இளைஞர்கள் எல்லாம் இனி இந்த வண்டிய தான் வாங்க போறாங்க!

TVS launches NTorq 150, India's first 150cc hyper-sport scooter. It features aircraft design, connectivity, and first-in-class equipment. | டிவிஎஸ் என்டார்க் 150, இந்தியாவின் முதல் 150cc ஹைப்பர்-ஸ்போர்ட் ஸ்கூட்டர் அறிமுகம். விமான வடிவமைப்பு, இணைப்பு மற்றும் முதல்-வகை உபகரணங்கள் இதில் உள்ளன.

அதிக மைலேஜ் தரும் ஹூண்டாய் காரை இனி இப்படியும் வாங்கலாம்!

ஹூண்டாய் (Hyundai) நிறுவனத்தில் இருந்து கிரெட்டா (Creta) காரில் நைட் எடிசன் (Knight Edition) விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், அது தற்போது ஐ20 (i20), அல்கஸார் (Alcazar) மற்றும் கிரெட்டா எலக்ட்ரிக் (Creta Electric) கார்களிலும் தொடரப்பட்டு உள்ளன. அதாவது, ஐ20, அல்கஸார் மற்றும் கிரெட்டா எலக்ட்ரிக் கார்களிலும் புதியதாக நைட் எடிசன் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

இவ்வளவு குடுத்தா யாரு தான் இந்த காரை வாங்க மாட்டாங்க?

மாருதி நிறுவனம் விக்டோரியஸ் என்ற காரை சமீபத்தில் அறிமகப்படுத்தியது. இந்த கார் மொத்தம் 6 விதமான வேரியன்ட்களில் விற்பனையாகி வருகிறது. இந்த கார் எல்எக்ஸ்ஐ, விஎக்ஸ்ஐ, இசட் எக்ஸ்ஐ, இசட் எக்ஸ்ஐ (ஓ), இசட் எக்ஸ்ஐ+ மற்றம் இசட் எக்ஸ்ஐ + (ஓ) ஆகிய வேரியன்ட்களில் கிடைக்கிறது. இந்த கார் பாரத் என்கேப் சோதனையில் 5 றா்டார் ரேட்டிங்கை பெற்றுள்ளது. இந்த காரின்வேரியன்ட் வாரியிலான விபரங்களை காணலாம் வாருங்கள்.

கம்மி விலைக்கு இவ்வளவு நல்ல வண்டியா?

டிவிஎஸ் நிறுவனம் தனது என்டார்க் 150 ஸ்கூட்டரை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. 149.7 சிசி ஏர் கூல்டு இன்ஜின் உடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஸ்கூட்டர் வெறம் ரூ1.19 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. இது போட்டி தயாரிப்புகளை விட குறைவான விலையாகும். இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
Advertisement

10 லட்ச ரூபாய் கார்களில் கூட இந்த சஸ்பென்ஷன் கிடைக்குதா?

கார்களில் பல்வேறு விதமான சஸ்பென்ஷன் (Suspension) செட்-அப்கள் வழங்கப்படுகின்றன. பெரும்பாலான விலை குறைவான கார்களில் முன்பக்கத்தில் மக்பெர்சன் ஸ்ட்ரட் (MacPherson Strut) சஸ்பென்ஷன் தான் வழங்கப்படுகிறது என்றும், இந்த சஸ்பென்ஷன் உடன் ரூ.10 லட்சத்திற்குள் கிடைக்கும் சிறந்த கார்கள் என்னென்ன என்பதை பற்றியும் ஏற்கனவே முந்தைய தொகுப்பில் பார்த்து இருந்தோம்.

எலக்ட்ரிக் காரில் தொலைத்தூர பயணம் கஷ்டம்னு யாருங்க சொன்னா?

எலக்ட்ரிக் வாகனங்கள் (Electric Vehicles) விற்பனை இந்தியாவிலும் மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. இருப்பினும், விற்பனை வேகம் மெதுவாக உள்ளது என்றே சொல்ல வேண்டும். இதற்கு முக்கிய காரணம், நாடு முழுவதும் ஃபாஸ்ட் சார்ஜிங் (Fast Charging) நிலையங்கள் பரவலாக இல்லாதது ஆகும். அதாவது, பெட்ரோல் பங்க்களை போன்று ஃபாஸ்ட் சார்ஜிங் நிலையங்கள் நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் இன்னும் வரவில்லை.

இப்பவே விலை இவ்ளோதானா!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று ரெனால்ட் கைகர். இதன் அப்டேட் செய்யப்பட்ட ஃபேஸ்லிஃப்ட் மாடல், கடந்த சில நாட்களுக்கு முன்பு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது இந்த புதிய மாடலின் டெலிவரி பணிகள் இந்தியா முழுக்க தொடங்கியுள்ளன. இது ரெனால்ட் கைகர் ஃபேஸ்லிஃப்ட் மாடலுக்காக காத்து கொண்டிருந்த வாடிக்கையாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

10 லட்ச ரூபாய்க்குள் வாங்கும்போது காரில் இதை நோட் பண்ணுங்க!

எந்தவொரு காருக்கும் முக்கியமான பாகம், அதன் சஸ்பென்ஷன் (Suspension) ஆகும். விலையயர்ந்த கார்களில் மிகவும் பிரீமியம் தரத்திலான சஸ்பென்ஷன் செட்-அப் வழங்கப்படும் நிலையில், ரூ.10 லட்சத்திற்குள் விலை குறைவான கார்களில் முன்பக்க சஸ்பென்ஷனுக்கு பரவலாக மக்பெர்சன் ஸ்ட்ரட் (MacPherson Strut) வழங்கப்படுகிறது. இன்னும் வேறு சில சஸ்பென்ஷன் செட்-அப்களும் விலை குறைவான கார்களில் வழங்கப்படுகின்றன என்றாலும், பரவலாக அதிக எண்ணிக்கையிலான கார்களில் வழங்கப்படுவது மக்பெர்சன் ஸ்ட்ரட் ஆகும்.
Advertisement

டிராஃபிக் ஜாமில் இருந்து தப்பிக்க பாகுபலியாக மாறிய இளைஞர்!

இந்திய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் பிரச்னை தலைவிரித்தாடி வருகிறது. ஒரு பக்கம் மக்கள் தொகை மற்றும் வாகனங்களின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்து வருகிறது. ஆனால் மறுபக்கம் அதற்கு ஏற்ற வகையில், சாலைகள் விரிவாக்கம் செய்யப்படுவது இல்லை. இதுவே இந்திய சாலைகளில் வாகனங்கள் நிரம்பி வழிவதற்கு மிகவும் முக்கியமான காரணங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

டிவிஎஸ் கம்பெனியில் இப்படியொரு ஸ்கூட்டரைதான் எதிர்பார்த்தோம்

டிவிஎஸ் மோட்டார் (TVS Motor) நிறுவனத்தில் இருந்து புதியதாக 'எண்டார்க் 150' (Ntorq 150) ஸ்கூட்டர் மார்க்கெட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. டிவிஎஸ் எண்டார்க் 125 ஸ்கூட்டர் ஏற்கனவே விற்பனையில் இருக்கும் நிலையில், அதனை காட்டிலும் அளவில் பெரியதாகவும், பவர்ஃபுல்லான என்ஜினை கொண்டதாகவும் புதிய எண்டார்க் 150 ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

மனைவி உடன் காஸ்ட்லீயான டொயோட்டா காரில் வந்து இறங்கியது இவரா?

சூர்யகுமார் யாதவ் (Suryakumar Yadav), இந்த பெயருக்கு அறிமுகமே தேவை இருக்காது என நினைக்கிறேன். ஏனெனில், அந்த அளவிற்கு பிரபலமான இந்திய கிரிக்கெட் வீரர் (Indian Cricket Player) சூர்யகுமார் யாதவ் ஆவார். குறிப்பாக, சமீப காலமாக டி20 கிரிக்கெட் போட்டிகளிலும், ஐபிஎல் (IPL) கிரிக்கெட் தொடரிலும் தனது தனித்துவமான பேட்டிங் ஸ்டைல் (Batting Style) மூலமாக சூர்யகுமார் யாதவ் ஜொலித்து வருகிறார்.

யமஹாவிற்கு ஆப்பு வைக்க போகும் ஹீரோ!

இந்திய சந்தையில் மேக்ஸி ரக ஸ்கூட்டர்களுக்கு (Maxi Scooters) என தனி வாடிக்கையாளர்கள் வட்டம் உள்ளது. எனவே பல்வேறு முன்னணி நிறுவனங்களும், இந்தியாவில் மேக்ஸி ரக ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வருகின்றன. இதில், ஹீரோ மோட்டோகார்ப் (Hero MotoCorp) நிறுவனமும் ஒன்றாகும்.
Advertisement

கார் & பைக்குகளுக்கு மட்டுமே ஜிஎஸ்டி குறைப்புனு நெனைச்சோம்!

ஜிஎஸ்டி கவுன்சில் (GST Council) கடந்த செப்டம்பர் 3ஆம் தேதி ஜிஎஸ்டி வரிகளில் மாற்றங்களை செய்தை பற்றி அறிந்திருப்பீர்கள் என நினைக்கிறேன். அனைத்து விதமான ஜிஎஸ்டி வரிகளையும் 5% & 18% என இரண்டே இரண்டு வரையறையின் கீழ் மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. இதன் மூலமாக, மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களுக்கான ஜிஎஸ்டி வெகுவாக குறைக்கப்பட்டு உள்ளது. சில பொருட்களுக்கு ஜிஎஸ்டியே இல்லாமல் செய்யப்பட்டு உள்ளது.

இந்த காருக்கெல்லாம் இனி 40 சதவீதம் வரி!

இந்தியாவில் வரும் செப்டம்பர் 22ம் தேதி முதல் ஜிஎஸ்டி வரியில் மாற்றம் கொண்டு வரப்படுகிறது. ஆட்டோமொபைல் செக்டாரில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. சிறிய ரக கார்கள், மற்றும் பைக்குகளுக்கு 28 சதவீதமாக இருந்த வரி 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. பெரிய ரக வாகனங்களுக்கு 40 சதவீதம் வரி விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் படி எந்தெந்த வாகனங்களுக்கு எவ்வளவு வரி விதிக்கப்படும் என விரிவாக காணலாம் வாருங்கள்.

மாருதி உருவாக்கிய காரை நேரில் பார்த்த ஷாக் இன்னும் குறையல!!

மாருதி சுசுகி விக்டோரியஸ் கார் இந்தியாவில் விரைவில் அறிமுகமாக உள்ளது. இதன் அம்சங்கள், வடிவமைப்பு மற்றும் பாதுகாப்பு விவரங்களை இங்கே காணலாம்.

எஸ்யூவி காரை ஈசியா ஓட்டிடலாம்னு பலர் இந்த தப்பை பண்றாங்க!

வளைவுகளில் நிதானம் தேவை: எஸ்யூவி (SUV) ரக கார்களில் மைய ஈர்ப்பு விசை அதிகமாக இருக்கும் என்பதால், வளைவுகளில் வேகமாக திரும்பும்போது கார் ஒருபக்கமாக சாய்வதற்கு வாய்ப்புள்ளது. எனவே வளைவுகளில் திரும்பும்போது காரை மெதுவாக இயக்குவது அவசியமாகும். ஏனெனில், மெதுவாக செல்லும்போதுதான் பிரேக் & க்ளட்ச் பெடல்களை கொடுக்க போதுமான நேரம் கிடைக்கும்.
Advertisement

கார் விலை லட்சக்கணக்கில் குறையுது!

கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினம் கொண்டாடப்பட்டபோது, இந்திய மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி (PM Narendra Modi), மிகவும் மகிழ்ச்சியான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அது ஜிஎஸ்டி வரிகள் (GST) குறைக்கப்படுவது தொடர்பான அறிவிப்பு ஆகும். பிரதமர் நரேந்திர மோடியின் இந்த அறிவிப்பை தொடர்ந்து, ஜிஎஸ்டி வரிகள் எவ்வளவு குறையும்? என்ற ஆவல் மக்கள் மத்தியில் எழுந்தது.

செப் 22 முதல் கார், பைக் விலை குறையப்போகுது!

இந்தியாவில் ஜிஎஸ்டி வரி விதிப்பை மாற்றி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன்படி 12 மற்றும் 28 சதவீதம் ஆகிய இரண்டு ஸ்லாப்புகளும் நீக்கப்படுகின்றன.இனி 5 மற்றும் 18 சதவீத ஸ்லாப் மட்டுமே இருக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் இது நேரடியாக வாகன விலையை குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

11 மாதமா டாடாவுக்கே தண்ணி காட்டும் எம்ஜி எலக்ட்ரிக் கார்!!

எம்ஜி மோட்டார் (MG Motor), இந்தியாவில் எலக்ட்ரிக் கார்களை விற்பனை செய்வதில் சமீப காலத்தில் கவனத்தை ஈர்த்திருக்கும் நிறுவனம். பிரிட்டிஷ் நிறுவனமாக தோன்றி, கடந்த பல வருடங்களாகவே சீனாவின் மிக பெரும் SAIC குழுமத்தின் கீழ் எம்ஜி மோட்டார் செயல்படுகிறது. இதற்கிடையில், 2019இல் இந்தியாவில் நுழைந்த எம்ஜி மோட்டார் நிறுவனம், சமீபத்தில் இந்தியாவின் பிரபலமான ஜே.எஸ்.டபிள்யூ (JSW) நிறுவனத்துடன் இணைந்தது.

29 கிமீ மைலேஜ் தரும் காரை களத்தில் இறக்கிய மாருதி!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த மாருதி சுஸுகி விக்டோரிஸ் (Maruti Suzuki Victoris) கார், இன்று மதியம் (செப்டம்பர் 3), பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டது. காம்பேக்ட் எஸ்யூவி (Compact SUV) ரகத்தை சேர்ந்த மாருதி சுஸுகி விக்டோரிஸ் காரில், பல்வேறு அதிநவீன வசதிகள் (Features) இடம்பெற்றுள்ளன.
Advertisement

10,000 பேர் இந்த கம்பெனி காரை வாங்கிட்டாங்க!

சீனாவைச் சேர்ந்த பிஒய்டி நிறுவனம் இந்தியாவில் வாகனங்களை விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில் இந்நிறுவனம் இந்தியாவில் 10,000 எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்து புதிய சாதனை மைல் கல்லை எட்டி பிடித்துள்ளது. இந்நிறுவனம் மிகப்பெரிய அளவில் வளர்ச்சியை சந்தித்து வருகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

மாருதி சுஸுகி புதுசா உருவாக்கிய காருக்கு 5-ஸ்டார் ரேட்டிங்!

மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனத்தில் இருந்து புதியதாக 'விக்டோரிஸ்' (Victoris) என்கிற பெயரில் எஸ்யூவி (SUV) ரக கார் ஒன்று வெளியிடப்பட்டு உள்ளது. முற்றிலும் புதிய கார் ஒன்றை செப்டம்பர் 3ஆம் தேதியில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக ஏற்கனவே மாருதி சுஸுகி தெரிவித்து இருந்த நிலையில், அதன்படி தற்போது மாருதி சுஸுகி விக்டோரிஸ் கார் வெளியீடு செய்யப்பட்டு உள்ளது.

டாடாவின் ஈரக்குலையை நடுங்க வைத்த மாருதியின் புதிய கார்!

மாருதி சுஸுகி நிறுவனத்தின் புதிய காம்பேக்ட் எஸ்யூவி ரக கார் இன்று (செப்டம்பர் 3) அறிமுகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி சற்று நேரத்திற்கு முன்பு, மாருதி சுஸுகி நிறுவனத்தின் புதிய காம்பேக்ட் எஸ்யூவி ரக கார், இந்திய சந்தையில் அதிகாரப்பூர்வமாக பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டது.

20 கி.மீ மைலேஜ் இந்த காரை இனி வாங்க முடியாதா?

மாருதி நிறுவனம் தனது மிட் சைஸ் செடான் காரான சியாஸ் காரின் தயாரிப்பை கடந்த ஏப்ரல் மாதம் முதலே நிறுத்திய நிலையில் இருக்கும் ஸ்டாக்கை மட்டுமே விற்பனை செய்து வந்தது.இதனால் இந்த கார் அதிகாரப்பூர்வமாக நிறுத்தப்படாமல் இருந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஒரு கார் கூட விற்பனையாகவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஸ்டாக் முற்றிலுமாக தீர்ந்துவிட்டது என புரிந்து கொள்ள முடிகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
Advertisement

ஒரே வாரத்தில் இரு சொகுசு கார்களை வாங்கிய தொழிலதிபர்!!

பழங்காலத்தில் இருந்தே உலக நாடுகள் மத்தியில் நம் இந்தியா ஆனது அதன் பல்வேறு வகையிலான மசாலா பொருட்களுக்கு பிரபலமானது என்பதை நான் சொல்ல வேண்டியது இல்லை. ஆங்கிலேயர்கள் இந்தியாவை தேடி வந்ததே இங்குள்ள மசாலாக்களை எடுத்து செல்லவே என்பது எல்லாம் உங்களுக்கு தெரிந்ததே. இதனாலேயே, நாடு விடுதலை அடைந்த பின் பலர் இந்திய மசாலாக்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் தொழிலை துவங்கினர்.