ரெண்டரை கோடி ரூபா கார்ல போனது அவங்களா!

இந்தியாவில் கடந்த சில வருடங்களாக செடான் ரக கார்களின் (Sedan Cars) விற்பனை மிகவும் மந்தமாக இருந்து வருகிறது. ஆனால் இந்தியாவின் பிரபலமான மனிதர்கள், குறிப்பாக திரையுலக நட்சத்திரங்கள் மற்றும் தொழில் அதிபர்கள் போன்றோர், செடான் ரக கார்களில் பயணம் செய்வதைதான் அதிகம் விரும்புகின்றனர்.

ரூ1 லட்சம் கம்மி விலையில் இந்த காரை புக் பண்ணலாம்!

டாடா நிறுவனம் தனது ஹாரியர் இவி காரின் புக்கிங்கை அதிகாரப்பூர்வமாக துவங்கியுள்ளது. இந்த கார் ரூ21.49 லட்சம் என்ற விலையில் அறிமுகமாகியுள்ள நிலையில் இந்த கார் தான் எலெக்ட்ரிக் காரில் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட காராக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த கார் குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

ஹூண்டாய் கார் ஷோரூம்களில் கூட்டம் ரொம்ப குறைஞ்சிடுச்சு!!

ஹூண்டாய் (Hyundai), தென்கொரியாவை சேர்ந்த உலகளவில் பிரபலமான கார் உற்பத்தி நிறுவனம். இந்தியாவில் மாருதி சுஸுகிக்கு அடுத்து கார்கள் விற்பனையில் 2வது இடத்தை பிடித்துவந்த ஹூண்டாய் நிறுவனத்திற்கு கடந்த சில மாதங்களாக மஹிந்திரா (Mahindra) நிறுவனம் பெரிதும் ஆட்டம் காட்டி வருகிறது. அதாவது, கார்கள் விற்பனையில் ஹூண்டாயை முந்தி மஹிந்திரா கடந்த சில மாதங்களாக 2வது இடத்தை தனதாக்கி வருகிறது. இந்த நிலையில், ஹூண்டாய் நிறுவனம் நடந்து முடிந்த கடந்த ஜூன் மாதத்தில் விற்பனை செய்த கார்கள் எண்ணிக்கை குறித்த விபரங்கள் வெளியாகி உள்ளன. அவற்றை பற்றி இனி இந்த தொகுப்பில் காணலாம்.

தினம் 526 பேர் இந்த காரை வாங்கியிருக்காங்க!

ஹூண்டாய் நிறுவனம் தனது கிரெட்டா எஸ்யூவி காரை கடந்த ஜூன்மாதம் விற்பனை செய்து இந்தியாவில் சிறப்பாக விற்பனையாகும் பயணிகள் காராக மாற்றியுள்ளது. இந்த கார் விற்பனைக்கு அறிமுகமாகி கடந்த மாதத்துடன் சரியாக 10 ஆண்டுகள் ஆகும் நிலையில் இந்த மகுடத்தை அந்நிறுவனம் பிடித்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
Advertisement

டாடாவின் கோட்டையில் ஓட்டையை போட்ட 2 நிறுவனங்கள்!

இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகன மார்கெட் மிகப்பெரிய வளர்ச்சியை சந்தித்து வருகிறது தற்போது வரை தாடாட நிறுவனம் தான் அதிகமான எலெக்ட்ரிக் வாகனங்களை இந்திய மார்கெட்டில் விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில் தற்போது அதன் சாம்ராஜ்ஜியத்தை அழிக்க 2 நிறுவனங்கள் உருவெடுத்துள்ளது கடந்த ஜூன் மாத விற்பனை பார்க்கும் போது இது நமக்கு தெளிவாக தெரிகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

அப்பா அரசியல்வாதியாக இருந்தாலும் சொந்தமாக கார் வாங்கிய மகன்!

