எக்கசக்க ரேஞ்ச் தரும் டொயோட்டா இவி கார்!

டொயோட்டா நிறுவனம் அர்பன் க்ரூஸர் பிஇவி காரை இந்தியாவிற்குள் கொண்டு வர திட்டமிட்டுள்ளது. மாருதியின் முதல் எலெக்ட்ரிக் காரை அடிப்படையாக கொண்டு இது உருவாக்கப்படுகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

லிட்டருக்கு 19கிமீ மைலேஜ் தரும் மாருதி காருக்கு செம்ம மவுசு!

மாருதி சுஸுகியின் புதிய நடுத்தர அளவு எஸ்யூவி கார் மாடலான விக்டோரிஸ் (Victoris), அறிமுகப்படுத்தப்பட்ட 2.5 மாதங்களுக்கு உள்ளேயே 30,000 யூனிட்கள் விற்பனையைத் தாண்டி சாதனை படைத்துள்ளது. கடந்த 2025 செப்டம்பரில் இரண்டாவது வாரத்தில் அறிமுகமான இந்த எஸ்யூவி கார், குறுகிய காலத்தில் ஆரம்பக்கட்ட டெலிவிரிகளில் (Deliveries) இருந்தே நிலையான மாத விற்பனை எண்ணிக்கைக்கு வேகமாக முன்னேறியது.

BMW கம்பெனிக்கு என்னவொரு தாராள மனசு! காரின் விலை உயரல!!

ஜெர்மன் கார் தயாரிப்பு நிறுவனமான பி.எம்.டபிள்யூ (BMW), இந்தியாவில் தனது புதிய 5-சீரிஸ் லாங் வீல்பேஸ் (5-Series LWB) காரை எந்த விலை மாற்றமும் இல்லாமல் கூடுதல் அம்சங்களுடன் மேம்படுத்தியுள்ளது. இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.73,35,000 ஆக மாறாமல் உள்ளதுடன், புதிய ஜிஎஸ்டி (GST) திருத்தம் மூலம் கிடைக்கும் சலுகைகளையும் பெறுகிறது.

முக்கி முக்கி வித்தும் ஒரே ஒரு கார் தான் வித்திருக்குது!

கியா நிறுவனம் தனது பவர்ஃபுல் எஸ்யூவி காராக இவி 9 என்ற காரை விற்பனை செய்து வருகிறது.இந்த கார் கடந்த 2024ம் ஆண்டு அக்டோபர் மாதம் தான் அறிமுகமான நிலையில் கடந்த நவம்பர் மாதம் இந்த காரின் விற்பனை விபரங்கள் வெளியாகியுள்ளன. அதை விரிவாக காணலாம் வாருங்கள்.
Advertisement

விற்பனையில் சாதனை படைக்கும் டாடா கார்!

இந்திய சந்தையில், நடப்பு 2025ம் ஆண்டு நவம்பர் மாதம், மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப் 10 கார்களின் பட்டியல் (Top 10 Cars November 2025), தற்போது வெளியாகியுள்ளது. காடிவாடி தளத்தில் வெளியாகியுள்ள இந்த பட்டியலில் டாடா நெக்ஸான் (Tata Nexon) முதல் இடத்தை பிடித்துள்ளது.

30 நாளில் ஒருத்தர் கூட இந்த காரை வாங்கல!

சிட்ரோன் நிறுவனம் தனது நவம்பர் மாத விற்பனை விபரங்களை வெளியிட்டுள்ள நிலையில் இந்நிறுவனம் கடந்த நவம்பர் மாதம் ஒரு சி5 ஏர்கிராஸ் காரை கூட விற்பனை செய்யாமல் 0 என பதிவு செய்துள்ளது. இந்த கார் விற்பனையில் திண்டாடி வருகிறது. இந்த கார் குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

ஹூண்டாய் கார் விற்பனையில் கீழிறக்கிய இந்திய கார் கம்பெனிகள்!

கடந்த அக்டோபர் மாதத்தைப் போலவே, ஹூண்டாய் (Hyundai) நிறுவனம் நவம்பர் மாதத்திலும் தங்களது விற்பனையில் பெரிய அளவில் மாற்றத்தைக் காணவில்லை. வழக்கம்போல் கடந்த மாதத்திலும், கிரேட்டா (Creta) காரையே ஹூண்டாய் பெரிதும் நம்பி இருந்தது. 2025 நவம்பரில் இந்தியாவில் ஹூண்டாய் மொத்தம் 50,340 கார்களை விற்பனை செய்துள்ளது.

