ஹோண்டாவின் புதிய கார்களை உருவாக்கப்போகும் டாடா டெக்னாலஜீஸ்!

இந்தியாவில் கார் சந்தையில் நீண்ட காலமாக வர்த்தகம் செய்து வந்தாலும் கடும் போட்டியால் குறிப்பிடத்தக்க விற்பனையை பெற முடியாத நிலையில் ஹோண்டா கார் நிறுவனம் உள்ளது. இந்த நிலையில், இந்தியா மற்றும் உலகளாவிய சந்தையில் விற்பனையை வலுப்படுத்தும் திட்டத்தில் ஹோண்டா அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளது. அதன்படி, புதிய தலைமுறை கார்களை உருவாக்குவதற்கான புதிய கட்டமைப்புக் கொள்கை மற்றும் கார் உருவாக்க பொறியியல் பணிகளை மேற்கொள்வதற்கான பணியை இந்தியாவை சேர்ந்த டாடா டெக்னாலஜீஸ் நிறுவனத்திடம் ஒப்படைக்க உள்ளதாக நிக்கெய் ஆசியா (Nikkei Asia) செய்தி வெளியிட்டுள்ளது.

புதிய மஹிந்திரா தார் ஃபேஸ்லிஃப்ட் விரைவில் அறிமுகம்!

ஆஃப்ரோடு எஸ்யூவி பிரியர்களின் மிகச் சிறந்த தேர்வாக உள்ள மஹிந்திரா தார் விரைவில் மீண்டும் சில முக்கிய அப்டேட்டுகளுடன் அறிமுகம் செய்யப்பட உள்ளது. ஏற்கனவே சாலை சோதனைகளுக்கு உட்படுத்தபட்டுள்ள இந்த 3 டோர் தார் எஸ்யூவியின் மேம்படுத்தப்பட்ட மாடல் இந்த மாதமே அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த புதிய பதிப்பு மூலமாக தார் எஸ்யூவியின் வடிவமைப்பிலும், வசதிகளிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் கிடைக்க உள்ளன.

எலெக்ட்ரிக் பைக் மார்க்கெட்டில் முந்திக் கொள்ள ஹீரோ முடிவு

இந்தியாவின் மிகப்பெரிய இருசக்கர வாகன உற்பத்தியாளரான ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம், எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் சந்தையில் நேரடியாக களமிறங்குவதற்கான பணிகளில் தீவிரமாக இறங்கி உள்ளது. அந்நிறுவனத்தின் முதல் எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் வரும் 2027ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஒரேவழி... விற்பனையை தூக்கி நிறுத்த கடைசி ஆயுதத்தை எடுத்த ஓலா

விற்பனையை தூக்கி நிறுத்துவதற்கான தீவிர முயற்சிகளில் ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. அதன்படி, நேரடி விற்பனையில் கவனத்தை குறைத்து, டீலர்கள் மூலமாக விற்பனையை தீவிரப்படுத்த திட்டமிட்டுள்ளது. இதன்மூலம், வாடிக்கையாளர்களுக்கு மிக நெருக்கமான சேவை மற்றும் தொடர்பை ஏற்படுத்திக்கொள்ள நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
Advertisement

ஹோண்டா கார்களுக்கு ரூ.2.45 லட்சம் வரை சலுகை

சுதந்திர தினத்தையொட்டி, இந்த மாதம் ஹோண்டா கார்களுக்கு சிறப்பு சேமிப்புச் சலுகைகள் வழங்கப்படுகின்றன. ஹோண்டா கார்ஸ் இந்தியா தனது அதிகாரப்பூர்வப் பக்கத்தில் அமேஸ், சிட்டி மற்றும் எலிவேட் கார்களுக்கான சிறப்பு ஆஃபர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ரூ.9.99 லட்சத்தில் டாடா நெக்ஸான் CAMO எடிஷன் அறிமுகம்

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் காம்பேக்ட் எஸ்யூவிகளில் ஒன்றான டாடா நெக்ஸான், தொடர்ந்து புதிய வேரியண்ட்டுகள் மற்றும் சிறப்பு எடிஷன்கள் மூலம் அப்டேட் செய்யப்பட்டு வருகிறது. அந்த வரிசையில், பண்டிகை காலத்தில் வாடிக்கையாளர்களை கவரும் வகையில், தற்போது நெக்ஸான் CAMO என்ற ஸ்பெஷல் எடிஷன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய எடிஷன், வழக்கமான நெக்ஸானைவிட வித்தியாசமான தோற்றத்துடன் கூடுதல் தொழில்நுட்ப வசதிகளையும் வழங்குகிறது.

4 வால்வு எஞ்சினுடன் பஜாஜ் என்160 எஸ் பைக் அறிமுகம்!

