40 வருட பழைய ஆடி கார் உடன் முன்னாள் கிரிக்கெட் பிரபலம்!!

ரவி சாஸ்த்ரி (Ravi Shastri), இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மற்றும் தலைமை பயிற்ச்சியாளராக பணியாற்றியவர். 1981ஆம் ஆண்டில் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அறிமுகமாகியவர், 1992ஆம் ஆண்டு வரையில் 11 வருடங்களாக இந்திய அணியின் பேட்டிங் ஆல்-ரவுண்டராக ஜொலித்தார். சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகியது என்னமோ இடதுகை சுழற்பந்து வீச்சாளராக என்றாலும், அதன்பின் பேட்டிங்கிலும் ரன்களை குவிக்க ஆரம்பித்து, அணியின் முக்கியமான பேட்ஸ்மேன்களுள் ஒருவராக உருவெடுத்தார். ரவி சாஸ்திரியின் கிரிக்கெட் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க மைல்கல் என்றால், 1983ஆம் ஆண்டில் உலக கோப்பை வென்ற இந்திய அணியில் அங்கம் வகித்தது ஆகும்.

சென்னையில் சுற்றும் 10 கோடி ரூபா கார் அந்த நடிகரோடதா?

சமூக வலை தளங்களில் தற்போது வைரல் வீடியோ (Viral Video) ஒன்று வேகமாக பரவி வருகிறது. இந்த வைரல் வீடியோவில், சென்னை (Chennai) நகரின் சாலைகளில், மிகவும் விலை உயர்ந்த ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் (Rolls Royce Spectre) கார் ஒன்று உலாவி கொண்டிருப்பதை நம்மால் காண முடிகிறது. இந்த காரின் எக்ஸ்-ஷோரூம் விலையே (Ex-showroom Price) 7.50 கோடி ரூபாய் வருகிறது. இந்த கார் மிகவும் விலை உயர்ந்தது என்பதுடன், இதற்கு மற்றொரு சிறப்பம்சமும் இருக்கிறது.

மும்பையில் 3 போர் கப்பல்களை களம் இறக்கிய மோடி!

பிரதமர் மோடி, இந்திய கடற்படையில் ஐஎன்எஸ் சூரத், ஐஎன்எஸ் நீலகிரி மற்றும் ஐஎன்எஸ் வாக்ஷீர் ஆகியவற்றை சேர்த்தார், இது இந்தியாவின் கடல்சார் திறன்களை அதிகரித்து, பாதுகாப்புத் துறையில் சுயசார்புடையதை ஊக்குவிக்கிறது.

ஹோண்டா ஆக்டிவா இவி விலை இவ்வளவு கம்மியா?

நவம்பர் 2024 இல், ஹோண்டா இந்தியாவில் அதன் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வெளியிட்டது, ஆக்டிவா e: மற்றும் QC1, புதுமையான வடிவமைப்புகள், மாற்றுவதற்கான பேட்டரிகள் மற்றும் போட்டி விலைகள் ஆகியவற்றைக் கொண்டு, மின்சார இயக்கத்தின் துறையில் தனது சந்தைப் பங்கீட்டை மேம்படுத்தும் நோக்கத்துடன்.
Advertisement

மஹிந்திரா கார்கள் விற்பனை படு ஜோர்... தார் முன்னிலையில்!!

மஹிந்திரா (Mahindra), கார்கள் விற்பனையில் கடந்த சில மாதங்களில் பெரிய அளவில் முன்னேற்றம் கண்டுவரும் நிறுவனம். குறிப்பாக, கடந்த 2024ஆம் ஆண்டின் கடைசி 2 மாதங்களில் 40 ஆயிரத்திற்கும் அதிகமான கார்களை விற்பனை செய்து அசத்தி உள்ளது. கடந்த டிசம்பர் மாதத்தில் எந்தெந்த மஹிந்திரா கார்கள் எத்தனை யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன என்பதை பற்றி இனி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம், வாங்க.

7 கோடி ரூபா காரை வாங்கனது அவங்களா!

