ராயல் என்ஃபீல்டு பைக்குகளுக்கு போட்டி இனி தான் ஆரம்பம்!

டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் (Triumph Motorcycles) நிறுவனம் அதன் புதிய 'டிராக்கர் 400' (Tracker 400) மோட்டார்சைக்கிளை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. வெளிநாடுகளில் ஏற்கனவே விற்பனையில் இருக்கும் இந்த பைக்கை இந்தியாவில் 350சிசி என்ஜின் உடன் டிரையம்ப் விற்பனைக்கு கொண்டுவந்துள்ளது. பார்க்கவே மிகவும் ஸ்டைலிஷாக இருக்கும் இந்த புதிய டிரையம்ப் பைக்கின் முக்கிய சிறப்பம்சங்களை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

சுஸூகி ஜிக்ஸர் பைக் மாடல்களை விரைவில் அப்டேட்

சுஸூகி என்றவுடன் முதலில் நம் நினைவுக்கு வருவது ஸ்கூட்டர்கள் தான். ஆனால் அந்நிறுவனம் இந்தியாவில் பைக்குகளையும் விற்பனை செய்கிறது என்பதை நாம் அவ்வப்போது மறந்து விடுகிறோம். அதனை நினைவுபடுத்துவதற்காகவே இந்தியாவில் தாங்கள் விற்பனை செய்து வரும் ஜிக்ஸர் சீரிஸ் மாடல்களை அப்டேட் செய்யத் திட்டமிட்டுள்ளது அந்நிறுவனம்.

முதல்வர் நேரில் துவங்கி வைக்கும் அளவுக்கு முக்கிய தருணம்!

டாடா மோட்டார்ஸ் (Tata Motors), கார்களை விற்பனை செய்வதில் மட்டுமின்றி, கமர்ஷியல் வாகனங்களை விற்பனை செய்வதிலும் இந்திய அளவில் முன்னணியில் உள்ள நிறுவனம். இந்த நிறுவனத்திற்கு கமர்ஷியல் வாகனங்களை உற்பத்தி செய்ய உத்தர பிரதேசம் மாநில தலைநகர் லக்னோவில் கிட்டத்தட்ட 35 வருடங்களுக்கும் மேலாக தொழிற்சாலை உள்ளது.

எத்தனை வருஷம் ஆனாலும் லட்சக்கணக்கில் விற்பனையாகும் 3 கார்கள்

மஹிந்திரா (Mahindra) நிறுவனம் கடந்த ஒரு வருடத்தில் மட்டும் சுமார் 6 லட்சத்து 60 ஆயிரத்து 276 கார்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது. 2025 ஏப்ரல் - 2026 மார்ச் வரையிலான ஒரு வருட காலக்கட்டத்தில் இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் கார்களை விற்பனை செய்த நிறுவனங்களின் பட்டியலில் மாருதி சுஸுகி (Maruti Suzuki)க்கு அடுத்து இரண்டாவது இடத்தை மஹிந்திரா பிடித்துள்ளது.
Advertisement

டாடால இப்படி ஒரு கார் இருக்கறதே நிறைய பேருக்கு தெரியாது...

இந்திய சந்தையில் டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனத்தின் பெரும்பாலான கார்கள் ஒவ்வொரு மாதமும் மிகவும் பிரம்மாண்டமான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்து வருகின்றன. டாடா பன்ச் (Tata Punch) மற்றும் டாடா நெக்ஸான் (Tata Nexon) போன்ற கார்களை இதற்கு உதாரணமாக கூற முடியும்.

லிட்டருக்கு 20கிமீ மைலேஜ் தரும் மாருதி காரை வாங்க ஆள் இல்ல!

மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனத்தில் இருந்து ஒரு விலை குறைவான கார் சைலண்டாக விற்பனையில் இருந்து ஒதுக்கப்பட்டு வருகிறது. அதாவது, அந்த காரை உற்பத்தி செய்து விற்பனை செய்யும் பணிகளை மாருதி சுஸுகி நிறுவனம் படிபடியாக நிறுத்திக் கொள்ள ஆரம்பித்துள்ளது. இருப்பினும், அந்த மாருதி கார் கடந்த 2026 மார்ச் மாதத்தில் ஆயிரத்திற்கும் அதிகமான யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதுகுறித்த கூடுதல் விபரங்களை தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம். வாருங்கள் செய்திக்குள் போகலாம்.

