நடிகர்களாக இருந்தாலும் தந்தை- மகன் ஒரு காரையும் விட்றது இல்ல

துல்கர் சல்மான் (Dulquer Salmaan), பிரபல மலையாள நடிகர் என்பதும், முன்னணி நடிகர் மம்முட்டி (Mammoooty) அவர்களின் மகன் என்பதும் நம் எல்லாருக்குமே தெரிந்த விஷயம். நடிப்பது மட்டுமின்றி, தந்தையை போன்று கார் & பைக்குகளை வாங்குவதையும் துல்கர் சல்மான் மிகவும் விரும்பக்கூடியவர். மார்க்கெட்டுக்கு புதியதாக எதாவது பிரபலமான கார் வந்தால், அதனை இந்த தந்தை-மகன் ஜோடி எப்படியாவது உடனே வாங்கிவிடுவார்கள் என்பதை பலமுறை பார்த்துள்ளோம். இதற்காகவே, '369' என்கிற பெயரில் ஒரு கேரேஜை இவர்கள் வைத்துள்ளனர். பிரம்மாண்டமான இந்த கேரேஜில் பழமையான கிளாசிக் கார்களில் இருந்து, லேட்டஸ்ட் எலக்ட்ரிக் கார்கள் (Electric Cars) வரையில் உள்ளன.

10 கோடி ரூபா காரை வாங்கிய இளம் தொழில் அதிபர்!

இந்தியா உள்பட உலகின் பல்வேறு நாடுகளிலும் மிகவும் பிரபலமாக உள்ள கார்களில் ஒன்று லம்போர்கினி ரெவல்டோ (Lamborghini Revuelto). இந்த காரின் எக்ஸ்-ஷோரூம் விலையே (Ex-Showroom Price) 9 கோடி ரூபாய் ஆகும். ஆன்-ரோடு விலை (On-Road Price) 10 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வரும்.

30 நாளில் 3 லட்சம் வண்டிகளை இந்த கம்பெனி வித்துடுச்சு!

கடந்த ஜூன் மாதம் இந்தியாவில் சுமார் 3 லட்சம் வாகனங்களை தயாரித்து பஜாஜ் நிறுவனம் மிக முக்கியமான சாதனையை படைத்துள்ளது. அதன்படி இந்நிறுவனம் உள்நாட்டில் எவ்வளவு விற்பன செய்துள்ளது. வெளிநாட்டிற்கு எவ்வளவு வாகனங்களை ஏற்றுமதி செய்துள்ளது? இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

இந்த ஜூலையில் எந்த காரை வாங்குவது, எதை விடுறதுனே தெரியல!!

ஜூலை மாதம் பிறந்துவிட்டது. 2025ஆம் வருடம் இப்போதுதான் துவங்கியதுபோல் இருந்தது. ஆனால், அதற்குள் பாதி வருடம் முடிந்து அடுத்த பாதி வருடம் துவங்கிவிட்டது. கடந்த மாதங்களை போலவே இந்த ஜூலை மாதத்திலும் ஏகப்பட்ட புதிய கார்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன. இதன்பின் பண்டிகை நாட்கள் அடுத்தடுத்து வர உள்ளதால் புதியதாக கார் வாங்குபவர்களின் எண்ணிக்கை வழக்கம்போல் கணிசமாக அதிகரிக்கும். ஏற்கனவே விற்பனையில் இருக்கும் கார்களை வாங்குவதை காட்டிலும் மார்க்கெட்டுக்கு புதியதாக வந்த லேட்டஸ்ட் காரை வாங்கவே பெரும்பாலானோர் விரும்பக்கூடும். ஏனெனில், அப்போதுதான் மற்றவர்களிடம் இருந்து தனித்து தெரிய முடியும் அல்லவா...
Advertisement

ஏத்தர் ஸ்கூட்டர் விலை பாதியாக குறையப்போகுது!

ஏத்தர் நிறுவனம் இந்தியாவில் பேட்டரியை சர்வீஸ் முறையில் அறிமுகப்படுத்தும் புதிய திட்டத்தை கொண்டு வரப்போவதாக அறிவித்துள்ளது. இதனால் வாகனத்தின் விலை 40 சதவீதத்திற்கும் அதிகமாக விலை குறையும் என தெரிகிறது. இது எப்படி சாத்தியம், பேட்டரி அஸ் ஏ சர்வீஸ் என்றால் என்ன? இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

இவ்வளவு மைலேஜ் தருதுன்னா யாருதான் வாங்க மாட்டாங்க?

மாருதி நிறுவனம் கடந்த 2025ம் நிதியாண்டில் இதுவரை இல்லாத அளவு அதிக அளவிலான சிஎன்ஜி வாகனங்களை தயாரித்துள்ளது. இந்நிறுவனம் தயாரித்த ஒட்டு மொத்த வாகனங்களில் 33.6 சதவீதம் சிஎன்ஜி வாகனங்களாக இருந்துள்ளன. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

மருத்துவர் தினத்தன்று உங்க மருத்துவர்கிட்ட 'இத' சொல்லுங்க.. ரொம்ப சந்தோஷப்படுவாங்க..

சிறந்த மருத்துவரும் மேற்கு வங்கத்தின் இரண்டாவது முதல்வருமான டாக்டர் பிதான் சந்திர ராயின் நினைவாக இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது. டாக்டர் பிதானின் பங்களிப்பையும், நமது சமூகத்தில் மருத்துவர்கள் ஆற்றிய குறிப்பிடத்தக்க பங்கையும் அங்கீகரிக்கும் நாள் இது. இந்த தேசிய மருத்துவர் தினத்தில், இந்தத் தொழிலில் உள்ள ஒருவருடன் நீங்கள் பகிர்ந்து கொள்ளக்கூடிய சில செய்திகள் இங்கே உள்ளன.

ஹீரோவில் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்னாலே தரமா இருக்கும்!!

ஹீரோ மோட்டோகார்ப் (Hero Motocorp), இந்தியாவின் நம்பர் ஒன் 2-வீலர் நிறுவனம். ஆனால், எலக்ட்ரிக் 2-வீலர்களை விற்பனை செய்வதில் நேரடியாக இறங்காமல், 'விடா' (Vida) என்கிற துணை நிறுவனத்தின் மூலமாக செயல்பட்டு வருகிறது. சில வருடங்களுக்கு முன் மார்க்கெட்டில் நுழைந்த ஹீரோ விடா பிராண்டில் வி2 (V2) என்கிற எலக்ட்ரிக் ஸ்கூட்டர் (Electric Scooter) ஏற்கனவே விற்பனையில் உள்ளது. இந்த நிலையில், வி.எக்ஸ்2 (VX2) என்கிற பெயரில் புதியதாக ஒரு எலக்ட்ரிக் ஸ்கூட்டரை விடா நிறுவனம் மார்க்கெட்டில் அறிமுகம் செய்ய உள்ளது. இன்று (ஜூலை 1) மாலை 6 மணியளவில் அறிமுகம் செய்யப்பட உள்ள இந்த புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம் என்பதை பற்றி தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க உள்ளோம்.

18 வயசு எப்போ ஆகும்னு ஆர்வமா காத்துக்கிட்டு இருந்தார் போல!!

ஃபோக்ஸ்வேகன் (Volkswagen) நிறுவனத்தில் இருந்து சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டு, இந்திய கார்கள் மார்க்கெட்டில் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கும் கார், கோல்ஃப் ஜிடிஐ (Golf GTI) ஆகும். சுமார் 53 லட்ச ரூபாயில் அறிமுகம் செய்யப்பட்ட போதிலும், வெறும் 150 யூனிட்கள் மட்டுமே விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டதால், செல்வந்தர்கள் பலரும் இந்த புதிய ஃபோக்ஸ்வேகன் காரை போட்டி போட்டு புக் செய்து வருகின்றனர். அதுமட்டுமின்றி, ஃபோக்ஸ்வேகன் கோல்ஃப் கார்கள் உலகளவில் பிரபலமானவை என்பதால், அத்தகைய காரின் ஜிடிஐ வெர்சன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டதும் புக்கிங் குவிய ஆரம்பித்தது.