இந்தியாவில் இளைஞர்கள் மத்தியில் நீண்ட காலமாக பிரபலமாக இருந்து வரும் பல்சர் வரிசையில், பஜாஜ் ஆட்டோ நிறுவனம் புதிய N160 S மற்றும் N160 SS மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. தற்போது 160சிசி பிரிவில் போட்டி அதிகரித்து வரும் நிலையில், புதிய எஞ்ஜின், ரைடிங் மோடுகள், ரைடு பை வயர் த்ராட்டில் கன்ட்ரோல் உள்ளிட்ட பல முக்கிய தொழில்நுட்ப அப்டேட்களுடன் இந்த இரண்டு மாடல்களும் களமிறங்கியுள்ளன.

E20 பெட்ரோலை தொடர்ந்து Bio-CNG... மத்திய அரசு அதிரடி

இந்தியாவில் பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் (E20) கலக்கும் திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வந்த மத்திய அரசு, அடுத்ததாக பயோ சிஎன்ஜி திட்டத்தை செயல்படுத்த தீவிரமாக களமிறங்கி உள்ளது. இதற்காக, கோபர்தன் (Galvanizing Organic Bio-Agro Resources Dhan) எனப்படும் திட்டத்தை நாடு முழுவதும் விரிவுபடுத்தும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும், வாகன எரிபொருள் பயன்பாட்டிலும் பெரிய அளவிலான மாற்று எரிபொருளை பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கும் வாய்ப்பு கிடைக்கும்.

ரூ.99,999 விலையில் புதிய E3 ட்ரியான் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்!

இந்தியாவில் குறைந்த விலையில் அதிக ரேஞ்ச் தரும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கான போட்டி தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வரிசையில், பெங்களூரை சேர்ந்த E3 மொபிலிட்டி நிறுவனம் தனது புதிய ட்ரியான் (Trion) எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு ரூ.99,999 ஆரம்ப எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஜூலையில் அதிகம் விற்பனையான இந்தியாவின் டாப்-10 கார்கள்!

இந்திய பயணிகள் வாகன சந்தை 2026 ஜூலை மாதத்தில் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. உற்பத்தியாளர்களிடமிருந்து டீலர்களுக்கு அனுப்பப்பட்ட கார்கள் கடந்த மாதம் 4.7 லட்சத்தை தாண்டி புதிய சாதனையை பதிவு செய்துள்ளன. இதனுடன், ஜூலை மாதத்தில் அதிகம் விற்பனையான டாப்-10 கார்கள் பட்டியலும் வெளியாகியுள்ளது.

கியா சொரென்டோ எஸ்யூவி பற்றிய 10 முக்கிய விஷயங்கள்!!

பிரிமீயம் அம்சங்களுடன் கூடிய எஸ்யூவி மாடல்களால் வாடிக்கையாளர்களை வசியம் செய்த கியா மோட்டார் நிறுவனம் அடுத்து முற்றிலும் பிரிமீயம் ரக எஸ்யூவி மாடலை இந்தியாவில் களமிறக்க ஆயத்தமாகி வருகிறது. வரும் செப்டம்பர் 4ந் தேதி இந்த புதிய மாடல் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.

ஃபோக்ஸ்வேகன் விர்ட்டஸ் காரின் லிமிடேட் எடிசன் மாடல் அறிமுகம்

இந்தியாவில் மிட்சைஸ் செடான் கார் மார்க்கெட்டில் ஃபோக்ஸ்வேகன் விர்ட்டஸ் (Volkswagen Virtus) காருக்கு நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இந்த நிலையில், இந்த கார் இந்தியாவில் அறிமுகமாகி நான்கு ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, தனித்துவமான கூடுதல் சிறப்பம்சங்களுடன் கூடிய ஆனிவர்சரி எடிசன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த புதிய லிமிடெட் எடிஷன் மாடலுக்கு எக்ஸ்ஷோரூம் விலையாக ரூ.19.20 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Advertisement

இன்சூரன்ஸ் இல்லாத வாகனங்களுக்கு இனி பெட்ரோல் கிடைக்காதா?!

இந்தியாவில் வாகன இன்சூரன்ஸ் இல்லாமல் சாலைகளில் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வரும் நிலையில், அதைக் கட்டுப்படுத்த உச்சநீதிமன்றம் முக்கியமான பரிந்துரையை முன்வைத்துள்ளது. அதாவது, காலாவதியாகாத மூன்றாம் தரப்பு (Third-Party) இன்சூரன்ஸ் இல்லாத வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் விற்பனையை கட்டுப்படுத்தும் சாத்தியம் குறித்து முன்னோடித் திட்டம் ஒன்றை தயாரிக்குமாறு மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதிய ஏத்தர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் பெயர் வெளியானது

