இந்தியாவில் அதிகரிக்கும் பிஒய்டி எலக்ட்ரிக் கார் ஷோரூம்கள்!!
ஆட்டோமொபைல்
- 1 year, 8 month, 15 days ago
பில்டு யுவர் ட்ரீம்ஸ் (Build Your Dreams), சுருக்கமாக பிஒய்டி (BYD) என அழைக்கப்படும் சீன எலக்ட்ரிக் கார் (Electric Car) உற்பத்தி நிறுவனம். பொதுவாகவே, சீன கார் நிறுவனங்கள் இந்தியாவில் பெரியதாக சோபிப்பதில்லை. இத்தனைக்கும் ஹூண்டாய், கியா, டொயோட்டா போன்ற கொரியன், ஜப்பானிய கார் நிறுவனங்கள் கூட இந்தியாவில் நல்லாவே வளர்ச்சியை கண்டுள்ளன. ஆனால், அவ்வளவு பெரிய சீனாவில் இருந்து பெரியதாக எந்தவொரு கார் நிறுவனமும் இந்தியாவில் வெற்றி பெற்றது இல்லை என்பது சற்று ஆச்சிரியமாகவே உள்ளது.