காரா இல்ல 5 ஸ்டார் ஹோட்டலா! உலகையே மிரள விட போகும் டாடா!

இந்தியா உள்பட உலகின் பல்வேறு நாடுகளிலும் எலெக்ட்ரிக் கார்கள் (Electric Cars) மிக வேகமாக பிரபலமடைந்து வருகின்றன. இந்தியாவை பொறுத்தவரையில், டாடா மோட்டார்ஸ் (Tata Motors), மஹிந்திரா (Mahindra) மற்றும் எம்ஜி மோட்டார் (MG Motor) போன்ற நிறுவனங்கள், எலெக்ட்ரிக் கார் விற்பனையில் ஆதிக்கம் செலுத்தி கொண்டுள்ளன.

மஹிந்திரா எல்லாம் ஓரம் போ!

டாடா நிறுவனம் வரும் 2026ம் ஆண்டில் மொத்தம் 3 எலெக்ட்ரிக் கார்களை களம் இறுக்கப்போவதாக உறுதி செய்துள்ளது. இது அந்நிறுவனத்தின் எலெக்ட்ரிக் வாகன வளர்ச்சியை காட்டுகிறது. இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்படும் எலெக்ட்ரிக் கார்களாக இந்த இருக்கிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

ஒரே நாளில் சர்வீஸ் என பெயர் வெச்சிக்கிட்டு இப்படி பண்றீங்களே

ஓலா நிறுவனம் தனது ஹைப்பர்சர்வீஸ் (Hyperservice) திட்டத்தை விரிவுபடுத்தி, பிரத்யேக ஹைப்பர்சர்வீஸ் மையங்களை அறிவித்துள்ளது. தகுதியுள்ள வாடிக்கையாளர்களுக்கு எந்தக் கூடுதல் கட்டணமுமின்றி, ஒரே நாளில் வாகனச் சேவை வழங்க இம்மையங்கள் உத்தரவாதம் அளிக்கின்றன. இதன் ஒரு பகுதியாக, பெங்களூருவைத் தொடங்கி, தற்போதுள்ள ஓலா சேவை மையங்கள் படிப்படியாக ஹைப்பர்சர்வீஸ் மையங்களாக மேம்படுத்தப்படும். இந்திராநகர், பெங்களூருவில் முதல் மையம் செயல்படத் தொடங்கியுள்ளது.

ஜனவரி 1 முதல் விலை ஏறுது!

ஏத்தர் எனர்ஜி நிறுவனம் வரும் புத்தாண்டு முதல் தனது வாகனங்களுக்கனா விலையை உயர்த்த திட்டமிட்டுள்ளது. இதன்படி வரும் ஜனவரி மாதத்திற்கு பிறகு நீங்கள் ஏத்தர் எனர்ஜி நிறுவனத்தின் தயாரிப்புகளை வாங்கினால் அதிக பணம் செலவு செய்ய வேண்டியது வரும். இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
Advertisement

சக்கரம் பெருசா இருந்தாலும் பிரச்சனை தான் போலயே...

2025ஆம் ஆண்டில் ரூ.10 லட்சம் எக்ஸ்-ஷோரூம் (Ex-Showroom) விலைக்கும் குறைவான பல கார்களில் 16-இன்ச் அலாய் சக்கரங்கள் இடம்பெறுகின்றன. வழக்கத்தை விட சற்று பெரியதான இந்த சக்கரங்கள் வாகனத்தின் அழகியல் தோற்றத்தையும் நிலைத்தன்மையையும் கணிசமாக மேம்படுத்துகின்றன. ஆதலால், குறைந்த பட்ஜெட்டில் பிரீமியம் தோற்றத்தை விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு கீழே குறிப்பிடப்பட்ட கார்கள் சிறந்த தேர்வுகளாக இருக்கும். இவை ரூ.10 லட்சத்திற்குள் 16-இன்ச் அலாய் சக்கரங்களுடன் கிடைக்கும் பிரபலமான கார் மாடல்கள் ஆகும்.

மீண்டும் கிரிக்கெட்டில் ஹூண்டாய்... ஐசிசி உடன் கூட்டணி!!

ஹூண்டாய் மோட்டார் (Hyundai Motor) நிறுவனம் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (International Cricket Council) உடன் அடுத்த சில ஆண்டுகளுக்கான உலகளாவிய கூட்டணியை அறிவித்துள்ளது. இதன்படி, 2026 மற்றும் 2027ஆம் ஆண்டுகளில் நடைபெறவுள்ள ஆறு முக்கிய ஐசிசி கிரிக்கெட் (Cricket) தொடர்களுக்கான முதன்மைப் பங்காளராக ஹூண்டாய் இணைந்துள்ளது. ஐசிசி உடன் தென் கொரியா நாட்டின் ஹூண்டாய் இணைவது இது ஒன்றும் முதல்முறை அல்ல.

