இந்த வாரம் வரிசை கட்டி ஹீரோ பைக்குகள் வரப்போகுது!

ஹீரோ மோட்டோகார்ப் 2025 ஆட்டோ எக்ஸ்போவில் நான்கு புதிய தயாரிப்புகளை வெளியிடுகிறது, இதில் ஹீரோ எக்ஸூம் 160 மற்றும் விடா Z மின்சார ஸ்கூட்டர் ஆகியவை அடங்கும், இவை பல்வேறு நுகர்வோர் தேவைகளை இலக்காகக் கொண்டுள்ளன.

ஹூண்டாய் இந்த கார இந்தியால காட்சிப்படுத்த போகுதா!

ஹூண்டாய் (Hyundai) நிறுவனம், ஆம்னி (Omni)-க்கு பெரிய உருவம் கொடுத்த மாதிரியான ஓர் காரை இந்தியாவில் காட்சிப்படுத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தியாவில் இன்னும் ஒரு சில நாட்களில் வாகன ஆர்வலர்கள் பெரிதும் காத்துக் கொண்டிருக்கும் பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 (Bharat Mobility Global Expo 2025) தொடங்க இருக்கின்றது. இந்த உலக புகழ் பெற்ற வாகன கண்காட்சியில் பன்னாட்டு நிறுவனங்கள் கலந்துக் கொண்டு தங்களின் தயாரிப்புகளைக் காட்சிப்படுத்த திட்டமிட்டு இருக்கின்றன.

அடுத்த ரேஸ்க்கு ரெடியான அஜித்குமார்!

துபாயில் சமீபத்தில் நடந்த 24 ஹெச் சீரீஸ் கார் பந்தய போட்டியில் நடிகர் அஜித்குமார் பங்கேற்று அவர் பங்கேற்ற பிரிவில் மூன்றாவது இடத்தை பிடித்தார். இந்த செய்தி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அஜித் ரசிகர்கள் அவரை கொண்டாடி வரும் நிலையில், தற்போது அவர் அடுத்த பந்தயத்திற்காக தயாராகி வரும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த பந்தயம் குறித்த விபரங்களை நாம் இங்கே விரிவாக காணலாம் பாருங்கள்.

மஹிந்திரா தார் வாகனத்தை வாங்கிய பிரேமம் பட நடிகர்!!

பிரேமம் (Premam), கேரளாவில் 200 நாட்களுக்கு மேல் ஓடிய திரைப்படமான இதனை உங்களில் நிறைய பேர் பார்த்திருப்பீர்கள் என நினைக்கிறேன். இந்த படத்தில் கல்லூரி உதவியாளராக நடித்தவர் நடிகர் ஜெயசங்கர் கரிமுட்டம் (Jayashankar Karimuttam). பிரேமம் படத்தில் சில காட்சிகளில் மட்டுமே வருவார். இவர் தற்போது புதியதாக மஹிந்திரா (Mahindra) வாகனம் ஒன்றை வாங்கியுள்ளார். இந்த மலையாள நடிகரை பற்றியும், அவர் வாங்கியுள்ள மஹிந்திரா வாகனத்தை பற்றியும் இனி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம், வாங்க.
Advertisement

காஸ்ட்லியான காரில் ஏறி போனது அந்த நடிகர் பெத்த பொண்ணா!

இந்திய சந்தையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மிகவும் பிரபலமாக இருந்து வந்த கார்களில் ஒன்று லேண்ட் ரோவர் ஃப்ரீலேண்டர் 2 (Land Rover Freelander 2). இந்த கார் இந்தியாவில் தற்போது விற்பனையில் இல்லை. இந்திய சந்தையில் லேண்ட் ரோவர் ஃப்ரீலேண்டர் 2 காரின் விற்பனை கடந்த சில வருடங்களுக்கு முன்பே நிறுத்தப்பட்டு விட்டது. விற்பனையில் இருந்து விலக்கப்பட்டாலும் கூட, இந்திய சாலைகளை விட்டு இந்த கார் இன்னும் அகலவில்லை. லேண்ட் ரோவர் ஃப்ரீலேண்டர் 2 உரிமையாளர்கள் ஒரு சிலர் இன்னமும் அந்த காரை பயன்படுத்தி கொண்டுதான் உள்ளனர்.

