இன்னும் 45 நாள்ல இந்த இ-பைக் சென்னைல விற்பனைக்கு வர போகுதா!

இந்தியாவைச் சேர்ந்த முன்னணி மின்சார வாகன உற்பத்தி நிறுவனம் ஒன்று தன்னுடைய இ-பைக்கை மேலும் 8 புதிய நகரங்களில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சமீபத்திலேயே இந்த நிறுவனம் அதன் இ-பைக்கை பெங்களூருவில் வெற்றிகரமாக விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. மேட்டர் ஏரா இ-பைக் (Matter Aera Electric Bike)கையே அது விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. இப்போது இந்த மின்சார பைக்கிற்கான புக்கிங் பணிகளே பெங்களூருவில் தொடங்கி இருக்கின்றது.

காரை புக் செய்தவர்களை ஓட்டலுக்கு கூட்டிட்டு போனது இதுக்காகவா

பி.ஒய்.டி (BYD), சீனாவை சேர்ந்த உலகளவில் பிரபலமான எலக்ட்ரிக் கார் (Electric Car) நிறுவனம். இந்தியாவில் குறுகிய காலத்திலேயே முன்னணி எலக்ட்ரிக் கார் நிறுவனமாக வளர்ந்து நிற்கிறது. இதற்கு முக்கிய காரணம், இந்தியாவில் விரைவாகவே பிஒய்டி நிறுவனம் கொண்டுவந்த சேல்ஸ் & சர்வீஸ் நெட்வொர்க் ஆகும்.

ஏழைகளும் இ-ஸ்கூட்டர பயன்படுத்தனும்! ஏத்தர் புதிய திட்டம்!

இந்தியாவின் முன்னணி மின்சார இரண்டுசக்கர வாகன (Electric Two Wheeler) உற்பத்தி நிறுவனங்களில் ஏத்தர் எனெர்ஜி (Ather Energy)-யும் ஒன்றாகும். டிவிஎஸ் (TVS) மற்றும் பஜாஜ் ஆட்டோ (Bajaj Auto) ஆகிய நிறுவனங்களுக்கு அடுத்தபடியான இடத்தில் இந்த பிராண்டே இப்போது மின்சார டூ-வீலர் விற்பனையில் உள்ளது. ஏற்கனவே இது ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தை விற்பனையில் பின்னுக்கு தள்ள தொடங்கிவிட்டது என்பது கவனிக்கத்தகுந்தது. இத்தகைய பிராண்டே தன்னுடைய நிலையை மேலும் முன்னணி இடத்திற்கு எடுத்துச் செல்லும் பணியில் களமிறங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த காருக்குதான் நாடே ரொம்ப நாளா வெயிட் பண்ணீட்டு இருக்கு!

இந்திய சந்தையில் மிகவும் அதிகமாக விற்பனையாகி கொண்டுள்ள கியா நிறுவனத்தின் கார்களில் ஒன்று கேரன்ஸ் (Kia Carens). இது 6 சீட்டர் மற்றும் 7 சீட்டர் ஆப்ஷன்களில் கிடைத்து வரும் ஒரு எம்பிவி ரக கார் ஆகும். கியா கேரன்ஸ் காருக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் ஏற்கனவே நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இருப்பினும் இந்த காரின் விற்பனை எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க வேண்டும் என கியா நிறுவனம் விரும்புகிறது. எனவே கேரன்ஸ் காரின் அப்டேட் செய்யப்பட்ட ஃபேஸ்லிஃப்ட் மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்ய கியா நிறுவனம் தயாராகி வருகிறது.
Advertisement

சர்வீஸ் சென்டருக்கு போய்ட்டு தைரியமா சலுகையை கேளுங்க!!

ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் (Hyundai Motor India Limited) நிறுவனம் புதியதாக 'ஹூண்டாய் ஸ்மார்ட் கேர் கிளினிக்' (Hyundai Smart Care Clinic) என்கிற திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. ஹூண்டாய் காரை வைத்துள்ள ஒவ்வொருவரும் பயன்படுத்தக் கூடிய இந்த புதிய திட்டத்தை பற்றி தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

ஆடம்பர காரை வாங்கி குவிக்கும் ஹோண்டா கார் விற்பனையாளர்!

