வருங்கால மனைவி உடன் பளபளக்கும் காரில் வந்து இறங்கியது இவரா?

சாய் கேதன் ராவ் (Sai Ketan Rao), மஹாராஷ்டிராவில் பிறந்த இளம் இந்தி நடிகர். திரைப்படங்கள், டிவி சீரியல்கள், குறும்படங்கள், இசை வீடியோக்கள் என பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகர். சிறு வயதில் இருந்தே வாழ்க்கையில் பல கஷ்டங்களை கடந்து வந்துள்ள சாய் கேதன் ராவ், தனது வாழ்வின் அடுத்த கட்டமாக ஸ்கோடா (Skoda) கார் ஒன்றை வாங்கியுள்ளார். காதலி உடன் புத்தம் புதிய ஸ்கோடா காருடன் சாய் கேதன் ராவ் காட்சியளிக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது. அதனை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

35 கிமீ மைலேஜை வாரி வழங்கும் கார்! சேல்ஸ் எகிறுது!

இந்தியாவின் நம்பர்-1 கார் உற்பத்தி நிறுவனம் எது? என கேட்டால், பச்சை குழந்தை கூட, மாருதி சுஸுகி (Maruti Suzuki) என யோசிக்காமல் பதில் சொல்லும். ஆனால் மாருதி சுஸுகி நிறுவனத்தின் அனைத்து கார்களும் பிரம்மாண்டமான எண்ணிக்கையில் விற்பனையாவதில்லை. ஒரு சில கார்களின் விற்பனை எண்ணிக்கை குறைவாகவே இருந்து வருகிறது. மாருதி சுஸுகி செலிரியோ (Maruti Suzuki Celerio) இந்த ரகத்தை சேர்ந்தது. ஆம், மாருதி சுஸுகி செலிரியோ காரின் விற்பனை எண்ணிக்கை குறைவாகவே இருந்து கொண்டுள்ளது.

வெளிநாட்டில் இந்தியரின் போர்ஷே காருக்கு நேர்ந்த கதி!!

இந்தியாவை சேர்ந்தவர்கள் பலர் வெளிநாடுகளில் வெகு விமர்சையான லக்சரி வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர். அத்தகையவர்களுள் ஒருவர் தான், பிரியேஷ் பட்டேல் (Priyesh Patel). போர்ச்சுகல் (Portugal) நாட்டில் குடும்பத்துடன் வாழ்ந்துவரும் பிரியேஷ் பட்டேல் தனது போர்ஷே (Porsche) கார் மூலமாக இணையத்தில் கவனத்தை பெற்றுள்ளார். ஏனெனில், தனது விலையுயர்ந்த போர்ஷே காரில் வேண்டுமென்றே சிறுவர், சிறுமியரை பென்சில் & பேனாக்களால் கிறுக்க வைத்து, அதனை ஸ்டைலாக மாற்றிக் கொண்டுள்ளார். இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

நடிகர் வீட்டில் ட்வின்ஸ் குழந்தைகள போல நிற்கும் மேபேக் கார்!

வீட்டில் ட்வின்ஸ் குழைந்தகள் இருப்பதைப் போல ஒரு நடிகரின் வீட்டில் மெர்சிடிஸ் மேபேக் (Mercedes Maybach) கார் மாடலின் நான்கு யூனிட்டுகள் பயன்பாட்டில் இருப்பது தெரிய வந்திருக்கின்றது. அந்த நடிகர் வேறு யாருமில்லைங்க, பல முன்னணி இந்தி திரைப்படங்களில் நடித்த ஷாகித் கபூர்-தான் அவர் ஆவார். இந்த நடிகரே மேபேக் கார் மாடலின் நான்கு யூனிட்டுகளை வைத்திருக்கின்றார். இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் மிக மிக விலை உயர்ந்த கார் மாடல்களில் மெர்சிடிஸ் மேபேக் ஒன்றாகும்.
Advertisement

இப்படியே போனா வீட்டுக்கு வீடு இந்த கார் நிக்குமாட்ட இருக்கு!

