கீவே V302C பைக் புதிய நிறங்களுடன் அப்டேட் செய்யப்பட்டுள்ளது
ஆட்டோமொபைல்
- 4 month, 15 days ago
2026ம் ஆண்டிற்கான மேம்படுத்தப்பட்ட V302C பைக்கை இந்தியாவில் வெளியிட்டுள்ளது கீவே (Keeway). சீனாவைச் சேர்ந்த இந்த பைக் தயாரிப்பு நிறுவனம் இந்தியாவில் சில பைக் மாடல்களை மட்டும் விற்பனை செய்து வருகிறது. ஆதிஷ்வர் ஆட்டோ ரைடு இந்தியா என்ற நிறுவனமே இந்தியாவில் கீவே பைக் மாடல்களை விநியோகம் செய்து வருகிறது. தற்போது புதிய V302C பைக்கில் என்னென்ன மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன என்பதைப் பார்க்கலாம்.