மற்றவர்களுக்கு ஹோண்டா கார் (Honda Car)-களை விற்பனைச் செய்துக் கொண்டிருக்கும் ஒருவர் தன்னுடைய சொந்த பயன்பாட்டிற்கு வேற லெவல் ஆடம்பர கார்களை வாங்கிக் கொண்டிருக்கின்றார். இவர் யார் என்பது பற்றிய தகவலையும், அவரிடம் இருக்கும் விலை உயர்ந்த கார்களின் லிஸ்ட்டையும் இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். விநாயக் கர்வே, இவரே அந்த நபர் ஆவார். இவர் ஹோண்டா கார் விற்பனையகத்தை வைத்திருக்கின்றார். இவர் இந்த தொழிலில் மட்டுமல்ல இன்னும் பல்வேறு பிசினஸ்களை மேற்கொண்டு வருகின்றார்.

ஐபிஎல்-இல் எடுக்காததால் பழைய BMW காரில் கிரிக்கெட் வீரர்!!

சச்சின் டெண்டுல்கர் (Sachin Tendulkar) அளவிற்கு ஒரு சமயத்தில் தூக்கி வைத்து பேசப்பட்ட கிரிக்கெட் வீரர், பிரித்வி ஷா (Prithvi Shaw). பேட்ஸ்மேனான இவரது சில கிரிக்கெட் ஷாட்களை எல்லாம் பார்த்து இந்தியாவிற்கு அடுத்த சச்சின் கிடைத்து விட்டார் என்றெல்லாம் கூறினர்.

நாலர கோடி ரூபா கார்ல வந்த வயசு பொண்ண பாக்க அலைமோதிய கூட்டம்!

இந்தியாவில் மெர்சிடிஸ் பென்ஸ் (Mercedes Benz) நிறுவனத்தின் சொகுசு செடான் ரக கார்களுக்கு (Luxury Sedan Cars) மிகப்பெரிய ரசிகர்கள் வட்டம் இருக்கிறது. குறிப்பாக திரையுலக நட்சத்திரங்கள் பலரும், மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் சொகுசு செடான் ரக கார்களில் பயணம் செய்வதை விரும்புகின்றனர். மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் சொகுசு செடான் ரக கார்களில் சௌகரியம், பாதுகாப்பு மற்றும் செயல்திறன் ஆகிய 3 முக்கிய அம்சங்களும் ஒருங்கிணைந்து காணப்படுவதுதான் இதற்கு காரணம். மெர்சிடிஸ் பென்ஸ் மேபெக் எஸ்-க்ளாஸ் (Mercedes Benz Maybach S-Class) காரை இதற்கு ஒரு உதாரணமாக எடுத்து கொள்ள முடியும்.

8ஆண்டு அல்லது 80,000கிமீ வாரண்டி குறைவான கட்டணத்தில்!

முன்னணி வாகன உற்பத்தி நிறுவனம் ஒன்று தன்னுடைய தயாரிப்பின் பக்கம் வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டு 8 ஆண்டுகள் அல்லது 80 ஆயிரம் கிமீ வாரண்டி திட்டத்தை குறைவான கட்டணத்தில் வழங்க இருப்பதாக அறிவித்திருக்கின்றது. ஓபென் எலெக்ட்ரிக் (Oben Electric), இதுவே அத்திட்டத்தை அறிவித்திருக்கும் பிராண்டு ஆகும். மின்சார இரண்டு சக்கர வாகன உற்பத்தியை மட்டுமே முக்கிய தயாரிப்பாகக் கொண்டு நாட்டில் இயங்கி வரும் ஓர் நிறுவனமே ஓபென் எலெக்ட்ரிக்.

எங்கே பார்த்தாலும் புது ராயல் என்ஃபீல்டு பைக்கின் படங்கள்!!

