மாருதி கார் விலை உயருது... சீக்கிரம் புக் பண்ணிடுங்க!
ஆட்டோமொபைல்
- 21 days ago
மாருதி சுஸுகி கார் வாங்க திட்டமிட்டிருக்கிறீர்களா? அப்படியானால் இந்த மாதத்திலேயே முன்பதிவு செய்து கொள்வது நல்லது. ஏனெனில், அடுத்த மாதம் முதல் தனது அனைத்து கார்களின் விலையையும் உயர்த்த உள்ளதாக மாருதி சுஸுகி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மாடலைப் பொறுத்து அதிகபட்சமாக ரூ.30,000 வரை விலை உயர்வு அமலுக்கு வர உள்ளது.