திரைப்பட நடிகைகள் விலை உயர்ந்த கார்களை வாங்குவது என்பது வழக்கமான ஒரு விஷயம்தான். ஆனால் சொகுசு கார்கள்தான் (Luxury Cars) பெரும்பாலான திரைப்பட நடிகைகளின் தேர்வாக இருந்து கொண்டுள்ளன. அதாவது ஆடி (Audi), பிஎம்டபிள்யூ (BMW), மெர்சிடிஸ் பென்ஸ் (Mercedes-Benz) போன்ற நிறுவனங்களின் சொகுசு கார்கள்தான், திரைப்பட நடிகைகளின் முதன்மையான தேர்வு. ஃபெராரி (Ferrari) போன்ற நிறுவனங்களின் செயல்திறன் மிக்க சூப்பர் கார்களை (Super Cars), நடிகைகள் வாங்குவது என்பது அரிதிலும் அரிதான ஒரு விஷயம் ஆகும்.

கூகுள் மேப்பை பார்த்து எல்லை தாண்டிய போலீஸ்!

அசாம் போலீஸ் நாகாலாந்துக்குள் தவறுதலாக நுழைந்தது கூகிள் மேப்ஸைப் பின்பற்றி, கூகிள் மேப்ஸின் நம்பகத்தன்மை மற்றும் டிஜிட்டல் வழிநடத்தல் கருவிகளின் ஆபத்துகள் பற்றிய கவலைகளை எழுப்புகிறது.

காலேஜ் பசங்களுக்குன்னே இந்த வண்டிய கொண்டு வந்திருக்காங்க!

இந்தியாவில் மேம்படுத்தப்பட்ட செயல்திறனுக்காக புதிய அம்சங்கள், விலை விவரங்கள் மற்றும் OBD-2B இணக்கத்துடன் 2025 ஹோண்டா டியோ 110 ஐ ஆராயுங்கள்.

சாலையை பார்க்கிங் ஏரியாவா யூஸ் பண்றவங்களுக்கு செக்!!

எப்படியாவது கஷ்டப்பட்டாவது ஒரு காரை வாங்கிவிட வேண்டும் என்பது நம்மில் நிறைய பேரது வாழ்நாள் கனவாக உள்ளது. ஒரு சிலர், சொந்தமாக நிலத்தை கூட பிறகு வாங்கிக்கலாம், முதலில் கார் ஒன்றை வாங்கிவிடும் என நினைப்போரும் இருக்கின்றனர். ஆனால், காரை நிறுத்த உங்களிடம் இடம் இருந்தால்தான் கார் வாங்க முடியும் என சட்டம் போட்டால் என்ன செய்ய முடியும். இப்படியெல்லாம் கூடவா சட்டம் இருக்கிறது என நீங்கள் கேட்பது புரிகிறது. ஆனால், இந்த உலகில் நீங்கள் நினைக்காதது பல நடந்துக் கொண்டிருக்கின்றன.

மதுரையில் சுற்றி திரிந்த வித்தியாசமான மஹிந்திரா கார்!!

மஹிந்திரா (Mahindra), இந்தியாவில் அதிக பேரால் தேர்வு செய்யப்படும் கார் நிறுவனங்களுள் ஒன்று. கடந்த சில வருடங்களாக எலக்ட்ரிக் கார்கள் (Electric Cars) விஷயத்தில் கூடுதல் முனைப்பு காட்டி வருகிறது. பிஇ 6 (BE 6) மற்றும் எக்ஸ்.இ.வி 9இ (XEV 9e) உள்ளிட்டவை மஹிந்திராவில் இருந்து சமீப காலத்தில் அறிமுகம் செய்யப்பட்ட எலக்ட்ரிக் கார்கள் ஆகும். இவற்றை தொடர்ந்து, எக்ஸ்யூவி 3எக்ஸ்.ஓ (XUV 3XO) காரையும் எலக்ட்ரிக் வெர்சனில் கொண்டுவர திட்டமிட்டு வருகிறது. இந்த நிலையில், மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்.ஓ இவி எலக்ட்ரிக் கார் ஒன்று சாலையில் ஓட்டி பார்க்கப்பட்டு சோதனை செய்யப்பட்டுள்ளது.

59 கிமீ மைலேஜ் தரும் ஸ்கூட்டர் வந்தாச்சு!