சென்னையில் முதல்வர் ஸ்டாலின் முன்பு நடந்த அதிசயம்!

மஹிந்திரா நிறுவனம் தனது புதிய எலெக்ட்ரிக் கார்களாக BE6 மற்றும் XEV 9e ஆகிய இரண்டு கார்களை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ள நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் நேற்று இந்த கார்களுக்கான சோதனை ஓட்டம் துவங்கப்பட்டது. முதலமைச்சர் ஸ்டாலின் இந்த இந்த சோதனை ஓட்டத்தை கொடியை செய்து துவக்கி வைத்தார். இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

40 வருஷ பழைய காருனு சொன்னா யாருமே நம்ப மாட்டாங்க..

ஃபியட் பிரீமியர் பத்மினி (Fiat Premier Padmini), இந்த பெயரை அறியாத கார் காதலர்களே இருக்க முடியாது. இந்தியாவில் ஒரு காலத்தில் விற்பனையில் செழித்துக் காணப்பட்ட கார் மாடல்களில் இதுவும் ஒன்றாகும். முக்கியமாக 1970 மற்றும் 80-களில் சாலையில் அதிகம் காணப்பட்ட கார் மாடல்களில் ஒன்றாகவும் இது காட்சியளிக்கின்றது. ஹிந்துஸ்தான் அம்பாசடர் போன்ற ஜாம்பவான் கார் மாடல்களுக்கு எல்லாம் சிம்ம சொப்பணமாக விளங்கிய கார் மடாலாகவும் இது காட்சியளிக்கின்றது. இந்த கார் மாடலின் விற்பனை நிறுத்தப்பட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டன.

கார் விற்பனையில் ஹூண்டாய்க்கு தண்ணி காட்டும் டாடா மோட்டார்ஸ்

டாடா மோட்டார்ஸ் (Tata Motors), இந்தியாவின் முன்னணி கார் நிறுவனம் என்பதை நான் கூற வேண்டியது இல்லை. கார்களை அதிகம் விற்பனை செய்வதில் மாருதி சுஸுகிக்கு அடுத்து 2வது இடம் யாருக்கு என்பதில் ஹூண்டாய் நிறுவனத்திற்கும், டாடா மோட்டார்ஸுக்கும் இடையே பலத்த போட்டி நிலவி வருகிறது. இந்த போட்டியில் பெரும்பாலும் ஹூண்டாய் தான் வெற்றி பெறுகிறது என்றாலும், கடந்த 2024 டிசம்பர் மாத விற்பனையில் ஹூண்டாயை முந்தி டாடா மோட்டார்ஸ் 2வது இடத்தை தனதாக்கி உள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

ஒரே மாசத்துல இவ்வளவு பைக் வருதா?

ஜனவரி 2025 முன்னணி உற்பத்தியாளர்களிடமிருந்து மின்சார மற்றும் ஹைப்ரிட் மாடல்கள் உட்பட இந்திய இருசக்கர வாகன சந்தையில் குறிப்பிடத்தக்க புதிய நுழைவுகளை குறிக்கிறது.

ரெண்டரை கோடி ரூபா காரில் வந்து இறங்கியது அவங்களா!

இந்திய கோடீஸ்வரர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று போர்ஷே கேயென்னே (Porsche Cayenne). தற்போதைய நிலையில் மொத்தம் 2 வேரியண்ட்களில் இந்த கார் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அவை போர்ஷே கேயென்னே எஸ்டிடி (Porsche Cayenne STD) மற்றும் போர்ஷே கேயென்னே ஜிடிஎஸ் (Porsche Cayenne GTS) ஆகியவை ஆகும். இதில், எஸ்டிடி வேரியண்ட்டின் விலை 1.42 கோடி ரூபாயாக உள்ளது. மறுபக்கம் ஜிடிஎஸ் வேரியண்ட்டின் விலை 2 கோடி ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும்.

30கிமீ மைலேஜ் தரும் 7 சீட்டர் காரை கொண்டு வரப்போகுது!

மாருதி சுஸூகி நிறுவனம் 2 புதிய மிட்-சைஸ் எஸ்யூவி கார்களை இந்த ஆண்டு அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. வேகமாக வளர்ந்து வரும் மிட்-சைஸ் செக்மெண்டில் தனக்கென மிக பெரிய பங்கு பிரிப்பதற்காக இந்த கார்களை களம் இறங்குகிறது. இதன் மூலம் பல்வேறு விதமான வாடிக்கையாளர்களை கவர முடியும் என அந்நிறுவனம் நம்புகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

ரூ.1லட்சம் கட்ட சொல்லிட்டாங்க.. பாஜக-காரருக்கு வந்த சோதனை!

