இந்திய மக்களின் மனதை வென்ற எம்ஜி மோட்டார்!

ஜே.எஸ்.டபிள்யூ எம்ஜி மோட்டார் (JSW MG Motor) நிறுவனம் நடந்து முடிந்த 2026 ஏப்ரல் மாதத்தில் இந்தியாவில் கார்கள் விற்பனையில் 3% வளர்ச்சியை பதிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது. இந்த மே மாதத்தில் புதியதாக மெஜஸ்டர் (Majestor) எஸ்யூவி காரை இந்த நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ள நிலையில், அதற்கு முன்னதாக விற்பனையில் இந்த வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

இந்தியாவில் குறைந்த விலையில் கிடைக்கும் 5 எலெக்ட்ரிக் கார்ஸ்

சர்வதேச போர் பதற்ற சூழல்களினால் வருங்காலங்களில் பெட்ரோல், டீசலை பெற முடியுமா என்கிற குழப்பம் மக்களிடையே ஏற்பட்டுள்ளது. இதனால், மக்கள் பலர் எலெக்ட்ரிக் வாகனங்களை நோக்கி நகர ஆரம்பித்துள்ளனர். குறிப்பாக, எலெக்ட்ரிக் கார்களை (Electric Cars) வாங்குவது புதிய டிரெண்ட் ஆக மாறி வருகிறது. இதன் காரணமாக இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களுக்கு மார்க்கெட் தொடர்ந்து விரிவடைந்து வருகிறது.

மாருதி சுஸூகி ஏப்ரல் மாத விற்பனை நிலவரம்

இந்தியாவில் அதிகளவிலான கார்களை விற்பனை செய்து வருவது மாருதி தான். இந்திய விற்பனையைப் பொறுத்தவரை கார்களின் 'கிங்'காக மாருதியே இருந்து வருகிறது. இதில் எந்தவித மிகைப்படுத்தலும் இல்லை, உண்மையிலேயே மற்ற நிறுவனங்கள் நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவிற்கு அதிகளவிலான கார்களை ஒவ்வொரு மாதமும் இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது மாருதி. தற்போது கடந்த ஏப்ரல் மாதம் மாருதியின் கார் விற்பனை நிலவரம் குறித்த தரவுகள் வெளியாகியிருக்கின்றன.

மொத்த உலகத்துக்கும் இந்தியால இருந்துதான்...

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ரெனால்ட் நிறுவனம் இந்திய சந்தையில் பிரிட்ஜர் (Renault Bridger) என்ற புதிய காரை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. பெட்ரோல், சிஎன்ஜி, ஹைப்ரிட் மற்றும் எலெக்ட்ரிக் என பல்வேறு வெர்ஷன்களில் இந்த கார் விற்பனை செய்யப்படவுள்ளது. இது சப்-காம்பேக்ட் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த கார் ஆகும்.
Advertisement

மாருதி கார்களின் விலையில் பிரம்மாண்டமான இரு எம்பிபி கார்கள்!

நிசான் (Nissan) நிறுவனத்தின் டிரைபர் (Triber) கார் சமீபத்தில் 2026ஆம் ஆண்டை முன்னிட்டு அப்கிரேட் (Upgrade) செய்யப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ரெனால்ட்டின் எம்பிவி (MPV) வகையை சேர்ந்த காரான இதற்கு விற்பனையில் மாருதி சுஸுகி எர்டிகா (Maruti Suzuki Ertiga) போன்ற இந்தியாவின் பிரபலமான எம்பிவி கார்கள் போட்டியாக உள்ளன.

வெளிநாடுகளில் கார் ஓட்டும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்!

 

You Need To Know Some Rules When You're Driving in Abroad.

 

ஆட்டோமேட்டிக் காரை ஓட்டும்போது செய்யக்கூடாத விஷயங்கள்!

Some things you should Avoid in an automatic car.

புதிய பிஎம்டபிள்யூ F 450 GS பைக்: அசரவைக்கும் 5 அம்சங்கள்!