சினிமா (Cinema) பிரபலங்கள் மற்றும் அரசியல்வாதிகளின் வாரிசுகள் புதியதாக விலையுயர்ந்த கார்களை வாங்கினாலே அது அவர்களது பெற்றோர்கள் வாங்கி கொடுத்ததாக இருக்கும் என்றே நாம் நினைக்கிறோம். அந்த வகையில், மலையாள திரைப்பட நடிகரும், கேரளாவின் ஒரேயொரு பாஜக எம்பி-யுமான சுரேஷ் கோபி (Suresh Gopi) அவர்களின் மகன் மாதவ் சுரேஷ் (Madhav Suresh) சமீபத்தில் ஃபோக்ஸ்வேகன் கோல்ஃப் ஜிடிஐ (Volkswagen Golf GTI) காரை வாங்கிய போதும் இந்த காரை நிச்சயமாக சுரேஷ் கோபி தான் வாங்கி கொடுத்திருப்பார் என நம்மில் பலர் நினைத்தோம். ஆனால், இந்த ஃபோக்ஸ்வேகன் காரை தனது சொந்த முயற்சியில் வாங்கியுள்ளதாக மாதவ் சுரேஷ் தனது சமீபத்திய நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

லாரி டிரைவர்களை கேட்டு பாருங்க... இதை செய்றதுதான் கஷ்டம்!!

பொதுவாகவே கமர்ஷியல் வாகனங்களை ஓட்டுவது என்பது மற்ற கார், வேன்களை ஓட்டுவதை காட்டிலும் கடினமானது என்பதை நான் கூற வேண்டியது இருக்காது என நினைக்கிறேன். ஒருமுறையாவது பெரிய அளவிலான கனரக லாரி அல்லது பேருந்தை ஓட்டியவர்களுக்கு அந்த கஷ்டம் தெரியும். பொதுவாக, 4-சக்கர வாகனத்தை ஓட்டும்போது டிரைவருக்கு அதிக பிளைண்ட் ஸ்பாட் (Blind Spot) பகுதிகள் இருக்கும். அதாவது, காரில் இருந்து தொலைவில் உள்ள பகுதிகளை கூட பார்க்க முடியும், ஆனால் காருக்கு முன்னாலோ அல்லது பின்னாலோ நெருக்கமாக இருக்கும் பகுதியை பார்க்க முடியாது. இதனை தான் டிரைவர்களால் பார்க்க முடியாத பிளைண்ட் ஸ்பாட் என்கின்றனர்.

குறைவான விலையில் வரும் ராயல் என்பீல்டு பைக்!

ராயல் என்பீல்டு (Royal Enfield) நிறுவனத்தின் நடப்பு 2025ம் ஆண்டு ஜூன் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) தற்போது வெளியாகியுள்ளது. இதன்படி பார்த்தால், ராயல் என்பீல்டு நிறுவனம் நடப்பு 2025ம் ஆண்டு ஜூன் மாதம், இந்தியாவின் உள்நாட்டில், 76,957 பைக்குகளை விற்பனை செய்து அசத்தியுள்ளது.

30 நாளில் 4.29 லட்சம் வண்டிகளை வித்துட்டாங்க!

ஹோண்டா நிறுவனம் கடந்த ஜூன் மாதம் மட்டும் மொத்தம் 4.29 லட்சம் வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இந்நிறுவனம் கடந்த காலாண்டிற்கான விற்பனை விபரங்களையும் வெளியிட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

வாங்கும் கார் கூட சீனா கம்பெனி தானா? கிரிக்கெட் வீரரின் கார்

சனத் ஜெயசூர்யா (Sanath Jayasuriya), பிரபலமான இலங்கை கிரிக்கெட் வீரர். க்ளென் மெக்ராத், அனில் கும்பிளே போன்ற டாப் கிளாஸ் பவுலர்கள் விளையாடிய காலக்கட்டத்தில் அதிரடி மட்டை பந்து வீரராக வலம்வந்தவர். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்தவர். பதவி காலம் முடிந்த பின் மீண்டும் கிரிக்கெட்டுக்கு வந்த ஜெயசூர்யா, தற்சமயம் இலங்கை கிரிக்கெட் ஆண்கள் அணியின் தலைமை பயிற்சியாளராக உள்ளார். இவரது தலைமைக்கு பிறகே உள்நாட்டு கலவரங்களினால் பாதிக்கப்பட்டு இருந்த இலங்கை கிரிக்கெட் அணி மெல்ல மெல்ல மீண்டுவர ஆரம்பித்துள்ளது. சமீபத்தில், இந்தியாவிற்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரை இலங்கை வென்றது சனத் ஜெயசூர்யா தலைமை ஏற்ற பின்பே ஆகும்.