காரை அழகா வச்சிருக்க யாருக்குதான் பிடிக்காது. இதற்கு கார் கதலராக இருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. ஒரு காரின் உரிமையாளராக இருந்தாலே போதுமானது, காரை எப்போதும் அழகாக வைத்திருக்க தோன்றும். அந்தவகையிலேயே ஓர் நபர் தன்னுடைய மஹிந்திரா தார் காரை அழகாக வைத்திருக்க வேண்டும் என்பதற்காக, அந்த காரில் சில மாற்றங்களைச் செய்திருக்கின்றார். கார் தயாரிப்பு நிறுவனம் வழங்கிய சில முக்கிய பாகங்களை நீக்கிவிட்டு, அதற்கு பதிலாக கூடுதல் கவர்ச்சியான தோற்றத்தை வழங்கும் அணிகலன் மற்றும் பாகங்களையே அவர் அந்த காரில் சேர்த்திருக்கின்றார்.
Advertisement

விலையில் இரண்டிற்கும் இடையே ரூ.10 லட்சம் வித்தியாசம்!!

மஹிந்திரா தார் ராக்ஸ் (Mahindra Thar ROXX), இந்திய மார்க்கெட்டில் சமீப காலத்தில் அறிமுகம் செய்யப்பட்ட மாடர்ன் ஆஃப்-ரோடு எஸ்யூவி (Off-road SUV) ரக வாகனம். ஏற்கனவே விற்பனையில் இருந்த 3-கதவு தார் வாகனத்தின் 5-கதவு வெர்சனாக தார் ராக்ஸ் கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. மஹிந்திரா தார் 3-கதவு வாகனத்திற்கு ஏற்கனவே சிறப்பான வரவேற்பு கிடைத்துவந்த நிலையில், அதனை மேலும் அதிகரிக்கும் விதமாக தார் ராக்ஸ் வாகனத்தை மஹிந்திரா அறிமுகம் செய்தது.

'ஹீரோ' பட ஹீரோயின் இவ்ளோ காஸ்ட்லியான காரை வாங்கிட்டாங்களா!!

மலையாள திரை உலகைச் சேர்ந்த இளம் நடிகைகளில் கல்யாணி பிரியதர்ஷன்-ம் ஒருவர் ஆவார். இவர் தமிழிலும் சில படங்களில் நடித்திருக்கின்றார். 'ஹீரோ', 'புத்தம் புது காலை' மற்றும் 'மாநாடு' உள்ளிட்ட படங்களிலேயே அவர் நடித்திருக்கின்றார். இந்த நடிகையே காஸ்ட்லியான சொகுசு கார் மாடலை வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதை உறுதிப்படுத்தும் விதமாக அவர் அந்த காரில் வலம் வரும் வீடியோவும் தற்போது வெளியாகி இருக்கின்றது. ஆனால், இந்த கார் அவருடையதுதான் என்பதற்கான எந்த ஆவணும் இதுவரை கிடைக்கவில்லை.

80 லிட்டர் பெட்ரோலை ரூ.175க்கு தரும் ஆப்பிரிக்க நாடு!!

பெட்ரோல் (Petrol), டீசல் (Diesel)-க்காக செலவிடவே ஒவ்வொரு மாதமும் பெரிய தொகையை ஒதுக்க வேண்டியதாக உள்ளதே என்பது நம்மில் நிறைய பேரது கவலையாக உள்ளது. இந்தியாவில் கடந்த சில வருடங்களாக பெட்ரோல், டீசல் விலையில் பெரியதாக மாற்றம் இல்லை என்றாலும், அதுக்கு முன்பு வரையில் அவற்றின் தொடர் விலை அதிகரிப்பு பெரிய பிரச்சனையாக இருந்தது. இந்தியாவில் 2 லிட்டர் பெட்ரோலுக்கும் குறைவான விலையில் சுமார் 80 லிட்டர் பெட்ரோல் கிடைத்தால் எப்படி இருக்கும். இது எல்லாம் கனவில்தான் நடக்கும் என உங்களில் சிலர் நினைக்கலாம்.