BMW F 450 GS அட்வென்ச்சர் மாடலின் டாப் 5 சிறப்பம்சங்கள் இங்கே! ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 450-க்கு இது எப்படி போட்டியாக அமைகிறது என அறியுங்கள். Discover its advanced tech, robust design, and why it's a strong contender in the adventure segment.
Advertisement

ஸ்கோடா கைலாக் எஸ்யூவி விற்பனையில் புதிய சாதனை

இந்தியாவில் ஒரே ஆண்டில் 1 லட்சம் கார்கள் விற்பனை செய்ய வேண்டும் என்பது ஸ்கோடா நிறுவனத்தின் இலக்கு. இதுவரை அந்த இலக்கை அந்நிறுவனம் அடையவில்லை. ஆனால், விரைவில் அந்த இலக்கை ஸ்கோடா நிறுவனம் எட்டிவிடும் எனத் தெரிகிறது. அதற்கு முக்கியக் காரணமாக கைலாக் எஸ்யூவி மாடலே இருக்கும். ஸ்கோடாவிற்கு மிகப்பெரிய அளவில் இல்லையென்றாலும், ஓரளவிற்கு வெற்றியையே கொடுத்திருக்கிறது கைலாக் (Kylaq) சப்-காம்பேக்ட் எஸ்யூவி.

8 வருஷத்துக்கு செலவு வைக்காத லெக்ஸஸ் கார்கள்!

லெக்ஸஸ் (Lexus) நிறுவனம் இந்தியாவில் அதன் கார்களுக்கு 8 வருடங்களுக்கான உத்தரவாதத்தை (Warranty) அறிவித்துள்ளது. இந்தியாவில் எந்தவொரு சொகுசு கார் நிறுவனமும் அதன் கார்களுக்கு இத்தனை வருட உத்தரவாதத்தை வழங்காத நிலையில், முதல் நிறுவனமாக இத்தகைய அறிவிப்பை வெளியிட்டு லெக்ஸஸ் நிறுவனம் ஆச்சிரியப்படுத்தி உள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

2026 மே மாதம் வெளியாகும் கார்களின் அணிவகுப்பு

ஏப்ரல் மாதம் இந்தியாவில் பல்வேறு புதிய கார் மாடல்களின் வெளியீடுகளைப் பார்த்தோம். வின்ஃபாஸ்ட் VF MPV 7, ஃபோக்ஸ்வாகன் டைகூன் ஃபேஸ்லிப்ட், டெஸ்லா மாடல் Y L, மெர்சிடீஸ் CLA EV உள்ளிட்ட பல்வேறு கார்கள் ஏப்ரல் மாதம் அணிவகுத்தன. மே மாதமும் அவ்வாறே பல்வேறு புதிய கார் மாடல்கள் வெளியீட்டிற்காக அணிவகுத்துக் காத்திருக்கின்றன. அவை என்னென்ன கார் மாடல்கள் என்பதைப் பார்க்கலாம்.

மஹிந்திரா விஷன் S கான்செப்ட் தயாரிப்பு நிலை வடிவம் விரைவில்

இந்தியாவில் மஹிந்திரா நிறுவனத்திடமிருந்து வாடிக்கையாளர்கள் மிகவும் ஆர்வமாக எதிர்பார்க்கும் கார் மாடல்களில் ஒன்று அதன் 'விஷன் S' மாடலின் தயாரிப்பு நிலை வடிவம். கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் 'விஷன் S' கான்செப்ட் காரை அறிமுகப்படுத்தியது மஹிந்திரா. கான்செப்ட் வடிவிலேயே வாடிக்கையாளர்களின் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் இந்தக் கார் மாடல் இருந்தது.
Advertisement

உலக நாடுகளின் சாலைகளை ஆள தொடங்கிய மேட் இன் சென்னை கார்...

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார் நிறுவனங்களில் ஒன்று சிட்ரோன் (Citroen). இது பிரான்ஸ் நாட்டை சேர்ந்த நிறுவனம் ஆகும். நெதர்லாந்து நாட்டை சேர்ந்த ஸ்டெல்லன்டிஸ் (Stellantis) நிறுவனத்தின் ஒரு அங்கமாகவே சிட்ரோன் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அதாவது ஸ்டெல்லன்டிஸ்தான் சிட்ரோனின் தாய் நிறுவனம் ஆகும்.

அம்பாசிடர் சாயலில் கிடைக்கும் ஆறு எஸ்யூவி கார்கள்!

இந்தியாவில் சில வருடங்களுக்கு முன்பு வரையில் கூபே (Coupe)-ஸ்டைலிலான எஸ்யூவி (SUV) கார்கள் என்றால் பலருக்கு தெரியாது. ஏனெனில், அந்த அளவிற்கு இத்தகைய எஸ்யூவி கார்கள் இந்திய மக்களுக்கு பரீட்சையமானதாக இல்லை. வெளிநாடுகளில் மட்டுமே கூபே-ஸ்டைல் எஸ்யூவி கார்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தன. இதனாலேயே இந்திய எஸ்யூவி கார்களுக்கும், வெளிநாட்டு எஸ்யூவி கார்களுக்கும் இடையே தோற்றத்தில் வித்தியாசங்கள் இருந்தன.

