டாடா ஷோரூம்ல டெஸ்லா காரு கிடைக்குமா? ரெண்டு பேரும் கூட்டணி!
ஆட்டோமொபைல்
- 1 year, 6 month, 1 day ago
உலக புகழ்பெற்ற எலெக்ட்ரிக் கார் உற்பத்தி நிறுவனமான டெஸ்லா (Tesla)வும், டாடா குழுமம் (Tata Group)-ம் கூட்டணியைத் தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த கூட்டணி எதற்காக மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றது என்பதே இங்கே பலரின் சந்தேகமாக அமைந்து உள்ளது. குறிப்பாக, டாடா மோட்டார்ஸ் (Tata Motors)-க்கு சொந்தமான ஷோரூம்களில் வைத்து, டெஸ்லா அதன் எலெக்ட்ரிக் கார்களை விற்கப் போகுதா என்கிற கேள்வியையே இந்த கூட்டணி நம் மனதில் எழுப்பி இருக்கின்றது.