புதுசா கார் வாங்க குழந்தை போல் அவரே ஷோரூமுக்கு வந்துட்டாரா?

உணவு பொருட்கள், வெளிநாட்டு ஏற்றுமதி & இறக்குமதி, வேளாண்மை, சில்லறை வணிகங்கள் மற்றும் தொண்டு அறக்கட்டளை என பல்வேறு விதமான தொழில்களை செய்து, கேரளாவின் முன்னணி தொழில் நிறுவனங்களுள் ஒன்றாக இருப்பது, மூலன்ஸ் க்ரூப் (Moolans Group) ஆகும். பெயருக்கேற்ப, இந்த க்ரூப் ஆனது மூலன் குடும்பத்தாரின் கட்டுப்பாட்டில் செயல்படுகிறது. இந்த க்ரூப்பின் கீழ் பல்வேறு கார்கள் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றுள் லக்சரி கார்களும் அடங்குகின்றன. இருப்பினும், புதியது புதியதாக விலையுயர்ந்த கார்களை வாங்கிவரும் மூலன் குடும்பத்தினர் தற்போது புதியதாக விலையுயர்ந்த எலக்ட்ரிக் கார் (Electric Car) ஒன்றை வாங்கியுள்ளனர்.

ரூ. 76,691க்கு விற்பனைக்கு வந்திருக்கு டிவிஎஸ் ஜுபிடர்..

டிவிஎஸ் (TVS) நிறுவனத்தின் புகழ்பெற்ற தயாரிப்புகளில் ஒன்றாக ஜூபிடர் (Jupiter) உள்ளது. இந்த ஸ்கூட்டர் மாடல் இந்தியாவில் இரண்டு விதமான வெர்ஷன்களில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. ஜுபிடர் 110 (Jupiter 110) மற்றும் ஜுபிடர் 125 (Jupiter 125) ஆகியவையே அவை ஆகும். இதில், ஜுபிடர் 110 மாடலே தற்போது புதுப்பிக்கப்பட்டு விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டு இருக்கின்றது. இதற்கு அறிமுக ரூ. 76,691 விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.

பெரிய பாறையே விழுந்தும் காருக்கு ஒன்னுமே ஆகலயா?

ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் கோஸ்ட் கார் மீது பெரிய பாறாங்கல்லை தூக்கிப் போட்டாலும் காருக்கு பெரிய அளவில் சேதமாகாது என்ற வகையில் சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது .இந்த வீடியோ உண்மைதானா இப்படியாக கல்லை போட்டால் ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் கார் எதுவும் ஆகாதா? கல் தான் உடையுமா? என்ற கேள்வி பலருக்கும் எழுந்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

கோடி ரூபாய் காரில் வந்து இளைஞர்களை கிறங்கடித்தது அவங்களா!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி (Mercedes Benz GLC). சொகுசு எஸ்யூவி (Luxury SUV) ரகத்தை சேர்ந்த இந்த காரை, திரையுலக நட்சத்திரங்கள் பலரும் வைத்துள்ளனர். பருத்தி வீரன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ள பிரியா மணி (Priya Mani) மற்றும் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் (Ranveer Singh) போன்றோரிடம், மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி சொகுசு எஸ்யூவி கார் உள்ளது. இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் இந்த காரின் விலை 76.80 லட்ச ரூபாயாக உள்ளது.
Advertisement

மனைவிக்காக ரோல்ஸ்-ராய்ஸ் காரை கொண்டுவந்து நிறுத்திய நடிகர்!

ரோல்ஸ்-ராய்ஸ் (Rolls-Royce) கார்கள் ஒரு சில பணக்காரர்களுக்கு கூட வாங்குவது கனவாக இருந்து வருகிறது. பெயருக்காக, சொத்துக்களை விற்று ரோல்ஸ்-ராய்ஸ் காரை வாங்கிய பணக்காரர்கள் கூட இருக்கின்றனர். இப்படிப்பட்ட நிலையில், இங்கு ஒருவர் தனது மனைவியை மகிழ்விக்க சுமார் ரூ.9 கோடி மதிப்பிலான ரோல்ஸ்-ராய்ஸ் கார் ஒன்றை வாங்கிக் கொடுத்துள்ளார். அவரது பெயர், சாஹில் கான் (Sahil Khan) ஆகும். யார் இந்த சாஹில் கான் என்பதையும், அவர் புதியதாக வாங்கியுள்ள ரோல்ஸ்-ராய்ஸ் காரை பற்றியும் விரிவாக இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

ரசிகர்களை பார்க்க காஸ்டலியான காரில் வந்த நடிகை!