யார் கண்ணு பட்டுச்சோ தெரில! காத்து வாங்கும் ஹீரோ ஷோரூம்கள்!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் டூவீலர்களில் ஒன்று ஹீரோ க்ளாமர் (Hero Glamour). வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் என்றாலும் கூட, நடப்பு 2025ம் ஆண்டு மே மாதம் ஹீரோ க்ளாமர் பைக் விற்பனையில் மிக கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

38.1 கி.மீ மைலேஜ் தரும் கார் இந்தியாவுல இறக்கிட்டாங்க!

டொயோட்டா நிறுவனம் தனது அக்வா ஹைபிரிட் கார்களை இந்தியாவில் சோதனை செய்து வருகிறது. இந்த கார் 35.8 கி.மீ மைலேஜை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் இந்திய மார்கெட்டில் மிகப்பெரிய புரட்சியையே செய்யும் என எதிர்பார்க்கலாம். இந்த கார் இந்தியாவில் அறிமுகமாக போகிறதா அல்லது வேறு காரணங்களுக்காக சோதனை செய்யப்படுகிறதா? விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

சுற்றுலா வந்த இடத்தில் பல லட்ச ரூபா கார்களுக்கு நேர்ந்த கதி!

சமூக வலைத்தளங்களின் ஆதிக்கம் மக்களிடையே நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. தாங்கள் தங்களது வாழ்நாளில் சந்திக்கும் சுவாரஸ்யமான நிகழ்வுகளை வீடியோவாகவோ அல்லது போட்டோவாகவோ அல்லது பதிவுகளாகவோ சமூக வலைத்தளங்களில் பதிவிடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. குறிப்பாக, எங்கேனும் அழகிய இடங்களுக்கு சுற்றுலா செல்வதாக இருந்தால், அதனை முடிந்தவரையில் அனைவருக்கும் தெரிவிக்கவே நம்மில் பலர் விரும்புகிறோம். ஆனால், நமது இத்தகைய செயல்கள் தான் பல சமயங்களில் ஆபத்தாக முடிந்துள்ளது. அவ்வாறான ஒரு சம்பவத்தை பற்றி தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.
Advertisement

சென்னையில்அறிமுகமான எலெக்ட்ரிக் பஸ்களில் இவ்வளவு வசதியா?

சென்னையில் முதல்வர் ஸ்டாலின் 120 எலெக்ட்ரிக் பஸ் சேவையை துவங்கி வைத்தார். சென்னையில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரவுள்ள இந்த எலெக்ட்ரிக் பஸ்களில் என்னென்ன வசதிகள் இருக்கிறது? இதில் உள்ள அம்சங்கள் என்ன? விரிவான விபரங்களை காணலாம் வாரு்ஙகள்.

மாணவனின் ஆத்மா சாந்தியடைவதற்காக குடும்பம் செய்த காரியம்!

இந்தியாவை சேர்ந்த இளைஞர்களுக்கும், பைக்குகளுக்கும் இடையே இருக்கும் பந்தத்தை, வெறும் வார்த்தைகளால் விவரிக்க முடியாது. ஒரு சில இளைஞர்களுக்கு, அவர்களது பைக்தான் உலகமே. க்ரிஷ் பார்மருக்கும் கூட அவரது பைக்தான் எல்லாமுமாக இருந்தது. 18 வயது மட்டுமே நிரம்பிய க்ரிஷ் பார்மர், ராயல் என்பீல்டு இன்டர்செப்டார் 650 (Royal Enfield Interceptor 650) பைக் ஒன்றை வைத்திருந்தார்.

வெறும் பனியன் உடன் சாதாரணமான காரில் சென்றவர் இவரா?

மகேந்திர சிங் தோனி (Mahendra Singh Dhoni) இவருக்கு அறிமுகமே தேவை இருக்காது என நினைக்கிறேன். ஏனெனில், அந்த அளவிற்கு உலக புகழ்பெற்ற கிரிக்கெட் (Cricket) வீரராக தோனி விளங்குகிறார். கிரிக்கெட்டை தாண்டி தோனிக்கு விவசாயம் செய்வதும், பைக் & கார் ஓட்டுவதும் பிடித்த விஷயம் என்பது நம் எல்லாருக்குமே தெரிந்ததே. எம்.எஸ் தோனியின் வீட்டில் பைக் மற்றும் கார்களை நிறுத்தி வைப்பதற்காக பிரம்மாண்டமான குடோன் ஒன்று உள்ளதை சில வருடங்களுக்கு முன் முன்னாள் கிரிக்கெட் வீரர் வெங்கடேஷ் பிரசாத் (Venkatesh Prasadh) வீடியோ உடன் வெளிக்காட்டி இருந்தார்.