இந்திய வாடிக்கையாளர்கள் மனதில் மிக குறுகிய காலத்தில் வலிமையான இடத்தை பிடித்த கார்களில் ஒன்று மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் (Maruti Suzuki Fronx). இந்திய சந்தையில் கடந்த 2023ம் ஆண்டு ஏப்ரல் மாத இறுதியில்தான், மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் விற்பனைக்கே அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் வெறும் 17.30 மாதங்களிலேயே, அதாவது கடந்த 2024ம் ஆண்டு அக்டோபர் மாதத்தின் தொடக்கத்திலேயே, 2 லட்சம் யூனிட்கள் விற்பனை என்ற மைல்கல்லை (Sales Milestone) மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் கடந்து விட்டது.

வச்சிருப்பது போதாதுனு புது காரை வாங்கிய ஃபேமஸ் நகை கடை ஓனர்!

தங்கம் விலை நாளுக்கு நாள் ஏறிக் கொண்டே இருக்கின்ற சூழலில், ஓர் தங்க நகைக் கடை உரிமையாளர் காஸ்ட்லியான காரை வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த தகவலை உறுதிப்படுத்தும் விதமாக நகைக் கடை உரிமையாளருக்கு அந்த ஆடம்பர டெலிவரி வழங்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி இருக்கின்றது. வீடியோவை வெளியிட்டது யாரோ மர்ம நபர் அல்ல. பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ டீலரான பிஎம்டபிள்யூ இவிஎம் ஆட்டோகிராஃப்ட்-டே அந்த வீடியோவை வெளியிட்டு இருக்கின்றது.

சாதாரண காரில் வந்து போகும் தேவதை! அவங்களா இது!

திரையுலக நடிகைகள் என்றாலே, மிகவும் விலை உயர்ந்த கார்களில்தான் பயணம் செய்ய வேண்டும் என்பது எழுதப்படாத விதியாக உள்ளது. ஆனால் ஒரு சில நடிகைகள் மட்டும் விதிவிலக்காக மிகவும் எளிமையான கார்களில் பயணம் செய்வதை வழக்கமாக வைத்துள்ளனர். இதற்கு ஷ்ரத்தா கபூர் (Shraddha Kapoor) ஒரு உதாரணம். இவர் மிகவும் பிரபலமான பாலிவுட் நடிகைகளில் ஒருவராக உள்ளார். தற்போதைய நிலையில் இந்தியாவிலேயே அதிகமாக சம்பாதிக்கும் நடிகைகளில் ஒருவராக ஷ்ரத்தா கபூர் திகழ்கிறார். எனவே இவரது சொத்து மதிப்பு (Net Worth) மிகவும் அதிகம்.

இது வெறும் ரூ3.61 லட்சம் தானா!

புதிய வடிவமைக்கப்பட்ட டேஷ்போர்ட் மற்றும் மேம்படுத்தப்பட்ட செயல்திறன் கொண்ட இந்தியாவின் மலிவு நான்கு சக்கர வாகனமான பஜாஜ் கியூட்டைப் பாருங்கள். அதன் விவரக்குறிப்புகள் மற்றும் எதிர்காலத்தைப் பற்றி அறிக.

இந்த விலையில் கொடுத்தால் யாருக்கா இருந்தாலும் வாங்க தோணும்!

கேடிஎம் (KTM), இந்தியா உள்பட உலகின் முன்னணி பிரீமியம் தரத்திலான மோட்டார்சைக்கிள் உற்பத்தி நிறுவனம். கடந்த ஆண்டில் 3வது ஜென்ரேஷன் கேடிஎம் 390 ட்யூக் பைக்கை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இந்த பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை அறிமுகத்தின் போது ரூ.3.13 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டது. இந்த நிலையில், இந்த பைக்கின் புதிய விலையை கேடிஎம் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன்படி, கேடிஎம் 390 ட்யூக் பைக்கை இனி எந்த விலையில் வாங்கலாம் என்பதை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

இந்தியாவின் முதல் 7+1 சீட்டர் ஆட்டோ விற்பனைக்கு அறிமுகம்..