பத்தோட பதினொன்னா மெட்ரோல வந்த மன்னர் குடும்பத்து வாரிசு!

இந்தியாவை சேர்ந்த செல்வந்தர்கள், மிகவும் விலை உயர்ந்த சொகுசு கார்களில்தான் (Luxury Cars), பெரும்பாலும் பயணம் செய்வார்கள். எனவே சாமானிய மக்கள் பயணம் செய்யும் பஸ்கள் (Buses) மற்றும் மெட்ரோ ரயில்கள் (Metro Trains) போன்ற வாகனங்களில் எல்லாம் அவர்களை காண்பது என்பது மிகவும் அரிதான ஒரு விஷயம்.

கச்சா எண்ணெய்க்காக தான் இஸ்ரேல்- ஈரான் போர் நிறுத்தமா?

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை கடந்த 1 வாரத்தில் மட்டும் 12% குறைந்துள்ளது. ஆனால், சில வாரங்களுக்கு மும்பு வரையில் கச்சா எண்ணெய்யின் விலை எந்த அளவிற்கு அதிகரிக்க போகிறதோ என இந்தியா உள்பட மொத்த உலக நாடுகளும் பயத்தில் இருந்தன. இதற்கு காரணம், மத்திய கிழக்கு நாடுகளில் நடைபெற்ற தொடர்ச்சியான போர்கள் ஆகும். கச்சா எண்ணெய்களை உலக நாடுகளுக்கு வழங்குவதில் மத்திய கிழக்கு நாடுகளின் பங்களிப்பு முக்கியமானதாக உள்ளது. இதனால், அத்தகைய பகுதிகளில் போர் உருவானதும், கச்சா எண்ணெய் கிடைப்பதில் பிரச்சனை ஏற்பட்டு, அவற்றின் விலைகள் அதிகரிக்கப்படுமோ என பல நாட்டு அரசாங்கங்கள் பயந்தன.
Advertisement

இந்த காரை ஸ்கிராப்பிற்கு ஏன் போடனும்? வைரலாகும் ட்வீட்!

டில்லியில் பழைய கார்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் 15 ஆண்டுகளுக்கு முன்னர் வாங்கப்பட்ட கார் ஒன்றை ஒருவர் மிக குறைவாக பயன்படுத்தி தற்போது உள்ள மாசு கட்டுப்பாடுகளுக்கு ஏற்ப கார் இருந்தும் அதை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த பதிவு வைரலாக பரவி வருகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

இனி ரோட்ல ஒரு பழைய வண்டி கூட ஓட கூடாது!

இந்தியாவின் காற்று மாசுபாடு பிரச்னைக்கு பெட்ரோல் (Petrol) மற்றும் டீசல் (Diesel) மூலமாக இயங்கும் பழைய வாகனங்கள் மிகவும் முக்கியமான காரணமாக கருதப்படுகின்றன. எனவே பழைய பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களின் பயன்பாட்டை குறைப்பதற்கு தேவையான பல்வேறு முயற்சிகளை அரசு மேற்கொண்டு வருகிறது.

27 கி.மீ மைலேஜ், 6 சீட்டர், வெறும் ரூ5.70 லட்சம் தான் விலை!

மாருதி சுஸூகி நிறுவனம் வேன் செக்மெண்டில் ஈக்கோ என்ற வாகனத்தை மட்டுமே விற்பனை செய்து வருகிறது. இந்த வாகனம் விற்பனையில் சிறப்பாக இருந்து வருகிறது. கடந்த மே மாதம் 9340 வாகனங்கள் விற்பனையாகியுள்ளது. மக்கள் இந்த வாகனத்தை அதிகம் விரும்பி வாங்குவதற்கான காரணம் என்ன? அப்படி இந்த காரில் என்னஸ்பெஷல் இருக்கிறது? விரிவான விபரங்களை காணலாமம் வாருங்கள்.

