சின்ன வயசுலயே 1 கோடி ரூபா சொகுசு கார்ல போறாங்க!

இந்தியாவில் செல்வந்தர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று மெர்சிடிஸ் பென்ஸ் இ-க்ளாஸ் (Mercedes-Benz E-Class). இது சொகுசு செடான் (Luxury Sedan) ரகத்தை சேர்ந்த கார் ஆகும். சொகுசு மற்றும் செயல்திறன் என இரண்டும் கலந்த கலவையாக இருப்பதால், விலை உயர்ந்தது என்ற போதிலும் கூட, செல்வந்தர்கள் மெர்சிடிஸ் பென்ஸ் இ-க்ளாஸ் காரை அதிகளவில் வாங்கி வருகின்றனர். குறிப்பாக இது பாலிவுட் திரையுலக நட்சத்திரங்கள் விரும்பி பயணம் செய்யும் கார்களில் ஒன்றாக இருக்கிறது.

ஹோண்டா பைக்குகளில் வருகிறது புதிய டெக்னாலஜி!

ரெபெல் 250 இல் ஹோண்டாவின் புதிய ஈ-க்ளட்ச் அமைப்பின் நன்மைகளைக் கண்டறியவும், இது இயல்பான கியர் மாற்றங்களை வழங்குகிறது மற்றும் ஓட்டுதல் வசதியை மேம்படுத்துகிறது.

டிவி சீரியல்களில் நடித்தே மஹிந்திரா கார் வாங்கிய நடிகை!

மஹிந்திரா (Mahindra) நிறுவனத்தில் இருந்து சமீப காலத்தில் அறிமுகம் செய்யப்பட்ட தரமான கார்களுள் ஒன்றாக எக்ஸ்யூவி700 (XUV700)-ஐ சொல்லலாம். இந்த மஹிந்திரா காரை பலரும் போட்டி போட்டு வாங்கிவரும் நிலையில், டிவி சீரியல் நடிகை (TV Serial Actress) ஒருவர் எக்ஸ்யூவி700 காரை வாங்கி உள்ளார். கணவருடன் ஷோரூமுக்கு சென்று புதிய காரை டெலிவிரி பெறும் படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராம் (Instagram) பக்கத்தில் வெளியிட்டுள்ளார். யார் அந்த நடிகை என்பதையும், அவர் வாங்கியுள்ள எக்ஸ்யூவி700 காரை பற்றியும் இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

நாளை மறுநாள் அறிமுகமாகிறது கம்மி விலை ஓலா இ-பைக்..

ஓலா எலெக்ட்ரிக் (Ola Electric) நிறுவனம் அதன் எலெக்ட்ரிக் பைக் (Electric Bike) மாடலை நாளை மறுநாள் (பிப்ரவரி 5) இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த நிறுவனம் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் ரோட்ஸ்டர் (Roadster) எனும் பைக் மாடல்களை நாட்டில் வெளியீடு செய்திருந்தது. இது மூன்று விதமான தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கும் என்றும் நிறுவனம் கூறியிருந்தது. ரோட்ஸ்டர் எக்ஸ் (Roadster X), ரோட்ஸ்டர் (Roadster) மற்றும் ரோட்ஸ்டர் ப்ரோ (Roadster Pro) ஆகிய வேரியண்டுகளிலேயே அது விற்பனைக்குக் கிடைக்கும்.
Advertisement

பரம்பரை பரம்பரையா இந்த கம்பெனி பைக்கை தான் வாங்குறாங்க போல!

ராயல் என்ஃபீல்டு ஜனவரி 2025ல் 91,132 யூனிட் விற்பனையை எட்டியுள்ளது, இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 19.62% அதிகரிப்பாகும். அனைத்து பிரிவுகளிலும் வலுவான தேவை காரணமாக இந்த செயல்திறன்.

