ஹாரியர் இவி காரை வாங்கினால் 1 கி.மீக்கு ரூ4 மிச்சம் பண்ணலாம்

டாடா நிறுவனம் இன்று தனது ஹாரியர் இவி காரை விற்பனைக்காக அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கார் பல்வேறு நவீன அம்சங்களுடன் விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளது. இந்த காரின் வடிவமைப்பு பெரும்பாலும் அதன் கம்பஷன் இன்ஜின் மாடல்களின் வடிவமைப்பு போல தான் இருக்கிறது. தற்போது ஹாரியர் காரை வாங்க நினைக்கும் வாடிக்கையாளர்கள் டீசல் இன்ஜின் காரை வாங்கலாமா அல்லது எலெக்ட்ரிக் காரை வாங்கலாமா என்ற குழுப்பத்தில் இருக்கின்றனர். இந்த கார்களில் எது பெஸ்ட் என்ற விரிவான விரபங்களையும் எது நல்ல லாபம் தரும் என்ற விபரங்களையும் இங்கே காணலாம்.

டாடாவை சுத்து போட்டு காலி செய்யும் மஹிந்திரா மற்றும் எம்ஜி!!

இந்தியாவில் எலக்ட்ரிக் கார்களுக்கு மெல்ல மெல்ல வரவேற்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால், எலக்ட்ரிக் கார்களும், அவற்றை உற்பத்தி செய்யும் நிறுவனங்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த சில வருடங்களாகவே இந்தியாவில் எலக்ட்ரிக் கார்களை விற்பனை செய்வதில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், சமீப காலமாக எம்ஜி மோட்டார் (MG Motor) நிறுவனத்தின் எலக்ட்ரிக் கார்கள் விற்பனையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனை வெளிக்காட்டும் வகையில் கடந்த 2025 மே மாதத்தில் எலக்ட்ரிக் கார்கள் விற்பனை எந்த அளவிற்கு இருந்தது? எந்த நிறுவனங்கள் அதிக எலக்ட்ரிக் கார்களை விற்பனை செய்துள்ளன என்பது குறித்த விபரங்களை இனி பார்க்கலாம்.

ஐபிஎல் மைதானத்தில் நிறுத்தப்பட்ட கர்வ் காரை யார் வெல்ல போவது

ஐபிஎல் 2025 (IPL 2025) கிரிக்கெட் தொடர் ஜூன் 3ஆம் தேதியான இன்றோடு நிறைவடைய உள்ளது. கடந்த மார்ச் 22ஆம் தேதி வழக்கம்போல் கோலாகலமாக துவங்கிய 2025ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் இடையில் போர் பதற்ற சூழலினால் 1 வார கால தாமதத்திற்கு பிறகு இன்று நிறைவடைய உள்ளது. உலகளவில் பிரபலமான இந்த டி20 கிரிக்கெட் தொடரின் கடைசி ஒரு ஆட்டம் மட்டுமே இன்னும் மீதம் உள்ளது. அதுதான், இறுதிப்போட்டி ஆகும். இதுவரையில் ஐபிஎல் கோப்பையை வெல்லாத இரு அணிகளான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்க்ஸ் அணிகள் அகமதாபாத்தில் நடைபெறவிருக்கும் இறுதிப்போட்டியில் பலப்பரீட்சை நடத்த உள்ளன.

பட்டன தட்டுனா தானா பார்க் ஆகும் காரின் விலை இவ்வளவு தானா?

டாடா நிறுவனம் தனது ஹாரியர் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனை உருவாக்கி இன்று அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது. இந்த கார் ரூ21.49லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளது. இந்த கார் மக்கள் மத்தியில் நீண்ட நாட்களாக பெரிய அளவில் எதிர்பார்க்கப்படும் நிலையில் இதில் பல்வேறு அட்வாஸ்டு அம்சங்களுடன் விற்பனைக்கு வெளியாகியுள்ளது. இந்த கார் குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
Advertisement

டூவீலர் விலையில் இந்த கார்கள் விற்பனைக்கு வரப்போகுது?