ஸ்பிளெண்டர் பைக்கில் லடாக் வரை சென்றவருக்கு கிடைத்த பரிசு!!

ஹீரோ ஸ்பிளெண்டர் (Hero Splendor) பைக்கை நம்மில் பலர் அதிகமாக பயன்படுத்துகிறோம். சாலையில் எப்போதுமே குறைந்தது ஒரு ஸ்பிளெண்டர் பைக்கை ஆவது நிச்சயம் பார்க்க முடிகிறது. அந்த அளவிற்கு பிரபலமான பைக்காக இருப்பினும், ஸ்பிளெண்டர் பைக்கை நீண்ட தொலைவு பயணங்களுக்கு அதிக பேர் பயன்படுத்துவதில்லை. ஏனெனில், குறுகிய தூர பயணங்களுக்கு ஏற்ற மாதிரி தான் ஸ்பிளெண்டர் பைக்குகளை ஹீரோ மோட்டோகார்ப் உருவாக்குகிறது. ஏனெனில், அப்போதுதான் குறைவான விலையில் இந்த பைக்கை விற்பனை செய்ய முடியும். ஆனால், அப்படிப்பட்ட ஸ்பிளெண்டர் பைக்கை இங்கு ஒருவர் லடாக் வரையில் ஓட்டி சென்றுள்ளார்.

மாருதிக்கு போன மாச விற்பனை இப்படி டல் ஆகிடுச்சே!

மாருதி நிறுவனம் கடந்த ஜூன் மாத விற்பனை விபரங்களை வெளியிட்டுள்ளது. இதில் இந்நிறுவனம் விற்பனையில் வீழ்ச்சியை சந்தித்துள்ளது தெரிய வந்துள்ளது. மாருதி நிறுவனம் இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையிலான வாகனங்களை விற்பனை செய்தாலும் கடந்தாண்டு மற்றும் கடந்த மாத விற்பனையை ஒப்பிடும் போது மிக குறைவான எண்ணிக்கையில் வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

இந்த கம்பெனி 91 நாளில் 12 லட்சம் வண்டிகளை வித்திருக்காங்க!

டிவிஎஸ் நிறுவனம் கடந்த 91 நாளில் 12.77 லட்சம் வாகனங்களை தயாரித்துள்ளது. இந்நிறுவனம் இதன் மூலம் புதிய சாதனையை பதிவு செய்துள்ளது. இந்த நிறுவனம் கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டு விற்பனைய விட 17 சதவீதம் விற்பனை அதிகரித்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

மனைவிக்கு கிரெட்டா காரை பரிசளித்த திரைப்பட இசையமைப்பாளர்!!

ஹூண்டாய் கிரெட்டா (Hyundai Creta), இந்தியாவில் மிக பிரபலமான எஸ்யூவி (SUV) ரக கார். இதற்கு போட்டியாக மாருதி சுஸுகி (Maruti Suzuki), டாடா மோட்டார்ஸ் (Tata Motors) போன்ற மற்ற கார் நிறுவனங்கள் புதியது புதியதாக எஸ்யூவி கார்களை அறிமுகம் செய்தாலும், அவற்றின் விற்பனை சில காலத்திற்கு மட்டுமே கிரெட்டாவுக்கு இணையாக உள்ளது; அதன்பின் குறைந்துவிடுகிறது. ஆனால், ஹூண்டாய் கிரெட்டா கார்களின் விற்பனை மட்டும் எப்போதுமே டாப் கியரில் உள்ளது. இதற்கு முக்கிய காரணம், கிரெட்டா காரை அவ்வப்போது ஹூண்டாய் நிறுவனம் மறக்காமல் அப்கிரேட் செய்வது ஆகும்.

மார்க்கெட்ட தலைகீழா புரட்டி போட வரும் விலை குறைவான இவி!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள எலெக்ட்ரிக் கார்களில் ஒன்று கியா கேரன்ஸ் க்ளாவிஸ் இவி (Kia Carens Clavis EV). வெகு விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ள இந்த எலெக்ட்ரிக் காரின் டீசர் வீடியோவை (Teaser Video) கியா நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது.
Advertisement

காரை விட டிராக்டர் தான் அதிகமா வித்திருக்குது!