புதிய ஹீரோ டெஸ்டினி 125 ஸ்கூட்டர் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது, மேம்படுத்தப்பட்ட அம்சங்கள், போட்டி விலை நிர்ணயம் மற்றும் 59 kmpl அற்புதமான மைலேஜ் ஆகியவற்றை கொண்டுள்ளது.

ரூ.79,999இல் அறிமுகம் செய்யப்பட்டுள்ள எலக்ட்ரிக் ஸ்கூட்டர்!!

க்ரீவ்ஸ் எலக்ட்ரிக் மொபைலிட்டி லிமிடெட் (Greaves Electric Mobility Limited) எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் (Electric Scooters) விற்பனையில் ஈடுப்பட்டு வரும் நிறுவனம். பருத்தி உற்பத்தி & விற்பனையில் நீண்ட வருடங்களாக ஈடுப்பட்டுவரும் க்ரீவ்ஸ் காட்டன் நிறுவனத்தின் இ-மொபைலிட்டி பிரிவு தான், க்ரீவ்ஸ் எலக்ட்ரிக் மொபைலிட்டி லிமிடெட் ஆகும். இந்த க்ரீவ்ஸ் மொபைலிட்டி நிறுவனத்தின் கீழ் பல்வேறு பிராண்ட்கள் செயல்படுகின்றன. அவற்றுள் ஒன்றுதான், ஆம்பியர் (Ampere) ஆகும். ஆம்பியர் நிறுவனத்தில் இருந்து புதியதாக ஒரு எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதனை பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.
Advertisement

பஞ்ச், நெக்ஸான் விலையில் புதிய மாற்றத்தை கொண்டு வந்த டாடா!

2025 ஆம் ஆண்டில், டாட்டா மோட்டார்ஸ், இந்தியாவில் பஞ்ச் மற்றும் நெக்ஸன் எஸ்யூவிகளின் விலைகளை திருத்தியது. இந்த மாற்றங்கள் சந்தை நிலைப்படுத்தலை மேம்படுத்தவும், பல்வேறு வாடிக்கையாளர் தேவைகளை பூர்த்தி செய்யவும் நோக்கமாக கொண்டுள்ளன, பஞ்சின் புகழ் மற்றும் நெக்ஸனின் அணுகலை அதிகரிக்கிறது.

ஆப்போசிட்ல ஏறி வந்த பஸ்சுக்கு பாடம் புகட்டிய கார் டிரைவர்!

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சாலை விபத்துக்களால் (Road Accidents) பல லட்சக்கணக்கான மக்கள் பரிதாபமாக உயிரிழக்கின்றனர். வானிலை, பழுதான சாலைகள் மற்றும் வாகன பழுது என இதற்கு ஏகப்பட்ட காரணங்கள் இருந்தாலும் கூட, வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்ற மறுப்பதே முதன்மையான காரணமாக இருக்கிறது. இதனால் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்ற வேண்டியதன் அவசியம் குறித்து, அரசும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் மற்றும் பத்திரிக்கைகளும் வாகன ஓட்டிகளுக்கு தொடர்ச்சியாக விழிப்புணர்வு ஏற்படுத்தி கொண்டே உள்ளன. ஆனால் இது இன்னும் பெரிய அளவில் பலன் அளிக்கவில்லை என்பதே கசப்பான உண்மை.

ஏழைகள் வீட்டுலகூட இனி இந்த இவி கார் நிக்கும்!

இந்தியாவில் விரைவில் அறிமுகமாகவுள்ள மலிவு மின்சார வாகனமான லிகியர் மினி EV இன் அம்சங்கள், மாறுபாடுகள் மற்றும் விலை நிர்ணயத்தை ஆராயுங்கள்.

புரோக்கர் வேலை பார்த்தாலே இவ்வளவு சம்பாதிக்கலாமா?