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்க திட்டமிட்டுள்ளோர் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள குறைவான விலை ஏத்தர் ஸ்கூட்டரின் பெயர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக EL01 என்ற குறியீட்டுப் பெயரில் சோதனை செய்யப்பட்டு வந்த இந்த புதிய குடும்ப பயன்பாட்டுக்கான எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு ஏத்தர் கோனார்க் (Ather Konarc) என்று பெயரில் விற்பனைக்கு வர இருக்கிறது. இதனை ஏத்தர் எனெர்ஜி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி தருண் மேத்தா எக்ஸ் தளத்தின் மூலமாக டீசர் வீடியோவுடன் வெளியிட்டுள்ளார். "ஒரு புதிய பயணத்தின் தொடக்கம்" என்ற வாசகத்துடன் இந்த புதிய டீசர் மற்றும் பெயரை அவர் வெளியிட்டுள்ளார்.

புதிய மஹிந்திரா ஸ்கார்பியோ என் ஃபேஸ்லிஃப்ட் அறிமுகம்

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் எஸ்யூவிகளில் ஒன்றான மஹிந்திரா ஸ்கார்பியோ N தற்போது கூடுதல் சிறப்பம்சங்களுடன் 2026 மாடலாக அப்டேட் செய்யப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வெளிப்புற வடிவமைப்பில் பெரிய மாற்றங்கள் இல்லாவிட்டாலும், வாடிக்கையாளர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பல வசதிகளை மஹிந்திரா நிறுவனம் இந்த ஃபேஸ்லிஃப்ட் மாடலில் சேர்த்துள்ளது. இந்த புதிய மாடலுக்கு ஆரம்ப விலையாக ரூ.13.69 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

E20 பெட்ரோல் குறித்து அரசுக்கு சியாம் எழுதிய கடிதம் வாபஸ்?

E20 பெட்ரோல் தரம் குறித்து கடந்த சில வாரங்களாக வாகன உரிமையாளர்கள் மத்தியில் பல்வேறு சந்தேகங்களும் விவாதங்களும் எழுந்து வருகின்றன. குறிப்பாக, E20 பெட்ரோல் நீண்டகால பயன்பாட்டில் எஞ்சினுக்கு பாதிப்பு ஏற்படுத்துமா, பழைய வாகனங்களில் செயல்திறன் குறையுமா என்ற கேள்விகள் தொடர்ந்து பேசப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், E20 எரிபொருள் தரம் தொடர்பாக மத்திய அரசுக்கு சியாம் என்று அழைக்கப்படும் இந்திய வாகன தயாரிப்பாளர்கள் கூட்டமைப்பு (SIAM) எழுதிய கடிதம் வெளியாகி பெரும் கவனத்தை ஈர்த்தது. ஆனால், அந்தக் கடிதத்தை சியாம் அமைப்பு திடீரென திரும்பப் பெற்றதுடன், E20 பெட்ரோல் பயன்பாட்டுக்கு தங்களது முழு ஆதரவு இருப்பதாக விளக்கம் அளித்துள்ளது. இந்த திடீர் திசை மாற்றம் வாகன உரிமையாளர்கள் மத்தியில் மேலும் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

வாகன மோதலை தவிர்க்கும் வி2வி தொழில்நுட்பம் கட்டாயமாகிறது?

சாலை விபத்துக்களை பெருமளவு குறைக்கும் நோக்கில் புதிய பாதுகாப்பு தொழில்நுட்பத்தை மத்திய அரசு முன்மொழிந்துள்ளது. கார், பைக், மட்டுமின்றி, பஸ், டிரக் உள்ளிட்ட அனைத்து வாகனங்களிலும் V2V என்று குறிப்பிடப்படும் இந்த வாகனங்களுக்கு இடையிலான எச்சரிக்கை தகவல் பரிமாற்றத் தொழில்நுட்பத்தை கட்டாயமாக பொருத்தப்பட வேண்டும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் வரைவு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

5 ஆண்டுகளுக்குள் 8 லட்சம் கார்கள்.. டாடா பன்ச் அசத்தல்!

இந்தியாவின் மைக்ரோ எஸ்யூவி என்ற சிறிய கார் பிரிவில் டாடா பன்ச் முக்கிய தேர்வாக இருந்து வருகிறது. மாத விற்பனையில் தொடர்ந்து கலக்கலான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்து வரும் டாடா பன்ச் கார் தற்போது ஒட்டுமொத்தமான விற்பனையில் புதிய சாதனையை படைத்துள்ளது. ஆம், கடந்த 2021ம் ஆண்டு அக்டோபரில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த கார் வெறும் 5 ஆண்டுகளுக்குள் 8 லட்சம் யூனிட்டுகள் விற்பனையாகி புதிய மைல்கல்லை கடந்துள்ளது. மிகக் குறுகிய காலத்தில் இந்த சாதனையை எட்டிய எஸ்யூவிகளில் ஒன்று என்ற பெருமையை இந்த எஸ்யூவி பெற்றிருக்கிறது.