மஹிந்திரா நிறுவனம் கடந்த ஜூன் மாதம் மட்டும் 47 ஆயிரம் வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது கடந்தாண்டை விட 18 சதவீதம் வரை விற்பனை வளர்ச்சியடைந்துள்ளது. இதன்படி இந்நிறுவனம் வெளியிட்டுள்ள விற்பனை விபரங்களை காணலாம்.

புதிய ஹீரோ விடா விஎக்ஸ்2 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்!!

ஹீரோ மோட்டோகார்ப் (Hero Motocorp) நிறுவனத்தின் கீழ் செயல்படும் விடா (Vida) நிறுவனத்தில் இருந்து பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் அதன் 2வது எலக்ட்ரிக் ஸ்கூட்டர் (Electric Scooter) விஎக்ஸ்2 (VX2) என்கிற பெயரில் அறிவிக்கப்பட்டது போல் ஜூலை 1ஆம் தேதியான இன்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எதிர்பார்த்தப்படி, வெறும் ரூ.59 ஆயிரத்து 490 என்கிற குறைவான விலையில் வாங்கக்கூடியதாக விடா வி.எக்ஸ்2 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலையில் BaaS திட்டத்தின்படி பேட்டரி இல்லாமல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் கிடைக்கும். புதிய விடா விஎக்ஸ்2 எலக்ட்ரிக் ஸ்கூட்டரை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் காணலாம்.

150கிமீ தொலைவுக்கு சார்ஜ் போடனுமே என்ற பயம் இல்லாம ஓட்டலாம்!

ஏத்தர் எனர்ஜி (Ather Energy) நிறுவனத்தில் இருந்து கடந்த சில வருடங்களாகவே எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் (Electric Scooters) விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. ஆனால், இந்த நிறுவனம் குறைந்த விலையில் எல்லாரும் வாங்கக்கூடிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்தது கடந்த 2024ஆம் ஆண்டில்தான். 2024 ஏப்ரல் மாதத்தில் 'ஃபேமலி ஸ்கூட்டர்' என்கிற அடைமொழி உடன் ரிஸ்டா எலக்ட்ரிக் ஸ்கூட்டரை ஏத்தர் களமிறக்கியது. அதனை தொடர்ந்து, ரிஸ்டா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை முன்பதிவு செய்த கஸ்டமர்களுக்கு டெலிவிரி கொடுக்கும் பணிகள் கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் துவங்கப்பட்டன. அப்போதில் இருந்து ஏத்தர் எனர்ஜியின் விற்பனையில் ரிஸ்டா முக்கிய பங்கு வகித்து வருகிறது.

இவி காரை கரெண்ட் செலவே இல்லாம சார்ஜ் போட இப்படி ஒரு வழியா?

இந்தியாவில் இவி பயன்பாடு மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. இந்நிலையில் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குபவர்கள் எலெக்ட்ரிக் வாகனங்களில் சார்ஜ் போட்டு பயணித்தால் பெட்ரோல் செலவை விட செலவு குறைவாக இருக்கும் என கருதுகின்றனர். ஆனால் ஒரு படி மேலே சென்று நீங்கள் வீட்டின் மொட்டை மாடியில் சோலார் பேனல் அமைத்துவிட்டால் அந்த செலவையும் இல்லாமல் செய்யலாம் என உங்களுக்கு தெரியுமா?

டாடா நிறுவனத்தை கருவேப்பிலை மாதிரி தூக்கி எறிந்த இந்தியர்கள்

2025ம் ஆண்டின் ஜூன் மாதம் முடிவடைந்து, ஜூலை மாதத்தில் நாம் காலடி எடுத்து வைத்துள்ளோம். இந்த தருணத்தில், நடப்பு 2025ம் ஆண்டு ஜூன் மாதத்திற்கான வாகன நிறுவனங்களின் சேல்ஸ் ரிப்போர்ட்கள் (Sales Reports) தொடர்ச்சியாக வெளி வந்து கொண்டுள்ளன. இந்த வரிசையில், இந்தியாவை சேர்ந்த டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனத்தின் சேல்ஸ் ரிப்போர்ட்டும் வெளி வந்துள்ளது.