இந்த பென்ஸ் காரை வாங்குவதற்கு இதைவிட வேறு என்ன காரணம் வேணும்

மெர்சிடிஸ்-பென்ஸ் (Mercedes-Benz) நிறுவனம் அதன் சிஎல்ஏ எலெக்ட்ரிக் (CLA Electric) காரை இந்தியாவில் சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியதை பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள் என நினைக்கிறேன். ஆனால், வெளிநாடுகளில் கடந்த பல மாதங்களாகவே விற்பனையில் உள்ளது. அவ்வாறு, ஐரோப்பிய சந்தையில் விற்பனையில் உள்ள சிஎல்ஏ எலெக்ட்ரிக் கார் ஐரோப்பிய என்சிஏபி (NCAP) கிராஷ் டெஸ்ட்டில் உட்படுத்தப்பட்டு, அதுதொடர்பான முடிவுகள் தற்போது வெளிவந்துள்ளன. அவற்றை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

ஜீப் அவெஞ்சர் எஸ்யூவி 2026ம் ஆண்டிற்கான அப்டேட் அறிமுகம்

சர்வதேச அளவில் விற்பனை செய்யப்பட்டு வரும் காம்பேக்ட் எஸ்யூவி காரான அவெஞ்சரை அப்டேட் செய்துள்ளது ஜீப். 2026ம் ஆண்டிற்கான அப்டேட்டாக இதனை வழங்கியிருக்கிறது. முதன் முதலில் 2022ல் வெளியிடப்பட்ட இது தான் ஜீப் நிறுவனத்தின் சிறிய எஸ்யூவியாக உலகமெங்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்தியாவிலும் ஜீப் கார்கள் விற்பனையில் இருக்கின்றன. ஆனால் அவை எல்லாம் பெரிய எஸ்யூவி மாடல்கள் தான்.
Advertisement

350சிசி என்ஜின் உடன் பஜாஜ் பல்சர் என்.எஸ் 400இசட் பைக்!

பஜாஜ் ஆட்டோ (Bajaj Auto) நிறுவனம் அதன் பல்சர் என்.எஸ் 400இசட் (Pulsar NS 400Z) பைக்கை 350சிசி என்ஜின் உடன் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. புதிய என்.எஸ் 400இசட் பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆனது ரூ.1,80,092 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. என்ஜின் உடன் இந்த பல்சர் பைக்கில் வேறு ஏதேனும் அப்டேட்கள் (Updates) கொண்டுவரப்பட்டுள்ளதா என்பதை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

புத்தம் புதிய மார்பிடெல்லி N125V பைக் வெளியானது

இத்தாலியைச் சேர்ந்த ரேஸிங் பைக் பிராண்டான மார்பிடெல்லி (Morbidelli) புதிய ப்ரீமியமான 125 சிசி பைக் ஒன்றை ஐரோப்பாவில் வெளியிட்டுள்ளது. இந்தியா உட்பட உலகளவில் பல்வேறு நாடுகளிலும் பைக்குளை விற்பனை செய்து வரும் சீனாவைச் சேர்ந்த கீவே (Keeway) நிறுவனம் தான் இந்த மார்பிடெல்லியையும் வாங்கியிருக்கிறது. கீவேயின் கீழ் தான் தற்போது இந்த இத்தாலிய பைக் தயாரிப்பு நிறுவனம் இயங்கி வருகிறது.

விலை குறைவான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... ஏத்தர் அதிரடி திட்டம்!

Ather EL பிளாட்ஃபார்ம் மின்சார ஸ்கூட்டர் குறித்த 5 முக்கிய தகவல்கள். மலிவு விலையில் அதிக வசதிகளுடன் 2026 பண்டிகைக் காலத்தில் அறிமுகமாகிறது. Discover 5 crucial details about the Ather EL Platform, Ather's new affordable electric scooter set to launch in India.

அடிமாட்டு விலையில் டர்போ என்ஜின் உடன் வாங்க ஏற்ற SUV கார்கள்

டர்போ என்ஜின் (Turbo Engine) உடன் கார் ஒன்றை வாங்க வேண்டும் என்பது நம்மில் பலருக்கு ஆசையாக இருக்கும். ஆனால், டர்போ என்ஜின் ஆனது பெரும்பாலும் விலைமிக்க கார்களிலேயே வழங்கப்படுகின்றன. ஏனெனில், டர்போ என்ஜின்களை உருவாக்குவது சற்று அதிக செலவுமிக்கதாக உள்ளது.
Advertisement

ஓபன் ரோர் இவோ எலெக்ட்ரிக் பைக் இந்தியாவில் வெளியானது

இந்தியாவில் மிகவும் குறைவான விலையில் ரோர் இவோ (Rorr Evo) என்ற புத்தம் புதிய எலெக்ட்ரிக் பைக் மாடலை வெளியிட்டுள்ளது ஓபன் எலெக்ட்ரிக் (Oben Electric) நிறுவனம். போட்டி நிறைந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் பிரிவில் தலையிடாமல், எலெக்ட்ரிக் பைக்குகள் பிரிவில் தனக்கென தனி முத்திரையைப் பதித்து வருகிறது ஓபன் எலெக்ட்ரிக் நிறுவனம். சரி அந்நிறுவனம் வெளியிட்டிருக்கும் இந்தப் புதிய பைக் எப்படி இருக்கிறது, என்ன அம்சங்களைக் கொண்டிருக்கிறது என்பதைப் பார்க்கலாம்.

ஃபோக்ஸ்வேகன் டைகுன் ஃபேஸ்லிஃப்ட் டெலிவரி தொடக்கம்!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று ஃபோக்ஸ்வேகன் டைகுன் (Volkswagen Taigun). இதன் அப்டேட் செய்யப்பட்ட ஃபேஸ்லிஃப்ட் (Facelift) மாடல், வெகு சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து 2026 ஃபோக்ஸ்வேகன் டைகுன் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் டெலிவரி பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன.

எம்ஜி விண்ட்சர் கம்யூட் கார்கள் டீலர்ஷிப் ஷோரூம்களில்!!

எம்ஜி விண்ட்சர் (MG Windsor) எலெக்ட்ரிக் காருக்கு சிறப்பான வரவேற்பு கிடைத்துவரும் நிலையில், இந்த காரை மேலும் பலத்தரப்பட்ட வாடிக்கையாளர்களிடம் கொண்டுச் சேர்க்கும் விதமாக புதியதாக 'விண்ட்சர் கம்யூட்' (Windsor Commute) என்கிற விலை குறைவான வெர்சனை சமீபத்தில் எம்ஜி மோட்டார் நிறுவனம் அறிமுகப்படுத்தியது. டாக்சி (Taxi) உள்ளிட்ட கமர்ஷியல் (Commercial) பயன்பாட்டிற்காக அறிமுகப்படுத்தப்பட்ட விண்ட்சர் கம்யூட் கார் டீலர்ஷிப் ஷோரூம்களுக்கு வர துவங்கியுள்ளது.

ஃபோக்ஸ்வாகன் ID போலோ எலெக்ட்ரிக் கார் அறிமுகம்

உலகம் முழுவதும் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தைக் கொண்ட காராக இருந்து வருகிறது ஃபோக்ஸ்வாகனின் போலோ ஹேட்ச்பேக். தற்போது இதன் முதல் எலெக்ட்ரிக் வடிவத்தை அறிமுகப்படுத்தியுள்ளது அந்நிறுவனம். 'ID போலோ' என்ற பெயரில் இந்தப் புதிய ஹேட்ச்பேக் மாடலை அறிமுகப்படுத்தியிருக்கிறது ஃபோக்ஸ்வாகன். 2010ம் ஆண்டு தொடங்கி 2022ம் ஆண்டு வரை இந்தியாவில் போலோ ஹேட்ச்பேக் மாடலை ஃபோக்ஸ்வாகன் விற்பனை செய்து வந்தது.
Advertisement

புக்கிங் பண்ணீட்டு டெலிவரிக்காக காத்து கிடக்கறாங்க!

இந்திய வாடிக்கையாளர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் புதிய டாடா சியரா (Tata Sierra) கார், கடந்த 2025ம் ஆண்டு நவம்பர் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. அதை தொடர்ந்து இதன் டெலிவரி (Delivery) பணிகள் நடப்பு 2026ம் ஆண்டு ஜனவரி மாத மத்தியில் தொடங்கப்பட்டது.