தீ விபத்தில் சிக்கிய பின்னரும் இந்த காரு ஓடுச்சா!..

தீ விபத்தில் சிக்கிய பின்னரும் கார் ஒன்று இயங்கும் நிலையில் இருந்தது பெருத்த ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. லம்போர்கினி ஹூராகேன் ஈவோ (Lamborghini Huracan EVO), தீ விபத்தில் சிக்கியதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகின. இதுகுறித்த வீடியோவை இந்தியாவின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான கவுதம் சிங்கானியா-வும் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இந்த காரே தீ விபத்திற்கு பின்னரும் ஓடும் நிலையில் இருந்துள்ளது. இது காரை அவதூறாக பேசிய பலரின் வாயை அடைக்கச் செய்யும் வகையில் அமைந்திருக்கின்றது.

31 கிமீ மைலேஜ் குடுக்கற காரை இந்த ரேட்ல விக்கறாங்களா!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று மாருதி சுஸுகி பலேனோ (Maruti Suzuki Baleno). டாடா அல்ட்ராஸ், ஹூண்டாய் ஐ20, டொயோட்டா க்ளான்சா உள்ளிட்ட கார்களுடன் மாருதி சுஸுகி பலேனோ போட்டியிட்டு வருகிறது. பிரீமியம் ஹேட்ச்பேக் (Premium Hatchback) ரகத்தை சேர்ந்த இந்த காரின், கடந்த 2024ம் ஆண்டிற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) தற்போது வெளியாகியுள்ளது. இதன்படி பார்த்தால், மாருதி சுஸுகி நிறுவனம் கடந்த 2024ம் ஆண்டில் ஒட்டுமொத்தமாக 1,72,094 பலேனோ கார்களை விற்பனை செய்துள்ளது.

நடிகர் அஜித் செய்த வரலாற்று சாதனை!

துபாயில் நடந்து வரும் 24 எச் சீரிஸ் கார் ரேஸ் பந்தயத்தில் நடிகர் அஜித்குமாரின் அஜித்குமார் ரேஸிங் அணி 992 பிரிவில் மூன்றாவது இடத்தை பிடித்து மிகப்பெரிய சாதனை படைத்துள்ளது. இந்தியாவைச் சேர்ந்த ஒரு அணி சர்வதேச போட்டியில் மூன்றாவது இடத்தை பிடிப்பது மிகப்பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது. அதுவும் தான் கலந்து கொண்ட முதல் போட்டியிலேயே இவ்வளவு பெரிய சாதனையை அந்த அணி செய்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

தமிழக தயாரிப்பை பார்த்து மிரண்டுபோக ரெடியா இருங்க..

வியட்நாமைச் சேர்ந்த கார் உற்பத்தி நிறுவனம் வின்ஃபாஸ்ட் (VinFast). இந்த நிறுவனம் இந்தியாவில் சீக்கிரமே அதன் கார் மாடல்களை விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது. மிகப் பெரிய பிளானுடனேயே இந்த நிறுவனம் இந்தியாவில் கால்தடம் பதிக்க உள்ளது. ஒட்டுமொத்த சந்தையையும் முழுமையாக தன் வசம் வளைத்து போட வேண்டும் என்பதே நிறுவனத்தின் பிளானாக உள்ளது. இதன் அடிப்படையிலேயே தன்னுடைய உற்பத்தி ஆலையை அது உருவாக்கி வருகின்றது. தமிழகத்திலேயே நிறுவனத்தின் மிகவும் பிரமாண்டான வாகன உற்பத்தி ஆலை தயாராகிக் கொண்டிருக்கின்றது.

இந்த கம்பெனி கார் 2026 வரை ஃபுல்லா புக்கிங் ஆகிடுச்சு!

56 நாடுகளில் உலகளாவிய தேவை மற்றும் ஹைப்ரிட் தொழில்நுட்பத்தின் காரணமாக, லம்போர்கினி 2024 இல் 10,687 வாகனங்களை விற்று விற்பனை சாதனையை படைத்தது.
Advertisement

12 கோடி ரூபா காரை வாங்கிய குழந்தை முகம் கொண்ட பணக்காரர்!!

