இன்னும் ஷோரூமுக்கு கூட போகல... அதுக்குள்ள இப்படி பண்றீங்களே!

ஸ்கோடா ஆட்டோ (Skoda Auto) நிறுவனத்தில் இருந்து சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட கார் கைலாக் (Kylaq) ஆகும். இந்த புதிய ஸ்கோடா கார் கஸ்டமர்களின் கைகளுக்கு கூட இன்னும் சென்று சேராத நிலையில் அதற்குள்ளாக முதல் கைலாக் கார் விபத்தில் சிக்கி உள்ளது. அதுகுறித்து இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்டுள்ள படங்கள் பலரது கவனத்தை ஈர்த்துள்ளன. இந்த விபத்தில் லாரி ஒன்றுடன் கைலாக் கார் விபத்தில் சிக்கியுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

கியா சைரஸ் புதுமையான எஸ்யூவி அம்சங்களுடன் அறிமுகமாகிறது

வென்டிலேட்டட் இருக்கைகள் மற்றும் 30 அங்குல டிரினிட்டி ஸ்கிரீன் போன்ற தனித்துவமான வசதிகளை கொண்ட இந்தியாவில் புதிய எஸ்யூவி கியா சைரஸை கண்டறியவும், இது புதிய தரத்தை நிர்ணயிக்கிறது.

ஹோண்டாவின் இந்த கார் இவ்வளவு மைலேஜ் தருமா?

இந்தியாவில் ஹோண்டா ZR-V ஹைப்ரிட்டை அறிமுகப்படுத்துவது குறித்து ஆராய்ந்து பாருங்கள். மிட்-சைஸ் SUV பிரிவில் அறிமுகமாகும் இந்த வாகனத்தின் அம்சங்கள், செயல்திறன் மற்றும் பாதுகாப்பு அம்சங்களை கண்டறியவும்.

இந்த டாடா காரை வாங்கிட்டா எல்லாரது பார்வையும் உங்க மீதுதான்!

டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனம் எந்தவொரு அறிவிப்பும் இன்றி அதன் நெக்ஸான் சிஎன்ஜி டார்க் எடிசன் (Nexon CNG Dark Edition) காரை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. மொத்தம் 3 விதமான வேரியண்ட்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த புதிய டாடா சிஎன்ஜி ஸ்பெஷல் எடிசன் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.12.70 லட்சத்தில் இருந்து ரூ.14.70 லட்சம் வரையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. புதிய நெக்ஸான் சிஎன்ஜி டார்க் எடிசன் காரை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.
Advertisement

இது நம்ம இந்திய தயாரிப்புனு சொன்ன நம்ப முடிகிறதா?

இந்திய குடியரசு தின விழாவை சிறப்பிக்கும் விதமாக வீரர்களின் அணி வகுப்பைத் தொடர்ந்து, வாகனங்கள் சிலவற்றின் அணி வகுப்பும் அரங்கேற்றப்பட்டது. இந்த அணிவகுப்பில் பச்சை நிற வண்ணத்தில் மிடுக்காக ஊர்ந்து சென்ற வாகனம் ஒன்று பலரின் கவனத்தைக் கவரும் வகையில் அமைந்தது. நம்மில் ஒரு சிலருக்கு அது இந்திய தயாரிப்பு என்று என தெரியும். ஆனால், பலருக்கு அது என்ன கார் மாடல் என்பதே தெரியாது. மிக முக்கியமாக அது இந்திய தயாரிப்பா என ஆச்சரியத்துடன் கேட்கக் கூடியவர்களே மிக அதிகளவில் இருக்கின்றனர். இத்தகையோருக்கான பதிவே இதுவாகும்.

துபாய்ல வேலை செய்றவங்களே இந்த பைக்கை வாங்க யோசிப்பாங்கபோல!

