சில இலட்சங்களில் பென்ஸ் காரை வரவழைத்த மஹிந்திரா கார் ஓனர்!!

மஹிந்திரா பொலிரோ (Mahindra Bolero), இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்படும் கார்களுள் ஒன்று. சொல்லப்போனால், சில வருடங்களுக்கு முன்பு வரையில் மஹிந்திரா நிறுவனம் ஒவ்வொரு மாதமும் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யும் நம்பர் ஒன் காராக பொலிரோ விளங்கியது. இப்போது வேறு சில மாடர்ன் மஹிந்திரா காரக்ள் அந்த நம்பர் ஒன் இடத்தை பிடித்துவிட்டன. இருப்பினும், மஹிந்திரா பொலிரோ கார்களின் விற்பனை குறைந்துவிட்டது என சொல்ல முடியாது. எப்போதும்போல், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான கஸ்டமர்கள் தொடர்ந்து வாங்கிக் கொண்டுதான் இருக்கின்றனர்.

காரை வாங்கியதில் இருந்து ஜாலியா ரவுண்ட் அடிக்கும் நடிகர்!!

போர்ஷே (Porsche) கார்களுக்கு உலகளவில் நல்ல வரவேற்பு மக்கள் மத்தியில் இருப்பதை பற்றி நான் கூற வேண்டியது இருக்காது என நினைக்கிறேன். ஏனெனில், அந்த அளவிற்கு நம்மில் நிறைய பேருக்கு போர்ஷே கார்கள் கனவு வாகனங்களாக உள்ளன. அவற்றை வாங்கும் அளவிற்கு பணம் இல்லாவிடினும், வாழ்வில் எப்படியாவது வாங்கிவிட வேண்டும் என ஏதாவது ஒரு போர்ஷே கார் மீது ஆசை கொண்டிருப்போம். ஆனால், இங்கு ஒரு நடிகர் சர்வ சாதாரணமாக தனது புத்தம் புதிய போர்ஷே காரில் வந்து இறங்கியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோக்களும் படங்களும் இணையத்தில் கவனத்தை பெற்றுள்ளன.

7 பேர் போற கார் இவ்ளோ மைலேஜை வாரி வழங்குதா!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் எம்பிவி ரக கார்களில் (MPV Cars) ஒன்று மாருதி சுஸுகி எர்டிகா (Maruti Suzuki Ertiga). இதன் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள ஒரு கார்தான் டொயோட்டா ரூமியான் (Toyota Rumion). சுஸுகி நிறுவனத்துடனான கூட்டணியின் அடிப்படையில் இந்திய சந்தையில் மாருதி சுஸுகி நிறுவனத்தின் பல்வேறு கார்களை டொயோட்டா நிறுவனம் ரீ-பேட்ஜ் செய்து விற்பனை செய்து கொண்டுள்ளது. இந்த வரிசையில் மாருதி சுஸுகி எர்டிகாவை ரீ-பேட்ஜ் செய்து விற்பனை செய்யப்படும் ஒரு கார்தான் டொயோட்டா ரூமியான்.

மதுரை வழியா சுத்திட்டு போகணும்னு இனி அவசியம் இல்ல!

2025-26ஆம் நிதியாண்டிற்கான தமிழ்நாடு பட்ஜெட் (Tamilnadu Budget) சட்டசபையில் இன்று (மார்ச் 14) மாநில நிதியமைச்சர் தங்கம் தென்னரசு (Thangam Thennarasu) அவர்களால் தாக்கல் செய்யப்பட்டது. அடுத்த 1 வருடத்தில் தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட போகும் திட்டங்களை கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ள இந்த பட்ஜெட்டில் ஆட்டோமொபைல் மற்றும் போக்குவரத்துத் துறை தொடர்பாக வகுக்கப்பட்டுள்ள திட்டங்களை ஒன்றன்பின் ஒன்றாக பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் தற்போது ஓர் அசத்தலான திட்டத்தை பற்றி தான் பார்க்க போகிறோம். வாருங்கள் செய்திக்குள் போகலாம்.
Advertisement

792 கிமீ ரேஞ்ச் தரும் இ-கார் வெளியீடு..