ராயல் என்ஃபீல்டு (Royal Enfield) நிறுவனத்தில் இருந்து சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஹண்டர் 350 (Hunter 350) பைக்கிற்கு மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பு கிடைத்து வருகிறது. இருப்பினும், ஹண்டர் 350 பைக் அறிமுகம் செய்யப்பட்டு சில வருடங்களாகி விட்டதால், இந்த பைக்கை அப்டேட் செய்ய ராயல் என்ஃபீல்டு தயாராகி வருகிறது.

சலூனுக்கு வந்துட்டு போகவே ஒன்னரை கோடி ரூபா காரா!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமான சொகுசு கார் நிறுவனங்களில் ஒன்றாக இருப்பது மெர்சிடிஸ் பென்ஸ் (Mercedes Benz). இதன் செடான் (Sedan) மற்றும் எஸ்யூவி (SUV) ரக கார்களுக்கு, திரையுலக நட்சத்திரங்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு காணப்படுகிறது. குறிப்பாக மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்இ (Mercedes Benz GLE) சொகுசு காரை, திரையுலக நட்சத்திரங்கள் பலரும் பயன்படுத்தி வருகின்றனர். எஸ்யூவி ரகத்தை சேர்ந்த இந்த கார், மொத்தம் 3 வேரியண்ட்களில் (Variants) கிடைத்து வருகிறது. அவை 300d 4Matic AMG Line, 450 4Matic மற்றும் 450d 4Matic ஆகியவை ஆகும்.

டெலிவரி எடுத்த 1 மணி நேரத்தில் கார் மொத்தமும் போச்சு..

இசைத் தயாரிப்பாளர் ஒருவரின் விலை உயர்ந்த கார் டெலிவரி எடுத்த அடுத்த ஒரு மணி நேரத்திலேயே தீப் பிடித்து எரிந்து நாசமாகியிருக்கின்றது. இந்த சம்பவம் ஜப்பான் தலைநகரம் டோக்கியோவிலேயே அரங்கேறி உள்ளது. அங்கு நடைபெற்ற இந்த சம்பவம் எப்படி இந்தியா வரைக்கு பேசு பொருளாக மாறியிருக்கின்றது என நீங்கள் கேட்கலாம். தீ விபத்தில் சிக்கி இருப்பது ஃபெர்ராரி 458 ஸ்பைடர் (Ferrari 458 Spider) கார் மாடல் ஆகும். உலகில் விற்பனையில் இருக்கும் மிகவும் அரிய வகை கார் மாடல்களில் இதுவும் ஒன்றாகும்.
Advertisement

டாடா காரை எத்தனை முறை சோதனை பண்ணாலும் இதுதான் ரிசல்ட்!!

டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனத்தில் இருந்து பல்வேறு எலக்ட்ரிக் கார்கள் (Electric Cars) விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அவற்றுள் முக்கியமானது, நெக்ஸான் இவி (Nexon EV) ஆகும். ஏன் இது முக்கியமானது என கூறுகிறோம் என்றால், எலக்ட்ரிக் கார்கள் விற்பனையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு மிக பெரும் தைரியத்தை கொடுத்த எலக்ட்ரிக் கார், நெக்ஸான் இவி எனலாம்.

பட வாய்ப்பு கையை விட்டு நழுவிய நடிகைக்கு கார் பரிசு..

பிரபல பாலிவுட் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ரா. இவரின் மனைவி கியாரா அத்வானி. இவரும் ஓர் மிகப் பெரிய பிரபலம் ஆவார். இவர்கள் இருவருக்கும் சீக்கிரமே குழந்தை பிறக்க இருக்கின்றது. ஆமாங்க, கியாரா அத்வானி தற்போது கருவுற்றிருக்கின்றார். இந்த நிலையிலேயே அவர் அலுங்காமல் குலுங்காமல் பயணிக்க வேண்டும் என்பதற்காக கணவர் சித்தார்த் மல்ஹோத்ரா புதிய ஆடம்பர காரை வாங்கி கொடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆடம்பர அம்சங்களுக்கு பெயர்போன கார் மாடலான டொயோட்டா வெல்ஃபையர் (Toyota Vellfire)-ரையே அவர் பரிசாக தந்திருக்கின்றார்.

