ஒருவரின் பாதுகாப்பிற்காக போர் வீரர்களபோல அணி வகுத்த கார்கள்!
ஆட்டோமொபைல்
- 1 year, 6 month, 20 days ago
ஒரு ரோல்ஸ் ராய்ஸ் காரில் வந்த ஒற்றை நபரின் பாதுகாப்பிற்காக 10 டொயோட்டா ஃபார்ச்சூனர் கார்கள் பயன்படுத்தப்பட்ட நிகழ்வு இந்தியாவில் அரங்கேறி இருக்கின்றது. 10 டொயோட்டா ஃபார்ச்சூனர் கார்கள் மட்டுமல்ல இரண்டு லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர்கள் உட்பட மேலும் பல கார்கள் ரோல்ஸ் ராய்ஸ் காரில் வந்த ஒற்றை நபரின் பாதுகாப்பிற்காக பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. அந்த ரோல்ஸ் ராய்ஸ் காரில் வந்தது வேறு யாருமல்ல, இந்தியாவின் பெரும் செல்வந்தர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி-தான் அவர் ஆவார்.