இந்தியாவில் மிகவும் அதிக விலையில் பைக் ஒன்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றது. துபாயில் பணிபுரிபவர்கள் மட்டுமல்ல பெருத்த செல்வந்தர்களே வாங்க தயங்கக் கூடிய ஓர் விலையிலேயே அந்த பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றது. அப்படி என்ன பைக் என்று தானே கேக்குறீங்க, டிரையம்ப் (Triumph) நிறுவனத்தின் ஸ்பீடு ட்வின் 1200 (Speed Twin 1200) பைக் மாடல்தான் அது ஆகும். இந்த பைக்கிற்கு உச்சபட்ச விலையாக ரூ. 12.75 லட்சம் நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது.

பெட்ரோல், எலக்ட்ரிக் இரண்டிலும் இயங்கக்கூடிய கார்!!

மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனம், சமீப காலமாக ஹைப்ரீட் (Hybrid) கார்களில் முனைப்பு காட்டி வருகிறது. அதாவது, பெட்ரோல் மற்றும் எலக்ட்ரிக் என இரு விதமான எரிபொருட்களிலும் இயங்கக்கூடிய கார்களை உருவாக்குவதில் மாருதி சுஸுகி ஆர்வமாக உள்ளது. அதன் வெளிப்பாடாக, ஃபிரான்க்ஸ் ஹைப்ரீட் (Fronx Hybrid) காரை உருவாக்கும் பணிகளில் மாருதி சுஸுகி ஈடுப்பட்டுவரும் நிலையில், அந்த கார் சோதனை ஓட்டத்தில் உட்படுத்தப்பட்டு உள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

கணவர், மகன் உடன் பிஎம்டபிள்யூ காரை டெலிவிரி பெற்ற ஆர்ஜே ரேணு

இன்றைய காலத்தில் வீடியோ ஜாக்கிகள் எந்த அளவிற்கு பிரபலமாக உள்ளனரோ அதே அளவிற்கு ஒரு காலத்தில் ரேடியோ ஜாக்கிகள் பிரபலமாக இருந்தனர். அதாவது, ரேடியோ நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குபவர்கள். இன்னும் சொல்லப்போனால், இன்றைய காலத்தில் டிவி சேனல்கள் அதிகரித்துள்ளதை போலவே, அவற்றை தொகுத்து வழங்குபவர்களும் அதிகரித்துவிட்டனர். ஆனால், ஒரு சமயத்தில் நாடு முழுவதுமே விரல்விட்டு எண்ணிவிட கூடிய அளவில் குறைவான ஜாக்கிகள் மட்டுமே இருந்ததால் அவர்கள் மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்தனர்.

மாருதி எலெக்ட்ரிக் காருக்கான புக்கிங் தொடங்கிருச்சா!..

மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனத்தின் எலெக்ட்ரிக் காருக்கு இந்தியாவில் ரிசர்வேசன் பணிகள் தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நிறுவனம் நீண்டகால இழுபறிக்கு பின்னர் ஒரு வழியாக தன்னுடைய இ-விட்டாரா (eVitara) எனும் எலெக்ட்ரிக் கார் (Electric Car) மாடலை சமீபத்தில் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போ வாயிலாக இந்தியாவில் காட்சிப்படுத்தியது. இந்த காருக்கு இந்தியர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு மிக பெரிய அளவில் நிலவி வந்தது. இந்த மாதிரியான சூழலிலேயே பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 வாயிலாக இ-விட்டாராவை நாட்டில் மாருதி சுஸுகி வெளியீடு செய்தது.

டொயோட்டா இன்னோவா மூலம் இழுத்து செல்லப்பட்ட கார்கள்!!