புது கியா காரை புக்கிங் போட்டவங்க எல்லாம் ரெடியா இருங்க!!

கியா இந்தியா (Kia India) நிறுவனம் தனது முற்றிலும் புதிய செல்டோஸ் எஸ்யூவி (Seltos SUV) காரின் உற்பத்தியை ஆந்திரப் பிரதேசத்தின் அனந்தபூரில் உள்ள அதன் தொழிற்சாலையில் தொடங்கியுள்ளது. இதன்படி உருவாக்கப்பட்ட முதல் செல்டோஸ் காரை அறிமுகப்படுத்தும் நிகழ்வில், கியா இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் குவாங்கு லீ (Gwanggu Lee) உட்பட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

2026 பொங்கலை மறக்க முடியாதப்படி செய்ய போகும் புது பைக்குகள்!

2026 பொங்கல் சீசனை (ஜனவரி-பிப்ரவரி 2026) ஒட்டி, இந்திய சந்தையில் பல புதிய இருசக்கர வாகனங்கள் அறிமுகம் செய்யப்படவுள்ளன. ராயல் என்ஃபீல்டு புல்லட் 650, கேடிஎம் 390 அட்வென்ச்சர் ஆர் மற்றும் ஹீரோ எக்ஸ்பல்ஸ் 421 உள்ளிட்டவை அவற்றில் முக்கியமான அறிமுகங்களாகும். பொங்கலில் அதிக வாடிக்கையாளர்களை டார்க்கெட் செய்து கொண்டுவரப்படும் இந்த இருசக்கர வாகனங்கள் பற்றிய விபரங்களை தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

2.5 லட்சம் இவி கார்களை விற்றது இந்த கம்பெனி தானா?

டாடா நிறுவனம் தற்போது எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனை செய்யும் முன்னணி நிறுவனமாக இருக்கிறது. இந்நிலையில் கடந்த 5 ஆண்டுகளில் இந்நிறுவனம் 2.5 லட்சத்திற்கும் அதிகமான வாகனங்களை விற்பனை செய்து முக்கியமான சாதனையை படைத்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

வருஷம் முடிவதற்குள் ஸ்டாக்கை க்ளீயர் செய்வதுதான் டார்க்கெட்!

சுஸுகி மோட்டார்சைக்கிள் இந்தியா (Suzuki Motorcycle India), அதிக இருசக்கர வாகனங்களை விற்பனை செய்யும் முன்னணி ஜப்பானிய நிறுவனம். இந்திய சந்தையில் பலத்தரப்பட்ட மோட்டார்சைக்கிள்கள் மற்றும் ஸ்கூட்டர்களை விற்பனை செய்யும் சுஸுகி மோட்டார்சைக்கிள் நிறுவனத்திற்கு நாடு முழுவதும் டீலர்ஷிப் நெட்வொர்க் உள்ளது. அந்த வகையில் சென்னையிலும் பல இடங்களில் சுஸுகி 2-வீலர் ஷோரூம்கள் செயல்படுகின்றன.

இந்த ஒரு கார் சேல்ஸ் சும்மா பிச்சுக்கிட்டு போகுது!

இந்தியாவில் செடான் கார்களின் விற்பனை சமீபகாலமாக சரிவடைந்து வந்தாலும், இந்த ரக கார்களுக்கு என்றே ஒரு ரசிகர் கூட்டம் இருக்கிறது. இந்நிலையில் கடந்த நவம்பர் மாதம் விற்பனையான டாப் 10 செடான் கார்கள் குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

இந்தியாவில் பறக்கப்போகுது ஏர் டாக்ஸி!

இந்தியாவில் சர்லா ஏவியேசன் நிறுவனம் வரும் 2028ம் ஆண்டு முதல் எலெக்ட்ரிக் ஏர் டாக்ஸியை பயன்பாட்டிற்கு கொண்ஐடு வர திட்டமிட்டுள்ள நிலையில் இதற்கான சோதனைகளை தற்போது துவங்கிவுள்ளது. இது வெற்றியடையும் பட்சத்தில் விரைவில் இந்தியாவில் ஏர்டாக்ஸி சேவை துவங்கும் என எதிர்பார்க்கலாம். இது குறித்த விாிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
Advertisement

ஏத்தர் எனர்ஜியின் புதிய விலை உயர்வு ஜனவரி 1 முதல்!!

இரவு நேரங்களில் கார் கதவுகளுக்கு அருகில் உள்ள தரையை ஒளிரச் செய்து, முன் இருக்கை பயணிகள் எளிதாக வெளியேற உதவும் 'பெடில் விளக்குகள்' (Puddle Lamps) காரில் ஒரு சிறந்த பாதுகாப்பு மற்றும் சவுகரிய அம்சமாகும். முன்னதாக ஆடம்பர கார்களில் மட்டுமே காணப்பட்ட இந்த அம்சம், தற்போது ரூ.10 லட்சத்திற்கும் குறைவான விலையுள்ள கார்களிலும் கிடைக்கிறது. 2025 டிசம்பர் மாத நிலவரப்படி, இந்த அம்சத்தை வழங்கும் சிறந்த கார்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

கார்களில் இப்படியெல்லாம் கூடவா விளக்குகள் வழங்கப்படுகின்றன?

இரவு நேரங்களில் கார் கதவுகளுக்கு அருகில் உள்ள தரையை ஒளிரச் செய்து, முன் இருக்கை பயணிகள் எளிதாக வெளியேற உதவும் 'பெடில் விளக்குகள்' (Puddle Lamps) காரில் ஒரு சிறந்த பாதுகாப்பு மற்றும் சவுகரிய அம்சமாகும். முன்னதாக ஆடம்பர கார்களில் மட்டுமே காணப்பட்ட இந்த அம்சம், தற்போது ரூ.10 லட்சத்திற்கும் குறைவான விலையுள்ள கார்களிலும் கிடைக்கிறது. 2025 டிசம்பர் மாத நிலவரப்படி, இந்த அம்சத்தை வழங்கும் சிறந்த கார்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

எத்தனை பேரது தொழிலை மாற்ற போகுதோ...! ரூ.4.35 லட்சத்தில் விலை

இந்தியாவின் வர்த்தக பயன்பாட்டிற்கான எலெக்ட்ரிக் வாகன சந்தையில் வேகமாக வளர்ந்து வரும் 'யுதா' (YOUDHA) நிறுவனம், கனரக பொருட்களை கொண்டு செல்வதற்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட 'யுதா டிரெவோ' (YOUDHA Trevo) என்கிற மூன்று சக்கர எலெக்ட்ரிக் சரக்கு வாகனத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. லாஸ்ட்-மைல் டெலிவரி (Last-mile Delivery) மற்றும் நகரத்திற்குள் ஏற்றுமதி/ இறக்குமதிகளுக்கு பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த எலெக்ட்ரிக் வாகனம், இந்தியாவின் சாலை மற்றும் சுமை நிலைமைகளுக்கேற்ப சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளது.

90 கிமீ மைலேஜ்! விலை இவ்ளோதானா!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் ஸ்கூட்டர்களில் ஒன்று டிவிஎஸ் ஜூபிடர் (TVS Jupiter). இதன் நடப்பு 2025ம் ஆண்டு நவம்பர் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) தற்போது வெளியாகியுள்ளது. ரஸ்லேன் தளத்தில் வெளியாகியுள்ள இந்த சேல்ஸ் ரிப்போர்ட்படி பார்த்தால், நடப்பு 2025ம் ஆண்டு நவம்பர் மாதம், 1,24,782 டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

எந்த காராக இருந்தாலும் கஸ்டமர்களை உடனடியாக கவரும் அம்சம்...!

இந்த 2025ஆம் ஆண்டு முடியும் தருவாயில், சுற்றுலா பயணங்கள் மற்றும் அன்றாடப் பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில், இந்திய ஆட்டோமொபைல் சந்தையில், பத்து லட்ச ரூபாய்க்குள் ரூஃப் ரெயில்கள் (Roof Rails)-ஐக் கொண்ட கார் மாடல்கள் பல உள்ளன. காரின் மேற்கூரையில் பொருட்களை கட்டி எடுத்து செல்வதற்கு ரூஃப் ரெயில்கள் பயன்படுகின்றன. இத்தகைய வசதி உடன் ரூ.10 லட்சத்திற்குள் கிடைக்கும் கார்களை பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

எமனே எதிர்ல வந்தாலும் எதுத்து நிக்கும்! விலை இவ்ளோதானா!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று மாருதி சுஸுகி செலிரியோ (Maruti Suzuki Celerio). ஹேட்ச்பேக் (Hatchback) ரகத்தை சேர்ந்த மாருதி சுஸுகி செலிரியோ கார், குளோபல் என்சிஏபி (Global NCAP) அமைப்பால், சமீபத்தில் மோதல் சோதனைக்கு (Crash Test) உட்படுத்தப்பட்டது.

ஒருத்தர் விடாம எல்லாரும் மாருதி காரை தான் வாங்க போறாங்க

மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனத்திற்கு இந்தியா முழுவதும் சேல்ஸ் & சர்வீஸ் நெட்வொர்க் உள்ளதை பற்றி நான் கூற வேண்டியது இருக்காது என நினைக்கிறேன். ஏனெனில் அந்த அளவிற்கு நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்குகளிலும் மாருதி சுஸுகி பயன்படுத்தப்படுகின்றன. அந்த வகையில், மாருதி சுஸுகி நிறுவனத்திற்கு நமது சென்னை ஆனது ஓர் முக்கியமான சந்தை ஆகும்.

புதிய டாடா காரை ஓட்டி பார்த்தும் எந்த குறையும் சொல்ல முடியல!

டாடா சஃபாரி டார்க் எடிஷன் விமர்சனம்: புதிய டர்போ பெட்ரோல் எஞ்சின், விவரக்குறிப்புகள், ஓட்டுநர் அனுபவம், அம்சங்கள் மற்றும் பாதுகாப்பு பற்றி இந்த விரிவான மதிப்பாய்வில் தெரிந்து கொள்ளுங்கள்.
Advertisement

விலை குறைவான கார்களை களமிறக்க போகும் சிமெண்ட் கம்பெனி!

இந்தியாவை சேர்ந்த மிகவும் பிரபலமான நிறுவனங்களில் ஒன்று ஜேஎஸ்டபிள்யூ குழுமம் (JSW Group). மும்பை (Mumbai) நகரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் ஜேஎஸ்டபிள்யூ குழுமம், இந்தியா மட்டுமின்றி, அமெரிக்கா மற்றும் ஆப்ரிக்கா என உலகின் பல்வேறு பிராந்தியங்களிலும் இயங்கி கொண்டுள்ளது.

2026இல் மொத்த மார்க்கெட்டையும் ஆட்டம் காண வைக்க போகிற கார்!

மாருதி சுஸுகி நிறுவனம் 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் புதிய பிரெஸ்ஸா ஃபேஸ்லிஃப்ட் மாடலை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்த காம்பாக்ட் எஸ்யூவி, இரண்டாம் தலைமுறையிலிருந்து தனது முதல் பெரிய ஃபேஸ்லிஃப்ட் மாற்றத்தைப் பெறவுள்ளது. புதிய தொழில்நுட்ப அம்சங்களையும், மேம்படுத்தப்பட்ட உட்புற அழகியலையும் இந்தக் கார் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கணக்கச்சிதமான மாருதி காருக்கு இணையா எந்த காரும் விற்பனையாகல!

2025 நவம்பர் மாதத்தில் கார்கள் விற்பனை 2024 நவம்பரை காட்டிலும் சற்று அதிகரித்துள்ளது. அதன்படி, குறைவான உயரத்துடன் தாழ்வான உடலமைப்பை கொண்ட செடான் கார்கள் விற்பனையும் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. மொத்தம் 35,039 செடான் கார்கள் கடந்த மாதத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது 2024 நவம்பரில் விற்பனையான 24,154 செடான் கார்களுடன் ஒப்பிடுகையில் 45.06% வளர்ச்சியைப் பிரதிபலிக்கிறது.

காரின் அழகிற்கு மட்டுமல்ல, பாதுகாப்புக்கும் ரொம்ப முக்கியம்!

2025ஆம் ஆண்டில், இந்தியாவில் ரூ.10 லட்சம் பட்ஜெட்டிற்குள் பல பிரபலமான கார்கள் புரொஜெக்டர் ஹெட்லேம்ப்கள் உடன் கிடைக்கின்றன. பெரும்பாலான கார்களில் ஹாலோஜன் புரொஜெக்டர்கள் ஆரம்பநிலை வேரியண்டுகளில் இருந்தே வழங்கப்படும் நிலையில், LED புரொஜெக்டர் ஹெட்லைட்கள் பொதுவாக டாப்-ஸ்பெக் வேரியண்ட்களில் வழங்கப்படுகின்றன. இருப்பினும், ரூ.10 லட்சத்திற்குள் கிடைக்கும் சில கார்களில் எண்ட்ரி-லெவல் வேரியண்ட்களில் இருந்தே புரோஜெக்டர் ஹெட்லைட் வழங்கப்படுகிறது. அந்த கார்களை பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்னா இதாம்பா!

எலெக்ட்ரிக் டூவீலர் செக்மெண்ட் இந்தியாவில் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. இந்த செக்மெண்டில் பல்வேறு விதமான தயாரிப்புகள் களம் இறங்குகிறது. குறைந்த விலை முதல் பிரிமியம் விலை வரை பல தயாரிப்புகள் களம் இறங்குகிறது. இந்நிலையில் பல வாகன தயாரிப்பு நிறுவனங்கள் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை களம் இறக்க தயாராகி வருகின்றனர். அதன்படி யமஹா, ஏத்தர் மற்றும் பஜாஜ் நிறுவனங்களின் அடுத்த இவி குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.