34 கிமீ மைலேஜ்! வெறும் 3.70 லட்சத்துக்கு புது கார்!

இந்திய சந்தையில் மாருதி சுஸுகி ஆல்டோ (Maruti Suzuki Alto) கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு முழுமையாக கால் நூற்றாண்டு காலம் கடந்து விட்டது. இடைப்பட்ட இந்த 25 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 4.7 மில்லியன் (47 லட்சம்) மாருதி சுஸுகி ஆல்டோ கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
Advertisement

ஒரே மாதத்தில் 15 ஆயிரம் கஸ்டமர்ஸ் குறைந்தது சாதாரண விஷயமில்ல

நவம்பர் 2025 இல் கார் விற்பனை ஆண்டுக்கு ஆண்டு 18.17% உயர்ந்த நிலையில், பெரும்பாலான முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்கள் தேவையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன. மஹிந்திரா நிறுவனம் கடந்த மாதத்தில் வலுவான ஆண்டுக்கு ஆண்டு (YoY) வளர்ச்சியை எட்டியுள்ளது.

கீழே தள்ளப்பட்ட டாடா கார்கள்! டாப் 10 லிஸ்ட் இதோ!

இந்தியாவில் மிட் சைஸ் எஸ்யூவி செக்மெண்ட் மிகப்பெரிய அளவில் வளர்ச்சியடைந்து வருகிறது. இந்த செக்மெண்டில் போட்டியும் மிக அதிகமாக உள்ளது. பல வாகன தயாரிப்பு நிறுவனங்கள் இந்த செக்மெண்டில் பல கார்களை விற்பனை செய்து வரும் நிலையில் கடந்த நவம்பர் மாதம் இந்த செக்மெண்டில் விற்பனையான டாப் 10 வாகனங்கள் குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

மக்கள் அதிகம் பேர் வாங்கும் 10 லட்ச ரூபாய் ஹேட்ச்பேக் கார்ஸ்

2025 நவம்பர் மாதத்தில் ரூ.10 லட்சத்திற்கும் குறைவான விலையிலான ஹேட்ச்பேக் (Hatchback) ரக கார்கள் பிரிவில், மாருதி சுஸுகி மற்றும் டாடா நிறுவன கார் மாடல்களின் ஆதிக்கம் தெளிவாகத் தெரிந்தது. குறிப்பாக, மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் மற்றும் மாருதி சுஸுகி வேகன் ஆர் ஆகிய ஹேட்ச்பேக் கார்கள் விற்பனை எண்ணிக்கையில் முன்னணியில் உள்ளன. கடந்த மாத விற்பனையில் முதல் எட்டு இடங்களைப் பிடித்த ரூ.10 லட்சத்திற்குள் விலை கொண்ட ஹேட்ச்பேக் கார்களின் விற்பனை விவரங்கள் இதோ...

இந்த 5 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் அறிமுகங்களை பற்றி தெரியுமா

இந்திய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் (Electric Scooter) சந்தையானது கடந்த சில ஆண்டுகளில் அதிவேகமாக வளர்ச்சி பெற்று வருகிறது. சந்தையில் கடும் போட்டி நிலவி வரும் நிலையில், டிவிஎஸ் (TVS), பஜாஜ் (Bajaj), ஹீரோ (Hero), ஓலா (Ola) மற்றும் ஏத்தர் (Ather) போன்ற முன்னணி நிறுவனங்கள் விற்பனையில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. 2025ஆம் ஆண்டில், மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பம், அதிக பேட்டரி திறன் மற்றும் மலிவு விலையில் புதிய மாடல்களை அறிமுகப்படுத்தியதன் மூலம் இந்தப் போட்டி மேலும் தீவிரமடைந்துள்ளது. இதோ, 2025ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட சிறந்த 5 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விவரங்கள்.
Advertisement

29 கிமீ மைலேஜ்! லாரியே மோதினாலும் கல்லு மாதிரி நிற்கும்!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று மாருதி சுஸுகி விக்டோரிஸ் (Maruti Suzuki Victoris). மிட்-சைஸ் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த மாருதி சுஸுகி விக்டோரிஸ் கார், நடப்பு 2025ம் ஆண்டு செப்டம்பர் மாதம்தான் விற்பனைக்கே அறிமுகம் செய்யப்பட்டது.