டொயோட்டா இன்னோவா (Toyota Innova), இந்தியா உள்பட உலகளவில் தரமான மற்றும் வலிமையான கார் என சொல்லலாம். இதனாலேயே, இந்தியாவில் டொயோட்டா இன்னோவா மற்றும் ஃபார்ச்சூனர் கார்களுக்கு மட்டும் எப்போதுமே வரவேற்பு இருப்பது வழக்கம். இந்த நிலையில், இன்னோவா காரின் வலிமையை பறைச்சாற்றும் வகையில், இந்தியாவில் நெடுஞ்சாலை ஒன்றில் 3 கார்களை டொயோட்டா இன்னோவா காரில் ஒன்றாக கட்டி இழுத்து சென்றுள்ளனர். இதுகுறித்த கூடுதல் விபரங்களை இங்கே இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

1 கோடி ரூபா கார்ல ஒன்னா சுத்தறது அவங்களா!

பிக் பாஸ் (Bigg Boss) நிகழ்ச்சிக்கு என்று, தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. எவ்வளவு வேலை இருந்தாலும், பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்த்து விட்டுதான் பலர் படுக்கைக்கே செல்கின்றனர். அந்த அளவிற்கு பிக் பாஸ் நிகழ்ச்சி, ரசிகர்களை கட்டி போட்டுள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிரபலங்கள் பலரும் கலந்து கொள்கின்றனர். இதில் ஒரு சிலருக்கு இடையே நல்ல நட்பு உருவாகிறது. இதனால் பிக் பாஸ் வீட்டு விட்டை வெளியே வந்த பிறகும், அவர்கள் ஒன்றாக வலம் வந்து கொண்டுள்ளனர்.

விற்பனைக்கு வந்த இரண்டரை ஆண்டுகளில் 5 லட்சம் யூனிட் விற்பனை!

இந்தியா இரண்டு சக்கர வாகனங்களுக்கான மிகப் பெரிய மார்க்கெட் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. இதை மறந்திருக்கும் இந்தியர்களுக்கு மீண்டும் நினைவுப்படுத்துகின்ற விதமான ஓர் நிகழ்வே தற்போது நாட்டில் அரங்கேறி இருக்கின்றது. இரண்டு சக்கர வாகன மாடல் ஒன்று விற்பனைக்கு வந்த இரண்டரை ஆண்டுகளிலேயே 5 லட்சம் யூனிட்டுகள் விற்பனை எனும் மாபெரும் சாதனை மைல் கல்லை எட்டி இருக்கின்றது. அது வேறு ஒன்றும் ராயல் என்பீல்டு (Royal Enfield) நிறுவனத்தின் முக்கியமான தயாரிப்புகளில் ஒன்றாக மாறியிருக்கும் ஹண்டர் 350 (Hunter 350) மோட்டார்சைக்கிள்தான்.
Advertisement

82 வயது முதியவருக்கு இது கார் தானா என்கிற சந்தேகம்!

இந்தியா உள்பட உலகளவில் ஆட்டோமொபைல் துறை ஆனது கடந்த 100 ஆண்டுகளில் பல விஷயங்களில் முன்னேற்றம் கண்டுள்ளது. அந்த சமயத்தில் பயன்பாட்டில் இருந்த கார்களுக்கும், இப்போதும் இருக்கும் எலக்ட்ரிக் கார்களுக்கும் மிக பெரிய வித்தியாசம் உள்ளது. 1950ஆம் காலக்கட்டத்தில் கார்களை ஓட்டியவர்களுக்கு இப்போதைய மாடர்ன் கார்கள் வித்தியாசமாகவும், விசித்திரமாகவும் இருக்கும். அதனை வெளிக்காட்டும் வகையில், 82 வயதான முதியவர் ஒருவர் டெஸ்லா சைபர்டிரக் (Tesla Cybertruck) வாகனத்தை ஓட்டி பார்க்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதனை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

காரில் வித்தை காட்டிய பிரபல தமிழ் பட நடிகை! அவங்களா இது!