காரை சேகரிப்பதில் விருது பெற்ற ஓர் நபராக இருக்கின்றார் இந்தியாவைச் சேர்ந்த பெரும் செல்வந்தரான யோஹன் பூனவல்லா. பால்வடியும் முகத்துக்குச் சொந்தக்காரராக இருக்கும் இவரின் செயலும் குழந்தைகள் போலவே இருக்கின்றது. குழந்தைகள் விளையாட்டு கார்களைப் போல வாங்கி குவிப்பதைப் போலவே நிஜ உலகின் பிரமாண்ட கார்களை வாங்கி குவித்து வருகின்றார். குறிப்பாக, இவரிடத்தில் அரிய வகை ஆடம்பர கார் மாடலே மிக அதிக எண்ணிக்கையில் உள்ளன. இதற்காகவே அவருக்கு விருது வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. அதாவது விண்டேஜ் கால கார்களே அதிக எண்ணிக்கையில் அவரிடத்தில் பயன்பாட்டில் இருக்கின்றன.

இந்த கால சில்க் சிமிதா வாங்கினால் பென்ஸ் கார்கள் மட்டும்தான்

வித்யா பாலன் (Vidya Balan), பிரபலமான பாலிவுட் நடிகை. மறைந்த கவர்ச்சி நடிகை சில்க் சிமிதா (Silk Smitha)-இன் வாழ்க்கை வரலாற்று திரைப்படமான 'தி டர்டி பிக்சர்'-இல் நடித்ததன் மூலம் தென்னிந்தியா உள்பட இந்திய அளவில் கவனத்தை பெற்றார். சுமார் 30 வருடங்களாக சினிமா துறையில் இருக்கும் வித்யா பாலன், தேசிய ஃபிலிம்ஃபேர் விருது மற்றும் பத்மா ஸ்ரீ விருதுகளை பெற்றவர் ஆவார். மேலும், அவ்வப்போது விளம்பர படங்களிலும் காட்சியளிக்கக்கூடிய நடிகை வித்யா பாலன் தனது 46வது பிறந்தநாளை சமீபத்தில்தான் ஜனவரி 1ஆம் தேதி ஆங்கில புத்தாண்டு (New Year)-இன் போது கொண்டாடினார். இவரிடம் உள்ள 3 மெர்சிடிஸ் கார்களை பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

5738 எலெக்ட்ரிக் பஸ்களுக்கு வந்தது ஆர்டர்!

12 மாநிலங்களில் 10,000 மின்சார பேருந்துகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதால், PM மின்சார பேருந்து சேவை நகர்ப்புற போக்குவரத்தை நவீனப்படுத்தும், உள்கட்டமைப்பு மற்றும் நிலைத்தன்மையை மேம்படுத்தும்.

ஹீரோ ஸ்பிளெண்டர் பைக் வைத்திருக்கும் யாருக்கும் இது தோணலயே!

ஹீரோ ஸ்பிளெண்டர் (Hero Splendor), இந்தியாவின் தேசிய பைக் என சொல்லும் அளவிற்கு அதிக பேரால் வாங்கப்படும் பைக் என்பதை நான் கூற வேண்டியது இருக்காது என நினைக்கிறேன். ஸ்பிளெண்டர் பைக்கை அதிக கஸ்டமர்கள் வாங்குவதற்கு முக்கிய காரணம், அதன் அதிகப்படியான மைலேஜ் ஆகும். அதேபோல், ஸ்பிளெண்டர் பைக்குகளை மாடிஃபை (Modify) செய்வதும் எளியதாக உள்ளதால், ஸ்பிளெண்டர் பைக்கை வாங்கி நிறைய பேர் அதனை தங்களது விருப்பத்திற்கேற்ப மாற்றம் செய்துக் கொள்கின்றனர். ஆனால், இங்கு ஒருவர் நீங்கள் யாரும் நினைத்து கூட பார்க்க முடியாத அளவிற்கு ஸ்பிளெண்டர் பைக்கை மாற்றியுள்ளார்.

ஒரு கி.மீ பயணிக்க ரூ3.9 கொடுத்தா போதும்!

MG மோட்டார்ஸின் விண்ட்சர் EV, இந்தியாவின் அதிக விற்பனையாகும் மின்சார வாகனமாகும், இது போட்டி விலை, உரிமைப் பலன்கள் மற்றும் தொழில்நுட்ப சிறப்பம்சங்களை கொண்டுள்ளது.