XEV 9S எஸ்யூவிக்கு போட்டியாக புதிய காரை வெளியிடும் எம்ஜி

ஜூலை 16ம் தேதியன்று எம்ஜி மோட்டார் நிறுவனம் இந்தியாவில் புதிய காரை வெளியிடும் என ஆர்வமாக எதிர்பார்த்துக் காத்திருக்க, புதிய பிளாட்ஃபார்மை மட்டுமே நேற்று (ஜூலை 16) அறிமுகப்படுத்தியது எம்ஜி மோட்டார். ADAPT என்ற பெயரில் எலெக்ட்ரிக் மற்றும் ஹைபிரிட் கார்களுக்குப் பயன்படுத்தும் வகையில் புதிய பிளாட்ஃபார்மை அந்நிறுவனம் உருவாக்கியிருக்கிறது. இந்த பிளாட்ஃபார்மிலேயே இந்தியாவிற்கான அடுத்த எலெக்ட்ரிக் காரையும் எம்ஜி உருவாக்கியிருக்கிறது.

மஹிந்திராவை போட்டிக்கு கூப்பிடும் எம்ஜி...!!

JSW MG மோட்டார் நிறுவனம் டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 'அடாப்ட்' (ADAPT) என்கிற புதிய பிளாட்ஃபாரத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய பிளாட்ஃபாரத்தில் இருந்து எலெக்ட்ரிக் கார்கள் மட்டுமின்றி, ஹைப்ரீட் கார்களையும் உருவாக்கி அறிமுகம் செய்ய MG நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதன்படி, மஹிந்திராவின் XEV 9S எலெக்ட்ரிக் காருக்கு போட்டியாக ஒரு எலெக்ட்ரிக் கார் இந்த பிளாட்ஃபாரத்தில் இருந்து வெளிவர உள்ளது.

2027 சுஸுகி ஹயபுஸா பைக்கிற்கு 3 புதிய கலர் ஆப்ஷன்கள்!

ஜப்பானை சேர்ந்த சுஸுகி மோட்டார்சைக்கிள் நிறுவனம் அதன் பிரபலமான ஹயபுஸா பைக்கிற்கு 2027ஆம் ஆண்டிற்கான அப்கிரேடாக மூன்று புதிய கலர் ஆப்ஷன்களை அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படும் இந்த மூன்று கலர் ஆப்ஷன்களை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

கவாஸாகி நிஞ்சா பைக்கிற்கு யாரும் எதிர்பார்க்காத சலுகை!

கவாஸாகி இந்தியா நிறுவனத்தில் இருந்து விற்பனை செய்யப்படும் நிஞ்சா பைக்குகளுள் ஒன்றான நிஞ்சா 650 பைக்கிற்கு ஜூலை மாதத்திற்கான சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஜூலை மாதத்தை முன்னிட்டு ஏற்கனவே சில கவாஸாகி நிஞ்சா பைக்குகளுக்கு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த வரிசையில் இணைந்துள்ள நிஞ்சா 650 பைக்கை பற்றியும், அதற்கு அறிவிக்கப்பட்டுள்ள புதிய சலுகையை பற்றியும் இனி இந்த தொகுப்பில் காணலாம்.
Advertisement

நாளை அறிமுகம் செய்யப்படும் புதிய ஃபெராரி கார்!

ஃபெராரி நிறுவனத்தில் இருந்து புதியதாக அமல்ஃபி ஸ்பைடர் (Amalfi Spider) கார் இந்தியாவில் ஜூலை 17ஆம் தேதியான நாளை அறிமுகம் செய்யப்பட உள்ளது. கடந்த பிப்ரவரி மாதத்தில் ஃபெராரி அமல்ஃபி கூபே கார் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், அதன் கன்வெர்டபிள் வெர்சனாக களமிறக்கப்படவுள்ள இந்த புதிய ஃபெராரி காரை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

வேட்டை தொடங்க போகுது...

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் பிக்-அப் டிரக்குகளில் ஒன்று டொயோட்டா ஹிலக்ஸ் (Toyota Hilux). இங்கு தற்போது விற்பனையில் இருப்பது டொயோட்டா ஹிலக்ஸ் பிக்-அப் டிரக்கின் 8வது தலைமுறை மாடல் ஆகும். இந்த சூழலில் ஹிலக்ஸ் பிக்-அப் டிரக்கின் 9வது தலைமுறை மாடலை டொயோட்டா நிறுவனம் வரும் ஜூலை 28ம் தேதி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது.