இந்தியாவை பொறுத்தவரை நடிகைகள் மிகவும் விலை உயர்ந்த சொகுசு கார்களில் பயணம் செய்வது என்பது வழக்கமான ஒரு விஷயம்தான். ஆனால் டிரைவர் இருக்கையில் அவர்களை காண்பது என்பது அரிதான ஒரு விஷயமாகவே இருக்கிறது. இந்திய நடிகைகள் பெரும்பாலும் கார்களை ஓட்டுவதில்லை. டிரைவர்கள் மூலமாகவே அவர்கள் பயணம் செய்கின்றனர். அப்படி இருக்கும்போது, அரிதிலும் அரிதாக பிரபல நடிகை ஒருவர் தற்போது கார் சாகசத்தில் ஈடுபட்டுள்ளார். அவர் கார் சாகசத்தில் ஈடுபட்ட வைரல் வீடியோ (Viral Video) சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது.

புல்லட் ரயில் சேவை 2026ல் தொடங்கிரும்னு சொன்னது பொய்யா!..

ஒட்டுமொத்த இந்தியாவும் புல்லட் ரயில் சேவையை மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றது. இந்தமாதிரியான சூழலில், புல்லட் ரயில் சேவை குறிப்பிட்ட நேரத்தில் பயன்பாட்டிற்கு வராது என்கிற அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மும்பை - அஹமதாபாத் ஆகிய வழித்தடத்திலேயே இந்தியாவின் முதல் புல்லட் ரயில் சேவை தொடங்கப்படுவதற்கான வேலைகள் தொடங்கப்பட்டன. வருகின்ற 2026 ஆம் ஆண்டில் இங்கு புல்லட் ரயில் சேவை தொடங்கப்பட்டுவிடும் என்றும் கூறப்பட்டது. முதல் கட்டமாக மும்பை - அஹமதாபாத் இடையிலான புல்லட் சேவை ரூட்டில் சூரத் - பிலிமோரா இதற்கிடையிலேயே அந்த ரயில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

புதுசா ஸ்கூட்டரை வாங்கியிருக்கும் இந்த தம்பதியை தெரிகிறதா?

யூடியூப் (Youtube) மற்றும் இன்ஸ்டாகிராம் (Instagram)-ஐ திறந்தாலே திருமணமான தம்பதிகளின் ரீல்ஸ் வீடியோவை குறைந்தது ஒன்றை ஆவது பார்க்க முடிகிறது. சில நேரங்களில் எல்லாம், அவர்களது ரொமான்ஸ் அல்லது காமெடி வீடியோக்கள் தான் தொடர்ச்சியாக வந்துக் கொண்டே இருக்கும். இதனாலேயே ரீல்ஸ் பக்கம் போகவே முடியவில்லை என்பது சிங்கிள் பசங்களின் மன குமுறலாக உள்ளது. அவ்வாறு, பேச்சிலர்களின் குமுறல்களுக்கு ஆளான இன்ஸ்டா தம்பதி தான், நிகில்- லீனா (Nikhil- Lena) ஆவர். இவர்கள் புதியதாக பிராண்ட்-நியூ எலக்ட்ரிக் ஸ்கூட்டர் (Electric Scooter) ஒன்றை வாங்கியுள்ளனர்.

கணவன், மனைவி ஒன்னு சேர்ந்தா எதுவும் சாத்தியமாகும் போலையே..

'மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்' இந்த பழமொழிக்கு ஏற்ற மனைவியே ஓர் நபருக்கு அமைந்திருக்கின்றார். கணவன் மனைவி இருவரும் சேர்ந்து மிகப் பெரிய சாதனையைப் படைத்திருக்கின்றனர். பெரு நிறுவனங்களே செய்ய தயங்கும் ஓர் வேலையை அவர்கள் செய்து காட்டியிருக்கின்றனர். வேறு ஒன்றும் இல்லைங்க கணவன்-மனைவி இருவரும் சேர்ந்து ஓர் வழக்கமான காரை டபுள் டக்கர் வாகனமாக மாற்றியிருக்கின்றனர். இந்த மாதிரியான தொழிலை இந்தியாவில் எந்தவொரு கார் உற்பத்தி நிறுவனம் இதுவரை தொடங்கவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது.

