இந்த மாருதி காரில் ஏறி, இறங்குவது ஏற்கனவே ஈசியா இருந்துச்சு!

மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனத்தின் பிரபலமான வேகன் ஆர் (WagonR) ஹேட்ச்பேக் காருக்கான, முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் எளிதாக ஏறி இறங்குவதற்கு உதவும் 'சுழலும் முன் இருக்கை' வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய அம்சம், ஆரம்ப கட்டமாக 11 நகரங்களில் உள்ள 200-க்கும் மேற்பட்ட மாருதி சுஸுகியின் அரீனா (Arena) ஷோரூம்களில் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரே நாள்ல இவ்ளோ பேர் புக்கிங் பண்ணீட்டாங்களா!

இந்திய சந்தையில் மிக நீண்ட இடைவெளிக்கு பின்னர் டாடா சியரா (Tata Sierra) கார் மீண்டும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம், கடந்த நவம்பர் 25ம் தேதிதான், சியரா காரை இந்திய சந்தையில் மீண்டும் விற்பனைக்கு அறிமுகம் செய்தது.

டாடா கார் கனவை நிஜமாக்க நேரம் வந்தாச்சு... ரூ.5,000இல் EMI

டாடா மோட்டார்ஸ் (Tata Motors) பயணிகள் வாகன நிறுவனம், புதியதாக அதன் கார்களுக்கான ஆண்டு இறுதி நிதிச் சலுகைகளை அறிவித்துள்ளது. கார் விற்பனையை அதிகரிக்கவும், கார் வாங்குவதை எளிதாக்கவும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்தச் சிறப்புச் சலுகைகளின் கீழ், வாடிக்கையாளர்கள் ரூ.4,999 முதல் தொடங்கும் மாதத் தவணைகளில் (EMI) டாடா கார்களை வாங்கலாம்.

26 வருடங்களா விற்பனையில் அசைக்க முடியாத மாருதி வேகன் ஆர்!

இந்தியாவின் ஹேட்ச்பேக் (Hatchback) கார்கள் பிரிவில் மாருதி சுஸுகி வேகன்ஆர் (Maruti Suzuki WagonR) நீண்டகாலமாகவே ஒரு முக்கிய பயணிகள் கார் வரிசையாகத் திகழ்கிறது. அதன் வெளிப்பாடாக, இந்தியாவில் இதன் ஒட்டுமொத்த உற்பத்தி 35 லட்சம் யூனிட்களைக் கடந்து ஒரு புதிய சாதனையைப் படைத்துள்ளது.
Advertisement

ஜப்பான்காரன் ஆட்டத்த ஆரம்பிச்சுட்டான்! நடுக்கத்தில் மாருதி!

ஜப்பானை (Japan) சேர்ந்த நிஸான் (Nissan) நிறுவனம் இந்திய சந்தையில் தற்போது தள்ளாடி கொண்டுள்ளது. வெறும் 2 கார்களை மட்டுமே விற்பனை செய்வதுதான் இதற்கு காரணம். நிஸான் நிறுவனம் தற்போதைய நிலையில், நிஸான் மேக்னைட் (Nissan Magnite) மற்றும் நிஸான் எக்ஸ்-ட்ரெயில் (Nissan X-Trail) என 2 கார்களை மட்டுமே விற்பனை செய்து வருகிறது.

கார்களின் விலையை உயர்த்த தயாராகும் JSW எம்ஜி மோட்டார்

ஜே.எஸ்.டபிள்யூ எம்ஜி மோட்டார் இந்தியா (JSW MG Motor India) நிறுவனம் தனது கார்களின் விலையை 2% வரை உயர்த்தவுள்ளதாக அறிவித்துள்ளது. வருகிற 2026ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் அமலுக்கு வரும் இந்த விலை உயர்வு குறித்த கூடுதல் விபரங்களை இங்கே இந்த தொகுப்பில் காணலாம்.

மாருதி ஈரக்குலையை நடுங்க வைத்த புதிய 7 சீட்டர் கார்!

ஜப்பான் (Japan) நாட்டை சேர்ந்த பிரபலமான கார் நிறுவனங்களில் ஒன்று நிஸான் (Nissan). இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் 2 கார்களை மட்டுமே நிஸான் நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. அவை நிஸான் மேக்னைட் (Nissan Magnite) மற்றும் நிஸான் எக்ஸ்-ட்ரெயில் (Nissan X-Trail) ஆகியவை ஆகும்.

