நீண்ட நாட்களுக்கு பிறகு காரை எடுக்குறீங்களா? - கவனம் தேவை!
கொரோனாவால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்பட்டு வரும் நிலையில், காரை மீண்டும் எடுத்து பயன்படுத்தும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. காரை எடுக்கும்போது டயர்களில் காற்றழுத்தம், பேட்டரி சார்ஜ் அளவு பார்க்க வேண்டும். எஞ்சின் ஆயில், கூலண்ட் அளவையும் செக்கப் செய்துவிடுங்கள். இல்லையெனில், அருகிலுள்ள பரிசோதனை மையத்தில் ஒருமுறை செக்கப் செய்துவிடுவது நல்லது.