ஹூண்டாய் காருக்கும் மஹிந்திராவுக்கும் தான் இனி போட்டியே!!

ஹூண்டாய் கிரெட்டா (Hyundai Creta), இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்படும் கார்களுள் ஒன்றாகும். இன்னும் சொல்லப்போனால், இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகும் எஸ்யூவி கார் ஆகும். அந்த அளவிற்கு வரவேற்பை பெற்ற கிரெட்டா கார் எலக்ட்ரிக் வெர்சனில் கொண்டுவரப்படுவதாக அறிவிக்கப்பட்ட போது, இதற்கு டாடா மோட்டார்ஸின் கர்வ் இவி (Curvv EV) எலக்ட்ரிக் கார் தான் முக்கியமான போட்டியாக இருக்கும் என எதிர்பார்த்தோம். இப்போதும் கர்வ் இவி தான் முக்கியமான போட்டியாக விளங்குகிறது என்றாலும், அதனை காட்டிலும் மஹிந்திரா பிஇ 6 (Mahindra BE 6) எலக்ட்ரிக் கார் முக்கியமான போட்டியாக விளங்குகிறது.

ஹூண்டாயின் விலை குறைவான காரை தண்ணி குடிக்க வைத்த டாடா!

அறிமுகமே தேவை இல்லை என்னும் அளவிற்கு, இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று ஹூண்டாய் எக்ஸ்டர் (Hyundai Exter). மைக்ரோ எஸ்யூவி (Micro-SUV) ரகத்தை சேர்ந்த ஹூண்டாய் எக்ஸ்டர் கார், டாடா பன்ச் (Tata Punch) காருடன் நேருக்கு நேராக மோதி வருகிறது. ஆனால் கடந்த டிசம்பர் மாத விற்பனையில், ஹூண்டாய் எக்ஸ்டர் காரை வீழ்த்தியுள்ளது டாடா பன்ச். இந்த 2 கார்களின், கடந்த 2024ம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) தற்போது வெளியாகியுள்ளது.

உண்மையான டெஸ்லா கார் என்று எத்தனை பேர் ஏமாந்தீங்க?

டெஸ்லா (Tesla), உலகளவில் பிரபலமான மற்றும் அதிக எண்ணிக்கையில் எலக்ட்ரிக் கார்களை விற்பனை செய்யும் நிறுவனம். இந்தியாவில் டெஸ்லா கார்கள் விற்பனை செய்யப்படுவதில்லை என்றாலும், பலத்த போட்டி மிகுந்த சீனா உள்பட வெளிநாடுகளில் விற்பனை படுஜோராக உள்ளது. டெஸ்லாவில் இருந்து கடைசியாக பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான எலக்ட்ரிக் வாகனம், சைபர்டிரக் (Cybertruck) ஆகும். பெரியதாக ஆடம்பர டிசைன்கள் எதுவும் இல்லாமல், கம்பீரமான தோற்றத்தில் சைபர்டிரக் உருவாக்கப்படுகிறது.
Advertisement

வெறும் நாலரை லட்சத்துக்கு 23 கிமீ மைலேஜ் குடுக்கற காரா!

இந்திய சந்தையில் ஹேட்ச்பேக் ரக கார்களுக்கு (Hatchback Cars) நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. குறைவான விலை, அதிக மைலேஜ் மற்றும் ஓட்டுவது எளிது போன்ற காரணங்களால்தான், ஹேட்ச்பேக் ரக கார்களை வாடிக்கையாளர்கள் விரும்பி வாங்குகின்றனர். அப்படி இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் ஹேட்ச்பேக் ரக கார்களில் ஒன்றாக ரெனால்ட் க்விட் (Renault Kwid) திகழ்கிறது. இந்த காரின் கடந்த 2024ம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) தற்போது வெளியாகியுள்ளது.