இந்தியாவில் என்ட்ரி லெவல் கார்களை மிக குறைவான விலையில் விற்பனை செய்ய சாத்தியம் இருப்பதாக மாருதி நிறுவனத்தில் பணியாற்றும் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அவர் கூறியதுபடி பாரத்தால் இந்தியாவில் டூவீலர் விலையில் ஒரு காரை விற்பனை செய்ய முடியும் என தெரிவித்துள்ளார். சிறிய ரக கார்களுக்கு இந்தியா பெரிய மார்கெட்டாக இருந்து தற்பேது மாறி வருகிறது. இந்நிலையில் மீண்டும் சிறிய ரக கார்கள் இந்திய மார்கெட்டில் ஆதிக்கம் செலுத்துமா? விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

டொயோட்டா காரை வாங்குவதற்கு இதைவிட பெரிய காரணம் என்ன வேண்டும்

டொயோட்டா (Toyota) நிறுவனத்தில் இருந்து இந்தியாவில் சிறப்பாக விற்பனையாகும் கார்களுள் ஒன்று ஃபார்ச்சூனர் (Fortuner) ஆகும். சற்று விலைமிக்க காராக இருப்பினும், ஃபார்ச்சூனரை வாங்குவதற்கும் நம் நாட்டில் நிறைய பேர் தயாராக உள்ளனர். இதனாலேயே அவ்வப்போது ஃபார்ச்சூனரை மறக்காமல் அப்டேட் செய்துவிடும் டொயோட்டா நிறுவனம், அந்த வரிசையில் தற்போது ஃபார்ச்சூனரின் மைல்ட் ஹைப்ரீட் (Mild Hybrid) வெர்சனை மார்க்கெட்டில் அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவில் ஏற்கனவே சில டொயோட்டா மைல்ட் ஹைப்ரீட் கார்கள் விற்பனை செய்யப்பட்டுவரும் நிலையில், அந்த வரிசையில் தற்போது ஃபார்ச்சூனர் மைல்ட் ஹைப்ரீட் கார் இணைந்துள்ளது.

30 நாளில் 4.65 லட்சம் வாகனங்கள் வித்துடுச்சு!

ஹோண்டா நிறுவனத்தின் டூவீலர் தற்போது மிகப்பெரிய அளவில் விற்பனையை பெற்றுள்ளது. இந்நிறுவனம் கடந்த மே மாதம் சிறப்பான விற்பனையை பெற்றுள்ளது. உள்ளூர் விற்பனையிலும் சரி ஏற்றுமதியிலும் சரி நல்ல விற்பனையை பெற்றுள்ளது. இந்த வகையில் இந்த நிறுவனம் கடந்த மே மாதம் எவ்வளவு வாகனங்களை விற்பனை செய்துள்ளது. எவ்வளவு வாகனங்களை ஏற்றுமதி செய்துள்ளது? இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

30 நாளில் இவ்வளவு பேர் இந்த காரை வாங்கிட்டாங்க!

இந்தியாவில் 7 சீட்டர் கொண கார்கள் மக்கள் மத்தியில் தற்போது பிரபலமாக இருந்து வருகிறது. குடும்பத்துடன் பயணிக்க இந்த ரக கார் ஏற்றதாக இருப்பதால் பலர் இந்த காரை விரும்பி வாங்கி வருகின்றனர். இந்நிலையில் கடந்த மே மாதம் அதிக எண்ணிக்கையில் விற்பனையான குறைந்த விலை கார் குறித்த விபரம் தற்போது வெளியாகியுள்ளது. எந்த கார் இது? எவ்வளவு விற்பனையாகியுள்ளது? இந்த காரை எவ்வளவு பேர் வாங்கியுள்ளனர்? இந்த கார் குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

ஒரே வருஷத்தில் இந்திய கார் மார்க்கெட் மொத்தமா மாறிபோச்சு!!

இந்தியாவில் கார்களை விற்பனை செய்வதில் பலத்த போட்டி நிலவி வருகிறது. இந்தியாவில் அதிகம் கார்களை விற்பனை செய்யும் நிறுவனமாக பிரச்சனையே இல்லாமல் முதலிடத்தை மாருதி சுஸுகி (Maruti Suzuki) பிடித்துவிடுகிறது. இந்திய-ஜப்பானிய கூட்டு நிறுவனமான இதனை கார்கள் விற்பனையில் வேறொரு நிறுவனம் முந்துவதற்கு இன்னும் பல வருடங்கள் ஆகும் போல் இருக்கிறது. இதற்கடுத்து 2வது இடத்தை பிடிப்பது யார் என்பதில்தான் பலத்த போட்டி நிலவி வருகிறது. வழக்கமாக, மாருதி சுஸுக்கு அடுத்து 2வது இடத்தை தென்கொரிய கார் நிறுவனமான ஹூண்டாய் (Hyundai) பிடிப்பது வழக்கம்.