31 நாளில் 4.42 லட்சம் பேர் இந்த கம்பெனி பைக்கை வாங்கிட்டாங்க

ஜனவரி 2025 இல் ஹீரோ மோட்டோகார்ப் புதிய மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் வெளியீடுகளை அறிவித்து, 2.14% YoY விற்பனை வளர்ச்சியை அறிவித்துள்ளது. இதன் பின்னணியில், மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் என இரண்டிலும் வலுவான தேவை உள்ளது.

மாருதியை அடிக்கலாம் ஒருத்தன் புதுசா பொறந்துதான் வரணும்...

இந்தியாவின் நம்பர்-1 கார் உற்பத்தி நிறுவனமாக உள்ள மாருதி சுஸுகியின் (Maruti Suzuki), நடப்பு 2025ம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) தற்போது வெளியாகியுள்ளது. இதன்படி பார்த்தால் மாருதி சுஸுகி நிறுவனம் நடப்பு 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் ஒட்டுமொத்தமாக 2,12,251 வாகனங்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது. இதுதான் மாருதி சுஸுகி நிறுவனத்தின் அதிகபட்ச மாதாந்திர விற்பனை எண்ணிக்கை (Highest-Ever Monthly Sales) ஆகும். அதாவது இதற்கு முன்பாக எந்தவொரு மாதத்திலும் மாருதி சுஸுகி நிறுவனம் இவ்வளவு அதிகமான கார்களை விற்பனை செய்தது கிடையாது.

மஹிந்திராவால் உருவாக்க முடியாத வாகனம் என்ன இருக்கு சொல்லுங்க

மஹிந்திரா (Mahindra), இந்தியாவின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனம். குறிப்பாக, கடந்த சில மாதங்களாக கார்கள் விற்பனையில் மஹிந்திராவின் வளர்ச்சி அபரிதமானதாக இருந்து வருகிறது. இதற்கேற்ப சமீப காலமாக மஹிந்திராவில் இருந்து அறிமுகம் செய்யப்படும் கார்கள் மக்கள் மத்தியில் மிகுந்த கவனத்தை பெற்றுள்ளன. அந்த வகையில், மஹிந்திராவின் லேட்டஸ்ட் அறிமுகமான பிஇ 6 எலக்ட்ரிக் கார் (BE 6 Electric Car) ஆனது மார்க்கெட்டில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த பிஇ 6 எலக்ட்ரிக் காருக்கும், மஹிந்திராவில் இருந்து ஏற்கனவே மிகுந்த பரபரப்புக்கு மத்தியில் விற்பனை செய்யப்பட்டு கொண்டிருக்கும் தார் ராக்ஸ் (Thar ROXX) வாகனத்திற்கும் இடையேயான ஒற்றுமை & வேற்றுமைகளை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

மாருதி காரை வாங்கியிருக்கும் இந்த நடிகர் யாரென்று தெரிகிறதா?

மாருதி சுஸுகி (Maruti Suzuki), இந்தியாவின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனம் என்பதை நான் கூற வேண்டியது இல்லை. நாடு முழுவதும் இந்த நிறுவனத்திற்கு கஸ்டமர்கள் உள்ளனர். அந்த வரிசையில், பிரபல மலையாள நடிகர் (Malayala Actor) ஒருவர் மாருதி சுஸுகியின் கிராண்ட் விட்டாரா (Grand Vitara) காரை வாங்கி உள்ளார். மனைவி உடன் அவர் காரை ஷோரூம் (Showroom)-இல் இருந்து டெலிவிரி பெறும்போது எடுக்கப்பட்ட படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. யார் இந்த மலையாள நடிகர் என்பதையும், அவர் வாங்கியுள்ள கிராண்ட் விட்டாரா காரை பற்றியும் இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

ஹோண்டா சிட்டி கார் மாடலில் ஸ்பெஷல் பதிப்பா!..