பல லட்சத்தில் விலை இருந்தாலும், 24 மணிநேரத்தில் காலி!

புதிய மினி கன்வெர்டிபிள் காரின் அடுத்த கட்ட விநியோகத்திற்கான முன்பதிவுகள் தற்போது தொடங்கியுள்ளன. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இந்த கார்கள் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டிசம்பர் 12, 2025 அன்று இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய மினி கன்வெர்டிபிள் காரின் முதல் பேட்ச், வெறும் 24 மணி நேரத்திற்குள் முழுமையாக விற்றுத் தீர்ந்துவிட்டது. முற்றிலும் தயாரிக்கப்பட்ட யூனிட்டாக (CBU) அறிமுகப்படுத்தப்பட்ட இந்த காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ₹58,50,000 ஆகும்.

மஹிந்திரா ஷோரூமை அதிக பேர் தேடி வருவது இந்த கார்களுக்கு தான்

மஹிந்திரா (Mahindra), இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் கார்களை விற்பனை செய்யும் நிறுவனம் என சொன்னால் அது மிகையில்லை. குறிப்பாக, கடந்த 2024ஆம் ஆண்டில் இருந்து மஹிந்திரா கார்கள் விற்பனை ஒரேடியாக உச்சத்தை தொட்டுள்ளன. இதன் விளைவாக, கடந்த மாதங்களில் இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையில் கார்களை விற்பனை செய்த நிறுவனமாக மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனத்திற்கு அடுத்து 2வது இடத்தை மஹிந்திரா பிடித்தது.

டாடா, ஹூண்டாயை கதற விடும் மாருதியின் விலை குறைவான கார்!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் (Maruti Suzuki Swift). இதன் நடப்பு 2025ம் ஆண்டு நவம்பர் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் தற்போது வெளியாகியுள்ளது. காடிவாடி தளத்தில் வெளியாகியுள்ள இந்த சேல்ஸ் ரிப்போர்ட்படி பார்த்தால், நடப்பு 2025ம் ஆண்டு நவம்பர் மாதம், 19,733 மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் கார்கள் விற்பனையாகியுள்ளன.

சூப்பர்சார்ஜரும் வந்தாச்சு... சார்ஜ் போட இனி அலைய தேவையில்ல!

ஹரியானா மாநிலம் குருகிராமில் டெஸ்லா சென்டர் (Tesla Center) திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, டெஸ்லா நிறுவனம் தற்போது குருகிராமில் தனது முதல் சார்ஜிங் நிலையத்தை டி.எல்.எஃப் ஹாரிசோன் (DLF Horizon) சென்டரில் திறந்துள்ளதாக அறிவித்துள்ளது. இந்த முக்கிய நடவடிக்கை, இந்தியாவில் உறுதியான சார்ஜிங் கட்டமைப்பை உருவாக்கி, வாடிக்கையாளர்களுக்குத் தடையற்ற மற்றும் நிலையான போக்குவரத்து தீர்வுகளை வழங்குவதற்கான டெஸ்லாவின் உறுதிப்பாட்டைப் பலப்படுத்துகிறது.

கூட கட்சி ஆளுங்க யாருமே இல்ல... BMW ஆலையில் ராகுல் காந்தி!!

காங்கிரஸ் (Congress) தலைவரும், இந்திய மக்களவை எதிர்கட்சி தலைவருமான ராகுல் காந்தி (Rahul Gandhi) இன்று (டிச.17) ஜெர்மனியின் முனிச் (Munich) நகரில் உள்ள புகழ்பெற்ற பிஎம்டபிள்யூ (BMW) நிறுவனத்தின் தலைமையகத்திற்குச் சென்று, பிஎம்டபிள்யூ வெல்ட் மற்றும் பிஎம்டபிள்யூ ஆலையைச் சுற்றிப் பார்த்துள்ளார். அப்போது, பல்வேறு பிஎம்டபிள்யூ கார்களையும், மோட்டார்சைக்கிள்களையும் ராகுல் காந்தி உன்னிப்பாக ஆய்வு செய்தது கவனத்தை ஈர்த்துள்ளது .
Advertisement

டோல்கேட்களை சூழப்போகும் ஏஐ டெக்னாலஜி!

இந்தியாவில் 2026ம் ஆண்டு இறுதிக்குள் சங்கசாவடிகள் எல்லாம் ஏஐ மூலம் இயங்கும் வகையில் மாற்றியமைக்கப்படும் என மத்திய தேசிய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இவர் தெரிவித்துள்ள கருத்து தற்போது பேசுபொருளாகியுள்ளது.இந்த ஏஐ டோல்கேட் என்றால் என்ன? தற்போது உள்ள டோல்கேட்டிற்கும் ஏஐ டோல்கேட்டிற்கும் என்ன வித்தியாசம்? விரிவாக காணலாம் வாருங்கள்.

டாடாவின் புது காருக்கு ஒரே நாளில் 2 லட்சம் பேர் புக்கிங்?

இந்தியாவில் கடந்த 1991ம் ஆண்டில் இருந்து 2003ம் ஆண்டு வரை விற்பனையில் இருந்த ஒரு கார் டாடா சியரா (Tata Sierra). ஹிந்துஸ்தான் அம்பாஸிடர் (Hindustan Ambassador), மாருதி 800 (Maruti 800) கார்களை போன்று, டாடா சியரா காருக்கும், இந்தியாவில் மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.

பாலத்தை விட்டு இறங்கி முடித்ததும் கொத்தாக தூக்கிய போலீஸ்!!

மும்பையில் இன்று (டிச.17) மிக அதிவேகமாக மணிக்கு 252கிமீ வேகத்தில் சென்ற லம்போர்கினி (Lamborghini) கார் தொடர்பான வீடியோவை பலர் பார்த்திருப்பீர்கள் என நினைக்கிறேன். கடலுக்கு மேலே அமைக்கப்பட்ட பாலத்தில் பனி மூட்டத்திற்கு நடுவில் அந்த கார் அவ்வளவு வேகத்தில் செல்வதை வீடியோவில் பார்க்கும்போதே பயமாக இருக்கிறது.

2 லட்ச ரூபாய் விலையை குறைத்து எம்ஜி ஒரு முடிவோட தான் இருக்கு

எம்ஜி ஹெக்டர் ஃபேஸ்லிஃப்ட் (MG Hector Facelift) எஸ்யூவி கார் அதிக தொழில்நுட்ப வசதிகளுடன், முன் எப்போதும் இல்லாத அளவுக்கு குறைவான விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. முந்தைய ஹெக்டர் கார் ரூ.13.99 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், ஆச்சிரியப்படுத்தும் விதமாக புதிய ஹெக்டர் ஃபேஸ்லிஃப்ட் காரின் ஆரம்ப விலை ரூ.2 லட்சம் குறைக்கப்பட்டு ரூ.11.99 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2025 மாடலாக அறிமுகமாகியுள்ள புதிய ஹெக்டர் ஃபேஸ்லிஃப்ட், நடுத்தர அளவிலான எஸ்யூவி கார்கள் பிரிவில், சிறப்பம்சங்கள் மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பம் கொண்ட எஸ்யூவி என்ற அதன் நற்பெயரை மேலும் வலுப்படுத்துகிறது.

பைக்கை விட குறைவான விலையில் 7 சீட்டர் கார்!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று ரெனால்ட் ட்ரைபர் (Renault Triber). இது 7 சீட்டர் எம்பிவி (7 Seater MPV) ரகத்தை சேர்ந்தது ஆகும். இந்த காரின் அடிப்படையில் புத்தம் புதிய 7 சீட்டர் எம்பிவி ரக கார் ஒன்றை நிஸான் (Nissan) நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது.

கண்ணிமைக்கும் நொடியில் சீறி பாய்ந்த ரயில்!

கண்ணிமைக்கும் நொடியில் ரயில் ஒன்று பாலத்தைகடந்து செல்லும் வீடியோ வைரலாகி வருகிறது. பொதுவாக மின்னல் வேகத்தில் சீறி பாய்ந்த ரயில் என சொல்லுவார்கள். இந்த ரயில் வேகம் தான் அதற்கு சரியாக வரும் போது கண்ணிமைக்கும் இந்த ரயில் ஒரு பாலத்தை கடந்து சென்றுள்ளது. இதுகுறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

மேட்-இன்-இந்தியா கார்களுக்காக நாட்டை நல்லா யூஸ் பண்ணிக்குறாங

சிட்ரோன் இந்தியா 2025 நான்காவது காலாண்டில் தனது விற்பனையில் சிறப்பான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. முந்தைய காலாண்டுடன் ஒப்பிடுகையில், விற்பனை மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. இந்த வளர்ச்சி, இந்தியாவின் புதிய தயாரிப்புகள், விரிவடைந்த சுற்றுச்சூழல் அமைப்பு மற்றும் ஆப்பிரிக்கா மற்றும் ஆசியான் சந்தைகளுக்கான ஏற்றுமதிக் கிடங்காக இந்தியா விளங்குவதே காரணம் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

300 காரை கூட விற்க முடியாமல் திண்டாடுவது இந்த கம்பெனியா?

இந்தியாவில் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் எல்லாம் சிறப்பான விற்பனையைபெற்று வரும் நிலையில் சில நிறுவனங்கள் தற்போது விற்பனையில் தள்ளாடி வருகிறது.இப்படியாக ஜீப் நிறுவனம் இந்தியாவில் கடந்த நவம்பர் மாதம் 300 வாடிக்கையாளர்களை கூட பெற முடியாமல் திண்டாடியுள்ளது.இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
Advertisement

டாடாவின் 27 வருட உழைப்பு... 10 லட்ச ரூபாயில் இத்தனை கார்களா!

டாடா மோட்டார்ஸ் (Tata Motors), இந்தியாவின் முன்னணி கார் நிறுவனம் என சொன்னால், அது மிகையில்லை. 1998இல் இருந்து கிட்டத்தட்ட 27 வருடங்களுக்கும் மேலாக கார்கள் உற்பத்தி & விற்பனையில் செயல்பட்டுவரும் டாடா நிறுவனம் இன்று இந்தியாவிலேயே அதிக கார்களை விற்பனை செய்யும் நிறுவனங்கள் வரிசையில் மாருதி சுஸுகிக்கு (Maruti Suzuki) அடுத்து 2வது இடத்தை பிடிக்கும் அளவிற்கு வளர்ந்துள்ளது.

இளைஞர்கள் எத்தனை பேரது தூக்கத்தை கெடுக்க போகுதோ!!

பஜாஜ் ஆட்டோ (Bajaj Auto) நிறுவனம் தனது புகழ்பெற்ற பல்சர் 220எஃப் (Pulsar 220F) பைக்கை மேம்படுத்தி, 2026ஆம் ஆண்டுக்கான அம்சங்களுடன் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. அதற்கு முன்னதாக, புதிய பல்சர் 220எஃப் பைக்குகளை ஏற்கனவே ஷோரூம்களுக்கு அனுப்பத் தொடங்கிவிட்டது. அவ்வாறு ஷோரூமுக்கு வந்த இந்த பைக்கின் படங்கள் 'ஆட்டோ டிராவல் டெக்' (Auto Travel Tech) என்கிற யூடியூப் சேனல் மூலமாக நமக்கு கிடைத்துள்ளன.

சேலத்துல இருந்து பெங்களூர் வர வெறும் 30 ரூபாதான் செலவாகுமா!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று கியா கேரன்ஸ் (Kia Carens). இது எம்பிவி (MPV) ரகத்தை சேர்ந்தது ஆகும். இந்த காரின் நடப்பு 2025ம் ஆண்டு நவம்பர் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) காடிவாடி தளத்தில் தற்போது வெளியாகியுள்ளது.

இனி ஷோரூமுக்கு போனீங்கன்னா கண்டிப்பா பைக்கை பார்க்கலாம்!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு பைக் ஆர்வலருக்கும் பஜாஜ் பல்சர் 150 (Bajaj Pulsar 150) ஒரு நன்கு அறிமுகமான பெயர் ஆகும். பலருக்கு, இது முதல் ஸ்போர்ட்டியான மோட்டார்சைக்கிளாக விளங்குகிறது. செயல்திறன்மிக்க பைக்குகள் விலை கொண்டதாக இருக்க வேண்டிய அவசியமில்லை என்பதை நிரூபித்த பைக் இது ஆகும்.

2025ல் இத்தனை கார்கள் வந்துடுச்சா! லிஸ்ட் பெருசா இருக்குதே?

2025ம் ஆண்டு தற்போது நிறைவடையப்போகிறது. விரைவில் 2026ம் ஆண்டு புத்தாண்டு பிறக்கப்போகும் நிலையில் இந்தாண்டு எஸ்யூவி கார்கள் அதிகம் அறிமுகமாகியுள்ளது.இப்படியாக இந்தாண்டு அறிமுகமான முக்கியமான எஸ்யூவி கார்கள் குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.