61 வருஷத்தை கடந்தும் கன் மாதிரி நிற்கும் ஃபோர்டு மஸ்டங்!!

ஃபோர்டு மோட்டார் (Ford Motor), அமெரிக்காவை சேர்ந்த உலகின் மிக பழமையான ஆட்டோமொபைல் நிறுவனங்களுள் ஒன்று. ஃபோர்டு மோட்டார் உருவான சமயத்தில் தோன்றிய கார் நிறுவனங்கள் பல இப்போதும் செயல்பட்டு வருகின்றன. மெர்சிடிஸ் (Mercedes), ஃபோக்ஸ்வேகன் (Volkswagen) என இந்த லிஸ்ட்டை சொல்லிக் கொண்டே போகலாம்.

ஒரே வருஷத்துல இத்தனை லட்சம் பேர் ஹெல்மெட் வாங்கிட்டாங்களா?

ஸ்டீல்பேர்ட் ஹை-டெக் இந்தியா 2024-25 நிதியாண்டில் 87 லட்சம் ஹெல்மெட்டுகள் விற்பனை செய்துள்ளது, 2025-26 நிதியாண்டில் ஒரு கோடி ஹெல்மெட்டுகள் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளது, சாலைப் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் தயாரிப்பு வரம்பை விரிவுபடுத்தியுள்ளது.

65 இன்ச் 4கே டிவியோட இந்த வாகனம் வர போகுது!!!

பெரும் பணக்காரர்களின் ஆடம்பர பங்களாக்களுக்கே டஃப் கொடுக்கும் வகையில் ஓர் வாகனத்தை முன்னணி கார் உற்பத்தி நிறுவனம் ஒன்று தயார் செய்திருக்கின்றது. இந்த வாகனத்திற்கு முன்னால் சொகுசு கப்பலே தோற்று போகக்கூடும். அந்த அளவிற்கே தன்னுடைய புதுமுக வாகனத்தை உலக புகழ்பெற்ற சொகுசு கார் உற்பத்தி நிறுவனமான மெர்சிடிஸ் பென்ஸ் (Mercedes-Benz)-ஸே தயார் செய்திருக்கின்றது. விஷன் வி (Vision V) எனும் மினி வேன் வகை வாகனத்தையே அது தயார் செய்திருக்கின்றது. இது பார்க்க லிமோசைன் வகை வாகனத்தைப் போலவும் தெரிகின்றது. இந்த வாகனத்தையே அது தற்போது வெளியீடும் செய்து இருக்கின்றது.

குடும்பத்தோட 7 பேர் ஒன்னா போகலாம்னா சும்மாவா?

மாரூதி சுசுகி எர்டிகா விற்பனையில் முன்னிலை வகித்தது மற்றும் மாறிவரும் நுகர்வோர் விருப்பங்களை பிரதிபலிக்கும் போக்குகளுடன், 2025-ல் SUV-கள் எவ்வாறு செயல்பட்டன என்பதை கண்டறியவும்.

புது டொயோட்டா காரில் 8, 9 பேர்னு போனாலும் இடம் இருக்கும்!!

டொயோட்டா (Toyota) நிறுவனத்தில் இருந்து சமீப காலமாக மாருதி சுஸுகி (Maruti Suzuki) கார்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட கார்கள் தான் சிறப்பாக விற்பனையாகி வருகின்றன. அவ்வாறு, மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாரா (Grand Vitara) காரை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட டொயோட்டா கார், அர்பன் க்ரூஸர் ஹைரைடர் (Urban Cruiser Hyryder) ஆகும்.

ரஜினி படத்துல வர்ர சுவரில் ஓட கூடிய கார் நிஜத்தில் வந்தாச்சு

முதல்முறையாக கார் உருவாக்கப்பட்ட சமயத்தில், அதாவது 100 வருடங்களுக்கு முன்னர் அந்த சமயத்தில் வாழ்ந்த மக்கள் எதிர்காலத்தில் கார்கள் சுவர்களிலும், மேற்கூரையில் அந்தரத்திலும் இயங்கக்கூடியவை ஆக இருக்கும் என நினைத்தனர். அதாவது, எதிர்காலத்தில் பறக்கும் கார்கள் தான் அதிகமாக இருக்கும் என தற்போது நாம் நினைப்பதை போல.
Advertisement