அதிக மைலேஜ் தரும் இந்த ரக கார்களை அதிகமா வித்தது யாரு?

இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையிலான ஸ்டிராங்க் ஹைபிரிட் வாகனங்களை விற்பனை செய்யும் நிறுவனமாக டொயோட்டா நிறுவனம் மாறியுள்ளது. இந்நிறுவனம் கடந்த நிதியாண்டில் புதிய சாதனை மைல்கல்லை எட்டி பிடித்து மிகப்பெரிய மார்கெட் ஷேரையும் பெற்றுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

எமனுக்கே சவால்விடும் டொயோட்டா காரின் ரிசல்ட் வந்தாச்சு!!

டொயோட்டா (Toyota) நிறுவனத்தின் பிரபலமான காராக இன்னோவா (Innova) விளங்குகிறது. கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக விற்பனையில் இருக்கும் இன்னோவா கார்கள் இன்னோவா கிரிஸ்ட்டா, இன்னோவா ஹைகிராஸ் என வெவ்வேறான வெர்சன்களில் விற்பனை செய்யப்படுகின்றன. இதில், இன்னோவா ஹைகிராஸ் ஆனது டொயோட்டா நிறுவனம் இந்தியாவில் கடந்த சில வருடங்களுக்கு முன் அறிமுகம் செய்த லேட்டஸ்ட் இன்னோவா கார் ஆகும். இந்த காரின் பெயரில் உள்ள 'ஹைகிராஸ்' (Hycross) என்பது காரில் பொருத்தப்படும் ஹைப்ரீட் பவர்டிரெயின் ஆப்ஷனை குறிக்கிறது. அதாவது, இன்னோவா ஹைகிராஸில் பெட்ரோல் என்ஜின் உடன் எலக்ட்ரிக் மோட்டார் இணைக்கப்படுகிறது.

டோல்கேட் நிர்வாகத்திற்கு தனி ஆளா தண்ணி காட்டிய இளைஞர்!

இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலைகளை பயன்படுத்தும் வாகன உரிமையாளர்களுக்கு டோல்கேட் கட்டணங்கள் (Toll Charges) மிகப்பெரிய தலைவலியாக இருந்து வருகின்றன. பல இடங்களில் சாலை தரமாக இல்லை. குண்டும், குழியுமாக மோசமான நிலையில் உள்ளது. அத்துடன் வாகன உரிமையாளர்களுக்கான அடிப்படை வசதிகளும் போதுமான அளவில் வழங்கப்படுவதில்லை.

பெங்களூரு பஸ்களில் வரப்போகும் செம அப்டேட்!

பெண்கள் மற்றம் உயரம் குறைவாக இருப்பவர்களின் வசதிக்காக கர்நாடக மாநிலம் பெங்களூருவில் செயல்படும் பஸ்களின் வடிவமைப்பில் மாற்றம் கொண்டு வர பிஎம்டிசி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதன்படி பல்வேற விதமான அப்டேட்கள் அரசு பஸ்களில் செய்யப்போகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

ஒட்டுமொத்த இந்தியாவே பெங்களூருவை பார்த்து வியக்குது!!

எலக்ட்ரிக் வாகனங்களுக்கு (Electric Vehicles), இந்தியா உள்பட உலகம் முழுவதுமே வரவேற்பு அதிகரித்து வருகிறது. உலக வெப்பமயமாதல் என்கிற உலகளாவிய பிரச்சனையினால் எலக்ட்ரிக் வாகனங்கள் விஷயத்தில் நம் இந்திய அரசு உள்பட பல நாடுகள் தீவிரமாக உள்ளன. எலக்ட்ரிக் வாகனங்களை மக்கள் அதிகளவில் பயன்படுத்த வேண்டுமென்றால், அதற்கு பெட்ரோல்/ டீசலை போன்று சார்ஜிங் வசதிகளும் பரவலாக எல்லா இடங்களிலும் கிடைக்க வேண்டியது அவசியமாகும். வீட்டிலேயே சார்ஜ் செய்யும் வசதி எலக்ட்ரிக் வாகனங்கள் உடன் வழங்கப்படுகின்றன என்றாலும், அது பல மணிநேரங்களை எடுத்துக் கொள்வது பல நேரங்களில் அசவுகரியமாக விளங்குகிறது.
Advertisement

30 கி.மீ மைலேஜ் தரும் கார் கம்மி விலையில் வரப்போகுது!

