அசோக் லேலண்ட்-இன் புதிய பேருந்து உற்பத்தி ஆலை திறப்பு!
ஆட்டோமொபைல்
- 1 year, 5 month, 4 days ago
அசோக் லேலண்ட் (Ashok Leyland), இந்தியாவின் முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்களில் இதுவும் ஒன்று. இந்த நிறுவனமே தன்னுடைய புதிய வாகன உற்பத்தி ஆலையை தற்போது திறந்து இருக்கின்றது. பிரமாண்டமாக 75 ஏக்கர் பரப்பளவிலேயே தன்னுடைய புதிய ஆலையை அசோக் லேலண்ட் திறந்திருக்கின்றது. நமது அண்டை மாநிலமான ஆந்திராவிலேயே புதிய ஆலை திறக்கப்பட்டு உள்ளது. துள்ளியமாக சொல்ல வேண்டும் என்றால் விஜயவாடாவில் அசோக் லேலண்டின் புதிய ஆலை திறக்கப்பட்டு இருக்கின்றது.