டில்லியில் அடுத்த திருவிழாவுக்கு இப்பவே ரெடியாகுங்க!

இந்தியாவில் அடுத்த பாரத் மொபிலிட்டி குளோபல் கண்காட்சி 2027ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 4ம் தேதி முதல் 9ம் தேதி முதல் நடக்கப்போவதாக அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே 2 எடிசன் நடந்த நிலையில் தற்போது 3வது எடிசனிற்கான தேதிகள் வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சி குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

இந்த கார் இந்தியாவிலேயே அதிகம் வித்திருக்குது!

இந்தியாவில் சிஎன்ஜி கார்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது. மக்கள் மத்தியில் சிஎன்ஜி கார்கள் பிரபலமாகி வருகிறது. குறைந்த பயண செலவு காரணமாக பலர் சிஎன்ஜி கார்களை விரும்பி வாங்கி வருகின்றனர். இந்நிலையில் கடந்த நிதியாண்டில் மொத்தம் விற்பனையான சிஎன்ஜி கார்களில் ஹேட்ச்பேக் செக்மெண்டில் அதிகம் விற்பனையான காராக மாருதி வேகன்ஆர் சிஎன்ஜி கார் இருக்கிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

இதைதான் இத்தன வருஷமா கஷ்டமான பைக் பயணம்னு சொன்னீர்களா...

உழைக்கும் வயதில் நன்றாக உழைத்து விட்டு முதிய வயதில் ஜாலியாக உலகம் சுற்ற வேண்டும் என்பதுதான் நம்மில் பெரும்பாலானோரின் திட்டமாக இருக்கும். ஆனால், முதியவதில் ஊர் சுற்றும் அளவிற்கு அந்த நேரத்தில் நமது உடல் வலிமை உடன் இருப்பதில்லை என்பதுதான் வாழ்க்கை நமக்கு வைக்கும் செக்மேட் ஆகும். இருப்பினும், இங்கு ஒரு வயதான தம்பதி சுமார் 18 ஆயிரம் அடி உயரத்திற்கு மலை ஏறி சுற்றி பார்த்து உள்ளனர். அதுவும் எதில் தெரியுமா? காரோ அல்லது வேனோ கிடையாது, ராயல் என்ஃபீல்டு (Royal Enfield) பைக்கில் ஆகும். யார் இந்த வயதான தம்பதி என்பதையும், அவர்கள் பயன்படுத்தியுள்ள ராயல் என்ஃபீல்டு பைக்கை பற்றியும் தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

ரூ4 லட்சம் கம்மியான விலையில் அதிக தூரம் பயணிக்கும் கார்!

மஹிந்திரா நிறுவனம் தனது BE 6 மற்றும் XEV 9E ஆகிய கார்களின் லாங் ரேஞ்ச் வேரியன்ட்களை ரூ4 லட்சம் குறைவான விலையில் தற்போது வாங்க முடியும் என அறிவித்துள்ளது. அந்த வித தள்ளுபடிகளுமே இல்லாமல் இந்த கார்களின் விலை ரூ4 லட்சம் வரை குறைந்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்
Advertisement

லம்போர்கினி கம்பெனிக்கே நம்ம ஆளுங்க கத்து தருவாங்க!

லம்போர்கினி (Lamborghini) நிறுவனம் உருவாக்கும் பிரபலமான கார்களுள் ஹூராகென் (Huracan) ஒன்றாகும். ஆனால், அதிகப்படியான விலையினால் ஹூராகென் காரை பெரும் பணக்காரர்களால் மட்டுமே வாங்க முடிகிறது. இதனாலேயே நம்மில் பெரும்பாலானோருக்கு ஹூராகென் காரை வாங்குவது என்பது கனவாகவே இருக்கிறது. இந்த நிலையில் இங்கு சிலர் தங்களது ஹூராகென் கார் கனவை வேறு விதமாக நிஜமாக்கி உள்ளனர். கேரளாவை சேர்ந்த இந்த நபர்கள் செய்துள்ள காரியத்தை பற்றி தான் இனி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்க போகிறோம். வாருங்கள் செய்திக்குள் போகலாம்.

அடி மாட்டு விலையில் மினி சியராவை களத்தில் இறக்கும் டாடா!

இந்தியாவில் தற்போது சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த கார்களின் விற்பனை மிகவும் அதிகமாக இருந்து வருகிறது. இவற்றின் விலை (Price) ஓரளவிற்கு குறைவாக இருப்பதுதான் இதற்கு காரணம். ஓரளவிற்கு குறைவான விலையில் எஸ்யூவி ரக கார்கள் என்பதால், வாடிக்கையாளர்கள் பலரும் இந்த செக்மெண்ட்டை சேர்ந்த கார்களை அதிகளவில் வாங்குகின்றனர்.

35.6 கி.மீ மைலேஜ், 7 பேர் போற மாதிரி கார்!

இந்தியாவில் சிஎன்ஜி கார்களின் விற்பனை மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. அதன்படி கடந்த நிதியாண்டில் அதிகமாக விற்பனையான சிஎன்ஜி காராக மாருதி எர்டிகா கார் இருக்கிறது. இப்படியாக கடந்த நிதியாண்டில் விற்பனையான டாப் 10 சிஎன்ஜி கார்கள் எது? இந்த கார் குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

நம்ப முடியாத குறைவான விலையில் வரும் 2 எலெக்ட்ரிக் கார்கள்!

2025ம் ஆண்டின் முதல் பாதி முடிவடைந்து, இரண்டாம் பாதியில் நாம் காலடி எடுத்து வைத்துள்ளோம். இந்த நேரத்தில், கார் நிறுவனங்களின் சேல்ஸ் ரிப்போர்ட்கள் (Sales Reports) தொடர்ச்சியாக வெளியாகி வருகின்றன. இந்த வரிசையில் கியா இந்தியா நிறுவனத்தின் நடப்பு 2025ம் ஆண்டின் முதல் பாதிக்கான சேல்ஸ் ரிப்போர்ட்டும் தற்போது வெளியாகியுள்ளது.
Advertisement

இவி கார்களுக்கு மானியத்தை எல்லாம் நிறுத்தறப்போறாங்களா?

இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனையை அதிகரிக்க மத்திய அரசு மானியங்களை வழங்கி வருகிறது. அதன்பட தற்போது வழங்கப்படும் மானியம் வரும் 2026ம் ஆண்டுமார்ச் 31ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில் அடுத்த கட்ட மானிய திட்டம் எப்படி இருக்கும்? இதுவரை எப்படி இருந்தது? விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

டோல் கட்டணம் பாதி கட்டினால் போதுமா? சூப்பரான மேட்டரா இருக்கே

சுங்கச்சாவடி கட்டணம் (Toll Fee) செலுத்துவதில் ஆரம்பத்தில் இருந்தே அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் இடையே பல தரப்பட்ட முரண்பாடுகள் உள்ளன. எங்களது வரி பணத்தில் சாலையை அமைத்து, அதில் பயணிக்க எங்களிடமே கட்டணம் வசூலிக்கிறீர்களே என்பது மக்களின் ஆதங்கமாக உள்ளது. ஆனால், நாடு முழுவதும் நல்ல தரமான விரைவுச்சாலைகளை பல ஆயிரம் கோடி ரூபாய் செலவில் அமைக்கவும், அவற்றை தொடர்ந்து பராமரிக்கவும் சுங்கச்சாவடி கட்டணங்கள் அவசியமாகின்றன என்பது அரசாங்கத்தின் பதிலாக உள்ளது. இருப்பினும், முடிந்தவரையில் குறைவான கட்டணங்களையும், குறைவான இடங்களில் மட்டுமே கட்டணங்களை வசூலிக்கவும் முயற்சிப்பதாக மத்திய நெடுஞ்சாலை துறையின் தெரிவிக்கிறது.

இந்தியாவில் கார் தொழிற்சாலையை திறக்க எவ்வளவு யோசிச்சாங்க!

ஸ்கோடா ஆட்டோ ஃபோக்ஸ்வேகன் இந்தியா (Skoda Auto Volkswagen India), இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் கார்களை விற்பனை செய்யக்கூடிய நிறுவனங்களுள் ஒன்று ஆகும். அது மட்டுமில்லாமல், ஸ்கோடா ஆட்டோ ஃபோக்ஸ்வேகன் இந்தியா நிறுவனத்தில் இருந்து ஒவ்வொரு மாதமும் அதிக எண்ணிக்கையிலான கார்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இன்னும் சொல்லப்போனால், இந்தியாவில் விற்பனை செய்வதை காட்டிலும், இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு தான் இந்த நிறுவனம் அதிக கார்களை ஏற்றுமதி செய்கிறது. அந்த அளவிற்கு, கார்களை உற்பத்தி செய்வதற்கான மையமாக இந்தியாவை பயன்படுத்திவரும் ஸ்கோடா ஆட்டோ ஃபோக்ஸ்வேகன் இந்தியா நிறுவனம் கார்கள் உற்பத்தியில் புதிய மைல்கல்லை கடந்துள்ளது.

அடி மாட்டு விலையில் களமிறங்கும் புதிய எலெக்ட்ரிக் கார்!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று கியா சைரோஸ் (Kia Syros). கடந்த பிப்ரவரி மாதம்தான், கியா சைரோஸ் கார் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. தற்போதைய நிலையில் இதன் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 9.50 லட்ச ரூபாயாக உள்ளது.
Advertisement

இரண்டு குடும்பம் கூட தாராளமா இந்த கார்ல போகலாம்!

சிட்ரோன் நிறுவனம் தனது இ-ஸ்பேஸ்டூரர் வாகனத்தை இந்தியாவில் பிரிமியம் ரக எம்பிவி காராக விற்னைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது. இந்த கார் முழுமையாக கட்டமைக்கப்பட்ட காராக இறக்குமதி செய்யப்படவுள்ளது. இந்த கார் எஃப்டிஏ அடிப்படையில் குறைந்த இறக்குமதி வரியில் விற்பனைக்கு கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

சீன பைக் கம்பெனியை ஒருத்தரும் கண்டுக்குறது இல்ல!!

கீவே (Keeway), எங்கேயோ தோன்றி எங்கேயோ வளர்ந்து இப்போது இந்தியாவில் பைக்குகளை விற்பனை செய்துவரும் பைக் நிறுவனம். இந்திய மார்க்கெட்டில் சில வருடங்களுக்கு முன்பே நுழைந்துவிட்டாலும் இப்போதுவரையில் பெரியதாக பலருக்கு தெரியாத இந்த பைக் நிறுவனம் ஐரோப்பாவில் உள்ள ஹங்கேரியில் தோன்றியது. ஆனால், ஒரு கட்டத்திற்கு மேல் வணிகத்தில் சரிவை சந்தித்துவந்த கீவே நிறுவனத்தை கியாஜியாங் (Qianjiang) என்கிற சீன ஆட்டோமொபைல் குழுமம் ஒன்று வாங்கியது. அதன் பிறகே உலகின் பல நாடுகளுக்கு கீவே பைக்குகள் விற்பனைக்கு சென்றன. அந்த வகையில், இந்தியாவிற்கு கீவே பைக்குகள் சில வருடங்களுக்கு முன் விற்பனைக்கு வந்தன.

மார்க்கெட்டை அதிர விட போகும் புதிய பஜாஜ் பைக்குகள்!

இந்திய வாடிக்கையாளர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், 2025 பஜாஜ் டோமினார் 250 (2025 Bajaj Dominar 250) மற்றும் 2025 பஜாஜ் டோமினார் 400 (2025 Bajaj Dominar 400) ஆகிய பைக்குகள், தற்போது விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இது குறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

24 மணி நேரத்தில் 10,000 பேர் இந்த காரை புக் பண்ணிட்டாங்க!

டாடா ஹாரியர் இவி காருக்கான புக்கிங் துவங்கிய நிலையில் புக்கிங் துவங்கிய 24 மணி நேரத்தில் 10 ஆயிரம் பேர் இந்த காரை புக் செய்துவிட்டதாக இந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளத. இந்த கார் மக்கள் மத்தியில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது இந்த காருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
Advertisement

சில லைக்குகளுக்கு ஆசைப்பட்டு மொத்தமா போச்சா... வைரல் வீடியோ!

மாருதி சுஸுகி பலேனோ (Maruti Suzuki Baleno) மற்றும் விட்டாரா பிரெஸ்ஸா (Vitara Brezza) இந்தியாவில் மக்கள் பலர் வாங்க விரும்பக்கூடிய கார்கள். சற்று விலைமிக்கதாக இருப்பினும், அதற்கேற்ப நல்ல மைலேஜ் மற்றும் குறைந்த பராமரிப்பு செலவை தரக்கூடிய கார்களாக பலேனோ மற்றும் விட்டாரா பிரெஸ்ஸா பார்க்கப்படுகின்றன. இப்படிப்பட்ட தரமான கார்களை இங்கு சிலர் தங்களது ஆபத்தான சாகசத்திற்கு பயன்படுத்தி, போலீசாரின் பெரிய தொகையிலான அபராதத்திற்கு ஆளாகி உள்ளனர். இதுதொடர்பான காட்சிகள் இணையத்தில் வீடியோக்களாகவும், படங்களாகவும் வெளியாகி உள்ளன. என்ன நடந்தது? எங்கு இந்த சம்பவம் நடந்தது? என்பதை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

7.5 கோடி ரூபா காருக்கு ஒரே நாளில் முடிவு கட்டிய ஆர்டிஓ!!

ஃபெராரி (Ferrari) கார் ஒன்றை சாலையில் பார்ப்பது என்பதே நம்மில் நிறைய பேருக்கு அரிதான விஷயமாக இருக்கும் நிலையில், ஃபெராரி கார் ஒன்றை வாங்குவதை எல்லாம் யோசித்து பார்க்கவே முடிவதில்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில், பென்ஸ் (Benz), பி.எம்.டபிள்யூ (BMW) போன்ற விலையுயர்ந்த கார்களை வாங்கக்கூடிய பணக்காரர்களுக்கு கூட ஃபெராரி, லம்போர்கினி (Lamborghini) போன்ற அல்ட்ரா-லக்சரி கார்களை வாங்குவது கனவாகவே உள்ளது. இப்படிப்பட்ட நிலையில் இங்கு ஒருவரது விலையுயர்ந்த ஃபெராரி கார் ஆர்டிஓ (RTO) அதிகாரிகளால் அதிரடியாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. என்ன நடந்தது? வாருங்கள் அதனை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

மஹிந்திரா இந்த இவி காரை தயாரிக்க ஆரம்பிச்சிட்டாங்க!

மஹிந்திரா நிறுவனம் தனது எக்ஸ்இவி 9இ மற்றும் பிஇ6 ஆகிய கார்களின் பேக் 2 வேரியன்ட்களின் டெலிவரியை துவங்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. தற்போது இந்த வேரியன்டின் தயாரிப்பு துவங்கியது. இந்த வேரியன்ட்டின் டெலிவரி இந்த மாத இறுதியில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

இந்தியாவே எதிர்பார்த்த காரின் உற்பத்தியை தொடங்கியது டாடா!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த கார்களில் ஒன்று டாடா ஹாரியர் இவி (Tata Harrier EV). இது ஒரு எலெக்ட்ரிக் கார் (Electric Car) ஆகும். கடந்த ஜூன் மாதம் 27ம் தேதி, டாடா ஹாரியர் இவி எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.
Advertisement

27கிமீ மைலேஜ் தரும் காரை வாங்க இதைவிட என்ன காரணம் வேண்டும்?

ஹோண்டா கார்ஸ் இந்தியா (Honda Cars India) நிறுவனம் அதன் பிரபலமான சிட்டி (City) காரில் இ:எச்.இ.வி (e:HEV) என்கிற பெயரில் ஹைப்ரீட் வெர்சனை கடந்த சில வருடங்களாக விற்பனை செய்து வருகிறது. சிட்டி காரின் விற்பனையில் ஹைப்ரீட் வெர்சனின் பங்களிப்பு முக்கியமானதாக உள்ளது. இதனாலேயே சிட்டி ஹைப்ரீட் காரில் அவ்வப்போது அப்டேட்களை மறக்காமல் ஹோண்டா நிறுவனம் கொண்டுவந்து விடுகிறது. அந்த வகையில், தற்போது சிட்டி ஹைப்ரீட் காரின் விலையை ஹோண்டா கணிசமாக குறைத்துக் கொண்டுள்ளது. இதுகுறித்தும், சிட்டி இ:எச்இவி காரை பற்றியும் இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

ராயல் என்பீல்டு வயித்துல புளியை கரைக்கும் புது பைக்!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் பைக்குகளில் ஒன்று பஜாஜ் டோமினார் (Bajaj Dominar). ராயல் என்பீல்டு பைக்குகளை (Royal Enfield Bikes) கிண்டல் அடிக்கும் வகையிலான விளம்பரங்கள் மூலம் பஜாஜ் டோமினார் பைக், வாடிக்கையாளர்கள் மத்தியில் புகழ் பெற்றது உங்களுக்கு நினைவிருக்கலாம்.

வாகன விபத்தில் இறந்தவர் மனைவிக்கு கோர்ட் வச்ச குட்டு!

வாகனங்களில் பயணிப்பவர்கள் சொந்த தவறுகளால் ஏற்படும் விபத்திற்கு இன்சூரன்ஸ் நிறுவனங்கள் காப்பீட்டு தொகையை வழங்க தேவையில்லை என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது. வாகன இன்சூரன்ஸ் குறித்து பதிவு செய்யப்பட்ட வழக்கின் மேற் முறையீட்டில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இது மிகப்பெரிய அளவில் பேசு பொருளாக மாறியுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

அரசாங்கத்தின் மானியமே விலையை ரூ.1.5 லட்சம் குறைச்சிடும்!

எலக்ட்ரிக் வாகனங்களின் தாக்கம் அனைத்து விதமான வாகனங்களிலும் வந்துவிட்டது. எல்லா வாகனங்களிலும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான பேட்டர்னில் தான் என்ஜின் வழங்கப்படுவதால், அவற்றை எலக்ட்ரிக் மோட்டாராக மாற்றுவதில் எலக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு பெரியதாக எந்த பிரச்சனையும் இல்லை. இதனாலேயே டிராக்டர்களில் கூட எலக்ட்ரிக் டிராக்டர்கள் (Electric Tractors) வர ஆரம்பித்துவிட்டன. மஹாராஷ்டிராவில் எலக்ட்ரிக் ஒன்று பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இந்தியாவில் பல டிராக்டர் தயாரிப்பு நிறுவனங்கள் எலக்ட்ரிக்கில் டிராக்டர்களை உருவாக்க துவங்கிவிட்டன என்றாலும், எதுவும் இன்னும் அதிகாரப்பூர்வமாக பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படாமல் இருந்த நிலையில், இந்தியாவிலேயே முதல் எலக்ட்ரிக் டிராக்டர் ஆர்டிஓ-இல் பதிவு செய்யப்பட்டுள்ளது.
Advertisement

கருப்பு கலர் காரை வாங்கினாரா அஜித்? விலை எவ்வளவு தெரியுமா?

நடிகர் அஜித் குமார் தனது அஜித்குமார் ரேஸிங் அணிக்காக புதிய மெர்சிடீஸ் பென்ஸ் நிறவனத்தின் ரேஸ் காரை வாங்கியுள்ளார் என்ற தகவல் தற்போது சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்த காரில் நடிகர் அஜித் அமர்ந்திருப்பது போன்ற புகைப்படத்தை அவரது மேனேஜர் எக்ஸ் தளத்தில் பகிர்ந்திருந்த நிலையில் இந்த பேச்சு எழுந்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.