உலக புகழ்பெற்ற கார் உற்பத்தி நிறுவனம் ஒன்று தன்னுடைய புதுமுக கார் மாடலை வெளியீடு செய்ய ரோம் நகரத்திற்கு சென்றிருக்கின்றது. மெர்சிடிஸ் பென்ஸ் (Mercedes-Benz), இதுவே அந்த நிறுவனம் ஆகும். புதிய சிஎல்ஏ (CLA) எனும் சொகுசு கார் மாடலையே அது வெளியீடு செய்திருக்கின்றது. மிகவும் அட்வான்ஸ்டு தொழில்நுட்பங்களைத் தாங்கிய கார் மாடலாக இதனை அந்நிறுவனம் தயார் செய்திருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. மிக முக்கியமாக ஏஐ (AI) தொழில்நுட்பத்தை எல்லாம் இந்த காரில் பென்ஸ் நிறுவனம் வழங்கி இருக்கின்றது.

பால் வண்டியாக மாறியிருப்பது என்ன காருனு தெரியுதா?..

ஏழை மற்றும் எளிய மக்களுக்கான கார் என்றால் அது மாருதி ஆல்டோ (Maruti Suzuki Alto)-தான். இது பலரும் அறிந்த ஒன்று. இது அடித்தட்டு மக்களுக்கான கார் என்பது மாறி தற்போது பால் வாகனம் என்கிற புதிய ரோலையும் சுமக்கத் தொடங்கி இருக்கின்றது. ஆமாங்க, ஆல்டோவே தற்போது பால் வண்டியாக மாறி இருக்கின்றது. பஞ்சாப் மாநிலத்திலேயே இந்த விநோத நிகழ்வு அரங்கேறி இருக்கின்றது. வாகன மாடிஃபிகேஷன் வாயிலாகவே இந்த மாற்றத்தை ஆல்டோ காரில் செய்திருகின்றனர்.

சென்னையை மொத்த நாடும் திரும்பி பார்க்க இதைவிட என்ன வேண்டும்?

தமிழ்நாடு பட்ஜெட் (Tamilnadu Budget) 2025-26ஆம் நிதியாண்டிற்காக பல அட்டகாசமான திட்டங்களுடன் இன்று (மார்ச் 14) சட்டசபையில் அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கம்போல் இந்த முறையும் பல்வேறு துறைகளை சார்ந்த திட்டங்கள் அடங்கிய கலவையாக தமிழ்நாட்டு அரசாங்கத்தின் பட்ஜெட் உள்ளது. மகளிருக்கான உரிமைத்தொகை திட்டத்தில் இருந்து விண்வெளி சார்ந்த தொழிற்நுட்பங்களை கண்டுப்பிடிப்பதற்கான நிதி வரையில் என பல துறைகளுக்கு தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு மாநில பட்ஜெட்டை வகுத்துள்ளார். குறிப்பாக, மாநில போக்குவரத்து துறையை மேம்படுத்தும் வகையில் நிறைய திட்டங்கள் பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளன.

இந்தியாவுக்கு கப் வர இவர் முக்கியமான காரணம்!

அக்‌ஷர் படேல் தனது லக்ஸரி கார் சேகரிப்பை ரேஞ்ச் ரோவர் ஆட்டோபயோகிராஃபி மூலம் மேம்படுத்தியுள்ளார், இது இந்திய பிரபலங்களின் மத்தியில் இதன் செயல்திறன் மற்றும் ஈர்ப்புத்தன்மையைக் காட்டுகிறது.
Advertisement

விலை குறைவான சேத்தக்-இன் ஸ்பை படம்!

பஜாஜ் நிறுவனம் (Bajaj), இந்தியாவின் மின்சார இரண்டு சக்கர வாகன பிரிவின் உச்ச இடத்தை ஏற்கனவே அடைந்துவிட்டது. ஆனால், இது அந்த நிறுவனத்திற்கு போதவில்லை என தெரிகின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாகவே அதன் சமீபத்திய செயல்பாடுகள் அமைந்திருக்கின்றன. நிறுவனம் எலெக்ட்ரிக் டூ-வீலர் விற்பனையில் மாபெரும் சாதனைகளைப் படைக்க வேண்டும் என்பதில் மிக தீவிரமாக உள்ளது. இதன் அடிப்படையில் சேத்தக் (Chetak) எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலில் விலை குறைவான வேரியண்ட் ஒன்றை அது தயார் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

2025-26 தமிழ்நாடு பட்ஜெட்டில் இந்த திட்டத்தை கவனித்தீர்களா?

2025-26ஆம் நிதியாண்டிற்கான தமிழ்நாடு பட்ஜெட் (Tamil Nadu Budget) சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு (Thangam Thennarasu) சட்டசபையில் தாக்கல் செய்துள்ளார். கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணிணி, பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு மாதம் ரூ.2,000 என பல அசத்தலான திட்டங்களை கொண்டிருக்கும் 2025-26 தமிழ்நாடு பட்ஜெட்டில் ஆட்டோமொபைல் துறையை பொறுத்தவரையில், ஆன்லைன் சார் தொழிலில் ஈடுப்படுவோருக்கு வாகனங்களை வாங்குவதற்கு மானியம் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மோட்டார் வாகனங்களை உற்பத்தி செய்ய பயன்படும் குறைக்கடத்திகளை உருவாக்குவதற்கு ஆலை அமைக்க ரூ.500 கோடி ஒதுக்கிடப்பட்டுள்ளது.

கார், பைக் மட்டும் கிடையாது இது கப்பலையும் தயாரிக்க போறாங்க

தமிழக அரசு 2025-26ம் நிதியாண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்த போது தமிழகத்திற்கான கடல்வழிப் போக்குவரத்து தயாரிப்பு கொள்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் இனி கப்பல் படகு போன்ற கடல் வழி போக்குவரத்து வாகனங்களை கட்டமைக்க வழிகளையும் ஏற்பாடுகளையும் செய்து வைத்துள்ளது. இதனால் தமிழகத்தில் இனி கப்பல் கட்டுமானம் செய்யும் கம்பெனிகள் அதிகம் முதலீடு செய்ய வாய்ப்பிருக்கிறது. இந்த கொள்கைகள் தமிழகத்திற்கு எந்த அளவுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்ற விபரங்களை காணலாம் வாருங்கள்.

போரூர்-பூந்தமல்லி மெட்ரோ ரயில் எப்போது பயன்பாட்டிற்கு வரும்?

சென்னை வாசிகள் மத்தியில் மெட்ரோ ரயில் சேவைக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. லக்சூரி மற்றும் சொகுசான டிராவல் அனுபவத்தை இந்த ரயில் சேவை மக்களுக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. எனவேதான் இதனை விரிவாக்கம் செய்வதில் தமிழக அரசும் தீவிரம் காட்டிக் கொண்டிருக்கின்றது. இதை மேலும் உறுதிப்படுத்தும் விதமாகவே 2025-2026 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் அறிவிப்பு அமைந்திருக்கின்றது. இந்த பட்ஜெட் பல்வேறு துறைக்களுக்கான பலன்களை உள்ளடக்கியதாக இருந்தது. குறிப்பாக, வாகன உலகம் சார்ந்த திட்டங்களை மிக அதிகளவில் இந்த பட்ஜெட் கொண்டிருப்பதை நம்மால் காண முடிகின்றது.
Advertisement

தமிழக அரசு அறிமுகப்படுத்தப்போகும் அதிவேக ரயில்!

தமிழக பட்ஜெட்டில் தற்போது டெல்லி - மீரட் இடையே இயங்கி வரும் ஆர்ஆர்டிஎஸ் ரயில் போல தமிழக அரசு தமிழகத்தில் ஒரு ரயில்வே பாதையை உருவாக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. சற்று தொலைவில் உள்ள இரண்டு நகரங்களை இணைக்கும் விதமாக இந்த ரயில்வே நெட்வொர்க் உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

தமிழக அரசு பஸ்களில் வரப்போகும் புதிய மாற்றம்!

தமிழக சட்டமன்றத்தில் தமிழக பட்ஜெட் 2025-26ம் நிதியாண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் ஆட்டோமொபைல் துறையில் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. அதன்படி மிக முக்கியமாக தமிழகத்தில் இயங்கி வரும் அரசு பஸ்களை எல்லாம் டீசல் பஸ்களில் இருந்து சிஎன்ஜி பஸ்களாக மாற்ற நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

8 பேர் போகக்கூடிய டொயோட்டா காருக்கு தான் கூட்டம் கூடுது!

டொயோட்டா (Toyota), ஜப்பானை சேர்ந்த உலகளவில் பிரபலமான கார் உற்பத்தி நிறுவனம் என்பதை நான் கூற வேண்டியது இருக்காது என நினைக்கிறேன். மாருதி சுஸுகி (Maruti Suzuki) உடன் இணைந்து செயல்பட்டு வருவதினாலேயே டொயோட்டா கார்கள் விற்பனை ஆனது சிறப்பாக உள்ளது. இன்னும் சொல்லப்போனால், மேலும் மேலும் டொயோட்டா கார்கள் விற்பனை மாதத்திற்கு மாதம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதனை வெளிக்காட்டும் வகையில், கடந்த 2025 பிப்ரவரி மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட டொயோட்டா கார்கள் குறித்த விபரங்கள் கிடைக்க பெற்றுள்ளன.

சுப்மன் கில் இவ்ளோ காஸ்ட்லியான காருல வருவாருனு எதிர்பாக்கல!