மாருதி சுஸூகி எஸ்-பிரஸ்ஸோ ஹேட்ச்பேக் ஏப்ரல் மாத சலுகைகள்

இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வரும் கார் மாடல்களுக்கு மாருதி சுஸூகி நிறுவனம் ஒவ்வொரு மாதமும் சலுகைகள் அளிப்பது வழக்கம். அந்த வகையில் இந்த மாதமும் பல்வேறு கார் மாடல்களுக்கும் அந்நிறுவனம் சலுகைகளை வழங்கி வருகிறது. அந்த வரிசையில் இந்தியாவில் குறைவான விலை கொண்ட சிறிய ரக கார் மாடலான எஸ்-பிரஸ்ஸோவுக்கு எவ்வளவு சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளன, என்ன அம்சங்களுடன் அந்தக் கார் விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்பதை இங்கே நாம் பார்க்கலாம்.

வின்ஃபாஸ்ட் கார் விலையில் கியா, மஹிந்திரா எலக்ட்ரிக் கார்கள்

வின்ஃபாஸ்ட் (VinFast) நிறுவனத்தில் இருந்து புதிய 7-சீட்டர் எலெக்ட்ரிக் எம்பிவி காரான விஎஃப் எம்பிவி 7 (VF MPV 7) இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ரூ.18 லட்சம் என்கிற அளவிலான விலையில் அறிமுகம் செய்யப்படும் என முன்னதாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில், புதிய விஎஃப் எம்பிவி 7 சற்று அதிகமாக ரூ.24.49 லட்சம் என்கிற எக்ஸ்-ஷோரூம் விலையில் இந்திய மார்க்கெட்டில் களமிறக்கப்பட்டுள்ளது.

கியா சோரென்டோ ஹைபிரிட் எஸ்யூவி இந்திய வெளியீடு

இந்தியாவில் பல்வேறு புதிய கார் மாடல்களை விரைவில் வெளியிடத் திட்டமிட்டு வருகிறது கியா. இதுவரை எரிபொருள் மற்றும் எலெக்ட்ரிக் கார் மாடல்களை மட்டுமே விற்பனை செய்து வந்த அந்நிறுவனம், அடுத்த கட்டமாக ஹைபிரிட் பவர்ட்ரெயின் கொண்ட மாடல்களையும் வெளியிடவுள்ளது. ஹைபிரிட் கார்கள் சற்று கூடுதல் விலையைக் கொண்டிருக்கும் என்பதால் ப்ரீமியம் பிரிவில் விற்பனை செய்யும் கார் மாடல்களிலேயே முதலில் இந்தப் பவர்ட்ரெயினைக் கொடுக்க கியா முடிவெடுத்திருக்கிறது.

திருச்சியில் இருந்து மதுரைக்கு 7 பேர் வர வெறும் 136 ரூபாதானா

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று கியா கேரன்ஸ் க்ளாவிஸ் (Kia Carens Clavis). 7 சீட்டர் எம்பிவி (7 Seater MPV) ரகத்தை சேர்ந்த கியா கேரன்ஸ் க்ளாவிஸ் காரின் நடப்பு 2026ம் ஆண்டு மார்ச் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report), ரஸ்லேன் தளத்தில் தற்போது வெளியாகியுள்ளது.

அதிக மைலேஜ் கொடுக்கும் ஹைபிரிட் சிஸ்டத்தை உருவாக்கிய கீலி

எந்த நாட்டு கார் வாடிக்கையாளர்களை எடுத்துக் கொண்டாலும் மைலேஜ் என்பது கார் வாங்கும் முடிவில் முக்கியமான அளவுகோலாக இருந்து வருகிறது. இதனால் அதிக மைலேஜ் கொண்ட கார்களை உருவாக்குவதில் எப்போதுமே ஆட்டோமொபைல் நிறுவனங்கள் ஆர்வம் காட்டியே வருகின்றன. சமீப காலங்களில் கார்களின் மைலேஜ் அளவை உயர்த்துவதில் ஹைபிரிட் சிஸ்டம்கள் முக்கியப் பங்கு வகிக்கத் தொடங்கியிருக்கின்றன.

ஹன்டர் 350- ஐ விட பெஸ்ட்? ராயல் என்ஃபீல்டின் முதல் மின்சார ப

Royal Enfield Flying Flea C6 மின்சார மோட்டார்சைக்கிள் ஏன் Hunter 350-ஐ விட சிறந்தது? நகரப் பயணங்களுக்கு இதைத் தேர்ந்தெடுப்பதற்கான 5 முக்கிய காரணங்கள். Discover why the Royal Enfield Flying Flea C6 electric bike is the ultimate choice for urban commuting over Hunter 350.
Advertisement

சிட்டி டிராஃபிக்கில் நின்று நின்று செல்ல 7 கார் மாடல்கள்!