மிகப்பெரிய பொருளாதார நாட்டின் சாலைகளை ஆள போகும் ஹீரோ!

இந்தியாவை சேர்ந்த ஹீரோ மோட்டோகார்ப் (Hero MotoCorp) நிறுவனம் உலக அளவில் மிகப்பெரிய டூவீலர் நிறுவனங்களில் ஒன்றாக திகழ்கிறது. தற்போதைய நிலையில் ஐரோப்பிய கண்டத்தில் மொத்தம் 4 நாடுகளில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் டூவீலர்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அவை இத்தாலி (Italy), ஸ்பெயின் (Spain), பிரான்ஸ் (France) மற்றும் இங்கிலாந்து (England) ஆகியவை ஆகும்.

மஹிந்திரா கார் தொழிற்சாலையில் ஏகப்பட்ட நல்ல விஷயம் நடக்குது!

மஹாராஷ்டிரா மாநிலம் புனேவிற்கு அருகே உள்ள சஹானில் மஹிந்திரா (Mahindra) நிறுவனத்தின் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு மஹிந்திரா நிறுவனத்தின் ஐசி இன்ஜின் கார்கள், எலெக்ட்ரிக் கார்கள் மற்றும் வர்த்தக வாகனங்கள் என மொத்தம் 19 வகையான மாடல்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.

படம் தியேட்டருக்கு வந்து 2 வாரம் கூட இன்னும் முழுசா ஆகல...!!

நடிகர் விஷ்ணு விஷாலின் நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்து, விமர்சனம் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் 'கட்ட குஸ்தி 2' திரைப்படம் வெற்றிப் பெற்றுள்ளது. இந்த நிலையில், இந்த திரைப்படத்தின் வெற்றியைக் கொண்டாடும் விதமாக படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் அவர்கள் படத்தின் கதாநாயகன் விஷ்ணு விஷாலுக்கு பிராண்ட்-நியூ BMW 3-சீரிஸ் காரை பரிசளித்து சிறப்பித்துள்ளார்.

சூப்பர் வசதிகளுடன் கிளாஸிக் 350 பைக்கை அப்டேட் செய்துள்ளது

2026ம் ஆண்டிற்காக கிளாஸிக் 350 பைக்கை அப்டேட் செய்துள்ளது ராயல் என்ஃபீல்டு. அப்டேட் என்றவுடன், புதிய நிறங்கள், புதிய டிசைன் என்று நினைத்து விடாதீர்கள். அந்த மாதிரி எல்லாம் எதுவும் இல்லை. மாறாக சில கூடுதலான, ஒரு மாடர்ன் பைக்கில் வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கக்கூடிய வசதிகளைக் கொடுத்து அப்டேட் செய்துல்ளது அந்நிறுவனம். அவை என்னென்னவென்று பார்க்கலாம்.

சிங்கிள் சார்ஜில் 526 கிமீ ஓடும் எலெக்ட்ரிக் கார்!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த கியா சைரோஸ் இவி (Kia Syros EV) எலெக்ட்ரிக் கார் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில், ட்யூயல் பேன் பனரோமிக் சன்ரூஃப், சுறா துடுப்பு ஆன்டெனா மற்றும் வயர்லெஸ் செல்போன் சார்ஜர் போன்ற வசதிகள் (Features) எல்லாம் வழங்கப்பட்டுள்ளன.

கேடிஎம்மை பழிவாங்க புதிய பைக்கை களமிறக்கும் யமஹா

இந்தியாவில் யமஹாவின் மிகவும் வெற்றிகரமான ஒரு பைக் என்றால் R15-வைக் கூறலாம். இந்நிலையில், இதன் மற்றொரு வெர்ஷனாக, இதனை விட சற்று பெரிய இன்ஜின் கொண்ட பைக்கை யமஹா வெளியிடவிருக்கிறது. R2 என்ற பெயரில் ஆகஸ்ட் 27ல் இந்தப் புதிய பைக் வெளியாகவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்தப் புதிய பைக் எப்படி இருக்கும்?
Advertisement

இந்தியாவின் சிறந்த பிரீமியம் 150 சிசி பைக்குகளின் பட்டியல்!

