2 கோடி ரூபா கார்ல போனது அவங்களா!

தமிழ்நாட்டில் ஒரு சில நடிகைகளுக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. சில்க் ஸ்மிதா மற்றும் குஷ்பூ போன்ற நடிகைகளை, தமிழ்நாட்டு ரசிகர்கள் இன்னமும் கொண்டாடி வருகின்றனர். இப்படிப்பட்ட தமிழ்நாட்டில் இன்னும் ஒரு படத்தில் கூட நடிக்காமல், ஒரு ரசிகை மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார்.

கப்பல் போன்ற எலக்ட்ரிக் காரில் சென்றது இவ்வளவு பெரிய நடிகரா!

எம்ஜி மோட்டார் (MG Motor), பிரிட்டிஷ் நாட்டை சேர்ந்த உலகளவில் பிரபலமான கார் உற்பத்தி நிறுவனம். ஆனால், சீனாவை சேர்ந்த SAIC குழுமத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டுவரும் எம்ஜி நிறுவனம் சமீபத்தில்தான் இந்தியாவின் பிரபலமான ஜே.எஸ்.டபிள்யூ (JSW) நிறுவனத்துடன் கூட்டணி சேர்ந்தது. இந்த கூட்டணிக்கு பிறகே இந்தியாவில் புதியது, புதியதாக எலக்ட்ரிக் கார்களை (Electric Cars) அறிமுகம் செய்ய எம்ஜி மோட்டார் நிறுவனம் ஆரம்பித்தது. எம்ஜி கோமெட் இவி (Comet EV) மற்றும் விண்ட்சர் இவி (Windsor EV) உள்ளிட்டவை இந்த வரிசையில் இந்திய மார்க்கெட்டிற்கு வந்த எலக்ட்ரிக் கார்கள் ஆகும்.

ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு இவ்வளவு மைலேஜ் தருமா?

இன்றைய காலகட்டத்தில் குடும்பத்துடன் பயணிக்கும் மனநிலையில் உள்ள மக்கள் தங்கள் கார் எவ்வளவு மைலேஜ் தருகிறது என்பதிலும் மிக கவனமாக இருக்கின்றனர். அதிக மைலேஜ் தரும் கார் ஒரு நடுத்தர குடும்பத்தின் செலவை மிச்சப்படுத்த நல்ல வழி வகுக்கிறது. இதனால் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் மைலேஜை வழங்கும் கார்களை தயாரித்து வருகின்றனர். இப்படியாக சமீபத்தில் வெளியான டாடா நிறுவனத்தின் அல்ட்ராஸ் கார் எவ்வளவு மைலேஜ் தருகிறது. இதன் போட்டி நிறுவன தயாரிப்புகள் எவ்வளவு மைலேஜ் தருகிறது என்ற ஒப்பீட்டை இங்கே காணலாம்.

90 கிமீ மைலேஜை வாரி வழங்கும் பைக்கோட விலை இவ்ளோதானா!

இரு சக்கர வாகனங்களை வாங்கும் இந்திய வாடிக்கையாளர்கள் பெரும்பாலானோரின் எதிர்பார்ப்பு இரண்டே இரண்டுதான். ஒன்று விலை (Price) குறைவாக இருக்க வேண்டும். மற்றொன்று நல்ல மைலேஜ் (Mileage) கிடைக்க வேண்டும். இந்த 2 எதிர்பார்ப்புகளையும் ஒரே சேர பூர்த்தி செய்யும் பைக்குகளில் ஒன்றுதான் பஜாஜ் பிளாட்டினா (Bajaj Platina).
Advertisement

எப்ப பேட்டரி பிரச்சனை பண்ணாலும் ஃப்ரீயா மாத்திடலாம்!