சென்னை, பெங்களூரு போன்ற மாநகரங்களின் போக்குவரத்து நெரிசலில் சில கிலோ மீட்டர் பயணத்திற்கே மணிக்கணக்கில் ஆகிறது. குறிப்பாக, காலை, மாலை நேரங்களில் ஆமை போல் மெதுவாகவே ஊர்ந்து செல்ல வேண்டியதாக உள்ளது. இதனால் காருக்குள் அதிக நேரத்தை செலவிட வேண்டியதாக உள்ளது. இதன் காரணமாகவே பலரும் குறுகிய உட்புற இடவசதி கொண்ட செடான் (Sedan) ரக கார்களை காட்டிலும், உயரம் அதிகம் கொண்ட எஸ்யூவி (SUV) ரக காரை வாங்க விரும்புகின்றனர். அவ்வாறு, போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளில் புகுந்து புகுந்து செல்வதற்கு ஏற்ற எஸ்யூவி கார் மாடல்களை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

ஒரு கிமீ ஓட்ட வெறும் ரூ.1.50 மட்டுமே செலவு!

இந்திய சந்தையில் மிக வேகமாக பிரபலமடைந்து வரும் எலெக்ட்ரிக் கார் (Electric Car) நிறுவனங்களில் ஒன்று வின்ஃபாஸ்ட் (VinFast). வியட்நாம் நாட்டை சேர்ந்த வின்ஃபாஸ்ட் நிறுவனம் வெகு சமீபத்தில்தான் இந்திய சந்தையில் நுழைந்தது. வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின் தொழிற்சாலை தமிழ்நாட்டின் (Tamil Nadu) தூத்துக்குடி (Thoothukudi) பகுதியில் அமைந்துள்ளது.

ஃபோக்ஸ்வாகன் டைகூன் எஸ்யூவி தள்ளுபடி விலையில் விற்பனை

சில நாட்களுக்கு முன்பு தான் மேம்படுத்தப்பட்ட டைகூன் (Taigun) எஸ்யூவி மாடலை இந்தியாவில் வெளியிட்டது ஃபோக்ஸ்வாகன். ரூ.11 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் தொடங்கி விற்பனை செய்யப்படவுள்ளது இந்த மேம்படுத்தப்பட்ட மிட்-சைஸ் எஸ்யூவி கார். இந்நிலையில் அப்டேட்டிற்கு முந்தைய டைகூன் எஸ்யூவி மாடலானது பல்வேறு வகைகளில் தள்ளுபடிகள் மற்றும் சலுகைகளுடன் கிடைப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பைக்கை பார்க் செய்யும் போது இதையெல்லாம் செக் பண்ணுங்க...

பைக்குகளை பொது இடங்களிலும் சரி, பார்க்கிங் பகுதிகளிலும், எப்படி பார்க் செய்ய வேண்டும்? எது சரியான முறை? விரிவாகக் காணலாம்.

இன்ஜின் ஃபெயிலியர் ஆனால் இன்சூரன்ஸ் கவர் ஆகுமா?

ஒரு கார் வாங்கினால் அதற்கு இன்சூரன்ஸ் கட்டாயம் எடுக்க வேண்டும். இப்படியாக இன்சூரன்ஸ் எடுக்கும்போது கார் விபத்தில் சிக்கினாலோ திருடு போனாலும் இயற்கை சீற்றங்களால் சேதம் ஆனாலோ அதற்கான நஷ்ட ஈடு நமக்கு கிடைக்கும். ஆனால் கார் இன்ஜின் பெயிலியர் ஆனால் கார் இன்சூரன்ஸ் பெற முடியுமா? இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

மெர்சிடீஸ் பென்ஸ் EQS எலெக்ட்ரிக் செடான் அப்டேட்

மெர்சிடீஸ் பென்ஸ் நிறுவனமானது EQS எலெக்ட்ரிக் செடான் மாடலை சர்வதேச அளவில் மேம்படுத்தியிருக்கிறது. பவர்ட்ரெயின், ரேஞ்சு மற்றும் தொழில்நுட்பம் என அனைத்து வகைகளிலும் முந்தைய மாடலில் இருந்து மேம்பட்டிருக்கிறது புதிய ஃபேஸ்லிப்ட் மாடல். புதிய 800V எலெக்ட்ரிக் கட்டமைப்பு பயன்படுத்தப்பட்டிருப்பதால், பேட்டரியின் திறன் மேம்பட்டிருப்பதோடு, ரேஞ்சும் கூடியிருக்கிறது.

ஹூண்டாய், டாடா கார்களுக்கு எந்த விதத்திலும் சளைத்தது இல்ல!

ஃபோக்ஸ்வேகன் (Volkswagen) நிறுவனத்தில் இருந்து புதியதாக டைகுன் ஃபேஸ்லிஃப்ட் (Taigun Facelift) கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புத்துணர்ச்சியான வெளிப்புறம் மற்றும் திருத்தியமைக்கப்பட்ட உட்புற கேபின் வசதிகள் உடன் புதிய டைகுன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய டைகுன் ஃபேஸ்லிஃப்ட் காரின் விபரங்கள் கடந்த ஏப்ரல் 9ஆம் தேதியே வெளியிடப்பட்டுவிட்ட நிலையில், எக்ஸ்-ஷோரூம் விலைகள் (Ex-Showroom Prices) அறிவிக்கப்பட்டு கார் கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

நிஸான் பேட்ரோல் சொகுசு எஸ்யூவி விரைவில் இந்தியாவிலும்!