இந்தியாவில் பிரீமியம் 150 சிசி செக்மெண்ட் பைக்குகளுக்கு நல்ல வரவேற்பு கிடைக்க தொடங்கியுள்ளது. இந்த செக்மெண்ட்டை சேர்ந்த பைக்குகளை வாங்குவதற்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிக ஆர்வம் காணப்படுகிறது. இதில் நீங்களும் ஒருவர் என்றால், உங்களுக்குதான் இந்த செய்தி. இந்தியாவின் பிரீமியம் 150 சிசி செக்மெண்ட்டில் கிடைக்கும் சிறந்த 4 பைக்குகள் பற்றிய தகவல்களை இந்த செய்தியில் உங்களுக்காக தொகுத்து வழங்கியுள்ளோம்.

விலை குறைவான 7 சீட்டர் காரின் விலையை உயர்த்திய மஹிந்திரா

மஹிந்திரா நிறுவனம் இந்தியாவில் தாங்கள் விற்பனை செய்து வரும் எஸ்யூவிக்களை ஒவ்வொன்றாக விலை உயர்த்தி வருகிறது. இதுவரை XUV 3XO, தார், XUV 7XO மற்றும் பொலேரோ நியோ பிளஸ் ஆகிய எஸ்யூவிக்கள் எவ்வளவு விலை உயர்த்தப்பட்டன என்பதைப் பார்த்தோம். அதனைத் தொடர்ந்து தற்போது பொலேயோ நியோ எஸ்யூவியின் விலையையும் மஹிந்திரா உயர்த்தியிருக்கிறது.

யமஹா கம்பெனி காரனே பார்த்து ஷாக் ஆன இந்திய இ-ஸ்கூட்டர்!

இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கான மார்க்கெட் தொடர்ந்து விரிவடைந்துவரும் நிலையில், ரிவர் இண்டி எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விற்பனை தொடர்ந்து முன்னேற்றம் கண்டு வருகிறது. எந்த அளவிற்கு என்றால், கடந்த ஜூன் மாதத்தில் மொத்தம் 4 ஆயிரத்து 436 இண்டி எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை ரிவர் மொபிலிட்டி நிறுவனம் விற்பனை செய்துள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

7 சீட்டர் எஸ்யூவியின் விலையை உயர்த்தியது மஹிந்திரா

இந்தியாவில் மஹிந்திரா விற்பனை செய்து வரும் 7 சீட்டர் எஸ்யூவியான XUV 7XO-வின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. ஜூலை மாதத் தொடக்கத்தில் இருந்தே இந்தியாவில் தாங்கள் விற்பனை செய்து வரும் எஸ்யூவிக்களின் விலையை உயர்த்தி வருகிறது மஹிந்திரா. அந்த வரிசையில் தற்போது XUV 7XO காரின் விலையும் உயர்த்தப்பட்டிருக்கிறது. முன்னதாக கடந்த சில நாட்களில் பொலேரோ நியோ பிளஸ், தார் மற்றும் XUV 3XO உள்ளிட்ட எஸ்யூவிக்களின் விலையை அந்நிறுவனம் உயர்த்தியிருந்தது.

விமான டிக்கெட்களை புக் செய்ய சரியான நேரம் இதுதான்!!

விமான பயணத்திற்கான டிக்கெட்களை முன்பதிவு செய்வதற்கான சிறந்த நாள் & நேரம் எது? வாருங்கள் இந்த செய்தியில் இனி அதனை பற்றி விரிவாக விவாதிப்போம்.

வாகன கடன் வாங்குவது எப்படி?

வாகன கடன் என்ற பெயரில் பல மோசடிகள் நடந்து வருகிறது. அதனால் வாகன கடன் என்றால் என்ன? அது எப்படி வழங்கப்படுகிறது? அதை வாங்குவதற்கான தகுதி என்ன? என்னென்ன ஆவணங்கள் வழங்க வேண்டும். கடன் வழங்கும் நிறுவனத்தை எப்படி தேர்வு செய்யவேண்டும்?முழு விபரங்களை காணலாம் வாருங்கள்

TVS Apache RTR 160 4V vs Bajaj Pulsar N160: ரூ.1.5 லட்சத்தில் எது சிறந்தது?