பிப்ரவரி மாதத்துக்கான சிறந்த வீரர் விருதை சுப்மன் கில்-க்கு ஐசிசி சமீபத்தில் வழங்கியது. 2025 சாம்பியன்ஸ் டிராஃபி தொடரை முன்னிட்டு, அனைத்து அணியைச் சேர்ந்த ஆட்ட வீரர்களும் ஒரு நாள் தொடரில் ஈடுபட்டனர். இதில் சிறப்பாக சுப்மன் கில் செயல்பட்டதை அடுத்தே இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டது. இந்த விருதை அவர் மூன்றாவது முறையாக பெருகின்றார் என்பது குறிப்பிடத்தகுந்தது. ஆகையால், மாதாந்திர ஒரு நாள் போட்டி விருதை அதிகம் வென்றவர்களில் ஒருவராக சுப்மன் கில் தற்போது மாறி இருக்கின்றார்.
Advertisement

அமைச்சகம் எல்லையற்ற நெடுஞ்சாலை கட்டண வசூலை உறுதிப்படுத்துகிறது

தேசிய நெடுஞ்சாலைகளில் கட்டணம் வசூல் எல்லையற்றது என்று சாலை போக்குவரத்து அமைச்சகம் உறுதிப்படுத்துகிறது, கணக்காய்வு மற்றும் உள்கட்டமைப்பு நிதியுதவிக்கான பயனர் கட்டணங்கள் குறித்த கேள்விகளுக்கு பதில் அளிக்கிறது.

கேடிஎம் பைக் வாங்கும்போது இந்த இலவச பரிசை கேட்டு வாங்குங்க!!

கேடிஎம் (KTM), ஆஸ்திரியாவை சேர்ந்த உலகின் முன்னணி பைக் நிறுவனம். இந்தியாவில் பஜாஜ் ஆட்டோ (Bajaj Auto) நிறுவனத்துடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. 2012ஆம் ஆண்டில் இந்தியாவில் கேடிஎம் அறிமுகம் செய்த முதல் பைக் 200 ட்யூக்' (200 Duke) ஆகும். அதன்பின் பல்வேறு கேடிஎம் பைக்குகள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டாலும், முதல் பைக்கான 200 ட்யூக் எப்போதுமே கேடிஎம் நிறுவனத்திற்கு ஸ்பெஷல் ஆகும். இதனாலேயே, அவ்வப்போது மறக்காமல் 200 ட்யூக் பைக்கை கேடிஎம் நிறுவனம் அப்டேட் செய்துவிடுகிறது.

21கிமீ மைலேஜ் தரும் இந்த மாருதி காரை வாங்க குவியும் மக்கள்!!

இந்தியாவில் எஸ்யூவி (SUV) ரக கார்களுக்கு தான் கடந்த சில ஆண்டுகளாக நல்ல வரவேற்பு மக்களிடம் இருந்து கிடைத்து வருகிறது. குறிப்பாக, குறைந்த விலையில், அளவில் சிறியதாக கிடைக்கக்கூடிய சப்-4 மீட்டர் எஸ்யூவி கார்களுக்கு தான் தொடர்ந்து வாடிக்கையாளர்கள் குவிந்து வருகின்றனர். இதனை பயன்படுத்திக் கொள்ளும் விதமாக கார் நிறுவனங்களும் முடிந்தவரையில் 4 மீட்டர்களுக்கும் குறைவான நீளம் கொண்ட எஸ்யூவி கார்களை அறிமுகம் செய்யும் முயற்சியில் ஈடுப்பட்டு வருகின்றன. இதனாலேயே தற்சமயம் இந்தியாவில் சுமார் 14 சப்-4 மீட்டர் எஸ்யூவி கார் மாடல்கள் விற்பனை செய்யப்படுகின்றன என சொன்னால் நம்ப முடிகிறதா?

2000ஆம் கால கட்டத்தில் இருந்த காரை மீண்டும் கொண்டுவரும் டாடா

டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனத்தில் இருந்து அடுத்ததாக பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் அறிமுகம் செய்யப்பட உள்ள கார், சியார்ரா (Sierra) ஆகும். டாடா சியார்ரா ஆனது 25 வருடங்களுக்கு முன்பே 2000ஆம் காலக்கட்டத்தில் விற்பனையில் இருந்த கார் ஆகும். அதனை தற்போதைய மாடர்ன் உலகிற்கு ஏற்ப புதிய தோற்றத்திற்கு மாற்றி டாடா நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளது. இதற்காக சியார்ரா காரின் தோற்றத்திற்கான காப்புரிமையை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பெற்றுள்ளதாக சமீபத்தில்தான் நமது டிரைவ்ஸ்பார்க் செய்தித்தளத்தில் பார்த்திருந்தோம்.
Advertisement

770 கிமீ ரேஞ்ச் தரும் இ-கார் விற்பனைக்கு ரெடி!