பங்கு சந்தை (Stock Market)-இல் தரகராக வேலை பார்த்து பல கோடி ரூபாய் வருமானம் சேர்த்து வைத்துள்ள தனியார் நிறுவனங்கள் ஏராளமானவை உள்ளன. அதில் ஒன்றுதான், ஏஞ்சல் புரோகிங் (Angel Broking) ஆகும். இந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் (MD)-ஆக இருப்பவர், தினேஷ் தக்கர் (Dinesh Thakkar). பெரும் பணக்காரர்களுக்கு பொதுவாகவே விலையுயர்ந்த கார் & பைக்குகளை அவ்வப்போது வாங்குவது பிடித்தமான விஷயமாக உள்ளது. அந்த வகையில், ஏஞ்சல் புரோகிங் நிறுவனத்தின் எம்டி தினேஷ் தக்கரும் சொகுசு கார் பிரியராக உள்ளார்.

சென்னையில் 10 கிமீ போக 30 நிமிடத்திற்கு மேல ஆகுது!

டாம்டாம் போக்குவரத்து குறியீடு 2024, போக்குவரத்துக்கு இந்தியாவின் மெதுவான நகரமாக கொல்கத்தாவை வெளிப்படுத்துகிறது. நெரிசல் மோசமடையும் போது பெங்களூரு நெருங்கியது.

27 கிமீ மைலேஜ் வழங்கும் 7 சீட்டர் கார் விலை இவ்ளோதானா!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று மாருதி சுஸுகி ஈக்கோ (Maruti Suzuki Eeco). மாருதி சுஸுகி ஈக்கோ காருக்கு தற்போது 15 வயதாகி விட்டது. ஆம், மாருதி சுஸுகி ஈக்கோ கார், கடந்த 2010ம் ஆண்டு ஜனவரி மாதம்தான், இந்திய சந்தையில் முதல் முறையாக விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. இடைப்பட்ட இந்த 15 ஆண்டுகளில், 1.2 மில்லியன் ஈக்கோ கார்களை மாருதி சுஸுகி நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்துள்ளது. 1.2 மில்லியன் என்றால், 12 லட்சம் கார்கள் ஆகும்.

வீடியோ கேமில் ஜெய்பவர்களுக்கு பிராண்ட்-நியூ மஹிந்திரா கார்!!

மஹிந்திரா (Mahindra), இந்தியாவின் முன்னணி கார் நிறுவனமான இது பிரபல மொபைல் கேம் (Mobile Game) வடிவமைப்பாளரான கிராஃப்டன் (KRAFTON) உடன் கூட்டணி சேர்ந்துள்ளது. இந்த 'KRAFTON' பெயரை எங்கேயோ அடிக்கடி பார்த்தது போன்று தோன்றலாம். பப்ஜி (PUBG) ஞாபகம் இருக்கிறதா? பப்ஜியை கிராஃப்டன் உருவாக்கவில்லை. பப்ஜி தடை செய்யப்பட்ட பிறகு அதேபோன்றதான 'பேட்டில்கிரவுண்ட்ஸ் மொபைல் இந்தியா' (BATTLEGROUNDS MOBILE INDIA (BGMI)) என்கிற மொபைல் கேம்-ஐ உருவாக்கிய நிறுவனம்தான் கிராஃப்டன் ஆகும். சரி... இத்தகைய நிறுவனம் மஹிந்திரா உடன் கூட்டணி சேர்ந்துள்ளதினால் என்ன நடக்க போகிறது என்றுதானே கேட்கிறீர்கள்.

குடும்பத்தோட 6 பேர் போகலாம்! விலையும் ரொம்ப கம்மி!

மகிந்திரா அண்ட் மகிந்திரா இந்தியாவில் ஒரு மலிவு மின்சார வாகனமான XEV 7e ஐ அறிமுகப்படுத்துகிறது, இது புதிய வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்பத்துடன் அதன் EV பணியை மேம்படுத்துகிறது.
Advertisement

ஆட்டோ எக்ஸ்போ 2025-இல் நிறுத்தப்பட உள்ள 5 எலக்ட்ரிக் கார்கள்

ஆட்டோ எக்ஸ்போ 2025 (Auto Expo 2025), பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஜனவரி 17 முதல் ஜனவரி 22ஆம் தேதி வரையில் நடைபெற உள்ளது. தலைநகர் டெல்லியில் துவார்கா என்கிற பகுதியில் நடைபெறும் இந்த மோட்டார் கண்காட்சியை ஜனவரி 19ஆம் தேதி முதல் 4 நாட்களுக்கு பொதுமக்கள் நேரில் பார்வையிடலாம். இவ்வாறு, நேரடியாக மக்களின் பார்வைப்பட உள்ளதால், இந்த முறை ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சிக்கு பல ஆட்டோமொபைல் நிறுவனங்கள் முக்கியத்துவம் அளிக்கவுள்ளன. போதாக்குறைக்கு, இந்த வருட ஆட்டோ எக்ஸ்போ ஆனது மத்திய அரசின் நேரடி பார்வையின்கீழ் நடைபெறவுள்ளது.

