ஹோண்டாவின் ADV160 அட்வென்ச்சர் ஸ்கூட்டர் பார்வைக்கு வந்தது!
ஆட்டோமொபைல்
- 3 month, 1 day ago
இந்தியாவில் பிரீமியம் ஸ்கூட்டர் சந்தை கடந்த சில ஆண்டுகளாக வேகமாக வளர்ந்து வருகிறது. குறிப்பாக ஸ்போர்ட்டி தோற்றம் மற்றும் அதிக திறன் கொண்ட மேக்ஸி ஸ்கூட்டர்களுக்கு இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த நிலையில், நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட Honda ADV160 மேக்ஸி ஸ்கூட்டரை ஹோண்டா நிறுவனம் இன்று நடந்த நிகழ்ச்சியில் இந்தியாவில் முதல் முறையாக காட்சிப்படுத்தியுள்ளது. இதனால் இந்த ஸ்கூட்டர் மிக விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு வர இருக்கிறது.