கார் எஞ்சினை நீண்ட நேரம் ஐட்லிங்கில் விடுவதால், ஏற்படும் தீமைகள் குறித்த தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.
கார் உரிமையாளர்கள் அடிப்படையாக தெரிந்து வைத்திருக்க வேண்டிய சில விஷயங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
இந்தியாவை பொறுத்தவரை நீங்கள் சில ஆயிரம் கிலோ மீட்டர்கள் காரை ஓட்டினாலே, உங்கள் காரின் வீல் அலைன்மெண்ட் பாதிக்கப்படும். இந்தியாவில் உள்ள மிகவும் கரடு முரடான, மோசமான சாலைகள்தான் இதற்கு காரணம். ஆனால் வீல் அலைன்மெண்ட் என்பது ஒரு காருக்கு மிகவும் முக்கியமானது. எனவே ஒவ்வொரு 5 ஆயிரம் கிலோ மீட்டர்களுக்கு ஒரு முறையும் கண்டிப்பாக வீல் அலைன்மெண்ட்டை சரிபார்த்து கொள்ளுங்கள்.
நீங்கள் ஒரு விஷயத்தை கவனித்துள்ளீர்களா? பொதுவாக நாம் காரை ஸ்டார்ட் செய்த பிறகுதான் சீட் பெல்ட் அணிவது, மிரர்களை அட்ஜெஸ்ட் செய்வது போன்ற வேலைகளை எல்லாம் செய்வோம். ஆனால் இவற்றை காரை ஸ்டார்ட் செய்வதற்கு முன்பே செய்து விடுவது நல்லது. இதன் மூலமாக ஓரிரு நிமிடங்கள் கார் ஐடிலிங்கில் இருப்பது தவிர்க்கப்படும். எரிபொருளும் மிச்சமாகும்.