இந்திய ஆணழகன் வாங்கியிருக்கும் பென்ஸ் காரை பார்த்தீங்களா...

நடிகராக இருந்து திரைப்பட தயாரிப்பாளராக மாறியவர்கள் ஏராளம். அத்தகையவர்களுள் ஒருவர் தான் ஆகாஷ் சவுத்ரி (Akash Chaudhary) ஆவார். ஒருவர் தயாரிப்பாளராக மாறுகிறார் என்றாலே அவரிடம் பணம் கொட்டி கிடக்கிறது என்று அர்த்தம். அதனால், அவரிடம் விலையுயர்ந்த கார்களும் ஏகப்பட்டவை இருக்கும் என உறுதியாக சொல்லலாம். இருப்பினும், ஆகாஷ் சவுத்ரி புதியதாக மெர்சிடிஸ்-பென்ஸ் (Mercedes-Benz) கார் ஒன்றை வாங்கியுள்ளார். யார் இந்த ஆகாஷ் சவுத்ரி என்பதையும், அவர் வாங்கியுள்ள மெர்சிடிஸ் காரை பற்றியும் இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

மோடி இந்த சைக்கிளைதான் வெறிக்க வெறிக்க பார்த்தாரு..

யாரும் எதிர்பார்த்திராத அளவிற்கு மிக சிறப்பாக 'பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025' நடந்து முடிந்திருக்கின்றது. டெல்லியில் நடைபெற்ற இந்த வாகன கண்காட்சியில் எப்போதும் இல்லாத அளவிற்கு இந்த முறை வாகன ஆர்வலர்கள் கலந்துக் கொண்டனர். ஜனவரி 17 தொடங்கி ஜனவரி 22 வரை இந்த ஆட்டோ எக்ஸ்போ இந்தியாவில் நடைபெற்றது. பிரதமர் மோடி-யே இதனைத் தொடங்கி வைத்தார். தொடர்ந்து, ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டு இருந்த சில முக்கிய வாகனங்களை அவர் கண்டு ரசித்தார். அந்தவகையில், அவர் பார்த்ததில் ஒரு சில வாகனங்கள் அவரின் கவனத்தை வெகுவாக கவர்ந்தன.

குட்டியூண்டு இவி காரை இதுவரை 30,000 பேர் புக் பண்ணிட்டாங்க!

மலிவு மின்சார வாகனங்களில் ஜென்சோல் EVயின் வெற்றி இந்தியாவில் அதிகரித்து வரும் தேவையை எடுத்துக்காட்டுகிறது. அவர்களின் புதுமைகளும் உத்திசார்ந்த கூட்டாண்மைகள் பற்றி அறிந்து கொள்ளுங்கள்.

மஹிந்திரா கார்கள் மத்திய அமைச்சரையும் விட்டு வைக்கல!!

மஹிந்திரா (Mahindra) நிறுவனமும் எலக்ட்ரிக் கார்கள் (Electric Cars) விஷயத்தில் தீவிரம் காட்டி வருகிறது. அதன் வெளிப்பாடாக, கடந்த 2024ஆம் ஆண்டின் இறுதியில் பிஇ 6 (BE 6) மற்றும் எக்ஸ்.இ.வி 9இ (XEV 9e) என்கிற இரு எலக்ட்ரிக் கார்களை மஹிந்திரா அறிமுகம் செய்தது. இந்த இரு மஹிந்திரா எலக்ட்ரிக் கார்களும் அவற்றின் கவர்ச்சிக்கரமான தோற்றத்தினால் மக்களை கவர்ந்து வருகின்றன. சாதாரண மக்களை மட்டும் தான் என்று பார்த்தால், மத்திய அமைச்சர் ஒருவரும் மஹிந்திராவின் இந்த புதிய எலக்ட்ரிக் காரில் பயணம் செய்து பார்த்து ஆச்சிரியப்பட்டுள்ளார்.