பாலிவுட் நடிகையின் ஆலியா பட் சமீபத்தில் மும்பையில் தனது ரசிகர்களை சந்தித்து பேசினார். அப்பொழுது அவர் காரில் வந்து இறங்கிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அவர் தனக்கு சொந்தமான ரேஞ்ச் ரோவர் ஆட்டோபயோகிராபி காரில் வந்து இறங்கினார். வீடியோ வைரலாகி வரும் நிலையில் இவர் வந்த கார் குறித்து பலர் பேசி வருகிறார்கள்.

ரூ. 35 லட்சம் வாடகை தரும் கார் நிறுவனம்..

உலக புகழ்பெற்ற கார் உற்பத்தி நிறுவனமான டெஸ்லா (Tesla), இந்தியாவில் கால் தடம் பதிக்க இருப்பது உறுதியாகி இருக்கின்றது. இது ஓர் எலெக்ட்ரிக் கார் உற்பத்தி நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் இந்தியாவில் சொந்தமாக உற்பத்தி ஆலை அமைத்து செயல்பட இருக்கின்றது. இங்கே தயாரிக்கப்படும் வாகனங்கள் இந்தியாவிற்கு மட்டுமின்றி உலக நாடுகள் பலவற்றிற்கு ஏற்றுமதி செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. ஆனால், நிறுவனத்தின் கார் தயாரிப்பு ஆலை எங்கே அமைய போகின்றது என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

5 கோடி ரூபா காரை போட்டி போட்டு வாங்கியது அவரா!

இன்று வீட்டில் உணவு சமைக்க முடியாமல் போனால், ஹோட்டலுக்கு செல்ல வேண்டும் என்ற அவசியமே கிடையாது. விரும்பிய ஹோட்டலில் இருந்து பிடித்தமான உணவை இருக்கும் இடத்திற்கே வரவழைத்து கொள்ள முடியும். இப்படியான வசதியை மக்களுக்கு வழங்கி கொண்டிருக்கும் நிறுவனங்களில் ஒன்றுதான் ஜொமேட்டோ (Zomato). ஜொமேட்டோ நிறுவனம் தொடங்கப்பட்டு, கிட்டத்தட்ட 17 வருடங்கள் ஆகின்றன. ஆம், இந்த நிறுவனம் கடந்த 2008ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இடைப்பட்ட இந்த 17 வருடங்களில் ஜொமேட்டோ நிறுவனம் மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்துள்ளது என்றால் மிகையல்ல.
Advertisement

28 நாளில் 3.57 லட்சம் பேர் இந்த கம்பெனி வண்டிய வாங்கிட்டாங்க

ஹீரோ மோட்டோகார்ப், பிப்ரவரி 2025 இல் 17.15% விற்பனை குறைவைப் பதிவு செய்துள்ளது ஆனால் மின்சார வாகன விற்பனையிலும் சர்வதேச சந்தையிலும் நேர்மறையான வளர்ச்சியைக் காட்டியுள்ளது. புதிய தயாரிப்புகள் அறிமுகப்படுத்துதல் மற்றும் திருமண காலத்தின் மீதான கவனம் ஆகியவற்றின் மூலம் விற்பனை அதிகரிக்கும் என்று நிறுவனம் எதிர்பார்க்கிறது.

டெல்லியில் ஆட்சி அமைத்ததும் பாஜக அரசு அடித்த முதல் சிக்ஸர்!!

காற்று மாசுபடுதலை குறைக்க அரசாங்கங்கள் பல்வேறு விதமான நடவடிக்கைகளை மேற்கொண்ட வண்ணம் உள்ளன. இதன் ஒருபகுதியாக, தற்போதைய பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு பதிலாக எலக்ட்ரிக் வாகனங்களை கொண்டுவர இந்தியா உள்பட உலக நாடுகள் அனைத்தும் விரும்புகின்றன. அதேநேரம், பழைய வாகனங்களை பயன்பாட்டில் இருந்து குறைத்து காற்று மாசுபடுவதை குறைக்கும் முயற்சிகளிலும் அரசாங்கங்கள் ஈடுப்பட்டு வருகின்றன. அதன்படி, ஒரு மாநில அரசு பழைய வாகனங்களுக்கு இனி எரிபொருள் விற்பனை செய்யப்படாது என அதிரடியாக அறிவித்துள்ளது. அதுகுறித்த கூடுதல் விபரங்களை தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

ஹோண்டா ஷோரூம்ல கெத்தாக நிற்கும் புதுமுக ஸ்கூட்டர்..