இந்தியா முழுவதும் தற்போது எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை அதிகரித்து வருகிறது. குறிப்பாக டூவீலர்களில் அிக மாக விற்பனை நடந்து வருகிறது. ஸ்கூட்டர் செக்மெண்டில் சிறப்பாக வாகனங்கள் விற்பனையாகி வரும் நிலையில் தற்போது எலெக்ட்ரிக் பைக்குகளின் விற்பனையும் அதிகரித்து வருகிறது. இருந்தாலும் மக்கள் மத்தியில் எலெக்ட்ரிக் வாகனங்கள் வாங்குவதில் இருக்கும் பெரிய தயக்கம் அதன் பேட்டரி ஆயுள் தான். பேட்டரி விரைவாக பாதிப்படைந்துவிட்டால் அதிகம் செலவாகும் என்ற பேச்சு மக்கள் மத்தியில் இருக்கிறது.

38 வருட பழைய அம்பாசிடர் கார்னு சொன்னா யாரும் நம்ப மாட்டாங்க!

ஹிந்துஸ்தான் அம்பாசிடர் (Hindustan Ambassador), இந்தியாவின் தேசிய கார் என சொல்லும் அளவிற்கு ஒரு சமயத்தில் நாடு முழுவதும் அதிக பேரால் வாங்கப்பட்ட கார். இப்போது இருக்கும் மாடர்ன் கார்கள் அனைத்திற்கும் மூதாதையர் என அம்பாசிடரை சொல்லலாம். அந்த அளவிற்கு, ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் உருவாக்கிய அம்பாசிடர் காரை மனதில் வைத்துதான் இன்றைய கால பெரும்பாலான கார்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இங்கிலாந்தில் விற்பனையில் பெரிதும் வரவேற்பை பெற்றுவந்த மோரிஸ் ஆக்ஃபோர்ட் சீரிஸ்-3 (Morris Oxford Series-3) காரின் அடிப்படையில் இந்தியாவிற்கான அம்பாசிடர் கார் உருவாக்கப்பட்டது.

மாருதி பொழப்புல மண்ண அள்ளி போடும் 27 கிமீ மைலேஜ் கார்!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் பிரீமியம் ஹேட்ச்பேக் (Premium Hatchback) ரக கார்களில் ஒன்று டாடா அல்ட்ராஸ். இதன் வெகுவாக அப்டேட் செய்யப்பட்ட 2025 டாடா அல்ட்ராஸ் ஃபேஸ்லிஃப்ட் (2025 Tata Altroz Facelift) மாடல், கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்பு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

வெறும் 406 கார் தான் வித்திருக்குது!

செடான் கார்கள் இந்தியாவில் ஒரு காலத்தில் சிறப்பாக விற்பனையாகும் காராக இருந்தது. எஸ்யூவி கார்களின் வருகைக்கு பிறகு படிப்படியாக செடான் கார்களின் விற்பனை சரிந்து வருகிறது. இருந்தாலும் செடான் கார் விரும்பிகள் பலர் செடான் காரை தான் விரும்பி வாங்கி வருகின்றனர். அதன்படி இந்தியாவில் சிறப்பாக விற்பனையாகும் செடான் காரின் விற்பனை தற்போது சரிந்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

இந்த காஸ்ட்லியான காரை 3 லட்சம் பேர் வாங்கிட்டாங்களா?

டொயோட்டா நிறுவனம் தனது ஃபார்ச்சூனர் காரை 3 லட்சம் கார்களை விற்பனை செய்து புதிய மைல் கல்லை எட்டியுள்ளது. இந்நிறுவனம் கடந்த 2009ம் ஆண்டு அறிமுகம் செய்த ஃபார்ச்சூனர் மற்றும் கடந்த 2021ம் ஆண்டு அறிமுகம் செய்த ஃபார்ச்சூனர் லெஜென்டர் என்ற இரண்டு கார்களும் சேர்ந்து இந்த சாதனை மைல் கல்லை எட்டியுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

கங்குவாவில் நடித்த நடிகை இன்னோவா கார் லெவலுக்கு வந்துட்டார்!

திஷா பதானி (Disha Patani), பிரபலமான பாலிவுட் நடிகை (Bollywood Actress). இந்தி மொழி திரைப்படங்கள் தான் திஷா பதானியின் முதன்மையான தேர்வு என்றாலும், அவ்வப்போது தென்னிந்திய மொழி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். இன்னும் சொல்லப்போனால், 2015ஆம் ஆண்டில் 'லோஃபர்' (Loafer) என்கிற தெலுங்கு திரைப்படத்தின் மூலமாகவே உத்தர பிரதேசத்தில் பிறந்த திஷா பதானி சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தார். முதல் படம் பெரியதாக போகவில்லை என்றாலும், 2வது திரைப்படமான கிரிக்கெட் வீரர் எம்.எஸ் தோனியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படம் நாடு தழுவிய பிரம்மாண்ட வெற்றி பெற்றது.