பஞ்ச் இகாரின் வேகமா சார்ஜாகும் தேர்வு விற்பனைக்கு கிடைக்காது

இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கு கிடைத்துக் கொண்டிருக்கும் வரவேற்பு தொடர்ச்சியாக அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. ஆனால், இது அனைத்து மின்சார வாகன மாடல்களுக்கும் பொருந்ததாது. ஒரு சில இ-கார் மாடல்கள் மக்களின் கவனத்தைக் கவர முடியாமல் திணறிக் கொண்டிருக்கின்றன. அந்த மாதிரியான கார் மாடலாகவே டாடா பஞ்ச் இவி (Tata Punch EV) கார் மாடலின் குறிப்பிட்ட சில வேரியண்டுகள் மாறியிருக்கின்றன. இந்தியாவில் கணிசமான அளவு நல்ல வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கும் மின்சார கார் மாடலாக பஞ்ச் இவி தென்படுகின்றது.

டாடாவை சீண்ட பார்த்தவர்களுக்கு பதிலடி ரெடி!

டாடா மோட்டார்ஸ் 500 கிமீக்கும் அதிகமான வரம்பு மற்றும் மேம்பட்ட அம்சங்களை வழங்கும் ஹரியர் EV மற்றும் சியரா EV ஆகியவற்றை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. எதிர்பார்க்கப்படும் மாடல்கள் இந்தியாவில் மின்சார இயக்கத்தை உயர்த்தும்.

உருவாகி வரும் புதிய டாடா காரை நேரில் பார்த்தால் விடுவோமா?

டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனத்தில் இருந்து அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்படும் கார்களுள் அல்ட்ராஸ் (Altroz) ஒன்றாகும். டாடா மோட்டார்ஸின் சற்று விலைமிக்க பிரீமியம் தரத்திலான ஹேட்ச்பேக் (Hatchback) ரக காராக அல்ட்ராஸ் விற்பனை செய்யப்படுகிறது.

நிச்சயதார்தத்திற்கு பரிசாக கிடைத்த காரில் வலம் வந்த பிரபலம்!

ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்சண்ட், நாடே மிரண்டு போகும் வகையிலேயே இவர்களின் திருமணம் சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்றது. வெகு விமரிசையாக நடைபெற்ற இந்த திருமணத்தில் உலகின் பெரும் பணக்காரர்கள் பலர் கலந்துக் கொண்டனர். அவர்கள் மட்டுமல்ல உலகின் முன்னணி நட்சத்திர நடிகர்கள் பலரும் இந்த திருமணத்தில் கலந்துக் கொண்டனர். திருமணத்தைப் போலவே அவர்களின் நிச்சயதார்த்த நிகழ்வும் மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது. அப்போது மணமக்களுக்கு பல விலையுயர்ந்த பொருட்கள் பரிசாக கிடைத்தன.

மின்சாரம்-பெட்ரோலில் இயங்கும் பைக்கை உருவாக்கியிருக்கு..

மாருதி சுஸுகி (Maruti Suzuki) மற்றும் டொயோட்டா (Toyota) நிறுவன கார்களில் வழங்கப்படுவதைப் போல ஹைபிரிட் (Hybrid) டெக்னாலஜியை பிரபல இரண்டு சக்கர வாகன உற்பத்தி நிறுவனம் அதன் பைக்கில் வழங்கி இருக்கின்றது. யமஹா (Yamaha)-வே அந்த நிறுவனம் ஆகும். தன்னுடைய புதுமுக பைக் மாடலிலேயே இந்த அதிக எரிபொருள் சிக்கனத்தைச் செய்து, மைலேஜை வாரி வழங்கும் டெக்னாலஜியை வழங்கி இருக்கின்றது. புதிய ஸ்டைலில் தயார் செய்யப்பட்டு இருக்கும் எம்டி 09 (MT 09) பைக் மாடலிலேயே ஹைபிரிட் டெக்னாலஜி வழங்கப்பட்டு இருக்கின்றது.