ஹோண்டா (Honda) நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் (Electric Scooter) ஷோரூம்களுக்கு வர தொடங்கி இருக்கின்றது. இந்தியர்களின் மிகப் பெரிய எதிர்பார்ப்பாக இருந்து வந்த ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக நாட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்தே தற்போது ஆக்டிவா இ: (Honda Activa e:) மாடலை விற்பனைக்காக ஷோரூம்களுக்கு அனுப்பி வைக்கத் தொடங்கி இருக்கின்றது, ஹோண்டா நிறுவனம். இதை உறுதிப்படுத்தக் கூடிய படங்களே தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளன.

எல்லாருக்கும் பிடிச்ச இந்த கம்பெனி இவி வேற வரப்போகுதாம்!

யமஹா இந்தியாவின் மின்சார வாகன சந்தையில் நுழையத் தயாராகி வருகிறது, செயல்திறன் மற்றும் விலை நிர்ணயம் தொடர்பான சவால்களை எதிர்கொண்டுள்ளது.
Advertisement

சொகுசு காரில் போன நடிகை! அவங்களா இது!

இந்திய சந்தையில் மெர்சிடிஸ் பென்ஸ் (Mercedes Benz) நிறுவனத்தின் சொகுசு கார்களுக்கு, நடிகர், நடிகைகள் பலரும் ரசிகர்களாக இருந்து வருவது அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம்தான். குறிப்பாக சொகுசு எஸ்யூவி (Luxury SUV) ரகத்தை சேர்ந்த மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்இ (Mercedes Benz GLE) காருக்கு, திரையுலக நட்சத்திரங்கள் பலரும் வாடிக்கையாளர்களாக உள்ளனர். இதில், முன்னணி பாலிவுட் நடிகர்களான ஹிருத்திக் ரோஷன் (Hrithik Roshan) மற்றும் பொம்மன் இரானி (Boman Irani) போன்றவர்கள் எல்லாம் இங்கே குறிப்பிடத்தகுந்தவர்கள் ஆவர்.

உலகில் 4இல் 3 பேர் வாங்குவது சீன எலக்ட்ரிக் காரை தான்!!

உலகளவில் எலக்ட்ரிக் கார்கள் (Electric Cars) விற்பனையில் பெரிதும் ஆதிக்கம் செலுத்திவரும் நாடு என்று பார்த்தால், அது சீனா ஆகும். அமெரிக்கா கூட அதற்கு அடுத்துதான் வருகிறது. நம் இந்தியா உடன் ஒப்பிடுகையில், எலக்ட்ரிக் வாகனங்கள் விஷயத்தில் நம் அண்டை நாடான சீனா பல நிலைகளை கடந்து இன்று உலகின் அசைக்க முடியாத சக்தியாக உருவெடுத்து நிற்கிறது. அப்படி எத்தனை பேர் சீனாவின் எலக்ட்ரிக் கார்களை வாங்குகின்றனர் என்பதை பற்றியும், உலகளவிலான எலக்ட்ரிக் கார் மார்க்கெட்டில் சீனாவின் பங்களிப்பு எவ்வளவு என்பதையும் புள்ளி விபரங்கள் உடன் இனி தொடர்ந்து பார்க்கலாம்.

கார் வாங்கிட்டு அப்படியே விட்ற கூடாது! அடிக்கடி இத செய்யனும்

காரை வாங்குவதை காட்டிலும், அதனை முறையாக பராமரிப்பதுதான் பெரிய வேலை என சிலர் கூற கேள்விப்பட்டு இருப்பீர்கள். அது உண்மைதான். குறிப்பாக, காரில் முதலில் சேதமடையக்கூடிய காரின் பெயிண்ட்டை பாதுகாப்பது என்பது பெரிய வேலையாக உள்ளது. இன்றைய கால கார் பெயிண்ட்கள் நல்ல தரத்தில் வர ஆரம்பித்துவிட்டன என்றாலும், அதற்கேற்ப நம்மை சுற்றிய கால சூழ்நிலையும் மாறி வருகிறது. ஆதலால், குறைந்தப்பட்சம் உங்கள் காருக்கு துருப்பிடித்தலை தடுக்கக்கூடிய கோட்டிங் (Coating) அவசியமானதாக இருக்கலாம். காரின் பெயிண்ட் மீது வழங்கப்படும் இந்த கோட்டிங்கை பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

இது யாரோட நிறுவனம்னு தெரிஞ்சுதான் குவியுறாங்களா!..