2026ல் டீசல் கார்களின் விற்பனையை நிறுத்தப்போறங்களா?

இந்தியா முழுவதும் தற்போது பிஎஸ் 6 மாசு கட்டுப்பாடு விதிமுறைகள் அமலில் உள்ளது. இதனால் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் குறிப்பிட்ட அளவு மாசுவை வெளியிடும் வாகனங்களை தான் தயாரிக்க வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. இந்நிலையில் பிஎஸ் 7 கட்டுபாட்டு விதிகள் அமலக்கு வரப்போவதாக செய்திகள் வெளியாகும் நிலையில் இந்த விதிமுறைகள் அமலுக்கு வந்தால் டீசல் இன்ஜின் கொண்ட பயணிகள் வாகனங்கள் விற்பனையிலிருந்து நிறுத்தப்படுவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

உத்தர பிரதேசத்துக்கு அடுத்துதான் தமிழ்நாடு இந்த விஷயத்திலும்

உலகளவில் கார்கள் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகும் நாடுகளுள் நமது இந்தியாவும் ஒன்றாகும். ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கிலான கார்கள் இந்தியாவில் மக்களால் வாங்கப்படுகின்றன. கார்கள் மட்டுமின்றி, பயணிகளை அழைத்து செல்லும் வாகனங்களின் விற்பனையும் நம் நாட்டில் சிறப்பாக உள்ளது. இவ்வாறான வாகனங்களை பயணிகள் வாகனங்கள் என அழைக்கின்றனர். இந்த பயணிகள் வாகனங்கள், கடந்த 2024ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் 2025ஆம் ஆண்டு மார்ச் வரையிலான நிதியாண்டில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்ட இந்திய மாநிலங்கள் குறித்த விபரங்கள் வெளிவந்துள்ளன. அவற்றை பற்றி இனி பார்க்கலாம்.
Advertisement

ராஞ்சிக்கு சென்றதும் முதல் பயணமே இந்த பைக்கில் தான்!!


மாருதி, டாடாவின் தூக்கத்தை கெடுத்த விலை குறைவான புதிய கார்!

இந்தியாவின் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி செக்மெண்ட் சவால் நிறைந்தது. இந்த செக்மெண்ட்டில் ஏற்கனவே ஏராளமான கார்கள் ஒன்றுக்கு ஒன்று மிக கடுமையான போட்டியில் ஈடுபட்டு வருகின்றன. இருப்பினும் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் இந்த ரக கார்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது.

26 வருஷத்துக்கு பிறகு இப்படி நடக்கும்னு நெனைச்சி இருப்பாரா?

வாழ்வில் எத்தனை பைக்குகளை வாங்கினாலும் சரி, இளமை பருவத்தில் அதிகமாக பயன்படுத்தும் பைக் தான் எப்போதுமே நமது நினைவில் இருக்கும். அந்த பைக் முற்றிலும் ஓடாத கண்டிஷனில் இருந்தால் கூட, அதை விற்க மனம் வராது. வீட்டின் ஓரத்தில் எங்கேயாவது போட்டு வைத்திருப்போம். சிலர் பொருளாதார நெருக்கடியால் அந்த பைக்கை விற்று விடுகின்றனர். அவ்வாறு, இளமை பருவத்தில் பயன்படுத்திய ராயல் என்ஃபீல்டு (Royal Enfield) பைக்கை கேரளாவில் ஒருவர் விற்றுள்ளார். இப்போது அல்ல... 26 வருடங்களுக்கு முன்பே விற்றுள்ளார்.

டிவிஎஸ், பஜாஜ் தலையில் இடியாய் இறங்கும் ஹோண்டா தயாரிப்பு!