ஆட்டோ எக்ஸ்போவில் கலந்து கொள்ள போகுதா ஓலா எலெக்ட்ரிக்!!

'பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025' (Bharat Mobility Global Expo 2025) தொடங்க இன்னும் ஒரு சில தினங்களே உள்ளன. இந்தியாவில் நடைபெற இருக்கும் இந்த உலக புகழ்பெற்ற வாகன கண்காட்சியில் ஓலா எலெக்ட்ரிக் (Ola Electirc) நிறுவனமும் கலந்துக் கொள்ள இருப்பதாக உறுதியான தகவல்கள் வெளியாகி உள்ளன. தொடர்ந்து, அது தன்னுடய தயாரிப்புகள் சிலவற்றை காட்சிப்படுத்த திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகின்றது. நிறுவனம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மிக மிக மலிவு விலையில் இரண்டு புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களைக் காட்சிப்படுத்தியது.

ஏத்தரின் முதல் எலக்ட்ரிக் பைக்கை காண ரெடியாகுங்க!!

ஏத்தர் எனர்ஜி (Ather Energy), பெங்களூரை சேர்ந்த இவி ஸ்டார்ட்-அப் (EV Start-up) நிறுவனம். பெங்களூரில் தலைமையகத்தை கொண்டிருப்பினும், தமிழ்நாட்டில் ஓசூரில்தான் ஏத்தர் நிறுவனத்தின் உற்பத்தி தொழிற்சாலை செயல்படுகிறது. ஆரம்பத்தில் '450' என்கிற செயல்திறன் மிக்க எலக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனை செய்துவந்த ஏத்தர் நிறுவனம், கடந்த 2024 ஏப்ரலில் 'ரிஸ்டா' (Rizta) என்கிற எலக்ட்ரிக் ஸ்கூட்டரை ரூ.1.10 லட்சம் என்கிற குறைந்த விலையில் அறிமுகம் செய்து இந்திய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மார்க்கெட்டை ஸ்தம்பிக்க வைத்தது.

அடையாளமே தெரியாமல் மாறப்போகும் பஜாஜ்!

2025 ஆட்டோ எக்ஸ்போவில், பஜாஜ் தனது நிலையான இயக்கத்திற்கான அர்ப்பணிப்பை மின்சாரம் மற்றும் எத்தனால் இயங்கும் மோட்டார்சைக்கிள்களுடன் வெளிப்படுத்தும், இதில் சீத்தக் 35 தொடர் மற்றும் மேம்படுத்தப்பட்ட பல்சர் ஆர்எஸ் 200 ஆகியவை அடங்கும்.

தமிழ்நாட்டு தயாரிப்புகளை பார்த்து நாடே மிரண்டுபோக போகுது!!

டிவிஎஸ் மோட்டார் (TVS Motor), சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தமிழ்நாட்டு முன்னணி 2-வீலர் & 3-வீலர் நிறுவனம். ஹீரோ மோட்டோகார்ப் மற்றும் ஹோண்டா 2-வீலர்ஸ் நிறுவனங்களுக்கு அடுத்து, இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் 2-வீலர்களை விற்பனை செய்யும் 3வது பெரிய நிறுவனமாக டிவிஎஸ் மோட்டார் விளங்குகிறது. மேலும், ஓசூரில் உற்பத்தி செய்யப்படும் டிவிஎஸ் வாகனங்கள் பல வெளிநாடுகளிலும் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த அளவிற்கு வளர்ந்து நிற்கும் டிவிஎஸ் நிறுவனம் எதிர்பார்த்ததை போல், ஜனவரி 17இல் துவங்கவுள்ள 2025 ஆட்டோ எக்ஸ்போவில் பங்கேற்க உள்ளது.