இங்கிலாந்து நாட்டு நிறுவனமாக பிறந்து, சீன நிறுவனமாக வளர்ந்துக் கொண்டிருக்கும் ஓர் நிறுவனமே எம்ஜி மோட்டார் (MG Motor). இந்திய நிறுவனமான ஜேஎஸ்டபிள்யூ (JSW) உடன் இணைந்து இந்த நிறுவனம் தற்போது ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் (JSW MG Motor) என்கிற பெயரில் செயல்பட்டு வருகின்றது. மாருதி (Maruti)-யும், சுஸுகி (Suzuki)-யும் இணைந்து செயல்பட்டு வருவதை போலவே இவர்களும் இணைந்து செயல்பட்டு வருகின்றனர். இந்த எம்ஜி நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கே இந்தியாவில் தற்போது மிக சிறப்பான வரவேற்புக் கிடைக்கத் தொடங்கி இருக்கின்றது.
Advertisement

வெறும் டீ-சர்ட் போட்டுனு போய் வாங்குற காரா இது?

பகத் பாசில் (Fahad Fasil), பிரபல மலையாள நடிகர்; நடிகை நஸ்ரியாவின் கணவர் என்பதெல்லாம் ஊரறிந்த விஷயம். மலையாள நடிகராக அறியப்பட்டாலும் பகத் பாசில் தென்னிந்திய அளவில் முன்னணி நடிகராக விளங்குகிறார். நாளுக்கு நாள் பகத் பாசிலின் மார்க்கெட் உயர்ந்துக் கொண்டே வருகிறது. இந்த நிலையில், நடிகர் பகத் பாசில் புதியதாக ரேஞ்ச் ரோவர் (Range Rover) கார் ஒன்றை வாங்கியுள்ளார். காரை பகத் பாசிலின் வீட்டிற்கே சென்று டெலிவிரி கொடுக்கும்போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளது. அதனை பற்றி தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

கார் விற்பனையில் 3வது இடத்துக்கு தள்ளப்பட்ட ஹூண்டாய் கம்பெனி

ஹூண்டாய் (Hyundai), தென்கொரியாவை சேர்ந்த பிரபலமான கார் நிறுவனம். இந்தியாவிலும் கார்கள் விற்பனையில் முன்னணியில் விளங்கும் ஹூண்டாய், நம் நாட்டில் கார்கள் விற்பனையில் மாருதி சுஸுகிக்கு அடுத்து 2வது இடத்தில் உள்ளது. நடந்து முடிந்த 2025 பிப்ரவரி மாத விற்பனையில் எத்தனை கார்களை ஹூண்டாய் விற்பனை செய்துள்ளது என்பதையும், வழக்கத்தை காட்டிலும் கடந்த மாதத்தில் ஹூண்டாய் கார்கள் விற்பனை எந்த அளவிற்கு மாற்றம் கண்டுள்ளது என்பதையும் பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

30 நாளில் 46 ஆயிரம் கார்களை விற்ற நிறுவனம்!

தாட்டா மோட்டார்ஸ் நிறுவனம் 2025 பிப்ரவரி மாதத்தில் பயணிகள் வாகன விற்பனையில் 8.79% வீழ்ச்சியை சந்தித்துள்ளது. உள்நாட்டு விற்பனை குறைந்துள்ளது, அதேசமயம் ஏற்றுமதி கணிசமாக அதிகரித்துள்ளது.

சொகுசு கார்ல வந்து இறங்கிய நடிகை!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று கியா கார்னிவல் (Kia Carnival). இது பிரீமியம் எம்பிவி (Premium MPV) ரகத்தை சேர்ந்த கார் ஆகும். மிகவும் விலை உயர்ந்த கியா கார்னிவல் காரை, திரையுலக நட்சத்திரங்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் பலரும் வைத்துள்ளனர். இதில், கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா (Suresh Raina), பாலிவுட் நடிகர் சங்கி பாண்டே (Chunky Panday) மற்றும் பாலிவுட் பாடகர் சுனிதி சௌகான் (Sunidhi Chauhan) போன்றவர்கள் எல்லாம் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர்.
Advertisement

எப்படி இருந்த டாடா மோட்டார்ஸ் இப்போ இப்படி ஆயிடுச்சு!!

டாடா மோட்டார்ஸ் (Tata Motors), மஹிந்திரா (Mahindra) இரண்டுமே இந்தியாவை சேர்ந்த முன்னணி கார் உற்பத்தி நிறுவனங்கள் என்பதை நான் கூற வேண்டியது இருக்காது என நினைக்கிறேன். அந்த அளவிற்கு கார்கள் விற்பனையில் ஜொலித்துக் கொண்டிருக்கும் இந்த நிறுவனங்களுக்கு இடையே சமீப மாதங்களாக பலத்த போட்டி நிலவி வருகிறது. இதில், கடந்த ஜனவரி மாத விற்பனையில் டாடா மோட்டார்ஸை அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில் அதனை மஹிந்திரா முந்தியிருந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாத விற்பனையில் என்ன நடந்துள்ளது என்பதை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

1.60 லட்சம் பேர் இந்த கம்பெனி காரை வாங்கிட்டாங்க!

மாரித்தி சுசுகி 2025 பிப்ரவரியில் 1,99,400 அலகு விற்பனையைப் பதிவு செய்துள்ளது, இது வலுவான உள்நாட்டு சந்தையையும் வேறுபட்ட பிரிவு செயல்திறன்களையும் எடுத்துக்காட்டுகிறது.

போர்ஷே காரை குப்பை தொட்டியில் வீசிய இளைஞர்..

கார் காதலர்கள் மத்தியில் நல்ல பெயரைக் கொண்ட கார் தயாரிப்பு நிறுவனமாக போர்ஷே (Porsche) உள்ளது. இதுமட்டுல்ல இதன் தயாரிப்பு என்றாலே கண்களை மூடிக் கொண்டு வாங்குபவர்களும் மிக அதிகமாக இருக்கின்றனர். ஆனால், நிறுவனத்தின் கார்களின் விலை மிக மிக அதிகம் என்பதால் பெரும் செல்வந்தர்களுக்கு மட்டுமே எட்டக் கூடிய கனியாக அந்த நிறுவனத்தின் தயாரிப்புகள் இருக்கின்றன. இந்த மாதிரியான நிறுவனம் தயாரித்த ஓர் விலை உயர்ந்த காரையே இளைஞர் ஒருவர் தற்போது குப்பைத் தொட்டியில் வீசிச் சென்றிருக்கின்றார்.

யார் பார்த்த வேலைனு தெரியல! வீடு தேடி வந்த போலீஸ்காரர்கள்

கார் மாடிஃபிகேஷன் (Car Modification)-களினால் எவ்வளவு ஆபத்துகள் உள்ளன என்பதை நமது தளத்தில் தொடர்ச்சியாக கூறிக்கொண்டு இருந்தாலும், ஒருபக்கம் கார்களை தங்களது விருப்பத்திற்கேற்ப மாடிஃபிகேஷன் செய்துக் கொள்வது ஒருபக்கம் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. ஒரு சிலர் 'கெத்து' என நினைத்துக் கொண்டு இவ்வாறு செய்கின்றனர். ஆனால், அவர்களுள் பெரும்பாலானவர்கள் விரைவாகவே போலீசாரிடம் சிக்கிவிடுகின்றனர். அவ்வாறுதான், இங்கு ஒருவர் தனது காரில் எக்ஸாஸ்ட் குழாய் (Exhaust Pipe)-ல் இருந்து நெருப்பு வெளிவரும் வகையில் மாற்றம் செய்துள்ளார். அதன்பின் என்ன நடந்தது என்பதை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.
Advertisement

சாலையில் எல்லாரும் ஒரு நிமிஷம் நின்னு பார்த்துட்டு போனாங்க!!

மஹிந்திரா (Mahindra) நிறுவனத்தில் சமீபத்தில் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் அறிமுகம் செய்யப்பட்ட எலக்ட்ரிக் கார் (Electric Car), பிஇ 6 (BE 6) ஆகும். ஏற்கனவே விற்பனைக்கு கொண்டுவரப்பட்டு விட்ட இந்த எலக்ட்ரிக் காரை மஹிந்திரா நிறுவனம் மீண்டும் சோதனை ஓட்டத்தில் உட்படுத்தி உள்ளது. சமீபத்தில் விற்பனைக்கு வந்த எலக்ட்ரிக் கார் மீண்டும் சாலையில் ஓட்டி பார்க்கப்பட்டு சோதனை செய்யப்பட்டு இருப்பது உங்களில் சிலருக்கு விசித்திரமானதாக தோன்றலாம். வாருங்கள் இதனை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.