ஹோண்டா (Honda) நிறுவனத்தின் புகழ்பெற்ற கார் மாடல்களில் ஒன்றாக சிட்டி (City) இருக்கின்றது. இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் பிரீமியம் அம்சங்கள் நிறைந்த செடான் ரக கார் மாடல் இதுவாகும். இந்த கார் மாடலையே கூடுதல் பிரீமியம் அம்சங்கள் தாங்கியதாக ஹோண்டா நிறுவனம் தற்போது விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. அதாவது, சிறப்பு பதிப்பையே சிட்டி-யில் ஹோண்டா விற்பனைக்குக் களமிறக்கி இருக்கின்றது. சிட்டி அபெக்ஸ் எடிசன் (City Apex Edition) எனும் பெயரிலேயே இந்த கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றது.

புதுசா கார் வாங்க இந்த ஒரு காரணம் போதுமே... 2025-26 பட்ஜெட்!

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் (Nirmala Sitharaman) கடந்த 10 வருடங்களில் தாக்கல் செய்ததிலேயே மிகவும் குறைவான நேரத்தில் வாசித்து முடிக்கப்பட்ட பட்ஜெட்டாக இன்று (பிப்.1) நாடாளுமன்றத்தில் அவர் தாக்கல் செய்த 2025-26ஆம் ஆண்டிற்கான பொது பட்ஜெட் கருதப்படுகிறது. குறைவான நேரத்தில் வாசிக்கப்பட்டாலும், கடந்த பட்ஜெட்களை போலவே 2025-26 பட்ஜெட்டும் பல தரமான அறிவிப்புகளை கொண்டுள்ளது. அவற்றுள் முக்கியமானது, தனி நபர் வருமான வரிக்கான உச்சப்பட்ச வரம்பு ரூ.12 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது ஆகும். இதனால், மாதத்திற்கு 1 லட்ச ரூபாய் சம்பளம் வாங்குபவர்கள் கூட வருமான வரி செலுத்த வேண்டியதில்லை.

டோல்கேட்டை கடக்கும் வாகன உரிமையாளர்களை புலம்ப வைத்த திட்டம்!

இந்தியாவில் பொது சாலைகளில் இயக்கப்படும் மோட்டார் வாகனங்களுக்கு இன்சூரன்ஸ் (Insurance) கட்டாயம். மோட்டார் வாகன சட்டம் 1988-ன் பிரிவு 146-ன் படி, பொது சாலைகளில் இயங்கும் வாகனங்கள் அனைத்திற்கும் இன்சூரன்ஸ் இருக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆனால் வாகன உரிமையாளர்கள் பலர் காலாவதியான இன்சூரன்ஸ் உடன் வாகனங்களை இயக்குகின்றனர். இது பல்வேறு வகைகளில் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. குறிப்பாக சாலை விபத்துக்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு கிடைப்பதில் நிறைய பிரச்னைகள் ஏற்படுகின்றன. எனவே இன்சூரன்ஸ் இல்லாமல் இயக்கப்படும் வாகனங்களை கண்டறிய தற்போது அதிரடியான நடைமுறை ஒன்று அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
Advertisement

மின்சார வாகனங்களின் விலை நம்ப முடியாத அளவிற்கு குறைய போகுதா!

2025-26 மத்திய பட்ஜெட்டில் லித்தியம் பேட்டரி (Lithium Batteries) மற்றும் அது சார்ந்த துறைகளை ஊக்குவிக்கும் விதமாக வரி விலக்கு அறிவிக்கப்பட்டு இருக்கின்றது. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதைக் குறைத்து, உள்நாட்டில் இவற்றின் உற்பத்தியை ஊக்குவிக்கும் பொருட்டே இந்த நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டு இருக்கின்றது. அரசின் இந்த நடவடிக்கையால் மின்சார வாகனங்கள் (Electric Vehicle) மற்றும் பிற மின்சாதன பொருட்களின் விலை சற்றே குறைவதற்கான சூழல் உருவாகி இருக்கின்றது.