Apache RTR 160 4V vs Pulsar N160 comparison. ரூ.1.5 லட்சம் பட்ஜெட்டில் சிறந்த 160cc பைக்கை தேர்வு செய்ய இந்த ஒப்பீடு உதவும். செயல்திறன், மைலேஜ் மற்றும் பாதுகாப்பு அம்சங்களை இங்கே விரிவாகக் காணலாம்.

ராயலான லுக்குடன் ராயல் என்ஃபீல்டு வெளியிட்டுள்ள புதிய பைக்

ராயல் என்ஃபீல்டு பைக்குகள் என்றாலே இந்திய வாடிக்கையாளர்களுக்கு ஸ்பெஷல் தான். அதனை இன்னும் ஸ்பெஷலாக்கும் வகையில் சிறப்பு எடிஷன் பைக் மாடல் ஒன்றை வெளியிட்டிருக்கிறது ராயல் என்ஃபீல்டு. தனித்துவமான ராயல் என்ஃபீல்டு பைக் வேண்டும் என்று கேட்பவர்கள் இதனை வாங்க 'முயற்சி செய்யலாம்'. ஆனால் அனைவருக்கும் கிடைக்காது.
Advertisement

மஹிந்திரா இந்த 2 கார்களை வெச்சிக்கிட்டு நல்லா கல்லா கட்டுது!

இந்தியாவில் மிட்-சைஸ் SUV கார்கள் எனப்படும் 4.2 மீட்டருக்கும் அதிகமான நீளம் கொண்ட SUV கார்களின் விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சிறிய அளவிலான காம்பாக்ட் SUV கார்களை வாங்குவதை காட்டிலும் ஓரளவிற்கு நன்கு விசாலமான SUV கார்களை வாங்கும் முயற்சியாக பலர் மிட்-சைஸ் SUV கார்களை விரும்பி வாங்கி வருகின்றனர்.

நடிகை வாங்கிய BMW கார் - வைரல் செய்தி!

நடிகர் கவின் நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற 'மாஸ்க்' திரைப்படத்தில் கவினுக்கு மனைவியாக நடித்திருந்தவர் நடிகை கோமல் ஷர்மா. சில நிமிட காட்சிகளில் மட்டுமே நடித்திருந்தாலும், திரைப்படத்தில் அது முக்கியமான கதாபாத்திரம் ஆகும். பெயரை பார்த்தால் ஏதோ இந்தி நடிகை பெயர் போன்று இருந்தாலும், இவர் பிறந்தது சென்னையில் ஆகும்.

500கிமீ-க்கு சார்ஜ் பற்றி யோசிக்கவே தேவை இருக்காது...!!

கியா நிறுவனம் இந்திய சந்தைக்கான அதன் சிரோஸ் இவி எலெக்ட்ரிக் காரை வெளியீடு செய்துள்ளது. மேலும், காருக்கான முன்பதிவுகளும் துவங்கப்பட்டுள்ளன. இரு விதமான பேட்டரி ஆப்ஷன்களில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ள இந்த புதிய கியா எலெக்ட்ரிக் காரை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் காணலாம்.

இப்போ இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரோட விற்பனை தான் அதிகம்

பெங்களூருவை தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டு வரும் பல்வேறு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பிராண்டுகளில் ரிவர் மொபிலிட்டியும் (River Mobility) ஒன்று. முன்னர் வெளியே தெரியாத ஸ்டாப்ட்-அப் நிறுவனமாக இருந்து வந்தது ரிவர் மொபிலிட்டி. ஆனால் தற்போது இந்த நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாடிக்கையாளர்கள் ஆர்வமாக வாங்கி வருகிறார்கள். இதனால் கடந்த ஓராண்டின் இந்த நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை வெகுவாக உயர்ந்திருக்கிறது.

இந்த வருஷத்தோட மிகப்பெரிய லான்ச்!

இந்தியாவின் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி செக்மெண்ட்டில் ஆதிக்கம் செலுத்தி வரும் கார்களில் ஒன்று மாருதி சுஸுகி பிரெஸ்ஸா (Maruti Suzuki Brezza). இதன் வெகுவாக அப்டேட் செய்யப்பட்ட ஃபேஸ்லிஃப்ட் (Facelift) மாடலை மாருதி சுஸுகி நிறுவனம் வரும் ஜூலை 24ம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது.