டூவீலர் டீலர்களுக்கு செக் வைத்த ஆர்டிஓ!

இந்தியாவின் வளர்ச்சிக்கு சாலை விபத்துக்கள் (Road Accidents), பெரும் தடையாக இருக்கின்றன. இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 5 லட்சம் சாலை விபத்துக்கள் நடைபெறுகின்றன. இதன் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் சுமார் 2 லட்சம் உயிர்களை இந்தியா பறி கொடுக்கிறது. இந்த உயிரிழப்புகள், சம்பந்தப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு மட்டும் இழப்பை ஏற்படுத்துவதில்லை. கூடவே நாட்டின் வளர்ச்சியிலும் மிக கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றன. ஆம், சாலை விபத்துக்களால் ஜிடிபி எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP - Gross Domestic Product) விகிதம் சரிவை சந்திக்கிறது.

இந்தியாவை நம்பி வெளிநாட்டுல ஆலை திறந்த நிறுவனம்!

ஸ்கோடா ஆட்டோ வித்னாம் இல் புதிய தொழிற்சாலையைத் திறந்துள்ளது, இது குஷக் மற்றும் ஸ்லாவியா மாடல்களை ஒன்றுசேர்க்கும், ஏசியான் மார்க்கெட்டில் அதன் இருப்பை வலுப்படுத்துகிறது.

உச்சகட்ட பாதுகாப்புடன் புல்லட் ப்ரூஃப் கார்ல வந்தது அவரா!

உலகின் பெரும் கோடீஸ்வரர்களில் ஒருவராக இருப்பவர் முகேஷ் அம்பானி (Mukesh Ambani). இதன் காரணமாக முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் உள்ளன. எனவே முகேஷ் அம்பானி குடும்பத்தினர் எங்கு பயணம் செய்தாலும், உச்சகட்ட பாதுகாப்பு வழங்கப்படுகிறது. முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினர் ஒரே நேரத்தில் ஒரே இடத்திற்கு சென்றாலும் கூட, சில சமயங்களில் தனித்தனி கார்களில்தான் பயணம் செய்வார்கள். பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது. அத்துடன் அவர்கள் பயணம் செய்வது பெரும்பாலும் புல்லட் ப்ரூஃப் கார்களாகதான் (Bullet Proof Cars) இருக்கும்.

அதிரடியாக இந்த காரின் விலையை குறைத்த மஹிந்திரா!

மகிந்திரா XUV700 இன் AX7 மற்றும் AX7 L மாடல்களில் விலை குறைப்பு குறித்து அறியவும். முக்கிய விவரக்குறிப்புகள் மற்றும் புதிய எபனி எடிஷன் பற்றி அறியவும்.
Advertisement

முட்டாள்கள் தினம் முதல் டோல்கேட் கட்டணங்கள் உயரப்போகுது!

தமிழ்நாடு முழுவதும் உள்ள 44 டோல் பிளாசாக்களில் ஏப்ரல் மாதம் முதல் டோல் கட்டணங்கள் 3% முதல் 12% வரை உயர்த்தப்பட உள்ளன. இதனால், உள்கட்டமைப்பு தரம் மற்றும் உள்ளூர் குடியிருப்பாளர்களுக்கான பாஸ்கள் இல்லாதது குறித்து கவலைகள் எழுந்துள்ளன.

இது இந்தியானு சொன்னால் நம்ப முடிகிறதா? வைரல் வீடியோ!!

இந்தியாவில் மக்கள் தொகை அதிகரிக்க, அதிகரிக்க அதற்கேற்ப சாலையில் ஓடும் வாகனங்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கார்களின் பயன்பாடு நாடு முழுவதும் வேகமாக அதிகரித்து வருகிறது. இதனால், சென்னை, பெங்களூரு போன்ற மாநகரங்களில் கார்களை பார்க்கிங் செய்வது என்பது பெரிய சவாலான விஷயமாக மாறி வருகிறது. விலையுயர்ந்த காரை கூட வாங்க முடிகிறது; ஆனால் அவற்றை பாதுகாப்பாக நிறுத்த ஒரு இடம் இல்லை என்பதினாலேயே நிறைய பேர் கார் வாங்கும் ஆசையை மனதிற்குள்ளேயே புதைத்து விடுவதை கேள்விப்பட்டு இருப்பீர்கள்.

இந்திய இராணுவத்துக்காக ஆர்டர் கொடுக்கப்பட்ட ஃபோர்ஸ் குர்கா!

மஹிந்திரா (Mahindra) நிறுவனத்தின் தார் (Thar) வாகனத்திற்கு போட்டியாக பல நிறுவனங்கள் ஆஃப்-ரோடு எஸ்யூவி (Off-road SUV) வாகனத்தை மார்க்கெட்டில் அறிமுகம் செய்துள்ளன. இந்தியாவின் நம்பர் ஒன் கார் நிறுவனமாக விளங்கும் மாருதி சுஸுகி (Maruti Suzuki) கூட 2023ஆம் ஆண்டில் ஜிம்னி (Jimny) வாகனத்தை இந்தியாவில் அறிமுகம் செய்தது. ஆனால், ஜிம்னியின் வருகைக்கு முன்பே மஹிந்திரா தாருக்கு ஒரு வாகனம் விற்பனையில் போட்டியாக இருந்து வருகிறது. அதுதான், ஃபோர்ஸ் மோட்டார்ஸ் (Force Motors) நிறுவனத்தின் குர்கா (Gurkha) வாகனம் ஆகும்.

கோடி ரூபா கொடுத்து வாங்கும் மெர்சிடிஸ் காரை கூட நம்ப முடியல!

மெர்சிடிஸ் (Mercedes) உலகளவில் பிரபலமான சொகுசு கார் நிறுவனம். இந்தியாவிலும் சொகுசு கார்களை விற்பனை செய்வதில் நம்பர் ஒன் நிறுவனமாக விளங்குகிறது. இதற்கு முக்கிய காரணம், அவ்வப்போது புது, புது லக்சரி கார்களை மெர்சிடிஸ் நிறுவனம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்வது ஆகும். இந்த வகையில் கடந்த 2021ஆம் ஆண்டின் ஜூலை மாதத்தில் மெர்சிடிஸ்-ஏஎம்ஜி இ-கிளாஸ் (Mercedes-AMG E-Class) அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால், தற்போது இந்த ஏஎம்ஜி கார் இந்தியாவில் விற்பனையில் இல்லை. ஏற்கனவே விற்பனை நிறுத்தப்பட்டு விட்டது.
Advertisement

சென்னைல 100 புதிய பேருந்துகள் ஓட போகுது.. எல்லாமே ஏசி பஸ்ஸா!

சென்னை வாசிகள் சொகுசாக பயணிப்பதற்காக பெருநகர போக்குவரத்துக் கழகம் (Metropolitan Transport Corporation) சில புதிய பேருந்துகளை பொது போக்குவரத்துச் சேவையில் இணைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இப்போது வெளியாகி இருக்கும் தகவலின்படி 100 ஆடம்பர டிராவல் அனுபவத்தை வழங்கக் கூடிய ஏசி பேருந்துகள் எம்டிசி-இன்கீழ் இணைக்கப்பட இருப்பது தெரிய வந்திருக்கின்றது. இந்த நூறு ஏசி பேருந்துகளுமே மின்சாரத்தில் இயங்கக் கூடியது என்பதும் தற்போது தெரிய வந்து உள்ளது.

கேள்விபடாத பெயர் மாதிரி இருக்கும்! ஆனா வண்டி தரமா இருக்குது!

புனேயில் அறிமுகப்படுத்தப்பட்ட நுமெரோஸ் மோட்டார்ஸின் புதிய டிப்லோஸ் மேக்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர், பிரமிக்க வைக்கும் விவரக்குறிப்புகள், வரம்பு மற்றும் வடிவமைப்பு ஆகியவற்றைக் கொண்டுள்ளது, இது தற்போது புனேயில் கிடைக்கிறது.

உலகில் எந்த நாடும் செய்யாத அதிரடியை செய்ய போகும் மத்திய அரசு

முன்பெல்லாம் வாடகைக்கு டாக்ஸி (Taxi) பிடிக்க வேண்டுமென்றால், அதிக சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. ஆனால் தற்போது காலம் மாறி விட்டது. நீங்கள் எங்கு இருந்தாலும், இருக்கும் இடத்திற்கே ஒரு சில நிமிடங்களில் டாக்ஸிகள் வந்து விடுகின்றன. டாக்ஸி பிடிக்கும் வேலையை மொபைல் செயலிகள் (Mobile Apps) எளிமையான விஷயமாக மாற்றி விட்டன. செல்போன் செயலியில் நீங்கள் செல்ல வேண்டிய இடத்தை பதிவிட்டால், ஒரு சில நிமிடங்களில், நீங்கள் இருக்கும் இடத்திற்கே டாக்ஸி வந்து, உங்களை 'பிக்-அப்' செய்து கொள்ளும்.

மஹிந்திரா கார் உடன் நிற்பவர் இந்த நடிகரின் அக்கா மகனா?

அஜய் தேவ்கான் (Ajay Devgn), இந்த பெயரை எங்கேயோ கேள்விப்பட்டதுபோல் இருக்கிறதா? பிரபல பாலிவுட் நடிகர் மற்றும் நடிகை கஜோல் (Kajol)-இன் கணவர். 1990களில் இருந்து சுமார் 125க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ள அனுபவமிக்க நடிகரான அஜய் தேவ்கானை ராஜமௌலியின் 'ஆர்.ஆர்.ஆர்' (RRR) திரைப்படத்தில் ராம் சரணின் ஃபிளேஷ்பேக் தந்தை கதாபாத்திரத்தில் பார்க்க முடியும். அஜய் தேவ்கானின் சகோதரியான நீலம் தேவ்கான் (Neelam Devgan)-உம் நடிகை ஆவார். இவருக்கு மகனாக, நடிகர் அஜய் தேவ்கானுக்கு மச்சானாக இருக்கும் டேனிஷ் தேவ்கான் (Danish Devgan) புதியதாக மஹிந்திரா எக்ஸ்.இ.வி 9இ (Mahindra XEV 9e) என்கிற விலைமிக்க மஹிந்திரா எலக்ட்ரிக் கார் (Electric Car)-ஐ வாங்கி உள்ளார்.
Advertisement

விலை உயர்ந்த கார்ல போனாலும் கலாச்சாரத்தை மறக்காத மனுஷன்!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் (Toyota Innova Hycross). தற்போதைய நிலையில் டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காரின் ஆரம்ப விலை 19.94 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலையோ 31.34 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலையாகும் (Ex-showroom Price). பொதுவாக இந்த விலையில் விற்பனை செய்யப்படும் கார்களை எல்லாம் பாலிவுட் திரையுலகை சேர்ந்த நட்சத்திரங்கள் வாங்குவது கிடையாது.

டாடாகிட்ட மோதி மூக்கை உடைத்த ஹூண்டாய்!

டாடா பஞ்ச், ஹூண்டாய் எக்ஸ்டர் மீது சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தி, பிப்ரவரி 2025 இல் 14,559 யூனிட்களை விற்பனை செய்துள்ளது. மைக்ரோ-எஸ்யூவி சந்தையின் வளர்ச்சி பாதையில் உள்ள நுண்ணறிவுகளை கண்டறியவும்.

ஒரு சொட்டு பெட்ரோல் இல்லேன்னாலும் 110 கி.மீ போகலாம்!

ஆடி ஏ5 இ-ஹைப்ரிட்டின் பிரமிக்க வைக்கும் செயல்திறன், மின்சார வரம்பு மற்றும் அதன் சக்தி வாய்ந்த 2.0 லிட்டர் இயந்திரம் மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பம் உள்ளிட்ட அம்சங்களை கண்டறியவும்.

ஒன்றரை கோடி ரூபா காரின் மீது மோதிய பஸ்! ஓனர் இவ்ளோ பெரிய ஆளா

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக திகழும் கார்களில் ஒன்று டொயோட்டா வெல்ஃபையர் (Toyota Vellfire). திரையுலக நட்சத்திரங்கள் பலரும் இந்த சொகுசு எம்பிவி (Luxury MPV) ரக காரை வைத்துள்ளனர். இதில், அபிஷேக் பச்சன் (Abhishek Bachchan), ஆமிர் கான் (Aamir Khan), அக்ஸய் குமார் (Akshay Kumar), அஜய் தேவ்கன் (Ajay Devgn) மற்றும் மோகன்லால் (Mohanlal) உள்ளிட்ட நடிகர்கள் எல்லாம் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர். இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் டொயோட்டா வெல்ஃபையர் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலையே 1.22 கோடி ரூபாயாக உள்ளது.
Advertisement

மாருதியின் தலைமை பொறுப்பில் ஒரு இந்தியர்! யார் இவர்?

மருதி சுசுகி இந்தியா, முதல் இந்திய ஊழியராக சுனில் கக்கரை முழுநேர இயக்குநராக நியமித்துள்ளது, இது உள்ளூர் தலைமையை மேம்படுத்துகிறது.

2025 ஏசர் ஃபாஸ்டர் விருதுகளை பெற்ற கார் & பைக்குகள் இவைதான்!

2025ஆம் ஆண்டிற்கான ஏசர் ஃபாஸ்டர் விருதுகள் (Acer FASTER Awards) அறிவிக்கப்பட்டு உள்ளன. கடந்த 2024ஆம் ஆண்டில் விற்பனைக்கு வந்த கார் & பைக்குகளை ஆய்வு செய்து ஏசர் ஃபாஸ்டர் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த விருதுகளுக்கு தகுதி உடைய கார் & பைக்குகளை தேர்வு செய்யும் குழுவில் நமது டிரைவ்ஸ்பார்க் (Drivespark) குழுவை சேர்ந்த புரோமித் கோஷ் கலந்துக் கொண்டார். டிரைவ்ஸ்பார்க் உள்பட மொத்தம் 6 ஊடக நிறுவனங்கள் விருதுகளை பெறும் வாகனங்களை தேர்வு செய்துள்ளன. இதன்படி, எந்தெந்த வாகனங்கள் எந்தெந்த விருதுகளை பெற்றுள்ளன என்பதை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

இந்தியாவை பின்பற்றி கார் இறக்குமதிக்கு வரி போடும் அமெரிக்கா!

உள்நாட்டில், வாகனங்களின் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்பதில் நம் இந்திய அரசாங்கம் கடந்த பல வருடங்களாகவே உறுதியாக உள்ளது. அதாவது, வெளிநாட்டில் இருந்து வரும் ஆட்டோமொபைல் நிறுவனங்களை இந்தியாவிலேயே தொழிற்சாலை அமைத்து செயல்பட வைக்க வேண்டும் என்பதுதான் மத்திய அரசாங்கத்தின் நோக்கமாக உள்ளது. இதன் விளைவாக, இயற்கை வளங்கள் பாதிக்கப்பட கூடும் என்கிற ஒரு பின்னடைவு இருந்தாலும், இவ்வாறு உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பது நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தி உலக நாடுகள் மத்தியில் இந்தியாவை முன்னுறுத்தி காட்டும். நமது இந்திய அரசின் இந்த யுக்தியை அமெரிக்காவும் பின்பற்ற ஆரம்பித்துள்ளது.

ஏப்1 முதல் இந்த கார்களின் விலை தாறுமாறா ஏறப்போகுது!

மார்பதி சுசுகி இந்தியா ஏப்ரல் 2025ல் கார் விலையை 4% வரை உயர்த்துவதாக அறிவித்துள்ளது. இந்த உயர்வு இந்தியா முழுவதும் அரினா மற்றும் நெக்ஸா மாதிரிகளை பாதிக்கும்.
Advertisement

லேண்ட் ரோவர் டிஃபெண்டர் ஆக்டா கார் இந்தியாவில் அறிமுகம்!!

ஜாகுவார் லேண்ட் ரோவர் (Jaguar Land Rover), உலகளவில் பிரபலமான எஸ்யூவி கார் (SUV Car) நிறுவனம். கம்பீரமான மற்றும் விலையுயர்ந்த எஸ்யூவி கார்களை உருவாக்குவதில் கைத்தேர்ந்த நிறுவனமாக ஜாகுவார் லேண்ட் ரோவர் விளங்குகிறது. ஜாகுவார் மற்றும் லேண்ட் ரோவர் நிறுவனங்களின் கூட்டணி நிறுவனம் தான் ஜாகுவார் லேண்ட் ரோவர் என்பது உங்களில் சிலருக்கு தெரிந்திருக்கும் என நினைக்கிறேன். இவை இரண்டுமே கூட்டணியில் இருந்தாலும், உற்பத்தி செய்யும் கார்களை தனித்தனி பிராண்ட்களில் விற்பனை செய்கின்றன. அந்த வகையில், லேண்ட் ரோவரில் இருந்து பல்வேறு விதமான கார்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

எவ்ளோ கிமீ ஓடி இருந்தாலும் வேணாம்னா ரிட்டர்ன் பண்ணிக்கலாம்!

வாடிக்கையாளர்களைக் கவர சிறப்பு சலுகைகளை வாகன உற்பத்தியாளர்கள் அறிவிப்பது ஒன்றும் புதிதல்ல, அது வழக்கமான ஒன்றே. ஆனால், சமீப காலமாக ஒரு சில வாகன உற்பத்தியாளர்கள் யாரும் நம்ப முடியாத மற்றும் இதுவரை யாரும் பார்த்திராத ஆஃபர்களையும், திட்டங்களையும் அறிவித்து வருகின்றனர். அந்த மாதிரியான ஓர் அறிவிப்பை பற்றியே தகவலையே இந்த பதிவில் நாம் பார்க்க இருக்கின்றோம். இந்தியாவில் இயங்கிக் கொண்டிருக்கும் முன்னணி மின்சார வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான கைனடிக் கிரீன் (Kinetic Green), இதுவே அந்த யாரும் இதுவரை கண்டிராத திட்டத்தை அறிவித்து இருக்கும் நிறுவனம் ஆகும்.

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் 500சிசி+ பைக்குகள்!!

உலகளவில் மிக பெரும் மோட்டார்சைக்கிள் சந்தை என்றால், அது நம் இந்தியா என்று சொன்னால் அது மிகையில்லை. ஆனால் அதேநேரம், நம் நாட்டில் விலை குறைவான பைக்குகளை வாங்கவே பெரும்பாலானோர் விரும்புகின்றனர். ஏனெனில், அவ்வாறான பொருளாதார சூழலே நம் நாட்டில் நிலவுகிறது. 500சிசி-க்கு மேல் பவர்ஃபுல்லான மற்றும் விலைமிக்க பைக்குகளை வாங்கக்கூடிய கஸ்டமர்கள் இந்த பரந்து விரிந்த நாட்டில் குறைவாகவே உள்ளனர். அதனை வெளிக்காட்டும் வகையில், கடந்த 2025 பிப்ரவரி மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட 500சிசி பைக்குகளை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

30 லட்ச ரூபாயில் புது டொயோட்டா கார் வாங்கிய தயாரிப்பாளர்!!

டொயோட்டா இன்னோவா (Toyota Innova) கார்களுக்கு நம் நாட்டில் கடந்த பல வருடங்களாக நல்ல டிமாண்ட் இருந்து வருகிறது. இன்னும் சொல்லப்போனால், இந்தியாவில் இன்னோவா காரை பிடிக்காதவர்களே மிகவும் குறைவு என்றுதான் சொல்ல வேண்டும். இதன் காரணமாகவே, உலகளவில் பிரபலமான ஜப்பானிய கார் நிறுவனமான டொயோட்டா இந்தியாவில் அவ்வப்போது இன்னோவா கார்களை அப்டேட் செய்து விடுகிறது. அதேபோல், புது புது இன்னோவா கார்கள் தொடர்ச்சியாக அறிமுகம் செய்யப்பட்ட வண்ணம் உள்ளன. ஆரம்பத்தில் இன்னோவா என்று இருந்த நிலையில், அதன்பின் 'இன்னோவா கிரிஸ்ட்டா' என மாறியது.
Advertisement

கையில காசு இருந்தா இதுல ஒரு காரை இப்பவே வாங்கி போடுங்க!

இந்தியாவில் ரூ. 25 லட்சத்திற்கு கீழ் உள்ள சிறந்த டீசல் ஆட்டோமேடிக் எஸ்யூவிகளை கண்டறியவும். முக்கிய மாடல்கள் டாட்டா நெக்ஸான், மகிந்திரா எக்ஸ்யூவி700, கிஅ சோனெட் ஆகியவை அடங்கும்.