சின்ன வயசுலயே ஒன்னே கால் கோடி ரூபா கார்!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக திகழ்ந்து வரும் கார்களில் ஒன்று லேண்ட் ரோவர் டிஃபெண்டர் (Land Rover Defender). மிகவும் விலை உயர்ந்த சொகுசு எஸ்யூவி (Luxury SUV) ரக காரான இது, திரையுலக நட்சத்திரங்கள் அதிகமாக விரும்பி பயணிக்கும் வாகனம் ஆகும். குறிப்பாக பாலிவுட் திரையுலகை சேர்ந்த பலரும் லேண்ட் ரோவர் டிஃபெண்டர் காரை வைத்துள்ளனர். அமிதாப் பச்சன் (Amitabh Bachchan) மற்றும் அர்ஜூன் கபூர் (Arjun Kapoor) போன்ற நட்சத்திரங்களை இதற்கு உதாரணமாக கூற முடியும்.

கியா சிரோஸ் ரூ. 8.99லட்சத்தில் அறிமுகம்! இவ்ளோ கம்மி விலையா!

கியா (Kia) நிறுவனம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சிரோஸ் (Syros) கார் மாடலை அதிகாரப்பூர்வமாக இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. இதன் விலைகளை அறிவித்தே அதிகாரப்பூர்வ அறிமுகப்படுத்தலை நிறுவனம் நிகழ்த்தி இருக்கின்றது. பிரீமியம் லுக் கொண்ட இந்த காருக்கு நிறுவனம் ரூ. 8.99 லட்சம் என்கிற குறைவான விலையே நிர்ணயம் செய்திருக்கின்றது. இது ஆரம்ப விலை மட்டுமே ஆகும். அதேபோல், இது எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும். இந்த காரின் பிரீமியம் தோற்றத்திற்கு அதன் டால் பாய் ஸ்டைலும், அலங்கரிப்பு செய்திருக்கும் விதமே காரணமாக அமைந்திருக்கின்றது.

5வது முறையாக முதல் இடத்தை தக்க வைத்துக் கொண்ட டொயோட்டா!

இந்தியாவில் முன்னணி கார் உற்பத்தி நிறுவனமாக மாருதி சுஸுகி (Maruti Suzki) இருப்பதை போல, உலக அளவில் நம்பர் 1 நிறுவனமாக டொயோட்டா (Toyota) உள்ளது. இந்த இடத்தை அது அலங்கரிப்பது இது முதல் முறையல்ல. இது சங்கிலி தொடர் போல ஐந்தாவது முறையாக முதல் இடத்தை அது அலங்கரித்திருக்கின்றது. ஆமாங்க, தொடர்ந்தே இந்த இடத்தை டொயோட்டா ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றது. ஃபோக்ஸ்வேகன் மற்றும் டெஸ்லா போன்ற மாபெரும் ஜாம்பவான் நிறுவனங்களை பின்னுக்கு தள்ளியே இந்த முதல் இடத்தை டொயோட்டா பிடித்திருக்கின்றது.

யமஹா பைக்கின் விலைகள் ரூ. 1.10 லட்சம் வரை குறைப்பு!

எல்லா நிறுவனங்களும் புதிய விலையில் தங்களின் வாகனங்களை விற்பனைச் செய்ய தொடங்கி இருக்கின்றன. அதாவது, உயர்த்தப்பட்ட விலையில் வாகனங்களை விற்பனைச் செய்ய தொடங்கி இருக்கின்றனர் உற்பத்தியாளர்கள். இந்த மாதிரியான சூழலில் யமஹா (Yamaha) நிறுவனம் தனித்துவமாக தன்னுடைய புதிய பைக் மாடல்களை விலையை குறைத்து விற்பனைக்குக் கொண்டு வந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆர்3 (R3) மற்றும் எம்டி-03 (MT-03) ஆகிய பைக் மாடல்களையே அது விலையைக் குறைத்து விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றனர்.

2025 பட்ஜெட்: இந்திய ஆட்டோமொபைல் துறையின் எதிர்பார்ப்புகள்!

ஒட்டுமொத்த இந்தியாவும் நாளைய நாளுக்காகவே காத்துக் கொண்டு இருக்கின்றது. இன்னும் புரியும்படி சொல்ல வேண்டும் என்றால் நாளைய தினம் மத்திய அரசு தாக்கல் செய்ய இருக்கும் புதிய 2025-26 பட்ஜெட்டையே மொத்த நாடும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டு உள்ளது. அல்வா கொடுக்குமா அல்லது நாட்டை பொருளாதார சிக்கலில் இருந்து மீட்டெடுப்பதற்கான திட்டங்களை மோடி அரசாங்கம் அறிவிக்குமா என்பதே எதிர்பார்ப்பாக உள்ளது. அப்படியே திட்டங்கள் அறிவிக்கப்பட்டாலும் என்ன மாதிரியான அறிவிப்புகள் அறிவிக்கப்படும் என்பதும் எதிர்பார்ப்பாக உள்ளது. குறிப்பாக, இந்திய ஆட்டோமொபைல்ஸ் துறை மாபெரும் எதிர்பார்ப்பில் இருக்கின்றது.

மாருதி கார்கள் விலை உயர போறதா தகவல் வெளியாகியிருக்கு!!

வாகனங்களின் விலையை உற்பத்தியாளர்கள் தொடர்ச்சியாக உயர்த்தி வருவதை நாம் கடந்த சில தினங்களாகவே பார்த்து வருகின்றோம். அந்தவகையில், பிரபல கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸுகி (Maruti Suzuki)-யும் அதன் கார் மாடல்களின் விலையை உயர்த்த இருக்கின்றது. நாளை (பிப்ரவரி 1) முதலே தன்னுடைய தயாரிப்புகளின் விலையை உயர்த்த மாருதி சுஸுகி திட்டமிட்டு உள்ளது. எனவே இன்றே மாருதி கார்கள் குறைந்த விலையில், அதாவது, உயர்த்தப்படாத விலையில் விற்பனைக்குக் கிடைக்கும் கடைசி நாள் இருக்கப் போகின்றது.

ஆசை ஆசையா வாங்கன புது காருக்கு 63 லட்ச ரூபா ரிப்பேர் செலவு!

இந்திய கோடீஸ்வரர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் (Mercedes Benz GLS). இது எஸ்யூவி (SUV) ரகத்தை சேர்ந்த கார் ஆகும். எனவே உருவத்தில் மிகவும் பெரியது. இந்த காரின் நீளம் மட்டும் 5.2 மீட்டர்கள் ஆகும். அதே நேரத்தில் அகலம் 1.96 மீட்டர்களாக உள்ளது. எனவே இந்த காரை இயக்கும்போது மிகவும் கவனமாக இயக்க வேண்டும். கவனமாக இருக்க வேண்டும் என நாங்கள் சொல்வதற்கு மற்றொரு முக்கியமான காரணமும் உள்ளது. அது விலை ஆகும்.
Advertisement

இந்த குட்டியூண்டு எலெக்ட்ரிக் காரோட விலை இவ்ளோதானா!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று எம்ஜி கோமெட் இவி (MG Comet EV). இது ஒரு எலெக்ட்ரிக் கார் (Electric Car) ஆகும். சிறிய உருவத்திற்காக இந்த எலெக்ட்ரிக் கார் மிகவும் புகழ்பெற்றது. எனவே போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளில் அடிக்கடி பயணம் செய்ய கூடியவர்கள், எம்ஜி கோமெட் இவி எலெக்ட்ரிக் காரை அதிகளவில் வாங்கி வருகின்றனர். இந்த காரை புதிதாக வாங்க திட்டமிட்டுள்ளவர்களுக்கு அதிர்ச்சிகரமான தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. ஆம், இந்த காரின் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

மணிக்கு 155கிமீ வேகத்தில் போகும் இ-பைக் விற்பனைக்கு அறிமுகம்

அல்ட்ராவைலட் (Ultraviolette) நிறுவனம் அதிக வேகத்தில் பயணிக்கும் எலெக்ட்ரிக் பைக் (Electric Bike)-கை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்தி இருக்கின்றது. எஃப்77 சூப்பர் ஸ்ட்ரீட் (F77 Super Street) இ-பைக்கையே அது விற்பனைக்குக் களமிறக்கி இருக்கின்றது. இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 155 கிமீ ஆகும். இதுமட்டுமல்ல இதன் பிக்-அப் திறனும் நம்ப முடியாததாகவே உள்ளது. இந்த வாகனத்திற்கு பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 60 கிமீ எனும் வேகத்தை எட்ட வெறும் 2.8 செகண்டுகளே போதுமானதாக இருக்கின்றது.

இந்த கார்ல போனா ஊரே உங்களைதான் திரும்பி பாக்கும்...

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று டாடா கர்வ் (Tata Curvv). இதன் எலெக்ட்ரிக் வெர்ஷன் கடந்த 2024ம் ஆண்டு ஆகஸ்ட் மாதமும், ஐசி இன்ஜின் வெர்ஷன் செப்டம்பர் மாதமும் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. பொதுவாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஒரு காரின் ஐசி இன்ஜின் வெர்ஷன்களைதான் முதலில் விற்பனைக்கு அறிமுகம் செய்யும். அதற்கு பின்னர்தான் எலெக்ட்ரிக் வெர்ஷன் களமிறக்கப்படும். ஆனால் இதற்கு முற்றிலும் வித்தியாசமாக, டாடா கர்வ் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன் முதலிலும், ஐசி இன்ஜின் வெர்ஷன் அதன்பின்னரும் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன.

நாளை அறிமுகமாகிறது கியா சிரோஸ்! இது ஓர் டால் பாய் கார்!

எஸ்யூவி கார்களில் இது தனி ரகம் என கூறும் அளவிற்கு பிரத்யேக சிறப்பம்சங்களுடன் ஓர் கார் நாளைய தினம் இந்தியாவில் விற்பனைக்கு வர இருக்கின்றது. கியா சிரோஸ் கார் மாடலே அதுவாகும். இது ஓர் எஸ்யூவி ரக கார் மாடல் ஆகும். டால் பாய் உருவ அமைப்பையே இந்த எஸ்யூவி ரக காருக்கு கியா வழங்கி இருக்கின்றது. இந்த காருக்கு ஏற்கனவே இந்தியாவில் புக்கிங் பணிகள் தொடங்கிவிட்டன. இப்போதே இந்த காருக்கு 10 ஆயிரத்திற்கும் அதிகமான புக்கிங்குகள் கிடைத்துவிட்டன என்பது கவனிக்கத்தகுந்தது.

பெண் செய்த முட்டாள்தனத்தால் உருக்குலைந்த பஸ், கார்கள்!

இந்தியாவில் ஒரு சில வாகன ஓட்டிகள், போக்குவரத்து விதிமுறைகளை மதிப்பதே கிடையாது. ராங் சைடில் வாகனங்களை இயக்குவது போன்ற போக்குவரத்து விதிமுறை மீறல்களில் அவர்கள் சர்வ சாதாரணமாக ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக ஏராளமான சாலை விபத்துக்கள் நிகழ்ந்து வருகின்றன. இந்த வரிசையில் கேரள மாநிலம் கொச்சி பகுதியில் நடைபெற்றுள்ள ஒரு சாலை விபத்து கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹோண்டா ஆக்டிவா (Honda Activa) ஸ்கூட்டரில் வந்த பெண் ஒருவரின் அலட்சியமே இதற்கு மிக முக்கியமான காரணமாக அமைந்துள்ளது.