சீனாவைச் சேர்ந்த பிரபல ஸ்மார்ட்ஃபோன் உற்பத்தி நிறுவனம் ஜியோமி (Xiaomi). இந்த நிறுவனம் செல்போன் மட்டுமல்ல வீட்டு உபயோக பொருட்களையும் தயாரித்துக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையிலேயே அது சமீபத்தில் இ-கார் உற்பத்தியையும் தொடங்கியது. இதன் ஸ்மார்ட்ஃபோன்களுக்கு கிடைத்துக் கொண்டிருப்பதைப் போலவே எலெக்ட்ரிக் கார்களுக்கும் நல்ல டிமாண்ட் நாட்டு மக்கள் மத்தியில் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையிலேயே தன்னுடைய புதிய எலெக்ட்ரிக் காரை ஜியோமி நிறுவனம் இந்த உலகிற்கு அறிமுகப்படுத்தி இருக்கின்றது.

புதுசா திருமணமான நடிகைக்கு தெரியாத விஷயமே கிடையாது போல!!

கீர்த்தி சுரேஷ் (Keerthy Suresh), பாலிவுட் (Bollywood) வரையில் காலடி தடத்தை பதித்த பிரபலமான தென்னிந்திய நடிகைகளுள் ஒருவர். இந்தியா முழுவதும் ரசிகர்களின் கவனத்தை பெற்றவர், கீர்த்தி சுரேஷ் எனலாம். தமிழில் விஜய், தெலுங்கில் மகேஷ் பாபு, இந்தியில் வருண் தவன் என அந்தந்த மொழிகளில் பிரபலமாக விளங்கும் முன்னணி நடிகர்கள் உடன் ஜோடியாக நடித்தவர், நடிகை கீர்த்தி சுரேஷ் ஆவார். சினிமாவில் உச்சத்தில் இருந்த போதே தனது நீண்ட கால காதலரை திருமணம் செய்துக் கொண்டு அவரது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

ராவண மண்ணில் கால் பதித்த டாடா!

டாடா மோட்டார்ஸ் ஸ்ரீலங்காவில் ஏழு புதிய வாகனங்களை அறிமுகப்படுத்தி உள்ளது, இது பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து திரும்பியதைக் குறிக்கிறது மற்றும் மின்சார வாகனங்கள் மூலம் நிலைத்தன்மையை ஊக்குவிக்கிறது.

ஈ அடிக்க கூடாது.. ஆஃபரை வாரி வழங்கும் ஓலா..

ஓலா எலெக்ட்ரிக் (Ola Electric) நிறுவனம் சமீப சில காலமாக விற்பனைச் சரிவைச் சந்தித்து வருகின்றது. முன்பு விற்பனையில் நம்பர் 1 நிறுவனமாக இருந்து வந்த ஓலா எலெக்ட்ரிக் 2025 பிப்ரவரி மாத விற்பனையில் நான்காம் இடத்திற்கு தூக்கி வீசப்பட்டு இருக்கின்றது. மேலும், முதல் இடத்தில் பஜாஜ் ஆட்டோ (Bajaj Auto)வும், இரண்டாவது இடத்தில் டிவிஎஸ் மோட்டார்ஸ் (TVS Motors)-ம், மூன்றாவது இடத்தில் ஏத்தர் எனெர்ஜி (Ather Energy) நிறுவனமும் உள்ளன. இவர்களுக்கு அடுத்தபடியாக ஓலா எலெக்ட்ரிக் உள்ளது.
Advertisement

டோல்கேட்ட தூக்ககூட இல்ல.. நைசா ஓடி போன சூப்பர் கார்!!

இந்தியாவில் சூப்பர் கார்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. இந்த நிலையிலேயே சூப்பர் கார் ஒன்று டோல்கேட்டில் கேட் போட்ட பின்னரும் நிற்காமல் செல்லும் வீடியோக் காட்சிகள் வெளியாகி உள்ளன. கட்டணமே செலுத்தாமலேயே அந்த கார் தப்பி சென்று இருக்கின்றது. வாகனம் தப்பி செல்லக் கூடாது என்பதற்காக கேட் போட்ட பின்னரும் இவ்வாறு தப்பிச் சென்றது பலருக்கும் அதிர்ச்சியையும், வியப்பையும் ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது. காரின் உயரம் மிகவும் குறைவானது என்பதால் அந்த காரால் இதை செய்ய முடிந்திருக்கின்றது.