காயத்ரி எலெக்ட்ரிக் வெயிக்கிள் பிரைவேட் லிமிடெட் (Gayatri Electric Vehicle Pvt Ltd), நிறுவனம் இது ஓர் மின்சார வாகன உற்பத்தி நிறுவனம் ஆகும். இந்த நிறுவனமே அதன் புதுமுக எலெக்ட்ரிக் ஆட்டோரிக்சா ஒன்றை தற்போது இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் எந்தவொரு ஆட்டோரிக்சாவிலும் இல்லாத அம்சங்கள் மற்றும் வசதிகள் பலவற்றை இந்த ஆட்டோரிக்சாவில் காயத்ரி எலெக்ட்ரிக் வெயிக்கிள் வழங்கி உள்ளது. மிக முக்கியமாக 7+1 சீட்டர் வசதியை அந்த நிறுவனம் வழங்கி இருக்கின்றது.

பெயரை மாற்றியதும் சேல்ஸ் பிச்சுக்கிட்டு போகுது!

போட்டி SUV சந்தையில் மகிந்திரா XUV 3XO எவ்வாறு 80% விற்பனை அதிகரிப்பைப் பெற்று வெற்றி பெற்றது என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.

கர்நாடகாவில் பல கோடி ரூபாய்களை கொட்டும் வால்வோ!!

வால்வோ குழுமம் (Volvo Group), பிரபலமான ஐரோப்பிய ஆட்டோமொபைல் குழுமம் ஆகும். குறிப்பாக, லாரிகள், பேருந்துகள் உள்ளிட்டவற்றை உற்பத்தி செய்வதில் நிபுணத்துவம் நிறுவனமாக வால்வோ விளங்குகிறது. இந்தியாவில் ஈச்சர் நிறுவனத்துடன் இணைந்து செயல்பட்டுவரும் வால்வோ குழுமம், கர்நாடாகவில் புதியதாக வாகன உற்பத்தி தொழிற்சாலையை நிறுவ உள்ளது. இதற்காக சுமார் ரூ.1,400 கோடி முதலீடு செய்யப்பட உள்ளது. இதுகுறித்த விபரங்கள் வால்வோ குழுமத்தில் இருந்து அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன.
Advertisement

யூஸ்டு காரை வாங்கிய பிரபலம்!

இந்தியாவில் சொகுசு கார்களுக்கான (Luxury Cars) மவுசு நாளுக்கு நாள் எகிறி கொண்டே செல்கிறது. ஆனால் சொகுசு கார்களின் விலை மிகவும் அதிகம். எனவே யூஸ்டு கார் (Used Car) மார்க்கெட்டில், நிறைய பேர் சொகுசு கார்களை வாங்குகின்றனர். உண்மையில் யூஸ்டு கார் சந்தையில் தரமான சொகுசு கார்கள் குறைவான விலையில் கிடைக்கின்றன. எனவே பிரபலமான மனிதர்கள் கூட, யூஸ்டு கார் மார்க்கெட்டில் சொகுசு கார்களை வாங்குகின்றனர். விராட் கோஹ்லி (Virat Kohli), யுவராஜ் சிங் (Yuvraj Singh), ஷில்பா ஷெட்டி (Shilpa Shetty) போன்றவர்களை இதற்கு உதாரணமாக கூறலாம்.

இத்தன ஆயிரம் பேர் இந்த காருக்காக காத்திருந்தாங்களா!

மஹிந்திரா (Mahindra) நிறுவனத்தின் லேட்டஸ்ட் அறிமுகமாக எக்ஸ்இவி 9இ (XEV 9e) மற்றும் பிஇ 6 (BE 6) ஆகிய கார் மாடல்கள் இருக்கின்றன. இரண்டும் மின்சாரத்தில் இயங்கும் எஸ்யூவி ரக கார் மாடல்கள் ஆகும். இவற்றிற்கான அதிகாரப்பூர்வ புக்கிங் பணிகள் இன்றைய (பிப்ரவரி 14) தினமே தொடங்கியது. இந்த நிலையிலேயே முதல் நாளிலேயே இந்த இரண்டு கார்களுக்கும் ஆயிரக் கணக்கில் புக்கிங் கிடைத்து இருப்பதாக ஆச்சரியமளிக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

புது மஹிந்திரா எலக்ட்ரிக் காரை புக் செய்த மல்டி-மில்லியனர்!!

மஹிந்திரா (Mahindra) நிறுவனத்தில் இருந்து புதிய எலக்ட்ரிக் கார்கள் (Electric Cars) ஆக சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட பிஇ 6 மற்றும் எக்ஸ்இவி 9இ கார்களுக்கு அறிவிக்கப்பட்ட படி இன்று (பிப்ரவரி 14) காதலர் தினத்தில் முன்பதிவுகள் துவங்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த எலக்ட்ரிக் கார்களுக்கான முன்பதிவுகள் எப்போது துவங்கப்படுமோ என நிறைய பேர் ஆவலாக காத்துக் கொண்டிருந்ததால், புக்கிங் துவங்கிய உடன் பல பெரும் புள்ளிகள் கூட முதல் நாளிலேயே ஆர்வத்துடன் காரை முன்பதிவு செய்துள்ளனர்.

பிரெஸ்ஸாவில் 6 ஏர் பேக்குகள் கட்டாயம்!

பாதுகாப்பு தருவதில் மாருதி (Maruti) கார்கள் மிக மோசம், அதை எங்களுக்கு பிடிக்கவே பிடிக்காது என சொல்பவரா நீங்க? உங்களின் வாயை அடைக்கின்ற முயற்சியிலேயே மாருதி சுஸுகி நிறுவனம் தற்போது ஈடுபட்டு வருகின்றது. இதன் வெளிப்பாடாகவே சமீபத்தில் அது விற்பனைக்குக் கொண்டு வந்த புதிய தலைமுறை டிசையர் (New Gen Dzire) கார் மாடல் இருக்கின்றது. பாதுகாப்பு விஷயத்தில் இந்த கார் ஐந்துக்கு ஐந்து ஸ்டார்கள் ரேட்டிங்கைப் பெற்றிருக்கின்றது. குளோபல் என்சிஏபி (Global NCAP) நடத்திய மோதல் ஆய்விலேயே இந்த பாதுகாப்பு ரேட்டிங்கை அது பெற்றது.

தரைமட்ட ரேட்டுக்கு விற்பனைக்கு வந்த பல்சர் பைக்!

மேம்பட்ட அம்சங்கள், சக்திவாய்ந்த செயல்திறன் மற்றும் போட்டி விலையுடன், இளைய தலைமுறை சவாரி செய்பவர்களுக்காக வடிவமைக்கப்பட்ட பஜாஜ் பல்சர் NS125 ABS ஐ ஆராயுங்கள்.

இசைபுயலாக இருந்தாலும் இந்த காரை வாங்க வெயிட் பண்ணனும்!!

ஏ ஆர் ரகுமான் (A R Rahman) பெரியதாக கார் பிரியர் ஒன்றும் கிடையாது. இதனாலேயே இவர் மிக விலையுயர்ந்த காரை பயன்படுத்தி அதிகமாக பார்த்தது இல்லை. இந்த நிலையில், ஏஆர் ரகுமான் புதியதாக மஹிந்திரா (Mahindra) கார் ஒன்றை வாங்க உள்ளார். இதுவும் அவரது அந்தஸ்துக்கு விலை குறைவான காரே ஆகும். இதை விட முக்கியமானது என்னவென்றால், ரகுமான் வாங்க இருப்பது எலக்ட்ரிக் கார் (Electric Car) ஆகும். காரை இன்னும் வாங்கவில்லை, இப்போதுதான் புக் செய்துள்ளார். இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

தமிழ்நாடு எங்கயோ போயிருச்சு! குஜராத் இன்னும் கீழதான் இருக்கு

இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் (Electric Vehicles) பயன்பாட்டை அதிகரிப்பதற்கு தேவையான பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசும், பல்வேறு மாநில அரசுகளும் எடுத்து வருகின்றன. பெட்ரோல் (Petrol), டீசல் (Diesel) வாகனங்களால் சுற்றுச்சூழல் மாசடைந்து வருவதுதான் இதற்கு காரணம். அத்துடன் பெட்ரோல் மற்றும் டீசலின் மூலப்பொருளான கச்சா எண்ணெய்யை (Crude Oil) இறக்குமதி செய்வதற்கு இந்தியா பெரும் தொகையை செலவிட்டு வருகிறது. இந்த செலவை குறைக்க வேண்டும் என்றால், இந்திய சாலைகளில் எலெக்ட்ரிக் வாகனங்களுடைய பயன்பாடு அதிகரித்தாக வேண்டும்.

காசே இல்லேனாலும் டோல்கேட்டை கடந்து போகலாம்! எப்படி?

FASTag சமநிலை சரிபார்ப்பை பாதிக்கும் புதிய NPCI விதிகள் டோல் கட்டணங்களை பாதிக்கின்றன. பரிவர்த்தனை மறுப்புகளைத் தவிர்க்க பயனர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Advertisement

காருக்கு பெயிண்ட் செலவு மிச்சம்! ஆனா ஒரு பிரச்சனை இருக்கு

உலகில் அதிக எண்ணிக்கையில் கார் இயங்கும் நாடுகளுள் நமது இந்தியாவும் ஒன்று. இதனாலேயே மற்றவர்களின் கார்களில் இருந்து வித்தியாசமாக தெரிய வேண்டும் என்பதற்காக சில கார் ஓனர்கள் தங்களது கார்களில் என்னென்னமோ செய்கின்றனர். அதற்காக அவர்கள் பெரும்பாலும் செய்வது கார் மாடிஃபிகேஷன்கள் (Car Modification)-ஐ தான். ஆனால், இங்கு ஒருவர் வித்தியாசமான முறையில் தனது மாருதி சுஸுகி டிசைர் (Maruti Suzuki Dzire) காரை மாற்றியுள்ளார். இந்த காரை பற்றி விரிவாக இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

பாதுகாப்பு படையுடன் ஒன்றரை கோடி ரூபா கார்ல போனது அவங்களா!

இந்தியாவின் கோடீஸ்வரர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று டொயோட்டா வெல்ஃபையர் (Toyota Vellfire). சொகுசு எம்பிவி (Luxury MPV) ரகத்தை சேர்ந்த இந்த காரை, திரையுலக நட்சத்திரங்கள் பலர் வைத்துள்ளனர். இதில், மோகன்லால் (Mohanlal), ஆமிர் கான் (Aamir Khan), அக்ஸய் குமார் (Akshay Kumar) மற்றும் அஜய் தேவ்கன் (Ajay Devgn) போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர். அத்துடன் தொழில் அதிபர்கள் பலரிடமும், டொயோட்டா வெல்ஃபையர் சொகுசு எம்பிவி கார்கள் சொந்தமாக உள்ளன.

மஹிந்திரா இ-கார்களுக்கு இந்தியாவில் புக்கிங் தொடக்கம்!

மஹிந்திரா நிறுவனத்தின் புதுமுக எலெக்ட்ரிக் கார்களுக்கு புக்கிங் பணிகள் தொடங்கி இருக்கின்றன. இந்தியாவை மையமாகக் கொண்டு இயங்கும் இந்த நிறுவனம் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் எக்ஸ்இவி 9இ (XEV 9e) மற்றும் பிஇ 6 (BE 6) எனும் இரண்டு மின்சார கார் மாடல்களை நாட்டில் அறிமுகப்படுத்தியது. இரண்டு எஸ்யூவி ரக எலெக்ட்ரிக் கார் மாடல்கள் ஆகும். இதுவரை நிறுவனம் உற்பத்தி செய்திராத ஓர் ஸ்டைலில் இந்த வாகனங்களை அது தயார் செய்திருக்கின்றது.

ஒரு விமானத்தையே அசால்டா இழுத்துத்துட்டு போகும் கார்!

டாடா மோட்டார்ஸின் கர்வ், 48,000 கிலோ எடையுள்ள போயிங் 737 ஐ வெற்றிகரமாக இழுத்து, தனது ஹைப்பீரியன் 1.2L என்ஜினின் செயல்திறனையும் ATLAS தளத்தின் வலிமையையும் எடுத்துக்காட்டுகிறது. இந்த சாதனை டாடா மோட்டார்ஸின் பொறியியல் சிறப்பிற்கான அர்ப்பணிப்பை வலியுறுத்துகிறது.

இந்தியாவில் தயாரித்த வாகனங்களை தேடி வாங்கும் வெளிநாட்டுமக்கள

ஹூண்டாய் மோட்டார் இந்தியா உலகளவில் 3.7 மில்லியன் வாகனங்களை ஏற்றுமதி செய்ததன் 25வது ஆண்டு விழாவை கொண்டாடுகிறது, இதன் மூலம் இந்தியாவின் வாகன உற்பத்தி புகழை மேம்படுத்துகிறது.