7-சீட்டர் டொயோட்டா எம்பிவி காருக்கு இந்த விலை ரொம்ப கம்மி!

டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் (Toyota Kirloskar Motor) நிறுவனம் அதன் ரூமியன் (Rumion) எம்பிவி (MPV) ரக காரில் புதியதாக 'இ' (E) வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலமாக, ரூமியன் எம்பிவி காரின் விலை மேலும் குறைந்துள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இங்கே இந்த தொகுப்பில் காணலாம், வாங்க.

வெறும் 2 நிமிடங்களில் விற்று தீர்ந்த கார் மறுபடியும் வருது!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் எலெக்ட்ரிக் கார்களில் (Electric Cars) ஒன்று மஹிந்திரா பிஇ 6 (Mahindra BE 6). பேட்மேன் எடிசன் (Batman Edition) என்ற பெயரில் இந்த எலெக்ட்ரிக் காரின் லிமிடெட் எடிசன் மாடல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

டாடா கார்கள் தானேனு இனி யாரும் சாதாரணமா சொல்ல முடியாது!

டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனத்தின் கார்களை கடந்த சில மாதங்களாக அதிக பேர் வாங்க ஆரம்பித்துள்ளனர். குறிப்பாக, டாடாவின் நெக்ஸான் (Nexon) மற்றும் பன்ச் (Punch) கார்களுக்கு மிக சிறப்பான வரவேற்பு கிடைத்து வருகிறது. இது கடந்த 2026 பிப்ரவரி மாத விற்பனையிலும் தொடர்ந்துள்ளது. இன்னும் சொல்லப்போனால், கடந்த பிப்ரவரி மாதத்தில் இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையில் விற்பனையான காராக டாடா நெக்ஸான் முதலிடத்தை பிடித்துள்ளது.

மஹிந்திரா ஆசை காட்டி மோசம் செய்யாது...

இந்தியாவில் அதிக எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்து வரும் நிறுவனங்களில் ஒன்றாக மஹிந்திரா (Mahindra) உள்ளது. மஹிந்திரா பிஇ 6 (Mahindra BE 6), மஹிந்திரா எக்ஸ்இவி 9இ (Mahindra XEV 9e) மற்றும் மஹிந்திரா எக்ஸ்இவி 9எஸ் (Mahindra XEV 9S) ஆகிய எலெக்ட்ரிக் கார்களுக்கு, இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு உள்ளது.
Advertisement

ரூ.1.97 லட்சத்தை குறைச்சிட்டா காரின் விலையில் ஒண்ணுமே இல்லயே

ஹோண்டா கார்ஸ் இந்தியா (Honda Cars India), நடப்பு 2026 மார்ச் மாதத்திற்கான சலுகைகளை அதன் கார்களுக்கு அறிவித்துள்ளது. கார்கள் வாரியாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த சலுகைகள் என்னென்ன? இதன் மூலம் எந்த அளவிற்கான பணத்தை இந்த மார்ச் மாதத்தில் ஹோண்டா கார்களை வாங்குவதன் மூலம் மிச்சப்படுத்தலாம் என்பதை பற்றியும் இனி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

சொந்தமாக கார் வைத்திருப்பவர்களுக்கே இந்த விஷயம் தெரியாது!

நீங்கள் சொந்தமாக கார் வைத்திருந்தால் அந்த காருக்கு நீங்கள் பார்க்க வேண்டிய முக்கியமான பராமரிப்பு பணி என்பது அவ்வப்போது காரின் இன்ஜின் ஆயிலை மாற்றுவது தான். ஒரு வாகனத்தின் இன்ஜின் ஆயிலை எவ்வளவு இடைவெளியில் மாற்ற வேண்டும் என்ற தகவல் பலருக்கும் புரிதல் இல்லாமல் இருக்கிறது. சிலர் மாத கணக்கை கணக்கிட்டும், சிலர் எவ்வளவு கிலோமீட்டர் பயனர்த்துள்ளோம் என்பதை கணக்கிட்டும் மாற்றுகிறார்கள்.

உடனே உங்க கார்ல இதை செக் பண்ணுங்க!

இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் இந்த மார்ச் மாதமே வெயில் கோடை வெயில் போல வெளுத்து வாங்கி வருகிறது. பல இடங்களில் வெப்பம் அதிகமாக இருக்கிறது. இந்த மாதிரியான வெயில் அதிகமாக இருக்கும் நேரங்களில் உங்கள் காரை சரியாக பராமரிக்க வேண்டியது அவசியம். இதனால் நாம் இங்கே கோடை நேரத்தில் உங்கள் காரை எப்படி எல்லாம் பராமரிக்க வேண்டும் என்ற டிப்ஸ்களை இங்கே உங்களுக்காக வழங்கி உள்ளோம்.

ஸ்பேர் சக்கரத்துடன் மீண்டும் மஹிந்திரா கார்! ஸ்பை படங்கள்

மஹிந்திரா (Mahindra) நிறுவனம் புது, புது கார்களை அறிமுகம் செய்ய தயாராகி வருகிறது. அதன் ஒரு பகுதியாக கடந்த 2025ஆம் ஆண்டின் சுதந்திர தினத்தின் போது 4 எஸ்யூவி கார் (SUV Car)-களுக்கான கான்செப்ட் (Concept)-களை மஹிந்திரா வெளியீடு செய்திருந்தது. இதில், விஷன் எஸ் (Vision S) என்கிற சப்-4 மீட்டர் எஸ்யூவி கார் கான்செப்ட்டும் ஒன்றாகும்.
Advertisement

ஆரம்பத்திலேயே பேட்டரிக்கு காசுக்கு கொடுக்க வேண்டாம்!

பேட்டரி-அஸ்-அ-சர்வீஸ் (BaaS) எனப்படும் பேட்டரிக்கு அதன் சேவையை பொறுத்து கட்டணம் வசூலிக்கும் முறை இந்தியாவில் எலெக்ட்ரிக் 2-வீலர்கள் மார்க்கெட்டில் புதிய புரட்சியை நிகழ்த்தி வருகிறது. வாகனத்தின் விலையை குறைவாக நிர்ணயிக்க முடிவதாலும், சார்ஜ் ஆகுவதற்காக காத்திருக்க வேண்டிய நேரம் குறைவதாலும் பல எலெக்ட்ரிக் 2-வீலர் கம்பெனிகள் BaaS முறையை பின்பற்ற ஆரம்பித்துள்ளனர். இன்னும் சொல்லப்போனால், பல வருடங்களுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்டு சோபிக்காமல் போன எலெக்ட்ரிக் 2-வீலர்களுக்கு கூட BaaS திட்டத்தை அறிமுகம் செய்து ஹிட் அடிக்க வைத்துள்ளனர்.

பெட்ரோல் பைக் வாங்குற விலையில் எலெக்ட்ரிக் பைக்!

அல்ட்ராவயலட் ஆட்டோமோட்டிவ் (Ultraviolette Automotive) நிறுவனம் அதன் எக்ஸ்47 (X47) எலெக்ட்ரிக் பைக்கிற்கான புதிய 'பேட்டரி ஃபிளெக்ஸ்' (Battery Flex) என்கிற புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. பைக்கின் விலையை குறைக்கும் விதமாகவும், சார்ஜிங் செய்வதில் உள்ள கால நேர விரயத்தை குறைக்கும் விதமாகவும் கொண்டுவரப்பட்டுள்ள இந்த புதிய திட்டத்தை பற்றியும், எக்ஸ்47 எலெக்ட்ரிக் பைக்கை பற்றியும் இனி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

இஸ்ரேல்-ஈரான் போல் மோத போகும் தமிழக-இங்கிலாந்து நிறுவனங்கள்

இந்தியாவை சேர்ந்த ராயல் என்பீல்டு (Royal Enfield) நிறுவனம் தமிழக தலைநகர் சென்னையை (Chennai) தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது. இந்தியா மட்டுமல்லாது, உலகின் பல்வேறு நாடுகளிலும் ராயல் என்பீல்டு நிறுவனம் பைக்குகளை விற்பனை செய்து கொண்டுள்ளது. இந்த சூழலில் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) தற்போது வெளியாகியுள்ளது.

டோல் பூத் எல்லாம் காணாம போக போகுது! எப்படி பணம் செலுத்துவது?

எந்தவொரு நாட்டின் பொருளாதாரத்திற்கும் மேம்பட்ட தரத்திலான சாலைகள் அவசியமாகும். இதனை நன்கு புரிந்துக் கொண்டதினாலேயே நாடு முழுவதும் விரைவுச்சாலைகளை மத்திய அரசு தொடர்ந்து விரிவுப்படுத்தி வருகிறது. ஆனால், புதியது, புதியதாக விரைவுச்சாலைகளை அமைப்பதற்கும், அவற்றை தொடர்ந்து பராமரிப்பதற்கும் பெரிய தொகையில் நிதி தேவைப்படுகிறது. அது மொத்தத்தையும் அரசாங்கத்தால் தயார் செய்ய முடியாது என்பதால், விரைவுச் சாலையை பயன்படுத்தும் வாகன ஓட்டிகளிடம் இருந்தும் வசூல் செய்யப்படுகிறது.
Advertisement

மாருதி எர்டிகா விலையில் 9 சீட்டர் கார்...

இந்தியாவில் அதிகம் பேர் பயணம் செய்ய கூடிய வகையில் அதிக இருக்கைகளை கொண்ட கார்களுக்கு, வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல 'டிமாண்ட்' இருந்து வருகிறது. மாருதி சுஸுகி எர்டிகா (Maruti Suzuki Ertiga) மற்றும் ரெனால்ட் ட்ரைபர் (Renault Triber) போன்ற கார்கள், இதன் காரணமாகவே வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ளன.

கார் டிக்கில லக்கேஜ் ஏத்தும் போது இந்த விஷயத்தை கவனிங்க!

புதிதாக கார் வாங்குபவர்களுக்கு தனது காரில் அதிக பூட் ஸ்பேஸ் இருக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். குறிப்பாக குடும்பத்துடன் பயணிக்கும் வகையிலான கார்களில் அதிக பூட் ஸ்பேஸ் இருந்தால் அதிகமான பொருட்களை எடுத்துச் செல்லலாம் என்ற நினைப்பில் பலர் இந்த விஷயத்தை கவனிப்பார்கள். ஆனால் பூட் ஸ்பேஸை எப்படி பயன் உள்ளதாக பயன்படுத்த வேண்டும் என்ற விபரம் பலருக்கும் தெரிவதில்லை. அதற்கான டிப்ஸ்களை தான் இங்கே வழங்கி உள்ளோம்.

சீனா காரை அப்படியே கொண்டுவருவது தான் திட்டமா!

இந்தியாவின் மிக பெரும் தனியார் குழுமங்களுள் ஒன்றான ஜே.எஸ்.டபிள்யூ (JSW), சீனாவை சேர்ந்த SAIC குழுமத்தின் கீழ் செயல்படும் பிரிட்டிஷ் கார் நிறுவனமான எம்ஜி மோட்டார் (MG Motor) உடன் இணைந்து செயல்பட ஆரம்பித்த பிறகு இந்திய கார்கள் மார்க்கெட்டில் புதிய புரட்சியை நிகழ்த்தி வருகிறது. குறிப்பாக, எலெக்ட்ரிக் கார்கள் (Electric Cars) விஷயத்தில் இந்த கூட்டணி நிறுவனம் முனைப்புக் காட்டி வருகிறது.

அடிக்கிற வெயிலுக்கு காரே உருகிடும் போல!

இந்தியா முழுவதும் கோடை வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், இந்த வெயிலிலிருந்து நீங்கள் தப்பிப்பது எப்படி முக்கியமோ அதேபோல உங்க வாகனங்களையும் தப்பிக்க வைக்க வேண்டும். அடிக்கும் வெயிலில் உங்கள் வாகனங்களுக்கு பல்வேறு விதமான பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் இந்த வெயில் காலத்தில் உங்கள் வாகனங்கள் என்ன விதமான பாதிப்புகளுக்கு உள்ளாக வாய்ப்பு இருக்கிறது, அதை தடுப்பது எப்படி? என்ற விவரங்களை தான் இங்கே காணப் போகிறோம்.
Advertisement

ஜப்பானை பின்னுக்கு தள்ளிய தமிழ்நாட்டு நிறுவனம்!

தமிழக தலைநகர் சென்னையை (Chennai) தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் டூவீலர் நிறுவனங்களில் ஒன்று டிவிஎஸ் (TVS). உலகளாவிய டூவீலர் விற்பனையில் ஜப்பானை சேர்ந்த யமஹா (Yamaha) நிறுவனத்தை பின்னுக்கு தள்ளி, டிவிஎஸ் நிறுவனம் தற்போது 3வது இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளது.

தமிழர்கள் ஒவ்வொருத்தரும் பெருமைப்பட வேண்டிய தருணம்!

டிவிஎஸ் மோட்டார் (TVS Motor), சென்னையை தலைமையிடமாக கொண்டு தமிழ்நாட்டை சேர்ந்த ஆட்டோமொபைல் நிறுவனமாக இந்தியா முழுவதும் அறியப்படுகிறது. அதுவே, இந்தியாவிற்கு வெளியே முன்னணி இந்திய ஆட்டோமொபைல் நிறுவனமாக டிவிஎஸ் விளங்குகிறது. இந்த நிலையில், உலகளவில் டிவிஎஸ் மோட்டார் புதிய சாதனையை புரிந்து ஒட்டுமொத்த இந்தியர்களும் பெருமைப்பட வைத்துள்ளது. அது என்ன என்பதை பற்றி தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம். வாருங்கள் செய்திக்குள் போகலாம்.

12 லட்ச ரூபாய்க்குள் இதில் ஒரு காரை வாங்கிடலாமா?

கார்களில் சிவிடி (Continuously Variable Transmission - CVT) கியர்பாக்ஸ் சிறந்த எரிபொருள் திறன் மற்றும் நம்பகத்தன்மைக்கு புகழ்பெற்றது. இது மென்மையான பவர் டெலிவரியுடன், நகரப் பயணங்களுக்கு மிகவும் ஏற்றதாக விளங்குகிறது. இந்தியாவில், பல கார் பிராண்டுகள் சிவிடி கியர்பாக்ஸ் கொண்ட கார் மாடல்களை வழங்குகின்றன. அவ்வாறு, இந்தியாவில் மலிவான விலையில் கிடைக்கும், சிவிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் (Automatic Gearbox) கொண்ட முதல் 5 கார்களின் பட்டியல் இதோ...

மாருதி பிரெஸ்ஸாவை விட குறைவான விலையில் ஃபோக்ஸ்வேகன் கார்!

இந்தியாவில் ஸ்கோடா நிறுவனம் விற்பனை செய்யும் கார்களிலேயே மிகவும் விலை குறைவானது என்ற பெருமை கைலக் (Skoda Kylaq) காருக்கு உண்டு. சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த ஸ்கோடா கைலக் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை வெறும் 7.59 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது.
Advertisement

10 லட்ச ரூபாய் விலையில் புதிய ரெனால்ட் எஸ்யூவி கார் உறுதி!

ரெனால்ட் (Renault) நிறுவனத்தில் இருந்து இந்தியாவில் அதிக எண்ணிகையில் விற்பனை செய்யப்பட்ட கார்களுள் டஸ்டர் (Duster) ஒன்றாகும். ரெனால்ட்டின் எஸ்யூவி (SUV) ரக கார் மாடலான டஸ்டர் அப்கிரேட் செய்யப்பட்ட புதிய தோற்றத்தில் மிக சமீபத்தில்தான் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, புதிய டஸ்டரை போன்றதான மற்றொரு காரை இந்திய சந்தைக்காகவே ரெனால்ட் உருவாக்கி வருகிறது.

டாடா மோட்டார்ஸை விட மஹிந்திரா கொஞ்சமும் சளைச்சது இல்ல!

மஹிந்திரா (Mahindra) நிறுவனம் இந்தியாவில் கார்கள் விற்பனையில் 3வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த மாதங்களில் மாருதி சுஸுகிக்கு அடுத்து 2வது இடத்தை பிடித்து இருந்தாலும், கடந்த பிப்ரவரி மாத விற்பனையில் டாடா மோட்டார்ஸ் (Tata Motors) மஹிந்திராவை முந்தியுள்ளது. இருப்பினும் ஒட்டுமொத்தமாக பார்த்தால், மஹிந்திராவின் கார்கள், கமர்ஷியல் வாகனங்கள் மற்றும் வேளாண் சார்ந்த கருவிகளின் விற்பனை கடந்த பிப்ரவரி மாதத்தில் ஓரளவிற்கு சிறப்பாக இருந்துள்ளது என்றே கூற வேண்டும்.

ஷேக்குகள் போல் செல்வ செழிப்பாக மாற போகும் சிவகங்கை மக்கள்!

இந்தியாவில் மிகவும் வளர்ச்சியடைந்த மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு (Tamil Nadu) உள்ளது. தமிழ்நாட்டின் பொருளாதாரம் மிகவும் சிறப்பாக இருந்து வருவதே இதற்கு காரணம். தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. இதில் மிகவும் முக்கியமான காரணமாக இருப்பது ஆட்டோமொபைல் துறை ஆகும்.

மஹிந்திரா பிஇ 6 எலெக்ட்ரிக் காரை விட 3 லட்சம் குறைவான விலை!

இந்தியாவின் மிகப்பெரிய கார் நிறுவனமாக மாருதி சுஸுகி (Maruti Suzuki) இருந்து வருகிறது. தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி நிறுவனம் இந்தியாவில் ஒவ்வொரு சுமார் 2.30 லட்சம் கார்களை உற்பத்தி செய்து கொண்டுள்ளது. இதில் சுமார் 1.80 லட்சம் கார்கள் இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படுகின்றன.
Advertisement

மாருதிக்கு அடுத்து இனி டாடா மோட்டார்ஸ் தான்...!!

டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகன லிமிடெட் (Tata Motors Passenger Vehicles Limited) நிறுவனம், நடந்து முடிந்த 2026 பிப்ரவரி மாதத்தில் மொத்தம் 63,331 யூனிட் கார்களை விற்பனை செய்து குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இது கடந்த ஆண்டு பிப்ரவரியில் விற்பனையான 46,811 டாடா கார்களுடன் ஒப்பிடுகையில் 35% அதிகரிப்பாகும்.