவி ரக கார் (Electric SUV Car) மாடல் ஆகும். இந்த கார் மாடலுக்கே இந்தியர்கள் மத்தியில் மிக சிறப்பான வரவேற்புக் கிடைக்கத் தொடங்கி இருக்கின்றது.