ஹோண்டா நிறுவனம் தனது ஸ்டிராங்க் ஹைபிரிட் தொழிற்நுட்பத்தை மற்ற கார்களிலும் பொருத்த திட்டமிட்டுள்ளது. இதனால் அதிக மைலேஜ் தரும் கார்களை உருவாக்க திட்டமிட்டுள்ளது. இதன்படி புதிய 7 சீட்டர் எஸ்யூவி, மிட்சைஸ் எஸ்யூவி கார்களிலும் ஸ்டிராங்க் ஹைபிரிட் பொருத்தப்பட்ட வெர்ஷன் வெளியாகும் என எதிர்பார்க்கலாம். இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

70 கிமீ மைலேஜ் தரும் பைக்கை 60 ஆயிரத்துக்கு விக்கறாங்களா!

இந்திய சந்தையில் மிகவும் விலை குறைவான பைக்குகளுக்கு (Most Affordable Bikes), வாடிக்கையாளர்கள் மத்தியில் எப்போதும் அதிக 'டிமாண்ட்' இருந்து வருகிறது. அப்படி வாடிக்கையாளர்கள் மத்தியில், அதிக டிமாண்ட் உள்ள மிகவும் விலை குறைவான பைக்குகளில் ஒன்றுதான் ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ் (Hero HF Deluxe).

ஐடி ரிட்டன் போடும் போது ரூ1.5 லட்சத்தை குறைக்கலாம் எப்படி?

தற்போது இந்தியாவில் கடந்த நிதியாண்டிற்கான வருமான வரி கணக்குகளை தாக்கல் செய்ய பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மக்கள் பலர் வருமான வரியை தாக்கல் செய்யும் பணியில் இருந்து வருகின்றனர். இந்நிலையில் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்கிய பலர் அந்த வாகனத்திற்காக பெறப்பட்ட கடனுக்கான வட்டி தொகையை வருமானத்தில் கழித்து கொள்ளும் ஆப்ஷன் இருக்கிறது. இது பலருக்கும் தெரியாத அம்சமாக இருக்கிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

மஹிந்திராவின் டீசல் என்ஜின் கார்களில் அப்படி என்ன ஸ்பெஷல்?

மஹிந்திரா (Mahindra), இந்தியாவில் கார்களை விற்பனை செய்வதில் மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனத்துக்கு அடுத்து 2வது இடத்தை பிடித்துவரும் உள்நாட்டு கார் நிறுவனம். கடந்த வருடங்களில் கார்கள் விற்பனையில் 4வது இடத்தையே பிடித்துவந்த மஹிந்திரா நிறுவனம், கடந்த சில மாதங்களாகவே ஹூண்டாய் (Hyundai) மற்றும் டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனங்களை முந்தி 2வது இடத்தை தனதாக்கி வருகிறது. மஹிந்திராவின் இந்த வளர்ச்சிக்கு சமீப காலத்தில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய மஹிந்திரா கார்கள் ஒரு காரணம் என்றால், மற்றொரு காரணம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

ஓட்டு மொத்த காரையே கண்டரோலில் எடுக்கப்போகும் ஆப்பிள்!

ஆப்பிள் நிறுவனம் தனது ஆப்பிள் கார் பிளே தயாரிப்பை அப்டேட் செய்ய திட்டமிட்டுள்ளது. அதன்படி இந்நிறுவனம் எதிர்காலத்தில் வாகனங்களில் உள்ள அத்தனை ஸ்கிரீன்களிலும் ஆப்பிள் கா்பிளே டிஸ்பிளேவை கொண்டு வர திட்டமிட்டுள்ளது. ஆனால் இந்த தொழிற்நுட்பத்தை தங்கள் கார்களில் பொருத்த பல வாகன தயாரிப்பு நிறுவனங்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.