7 சீட்டர் எலெக்ட்ரிக் கார் இவ்ளோ கம்மியான விலையில் வருதா!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த கியா கேரன்ஸ் க்ளாவிஸ் (Kia Carens Clavis) கார் வெகு சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இது ஏற்கனவே விற்பனையில் இருந்து வரும் கியா கேரன்ஸ் காரின் ஃபேஸ்லிஃப்ட் (Facelift) மாடல் ஆகும்.

ஹீரோ ஷோரூமில் எப்போதும் நிரம்பி வழியும் கஸ்டமர்ஸ் கூட்டம்!!

ஹீரோ மோட்டோகார்ப் (Hero Motocorp), இந்தியாவின் முன்னணி 2-வீலர் உற்பத்தி நிறுவனம் என்பதை நான் கூற வேண்டியது இருக்காது என நினைக்கிறேன். ஏனெனில் அந்த அளவிற்கு ஒவ்வொரு மாதமும் இலட்சக்கணக்கிலான இருசக்கர வாகனங்களை விற்பனை செய்யக்கூடிய உலகின் பிரம்மாண்டமான 2-வீலர் நிறுவனமாக ஹீரோ மோட்டோகார்ப் உள்ளது. டெல்லியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஹீரோ நிறுவனத்தில் இருந்து கடந்த 2025 மே மாதத்தில் எத்தனை 2-வீலர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன? அவற்றுள் பைக்குகள் எத்தனை? ஸ்கூட்டர்கள் எத்தனை? என்பது குறித்த விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

ஹோண்டா கார் ஷோரூமை சும்மா கூட யாரும் எட்டி பார்க்க மாட்றாங்க

ஹோண்டா கார்ஸ் இந்தியா (Honda Cars India) நிறுவனத்தில் இருந்து கடந்த 2025 மே மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட கார்கள் குறித்த விபரங்கள் வெளியாகி உள்ளன. ஜப்பானை சேர்ந்த கார் நிறுவனமான ஹோண்டா கார்ஸ், இந்தியாவில் தற்போதைக்கு வெறும் மூன்றே மூன்று கார் மாடல்களை மட்டுமே விற்பனை செய்கிறது. அவை மூன்றும் கடந்த மே மாதத்தில் எத்தனை யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன என்பதை பற்றி தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம். வாருங்கள் செய்திக்குள் போகலாம்.
Advertisement

30 நாளில் 90 ஆயிரம் பேர் இந்த கம்பெனி வண்டிய வாங்கிட்டாங்க!

ராயல் என்ஃபீல்டு நிறுவனம் கடந்த மே மாதம் சிறப்பான விற்பனை வளர்ச்சியை பெற்றுள்ளது. இந்நிறுவனம் ஒரே மாதத்தில் 75 ஆயிரத்திற்கும் அதிகமான வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இந்நிறுவனம் சிறப்பான வளர்ச்சியையும் பெற்றுள்ளது. இப்படியா இந்த நிறுவனம் கடந்த மே மாதம் எவ்வளவு வாகனங்களை விற்பனை செய்துள்ளது எவ்வளவு வளர்ச்சியை பெற்றுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

ஊர் உலகத்துல மனைவிக்காக என்ன என்னவெல்லாம் செய்றாங்க!!

புதியதாக கார் வாங்குவது என்பது நம்மில் நிறைய பேருக்கு கனவாகும். கஷ்டப்பட்டு எப்படியாவது கார் ஒன்றை வாங்கிவிட்டால் அப்போது கிடைக்கக்கூடிய சந்தோஷத்தை சொல்ல வார்த்தையே இருக்காது. அந்த அளவிற்கு, வாழ்வில் எதையோ பெரியதாக சாதித்துவிட்டது போன்று துள்ளி குதிப்போம். புதியதாக வாங்கிய காரை நீண்ட தொலைவிற்கு ஓட்டி சென்று பிரசித்தி பெற்ற கோயிலில் சிலர் பூஜை போடுவதை பார்த்திருப்பீர்கள். நம் இந்தியாவில் புதியதாக வாங்கும் வாகனங்களையும் குடும்பத்தில் ஒரு உறுப்பினராகவே பார்ப்போம். ஆதலால், வாகனங்கள் என்பன ஓர் இயந்திரம் என்று தள்ளி வைக்காமல் அவற்றையும் நமது குடும்ப உறுப்பினர் போன்று போற்றி பாதுகாப்போம்.

போட்டி நிறுவனங்களை தலை தெறிக்க ஓட விட போகும் டாடா கார்!

இந்தியாவின் எலெக்ட்ரிக் கார் (Electric Car) சந்தையில், ஒரு காலத்தில் தனி சாம்ராஜ்யம் நடத்தி கொண்டிருந்த நிறுவனம் டாடா மோட்டார்ஸ் (Tata Motors). ஆனால் நிலைமை தற்போது முன்பு போல் இல்லை. எலெக்ட்ரிக் கார் சந்தையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு கடுமையான போட்டி ஏற்பட்டுள்ளது.

மனிதர்களே ஏற கஷ்டப்படும் மலையில் அசால்டாக ஏறிய இவி!

டாடா நிறுவனம் தனது ஹாரியர் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனை உருவாக்க தயாராகி வருகிறது. இந்த கார் 500 என்எம் டார்க் திறனை உருவாக்கும் செட்டப் உடன் தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த கார் சமீபத்தில் ஆஃப்ரோடில் மலையில் மிக சுலபமாக ஏறும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோ வைரலாக பரவி வரும் சூழ்நிலையில் இந்த காரில் என்னென்ன விஷயங்களை எல்லாம் எதிர்பார்க்கலாம்? விரிவான விபரங்களை இங்கே காணலாம் வாருங்கள்.

1.5 கோடி ரூபா காரை பார்க்குறதா... அவரை பார்க்குறதானே தெரியல!

டிஃபெண்டர் (Defender) கார்களுக்கு உலகம் முழுக்க ரசிகர்கள் பலர் உள்ளனர். நம் இந்தியாவிலும் தான். குறிப்பாக, சினிமா (Cinema) பிரபலங்கள் பலரிடத்தில் டிஃபெண்டர் கார்கள் உள்ளன. ஏற்கனவே பல்வேறு சொகுசு கார்களை வைத்திருப்பினும், புதியதாக விலையுயர்ந்த டிஃபெண்டர் கார்களை சினிமா நட்சத்திரங்கள் அவ்வப்போது வாங்குவதை பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் பிரபல பாலிவுட் நடிகர் (Bollywood Actor) ஒருவர் விலையுயர்ந்த மற்றும் பிரம்மாண்டமான டிஃபெண்டர் காரை வாங்கி பயன்படுத்தி வருகிறார். அவரையும், அவர் வாங்கியுள்ள டிஃபெண்டர் காரை பற்றியும் தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

இனி போலீஸ் வண்டிய நிப்பாட்டுனா டிஜிபி போட்ட ஆர்டரை சொல்லுங்க

இந்தியாவை பொறுத்தவரை வீட்டில் இருந்து வாகனத்தில் ஒரு இடத்திற்கு சென்று விட்டு மீண்டும் வீடு திரும்புவதற்குள் போதும் போதும் என்றாகி விடும். ஏனெனில் போக்குவரத்து நெரிசல் போன்ற பிரச்னைகளுடன் சேர்த்து, வாகன சோதனை என்ற பெயரில் காவல் துறை அதிகாரிகள் ஏற்படுத்தும் பிரச்னைகளையும் வாகன ஓட்டிகள் சமாளிக்க வேண்டியுள்ளது.

இந்த ஒரு கார் ஒட்டு மொத்த மார்கெட்டையும் மாத்திடுச்சு!

ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி நிறுவனம் கடந்த மே மாத விற்பனையில் அபார வளர்ச்சியை சந்தித்துள்ளது. இதற்கு அந்நிறவனம் சமீபத்தில் அறிமுகப்படுத்திய விண்ட்ஸர் நிறுவனத்தின் கார் மிக முக்கியமான காரணமாக இருக்கிறது. இந்நிலையில் இந்த விற்பனை எண்ணிக்கை எவ்வளவு? எவ்வளவு வளர்ச்சி பெற்றுள்ளது என்ற விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

பணத்தை தண்ணி போல் செலவு செய்யாமல் வாங்கக்கூடிய இ-ஸ்கூட்டர்!

ஏத்தர் எனர்ஜி (Ather Energy) நிறுவனத்தில் இருந்து கடந்த 2024ஆம் ஆண்டின் மத்தியில் அறிமுகம் செய்யப்பட்ட எலக்ட்ரிக் ஸ்கூட்டர் (Electric Scooter), ரிஸ்டா (Rizta) ஆகும். 2020ஆம் ஆண்டில் இருந்து '450' என்கிற எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை மட்டுமே விற்பனை செய்துவந்த ஏத்தர் எனர்ஜி நிறுவனம் குறைந்த விலையில் அனைவரும் வாங்கக்கூடிய வகையிலான எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்யும் முயற்சியாக ரிஸ்டாவை கொண்டுவந்தது. இந்த நிலையில், ரிஸ்டா ஸ்கூட்டர்களின் விற்பனை எண்ணிக்கை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதனை பற்றி தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.
Advertisement

மீண்டும் ரேஸிற்கு தயாராகும் ஏகே!

தமிழ் சினிமாவில் முன்னணியில் இருக்கும் நடிகர் அஜித்குமார் சமீப காலமாக கார் பந்தையத்திலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் வரும் ஜூலை மாதம் ஃபிரான்ஸ் நாட்டில் நடக்கவுள்ள கார் பந்தைய போட்டியில் பங்கேற்க தற்போது தயாராகி வருகிறார். இதற்கான டெஸ்ட் டிரைவ்வின் போது அவர் சிறப்பாக காரை ஓட்டிய வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் வெளியாகியுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வருங்கள்.

தமிழ்நாட்டுக்கு ரொம்ப பக்கத்துல தான் இந்த கம்பெனி இருக்குது

ஜூன் மாதம் துவங்கியுள்ள நிலையில் தற்போத வாகன தயாரிப்பு நிறுவனங்கள் எல்லாம் தங்களது கடந்த மே மாத விற்பனை விபரங்களை வெளியிட்டு வருகின்றன. அதன்படி கியா நிறுவனம் தனது விற்பனை விபரங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி அந்நிறுவனம் கடந்த மே மாதம் எவ்வளவு வானகங்களை விற்பனை செய்துள்ளது? இந்நிறுவனம் எவ்வளவு வளர்ச்சியை சந்தித்துள்ளது? இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

46 லட்ச ரூபா கொடுத்து ஃபேன்சி நம்பர் பிளேட் வாங்கிய ராசியா!!

மெர்சிடிஸ்-பென்ஸ் (Mercedes-Benz) நிறுவனத்தில் இருந்து இந்தியாவில் விற்பனை செய்யப்படும் விலையுயர்ந்த கார்களுள் ஒன்று, ஜி63 ஏஎம்ஜி (G63 AMG) ஆகும். சுமார் ரூ.4.2 கோடி என்கிற எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படும் இந்த ஏஎம்ஜி காரை வாங்குவது என்பது பணக்காரர்களுக்கு கூட கனவாக உள்ளது. இப்படிப்பட்ட காரை கேரளாவை சேர்ந்த பெரும் பணக்காரர் ஒருவர் வாங்கியுள்ளார். தாய், தந்தை, மனைவி மற்றும் மகன் உடன் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்துவரும் இந்த கேரள தொழிலதிபரை பற்றி சமீப காலமாக அவ்வப்போது நமது செய்தித்தளத்தில் பார்த்து வருகிறோம்.

10 லட்சம் கிமீக்கு மேல பிரச்னை இல்லாம ஓடுது!

இந்திய கார் வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெற்ற நிறுவனங்களில் டொயோட்டா (Toyota) மிகவும் முக்கியமானது. பொதுவாக டொயோட்டா நிறுவனத்தின் மீதான எதிர்மறை விமர்சனங்கள் மிகவும் குறைவு. இது டொயோட்டா நிறுவனம் ஒவ்வொரு மாதமும் சிறப்பான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்ய உதவி செய்கிறது.

மழைக்கு கூட டாடா ஷோரூம்களில் ஒதுங்க தயங்கும் மக்கள்!

2025ம் ஆண்டின் மே மாதம் முடிவடைந்து, ஜூன் மாதத்தில் காலடி எடுத்து வைத்துள்ளோம். இந்த நேரத்தில் வாகன நிறுவனங்களின் சேல்ஸ் ரிப்போர்ட்கள் (Sales Reports) வரிசையாக வெளியாகி வருகின்றன. இந்த வரிசையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் சேல்ஸ் ரிப்போர்ட்டும் (Tata Motors) வெளியாகியுள்ளது.