இந்தாண்டு தொடங்கி வரும் ஆண்டுகளில் பல்வேறு புதிய நிஸான் கார் மாடல்கள் இந்தியாவில் வெளியிடப்படவுள்ளது. சமீபத்தில் தான் 7 சீட்டர் காரான கிராவைட்டை இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வந்தது நிஸான். தொடர்ந்து பல்வேறு புதிய மாஸ் மார்க்கெட் கார்களை வெளியிடவும் திட்டங்கள் வைத்திருக்கிறது. கடந்த பல ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது தான் மீண்டும் 'ஆக்டிவ்' ஆகியிருக்கிறது நிஸான்.
Advertisement

வின்ஃபாஸ்ட் விஎஃப் எம்பிவி 7 காரின் விலை இன்று அறிவிப்பு!

வின்ஃபாஸ்ட் (VinFast) நிறுவனம் இந்தியாவில் அறிவித்தப்படி அதன் 'விஎஃப் எம்பிவி 7' (VF MPV 7) என்கிற புதிய எலெக்ட்ரிக் காரை ஏப்ரல் 15ஆம் தேதியான இன்று விற்பனைக்கு அறிமுகம் செய்ய உள்ளது. இந்த புதிய வின்ஃபாஸ்ட் எலெக்ட்ரிக் கார் (Electric Car)-ஐ பற்றிய விபரங்கள் ஏற்கனவே வெளியீடு செய்யப்பட்டுவிட்ட நிலையில், விலைகள் அறிவிக்கப்பட்டு கார் அதிகாரப்பூர்வமாக இன்று விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது.

ஆல்டோவை வாங்க ஷோரூம்களில் குவியும் மக்கள்!

இந்திய சந்தையில் மிகவும் குறைவான விலையில் ஒரு ஹேட்ச்பேக் (Hatchback) ரக காரை வாங்க வேண்டும் என்றால், அனைவரின் மனதிற்கும் முதலில் நினைவிற்கு வருவது மாருதி சுஸுகி ஆல்டோ கே10 (Maruti Suzuki Alto K10) காராகதான் இருக்கும். இதன் கடந்த 2025-26 நிதியாண்டிற்கான (2025 ஏப்ரல் 1 - 2026 மார்ச் 31) சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) தற்போது வெளியாகியுள்ளது.

ட்ரையம்ப் போனவில் 400 விரைவில் இந்தியாவில் வெளியீடு

ட்ரையம்ப்பின் சிறிய இன்ஜின் கொண்ட தொடக்க நிலை பைக்குகள் வரிசையில் விரைவில் புதிதாக இணையவிருக்கிறது போனவில் 400 (Bonneville 400). இந்தியாவில் தற்போது ஸ்பீடு 400, ஸ்பீடு T4, ஸ்கிராம்பிளர் 400 X, ஸ்கிராம்பிளர் 400 XC, ட்ராக்கர் 400 மற்றும் த்ரக்ஸ்டன் 400 ஆகிய ஆறு பைக் மாடல்களை விற்பனை செய்து வருகிறது ட்ரையம்ப். இந்த வரிசையில் ஏழாவது மாடலாக புதிதாக இணையவுள்ளது போனவில் 400.

லீப்மோட்டாரின் புதிய எலெக்ட்ரிக் டிசைன் இந்தியாவில் பதிவு

சீனாவைச் சேர்ந்த லீப் மோட்டார் (Leap Motor) நிறுவனம் இந்தியாவில் புதிய B10 என்ற எலெக்ட்ரிக் எஸ்யூவி மாடலின் டிசைனை காப்புரிமைக்காப் பதிவு செய்துள்ளது. இந்தியாவில் விரைவில் இந்தப் புதிய பிராண்டு கால்பதிக்கவிருக்கிறது. இந்தியாவில் சீன நிறுவனங்கள் அதிகளவில் முதலீடு செய்ய தடைகள் இருந்து வருகின்றன. இந்தியாவில் ஏற்கனவே செயல்பாட்டில் இருந்து வரும் ஸ்டெல்லான்டிஸ் (Stellantis) நிறுவனத்தின் மூலம் லீப் மோட்டார் கார்கள் இந்தியாவில் விற்பனைக்கு வரவிருக்கின்றன.

ரெனால்ட் டஸ்டர் டெலிவரி தொடங்கியது!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர் (New-gen Renault Duster) கார் கடந்த மார்ச் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர் காரின் டெலிவரி (Delivery) பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன.