டூயல் டிஸ்க் பிரேக்ஸ் உடன் புதிய டிவிஎஸ் ரைடர் 125 பைக்!!

இந்தியாவின் முன்னணி மோட்டார்சைக்கிள் தயாரிப்பு நிறுவனமான டிவிஎஸ் மோட்டார் (TVS Motor), தனது புதிய ரைடர் 125 டூயல் டிஸ்க் (Raider 125 Dual Disc) பைக்கை அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய டிவிஎஸ் ரைடர் பைக்கின் விலை டெல்லி எக்ஸ்-ஷோரூம் நிலவரப்படி, SXC DD வேரியண்ட்டிற்கு ரூ.93,800-ல் இருந்தும், TFT DD வேரியண்ட்டிற்கு ரூ.95,600-ல் இருந்தும் துவங்குகின்றன.

பேரனுக்கு வேணும்னு சிஎம் கேட்டாலும் கிடைக்கறது டவுட்!

இந்தியாவில் ஒரு சில கார்கள், குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே விற்பனை செய்யப்படும். சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட மஹிந்திரா பிஇ 6 பேட்மேன் எடிசன் (Mahindra BE 6 Batman Edition) இதற்கு ஒரு உதாரணம். வெறும் 999 பேருக்கு மட்டுமே கிடைக்கும் வகையில், மஹிந்திரா பிஇ 6 பேட்மேன் எடிசன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

அரசாங்க வாகனங்களாக உலா வர புது மஹிந்திரா கார் ரெடி!!

மஹிந்திரா பொலேரோ B8 2025 இந்தியாவில் அறிமுகம். விலை ₹10.3 லட்சத்தில் தொடங்குகிறது. வடிவமைப்பு, எஞ்சின், அம்சங்கள் மற்றும் பாதுகாப்பு விவரங்களை அறிக.

விலையை கேட்டா நீங்களே புக்கிங் போடுவீங்க, புதிய பொலேரோ நியோ!

மஹிந்திரா பொலேரோ நியோ ஃபேஸ்லிஃப்ட் இந்தியாவில் அறிமுகம். மேம்படுத்தப்பட்ட ஸ்டைலிங், தொழில்நுட்பம், வசதிகளுடன் ₹9 லட்சம் முதல். | மஹிந்திரா பொலேரோ நியோ ஃபேஸ்லிஃப்ட் இந்தியாவில் அறிமுகம். மேம்படுத்தப்பட்ட ஸ்டைலிங், தொழில்நுட்பம், வசதிகளுடன் ₹9 லட்சம் முதல்.
Advertisement

1,200 டூவீலர்களை கொத்தா தூக்கிய போலீஸ்!

முன்பெல்லாம் போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு பெரிய அளவில் பிரச்சனைகள் இல்லாமல் இருந்தன. சாலையில் போக்குவரத்து காவலர்கள் பணியில் இருந்தால் மட்டுமே அபராதம் விதிக்கப்படும். ஆனால் தற்போது காலம் மாறி விட்டது. தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால், சாலையில் போக்குவரத்து காவலர்கள் இல்லாவிட்டாலும் கூட, நீங்கள் போக்குவரத்து விதிமுறைகளை மீறினால் அபராதம் விதிக்கப்படும்.

ஜிஎஸ்டி மூலம் நெருக்கடி கொடுத்தாலும் டிரையம்ப் கைவிடல!!

120 ஆண்டுகளுக்கும் மேலான மோட்டார்சைக்கிள் பாரம்பரியம் கொண்ட டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் (Triumph Motorcycles), அதன் பிரபலமான விலை குறைவான பைக்குகளான ஸ்பீடு 400 (Speed 400) மற்றும் ஸ்பீடு டி4 (Speed T4) ஆகியவற்றின் விலைகளைக் குறைப்பதாக அறிவித்துள்ளது. 350சிசி-க்கு மேல் உள்ள மோட்டார்சைக்கிள்களுக்கான ஜிஎஸ்டி (GST) 40% ஆக உயர்ந்துள்ள போதிலும் இந்த விலை குறைப்பு அறிவிக்கப்பட்டு உள்ளது.

வெறும் 8 நாளில் 1.65 லட்சம் கார்களை வித்து தள்ளிய மாருதி!

இந்தியாவில் கடந்த செப்டம்பர் 22ம் தேதியில் இருந்து, நவராத்தி (Navaratri) பண்டிகை தொடங்கியது. அத்துடன் அன்றைய தினத்தில் இருந்துதான் ஜிஎஸ்டி (GST) வரியும் குறைக்கப்பட்டது. இதன் காரணமாக ஏராளமான பொருட்களின் விலை தற்போது அதிரடியாக குறைந்துள்ளது. இதில், கார்கள் மற்றும் டூவீலர்களும் அடங்கும்.

முடி வெட்டுபவராக துவங்கிய வாழ்க்கை.. இப்போ ரேஞ்ச் ரோவர் உடன்

பெங்களூருவைச் சேர்ந்த ரமேஷ் பாபு, சிகையலங்கார நிபுணராகத் தொடங்கி, தற்போது மிகப்பெரிய கார் வாடகை நிறுவனத்தின் உரிமையாளராக மாறியுள்ளார். அவரது ரமேஷ் டூர்ஸ் அண்ட் டிராவல்ஸ் நிறுவனம் தனது சொகுசு கார் சேவையில் புதிதாக 3.2 கோடி ரூபாய் மதிப்புள்ள ரேஞ்ச் ரோவர் LWB காரை இணைத்துள்ளது. இந்த புதிய சேர்த்தல், அவரது நிறுவனத்தின் கார் சேவையை மேலும் பிரகாசமாக்குகிறது.

டிரைவருக்கு காரில் இந்த வசதி இருந்தாலே பாதி பிரச்சனை இல்ல!

இந்தியச் சந்தையில், 10 லட்சம் ரூபாய்க்கும் குறைவான விலையில், ஓட்டுநர் இருக்கையின் உயரத்தை சரிசெய்யக்கூடிய வசதியுடன் பல ஹேட்ச்பேக் (Hatchback), சப்-காம்பாக்ட் எஸ்யூவி (Sub-Compact SUV) மற்றும் செடான் (Sedan) கார்கள் கிடைக்கின்றன. இந்த பட்டியலில் ஹூண்டாய் எக்ஸ்டர், மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் மற்றும் டாடா பன்ச் போன்ற கார்கள் உள்ளன. பொதுவாக, இந்த வசதி உயர்தர கார்களில் வழங்கப்படுகிறது.

வெறும் 6 லட்சத்துக்கு புது எலெக்ட்ரிக் காரா!

இந்திய சந்தையில் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று ரெனால்ட் க்விட் (Renault Kwid). இதன் எலெக்ட்ரிக் வெர்ஷனை விற்பனைக்கு அறிமுகம் செய்யும் பணிகளில் ரெனால்ட் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக ரெனால்ட் க்விட் இவி எலெக்ட்ரிக் காரின் சோதனை ஓட்டம் இந்தியாவில் தற்போது தீவிரமாக நடைபெற்று கொண்டுள்ளதாக 91 வீல்ஸ் தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

ரூ1 லட்சத்திற்கு லாரி சீட்!

லாரி டிரைவர் ஒருவர் தனது லாரிக்கு ரூ1 லட்சம் செலவு செய்து ஏர் சஸ்பென்சன் வசதி கொண்ட சீட்டை பொருத்தியுள்ள வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த அளவிற்கு காஸ்ட்லியான சீட்டை அவர் எப்படி வாங்கினார்? இதன் பின்னால் உள்ள முழுமையான விபரங்களை காணலாம் வாருங்கள்.

இனி யாரும் ஒரு பைசா கூட கட்ட வேணாம்!

இந்தியாவில் ஃபாஸ்டேக் (FASTag) திட்டம், முதன் முதலில் கடந்த 2014ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. தேசிய நெடுஞ்சாலைகளில் டோல்கேட் கட்டணத்தை (Toll Fee) செலுத்த ஃபாஸ்டேக் பயன்படுகிறது. யூபிஐ செயலிகள் (UPI Apps) மற்றும் மை ஃபாஸ்டேக் செயலி (My FASTag App) போன்றவற்றை பயன்படுத்தி, ஃபாஸ்டேக் கார்டை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.
Advertisement

டிசம்பர் 12-13 வேற வேலை எதுவும் வச்சிக்காதீங்க!

2025ம் ஆண்டிற்கான இந்தியா பைக் வீக் நிகழ்ச்சி வரும் டிசம்பர் 12-13ம் தேதி கோவாவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் எல்லாம் செய்யப்பட்டுள்ளது. வழக்கமாக டிவிஎஸ் மோட்டோஸோல் நிகழ்ச்சியும் ஒன்றாக நடக்கும் நிலையில் இந்தாண்டு இரண்டு நிகழ்ச்சிகளையும் தனித்தனியாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

பருத்தி மூட்டை இதுக்கு குடோன்லயே இருந்திருக்கலாம்!

இந்தியாவில் ஃபாஸ்ட் டேக் கார்டு இல்லாமல் பயணம் செய்யும் வாகன ஓட்டிகள் சுங்கசாவடியை கடந்து செல்ல 100 சதவீதம் அபராதம் செலுத்த வேண்டும் என்ற நிலை இருந்தது. இந்நிலையில் இந்த கட்டணத்தை யூபிஐ முறையில் செலுத்தினால் 25 சதவீதம் மட்டுமே அபராதமாக செலுத்தினால் போதும் என புதிய நடைமுறையை மத்திய அரசு அமலுக்கு கொண்டு வந்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

கார்களுக்கு சாலை வரியை உயர்த்திய மாநில அரசு!

ஜிஎஸ்டி வரி குறைப்பில் இந்தியா முழுவதும் வாகனங்களின் விலை கணிசமாக குறைந்துள்ளது. இந்நிலையில் மாநில அரசு வாகனங்களுக்கான சாலை வரியில் அளித்த விலக்கை நிறுத்தி வாகனங்களின் விலையை அதிகரிக்க செய்துள்ளது. இதனால் குறிப்பிட்ட வாகனங்களின் விலை ரூ1 லட்சம் வரை விலை அதிகரிக்கிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

10 லட்சம் பேர் இதை நம்பி வாங்கிட்டாங்க!

இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை கணிசமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக இந்த நிதியாண்டில் அதிக எண்ணிக்கையில் எலெக்ட்ரிக் வாகனங்கள் விற்பனையாகி வரும் நிலையில் 6 மாதத்திலேயே 10 லட்சம் பேர் எலெக்ட்ரிக் காரை வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

ஹோண்டா 2-வீலரின் செப்டம்பர் மாத சேல்ஸ் ரிப்போர்ட்!

ஜப்பானிய இருசக்கர வாகன நிறுவனமான ஹோண்டா 2-வீலர்ஸ் (Honda 2-Wheelers), நடந்து முடிந்த கடந்த செப்டம்பர் மாதத்தில் இந்தியாவிலும், இந்தியாவில் இருந்தும் மொத்தம் 5 லட்சத்து 68 ஆயிரத்து 164 இருசக்கர வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது ஹோண்டா 2-வீலர்ஸின் கடந்த 2024ஆம் ஆண்டு செப்டம்பர் மாத விற்பனையான 5 லட்சத்து 38 ஆயிரத்து 852 யூனிட்களை விட 5.44% (29,312 யூனிட்கள்) அதிகமாகும்.

10 லட்சத்தில் கார் வாங்கும்போது நிறைய பேர் இதை கவனிப்பதில்ல!

இந்தியாவில் பத்து லட்ச ரூபாய்க்கும் குறைவான விலையில் கிடைக்கும் கார்களில் கூட இன்-கேபின் (In-cabin) காற்று சுத்திகரிப்பான் வசதி இப்போது கிடைக்கிறது. இதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால், கியா நிறுவனத்தின் "ஸ்மார்ட் பியூர் ஏர் பியூரிஃபையிங் சிஸ்டம்" (Smart Pure Air Purifying System) ஆனது பிரத்யேகமான ஒன்றாகும். இந்த அம்சத்துடன் விற்கப்படும் கியா சொனெட் கார் பத்து லட்ச ரூபாய்க்குள் வருகிறது.

டாடா நானோ போல் அடிமாட்டு விலையில் புது எலெக்ட்ரிக் கார்!

இந்திய சந்தையில் தற்போது ஏராளமான எலெக்ட்ரிக் கார்கள் (Electric Cars) விற்பனைக்கு கிடைக்கின்றன. இதில், டாடா டியாகோ இவி (Tata Tiago EV) மற்றும் எம்ஜி கோமெட் இவி (MG Comet EV) போன்ற எலெக்ட்ரிக் கார்கள் எல்லாம் மிகவும் விலை குறைவானவை ஆகும்.

இந்தியாவில் ஆடி நிறுவனத்திற்குள் இப்படிப்பட்ட பிரச்சனைகளா!!

ஜெர்மன் சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான ஆடி (Audi), 2025 ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் 3,197 கார்களை விற்பனை செய்துள்ளதாக இன்று அறிவித்துள்ளது. சப்ளை செயினில் ஏற்பட்ட இடையூறுகள் போன்ற புவிசார் அரசியல் நிகழ்வுகள் மற்றும் அந்நிய செலாவணி விகித மாற்றங்கள் காரணமாக சந்தையில் நிலவிய சவாலான சூழலை எதிர்கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
Advertisement

சிஎம் பேரனே நெனச்சாலும் இந்த மாருதி கார இப்ப வாங்க முடியாது!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள கார்களில் ஒன்று மாருதி சுஸுகி இ விட்டாரா (Maruti Suzuki e Vitara). இதுதான் இந்திய சந்தையில் மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ள முதல் எலெக்ட்ரிக் கார் (Electric Car) ஆகும்.

ஹைவேயில் இனி க்யூஆர் கோடு!

இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலைகளில் ஆங்காங்கே க்யூஆர் கோடுகளை நிறுவ மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதை டிஜிட்டல் மற்றும் பிரிண்ட் செய்யப்பட்ட பதாகைகள் மூலமாக மக்களுக்கு பயன்படும் வகையில் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த க்யூஆர் கோடு என்ன செய்யும்? இதனால் என்ன பலன்? விரிவாக காணலாம் வாருங்கள்.

காஷ்மீருக்கு இரயில் விட்டதினால் தான் இதெல்லாம் சாத்தியமாச்சு

ஜம்மு காஷ்மீரின் அனந்தநாகில் உள்ள மாருதி சுஸுகி (Maruti Suzuki) டீலர்ஷிப் ஷோரூமுக்கு சரக்கு ரயிலில் கார்கள் கொண்டுவரப்பட்டு உள்ளன. தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படும் கார்கள் இரயில்கள் மூலமாக டீலர்ஷிப் ஷோரூம்களுக்கு கொண்டு செல்லப்படுவது சமீப காலமாக வழக்கமான ஒன்றாக மாறி வருகிறது.

வெறும் ரூ350க்கு ரயில் முதல் வகுப்பு பெட்டியில் போகலாமா?

நீங்கள் ரயிலில் முதல் வகுப்பு பெட்டியில் பயணிக்க வேண்டும் என நினைத்தால் உங்கள் நினைவிற்கு முதலில் வருவது அதிக காஸ்ட்லியாக இருக்கும் என்பதுதான். ஆனால் வெறும் ரூ350 செலவில் முதல் வகுப்பு பெட்டியில் ஒருவர் 500 கி.மீ பயணித்துள்ளார். இது குறித்த வீடியோவை அவர் வெளியிட்டுள்ளார். இதை இவர் இந்தியாவில் செய்யவில்லை. மியான்மரில் செய்கிறார். இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

வாரத்தில் 7 நாளும் காரை தயாரிக்க மாருதி திட்டம்!

மாருதி நிறுவனத்திற்கு ஜிஎஸ்டி வரி குறைப்பிற்கு பிறகு ஆர்டர்கள் குவிந்துள்ளன. வாகனம் வாங்கும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் ஆர்டர்கள் அதிகரித்துள்ளன. இதனால் அதிக எண்ணிக்கையிலான கார்களை தயாரிக்க அந்நிறுவனம் தற்போது ஞாயிறு அன்று கூட விடுமுறை இல்லாமல் வாகனங்களை தயாரித்து வருவதாக தெரிவித்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.