ஆகஸ்டில் இந்தியாவில் அறிமுகமாகும் புதிய பைக், ஸ்கூட்டர்கள்!

பண்டிகை கால சீசன் துவங்க இருக்கும் நிலையில், இருசக்கர வாகனம் வாங்க திட்டமிட்டுள்ளோருக்கு இனி மிகவும் பரபரப்பான மாதமாக இருக்கப் போகிறது. எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் முதல் உயர் செயல்திறன் கொண்ட ஸ்போர்ட்ஸ் பைக்குகள் வரை பல புதிய இருச்சகர வாகன மாடல்கள் இந்திய சந்தையில் அறிமுகமாக உள்ளன.

விற்பனையில் முதலிடத்தை பிடித்து புதிய வரலாறு படைத்த டிவிஎஸ்

தமிழ்நாட்டை சேர்ந்த டிவிஎஸ் நிறுவனம் கடந்த மாத மொத்த விற்பனையில் புதிய வரலாறு படைத்துள்ளது. நீண்ட காலமாக நாட்டின் மிகப்பெரிய இருசக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனங்களாக முதல் இரண்டு இடங்களில் இருந்த ஹீரோ மற்றும் ஹோண்டா நிறுவனங்களை பின்னுக்குத் தள்ளி பெரிய அளவிலான வித்தியாசத்தில் முதலிடத்தை பிடித்து அசத்தி உள்ளது.
Advertisement

ரூ.1 லட்சம் பட்ஜெட்டில் வரும் ஏத்தர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

இந்திய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சந்தையில் முன்னோடி நிறுவனமான ஏத்தர் இதுவரை இளைஞர்களை கவரும் ஸ்போர்ட்டியான வகை மின்சார ஸ்கூட்டர்களை களமிறக்கி வந்தது. முதல்முறையாக அதிக வாடிக்கையாளர் வட்டத்தை கவரும் விதமாக, குறைவான பட்ஜெட்டில் EL01 என்ற பெயரில் புதிய குடும்ப பயன்பாட்டுக்கான ஸ்கூட்டர் மாடலை களமிறக்க உள்ளது.

நம்பகமான டாப்-5 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்

இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சந்தை அதீத வளர்ச்சியை நோக்கி முன்னேறி வருகிறது. கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் மின்சார இருசக்கர வாகன விற்பனை 2 லட்சத்தை கடந்து புதிய மைல்கல்லை எட்டி உள்ளது. வாடிக்கையாளர்கள் தற்போது ரேஞ்ச், விலை மட்டுமல்லாமல் வாங்கப்போகும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பிராண்டு மீதான நம்பகத்தன்மை, சர்வீஸ் நெட்வொர்க், பேட்டரி வாரண்டி, நவீன தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் மறுவிற்பனை மதிப்பு உள்ளிட்ட பல முக்கிய அம்சங்களை பார்த்துத்தான் வாங்குகின்றனர்.

புதிய மைல்கல்லை கடந்த மின்சார இருசக்கர வாகன விற்பனை!

இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கான டிமான்ட் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த ஜூலை மாதத்தில் மின்சார இருசக்கர வாகனங்களின் மாத விற்பனை முதல்முறையாக 2 லட்சம் யூனிட்டுகளை கடந்து புதிய மைல்கல்லை எட்டி உள்ளது.

கியா சொரென்டோ 7 சீட்டர் எஸ்யூவிக்கு புக்கிங் துவங்கியது!

கியா மோட்டார்ஸ் நிறுவனம் தனது முதல் ஹைப்ரிட் எஸ்யூவியை மிக விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வர இருப்பதை அதிகாரப்பூர்வமாக இன்று உறுதி செய்துள்ளது. 7 பேர் செல்லும் இருக்கை வசதி கொண்ட இந்த புதிய மாடலின் டீசரை இன்று கியா மோட்டார்ஸ் வெளியிட்டுள்ளதுடன், இந்தியாவில் புக்கிங்கையும் அதிகாரப்பூர்வமாக துவங்கியுள்ளது.

விற்பனையில் இந்தியாவின் டாப்-10 கார் நிறுவனங்கள்

நாட்டின் கார் விற்பனை இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த ஜூலையில் புதிய உச்சத்தை தொட்டு சாதனை படைத்துள்ளது. கடந்த மாதம் மட்டும் 4.7 லட்சம் பயணிகள் வாகனங்கள் டீலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இது கடந்த ஆண்டு ஜூன் மாதத்துடன் ஒப்பிடும்போது, 33 சதவீதம் உயர்வு கண்டுள்ளது. வழக்கம்போல் மாருதி சுஸுகி கார் நிறுவனம் மிகப்பெரிய வித்தியாசத்துடன் முதலிடத்தை தக்கவைத்துள்ளது.