இந்திய சந்தையில் ஹோண்டா ஷைன் (Honda Shine) பைக் மிகவும் பிரபலமாக திகழ்ந்து வருகிறது. வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால், நடப்பு 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதம், விற்பனையில் மிகவும் சிறப்பான வளர்ச்சியை ஹோண்டா ஷைன் பதிவு செய்துள்ளது.

நாடே எதிர்பார்த்த புதிய ஃபோக்ஸ்வேகன் காரின் விலை இதுதானா?

ஃபோக்ஸ்வேகன் (Volkswagen) நிறுவனம் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் அதன் புதிய கோல்ஃப் ஜிடிஐ (Golf GTI) காரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் விலைமிக்க மற்றும் செயல்திறன்மிக்க ஹேட்ச்பேக் காராக வெளிநாடுகளில் சிறப்பான விற்பனையில் இருக்கும் கோல்ஃப் ஜிடிஐ கார், எம்கே 8.5 கோல்ஃப் ஜிடிஐ (Mk 8.5 GTI) என அழைக்கப்படுகிறது. ரூ.53 லட்சம் என்கிற எக்ஸ்-ஷோரூம் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த புதிய ஃபோக்ஸ்வேகன் காரை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

வெறும் 60 ஆயிரத்துக்கு 70 கிமீ மைலேஜை வாரி வழங்கும் பைக்கா!

இந்திய சந்தையில் அதிக டூவீலர்களை (Two Wheelers) விற்பனை செய்யும் நிறுவனங்களில் ஹீரோ மோட்டோகார்ப் (Hero MotoCorp) முன்னணி இடத்தில் உள்ளது. இதற்கு ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ் (Hero HF Deluxe) பைக்கும் ஒரு காரணம் ஆகும். இந்திய சந்தையில் அதிகம் விற்பனையாகும் ஹீரோ பைக்குகளில் ஒன்றாக ஹெச்எஃப் டீலக்ஸ் திகழ்கிறது.

வரலாறு காணாத மலிவான விலையில் வரும் ராயல் என்பீல்டு பைக்!

இந்தியாவை சேர்ந்த பலருக்கும், ராயல் என்பீல்டு பைக்குகளை (Royal Enfield Bikes) வாங்க வேண்டும் என்ற ஆசை, கண்டிப்பாக இருக்கும். ஆனால் ராயல் என்பீல்டு பைக்குகளின் விலை (Price) சற்று அதிகம். மறுபக்கம் ராயல் என்பீல்டு பைக்குகளின் மைலேஜ் (Mileage) அவ்வளவு சிறப்பாக இருக்காது.

சீட்டில் இருந்து எந்திருக்கவே மனசு வரல... கார் ரிவியூ வீடியோ

ஃபோக்ஸ்வேகன் (Volkswagen) நிறுவனத்தில் இருந்து அடுத்ததாக இந்தியாவில் கோல்ஃப் ஜிடிஐ (Golf GTI) கார் அறிமுகம் செய்யப்பட உள்ளது. பவர்ஃபுல்லான ஹேட்ச்பேக் காராக கோல்க் ஜிடிஐ பல வெளிநாடுகளில் விற்பனையில் உள்ளது. இந்த காரை நீண்ட வருட ஆலோசனைகளுக்கு பிறகு இந்தியாவில் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் களமிறக்குகிறது. அறிவிக்கப்படி, இன்று (மே 26) இந்தியாவில் கோல்ஃப் ஜிடிஐ கார் அறிமுகம் செய்யப்பட உள்ளது. காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் அறிவிக்கப்பட்டு அதிகாரப்பூர்வமாக கோல்ஃப் ஜிடிஐ இந்தியாவில் விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது.
Advertisement

உலகையே மிரள வைத்த ஃபோக்ஸ்வேகன் கார் இந்தியா வந்தாச்சு!

ஃபோஸ்வேகன் (Volkswagen) நிறுவனத்தில் இருந்து உலகளவில் பிரபலமான கோல்ஃப் ஜிடிஐ (Golf GTI) கார் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்தியாவில் இன்று (மே 26) அறிமுகம் செய்யப்படுகிறது. உலகின் பல நாடுகளில் வரவேற்பை பெற்ற ஹேட்ச்பேக் கார் என்பதினாலேயே கோல்ஃப் ஜிடிஐ கார் மீது பலத்த எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இந்த காரின் பெயரில் உள்ள 'ஜிடிஐ' ஆனது காரின் செயல்திறனை குறிக்கிறது. வெளிநாடுகளில் விற்பனையில் உள்ள ஃபோக்ஸ்வேகன் கோல்ஃப் காரின் ஒரு வெர்சன் தான், கோல்ஃப் ஜிடிஐ ஆகும்.

வருஷத்துக்கு ஒரு தடவை கட்டினால் போதுமா!! மத்திய அரசு ஆலோசனை!

எந்தவொரு நாட்டின் பொருளாதாரத்தையும் தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிப்பது அந்த நாட்டின் சாலை உள்கட்டமைப்பு ஆகும். ஏனெனில், சர்வதேச வணிகத்தை உள்நாட்டு வணிகத்துடன் இணைப்பதில் முக்கியமான பாலமாக நாட்டின் நெடுஞ்சாலைகள் விளங்குகின்றன. நெடுஞ்சாலைகளுக்கு மாற்றாக, உலக தரத்திலான விரைவுச்சாலைகளை கொண்டுவரும் பணிகளில் கடந்த சில வருடங்களாகவே மத்திய அரசு தீவிரமாக உள்ளது. நாடு முழுவதும் முக்கிய வழித்தடங்களில் விரைவுச்சாலைகளை கொண்டுவந்து நாட்டின் சாலை போக்குவரத்தை விரைவுப்படுத்துவது தான் மத்திய அரசாங்கத்தின் முக்கியமான நோக்கமாக உள்ளது.

மார்க்கெட்டை தலைகீழா புரட்டி போட வரும் டிவிஎஸ் ஸ்கூட்டர்!

இந்திய வாடிக்கையாளர்கள் புதிய கார் அல்லது டூவீலர் என எந்தவொரு வாகனத்தை வாங்கினாலும், மைலேஜிற்கு (Mileage) அதிக முக்கியத்துவம் வழங்குவார்கள். எனவே அனைத்து முன்னணி நிறுவனங்களும், அதிக மைலேஜ் வழங்க கூடிய வாகனங்களை விற்பனைக்கு அறிமுகம் செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றன.

டொயோட்டா கம்பெனிக்காரன் பார்த்தான்னா மெர்சலாகிடுவான்!!

உலகளவில் சாலை விபத்துகள் அதிகம் நடைபெறும் நாடுகளுள் ஒன்றாக நமது இந்தியா உள்ளது என்பதை மனம் ஏற்க மறுத்தாலும், அதுதான் உண்மை. இதற்கு பல காரணங்களை சொல்லலாம். அதிவேகமான பயணம், மது போதையில் வாகனம் ஓட்டுவது என இந்த காரணங்களை சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால், இந்த காரணங்களுக்கு எல்லாம் அடிப்படையானது என்றால் அது போக்குவரத்து விதிமுறைகளை நம்மில் நிறைய முறையாக மதிக்காதது ஆகும். போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றாததுடன், நம்மில் சிலர் சாலையில் ஓட்டும் வாகனங்களை ஏடாக்கூடமாக வைத்திருப்பதையும் பார்க்க முடிகிறது.

கடைசியா KGF படத்துல பார்த்தது! ஹெலிகாப்டரில் வந்த தொழிலதிபர்

காரை டெலிவிரி பெறுவதற்கு கஸ்டமர்கள் பல்வேறு விதமான புதுமையான வழிகளில் ஷோரூம்களுக்கு வந்துள்ளதை பார்த்து இருக்கிறோம். சிலர், விலை குறைவான காரை டெலிவிரி பெற விலைமிக்க சொகுசு காரில் ஷோரூமுக்கு வந்துள்ளனர். அதேபோல், சிலர் காரை டெலிவிரி எடுக்க குதிரை வண்டியில் ஷோரூமுக்கு வந்துள்ள சம்பவங்களை கூட பார்த்திருக்கிறோம். ஆனால், இங்கு ஒருவர் ஹெலிகாப்டரில் (Helicopter) வந்தது பார்ப்போரை பெரிதும் கவனம் ஈர்த்துள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.