ஜிஎஸ்டி குறைச்சது, மாருதிக்கு கஸ்டமர்ஸ் அதிகமாகிட்டே வராங்க!

2025 நவம்பர் மாதத்தில் மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனம் இந்தியாவின் கார் சந்தையில் தனது ஆதிக்கத்தை மீண்டும் நிலைநாட்டியுள்ளது. 41% சந்தைப் பங்களிப்புடன், டாடா மோட்டார்ஸ் (Tata Motors), மஹிந்திரா (Mahindra) மற்றும் ஹூண்டாய் (Hyundai) நிறுவனங்களின் மொத்த விற்பனையை விட அதிக கார்களை மாருதி சுஸுகி விற்பனை செய்துள்ளது.

58 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் கார்னு சொன்னா நம்ப முடியுதா?

புத்தம் புதிய மினி கன்வெர்டிபிள் (MINI Convertible) கார் இந்தியாவில் இன்று விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த கார், முழுமையாக வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட அலகாக (CBU) நாட்டில் கிடைக்கும். மினி இந்தியா நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து டீலர்ஷிப் ஷோரூம்களிலும் இதை முன்பதிவு செய்யலாம். வாகனங்களுக்கான டெலிவிரிகள் (Deliveries) விரைவில் உடனடியாகத் தொடங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

2 மாசமா இந்த காரை ஒருத்தர் கூட வாங்கல!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் ஒரு சமயத்தில் மிகவும் பிரபலமாக இருந்து வந்த கார்களில் ஒன்று மாருதி சுஸுகி சியாஸ் (Maruti Suzuki Ciaz). பிரீமியம் செடான் (Premium Sedan) ரகத்தை சேர்ந்த சியாஸ் கார், மாருதி சுஸுகி நிறுவனத்தின் பிரீமியம் நெக்ஸா டீலர்ஷிப்கள் (Nexa Dealerships) மூலமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
Advertisement

ஹெல்மெட் மாதிரி பைக் ரைடர்களுக்கு இதுவும் கட்டாயம்!

ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கான ரைடிங் கியர்களை ஆன்லைனில் விற்பனை செய்து வருகிறது. இது ராயல் எஃபீல்டு பைக் போல பிரபலமானதாக இருக்கிறது. தீவிரமாக ரைடிங் செய்பவர்கள் பலர் இந்த கியர்களை ஆன்லைனில் வாங்கி வருகின்றனர். இந்நிலையில் அந்நிறுவனத்தின் CROSSROADER PRINT RIDING JACKET - RED என்ற ரைடிங் கியரை நமது டிரைவ்ஸ்பார்க் குழுவினர் வாங்கியுள்ளனர். இது குறித்த விமர்சனத்தை காணலாம் .

9 பேரை ஒரே காரில் ஒன்னா ஏத்தீட்டு போகலாம்!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று மஹிந்திரா ஸ்கார்பியோ (Mahindra Scorpio). இதன் முரட்டுத்தனமான தோற்றம் மற்றும் சக்தி வாய்ந்த இன்ஜின் ஆப்ஷன்கள் வாடிக்கையாளர்களை கவர்ந்து இழுக்கும் மிக முக்கியமான அம்சங்களாக உள்ளன. மஹிந்திரா ஸ்கார்பியோ கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு சுமார் 23 ஆண்டுகள் கடந்து விட்டன.

டிரைவரே இல்லாமல் தானாக ஓடி குளத்திற்குள் விழப்போன கார்!

தற்போது வாகனங்களில் ஆட்டோமெட்டிக் தொழிற்நுட்பத்தை வாகன தயாரிப்பு நிறுவனங்கள் அதிகமாக புகுத்த துவங்கிவிட்டனர். இதில் ஆட்டோமெட்டிக் பார்க்கிங் அம்சமும் ஒன்றும். இப்படியாக ஆட்டோமெட்டிக் பார்க்கிங் வசதியுள்ள கார் ஒன்று சமீபத்தில் பார்க் ஆகும் போது குளத்திற்குள் விழப்போன சம்பவம் வீடியோவாக பதிவாகி வைரலாக பரவி வருகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

இந்தியாவே எதிர்பார்க்கும் மஹிந்திரா காரை புக்கிங் போட ரெடியா

மஹிந்திரா (Mahindra) நிறுவனம் தனது புதிய 'எக்ஸ்யூவி 7எக்ஸ்ஓ' (XUV 7XO) எஸ்யூவி காருக்கான முன்பதிவுகளை டிசம்பர் 15 அன்று மதியம் 12 மணிக்கு தொடங்குவதாக அறிவித்துள்ளது. தற்சமயம் விற்பனையில் உள்ள எக்ஸ்யூவி700 காரின் அப்கிரேட் வெர்சனாக 2026 ஜனவரி 5 அன்று அறிமுகம் செய்யப்பட உள்ள இந்த காரை, டிச.15 முதல் ரூ.21,000 முன்பணமாக செலுத்தி முன்பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement

ராயல் என்ஃபீல்டுக்கு போட்டியாக ஹார்லி-டேவிட்சனின் எக்ஸ்440டி

புதிய ஹார்லி-டேவிட்சன் எக்ஸ்440டி (Harley-Davidson X440T), மேம்படுத்தப்பட்ட அம்சங்கள் மற்றும் மெருகூட்டப்பட்ட தோற்றத்துடன் இந்திய சந்தையில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது ராயல் என்பீல்டு கிளாசிக் 350 (Royal Enfield Classic 350) பைக்கிற்கு நேரடிப் போட்டியாக, ரெட்ரோ மோட்டார்சைக்கிள் பிரிவில் அடியெடுத்து வைத்துள்ளது. இந்த இரண்டு ரெட்ரோ பைக்குகளின் முழுமையான ஒப்பீட்டை தான் இங்கு பார்க்க போகிறோம்.

லட்சகணக்குல பைக் விக்குற கம்பெனி எதுலாம் தெரியுமா?

இந்தியாவில் டூவீலர் விற்பனை மிக அதிகமாக நடந்துவருகிறது. இந்நிலையில் பல நிறவனங்கள் அதிக அளவிலான டூவீலர்களை விற்பனை செய்து சாதனை படைத்து வருகிறது. இப்படியாக கடந்த நவம்பர் மாதம் அதிக டூவீலர்களை விற்பனை செய்த டாப் 10 நிறுவனங்கள் குறித்த விபரங்களை காணலாம் வாருங்கள்.

இந்த 2 டாடா கார்களை தான் மக்கள் மாத்தி மாத்தி வாங்குறாங்க!!

2025 நவம்பர் மாத விற்பனையில், 10 லட்சம் ரூபாய்க்கும் குறைவான ஆரம்ப விலையுள்ள பல எஸ்யூவி (SUV) கார்கள் இந்திய கார் சந்தையில் ஆதிக்கம் செலுத்தியுள்ளன. குறிப்பாக, டாடா மோட்டார்ஸ் (Tata Motors) மற்றும் மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனங்களின் கார் மாடல்கள் வலுவான விற்பனை வளர்ச்சியைக் கண்டுள்ளன.

2026 செல்டோஸ் கார் பல லட்ச ரூபாய் கொடுத்து வாங்க வொர்த்தா?

புதிய இரண்டாம் தலைமுறை கியா செல்டோஸ் (Kia Seltos), வியக்க வைக்கும் புதுமையான தோற்றத்துடன், ஏராளமான பிரீமியம் அம்சங்களை உள்ளடக்கி வெளிவந்துள்ளது. கியா நிறுவனம் இந்த இரண்டாம் தலைமுறை செல்டோஸில் ஸ்டைலிங், உபகரணங்கள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களில் குறிப்பிடத்தக்க மேம்பாடுகளை அறிமுகப்படுத்தியுள்ளது. மொத்தம் 10 விதமான வேரியண்ட்களில் புதிய செல்டோஸ் விற்பனை செய்யப்பட உள்ளது.
Advertisement

வெறும் 5 லட்ச ரூபா ரேஞ்சுல 7 சீட்டர் காரா!

ஜப்பானை (Japan) சேர்ந்த உலக புகழ் பெற்ற கார் நிறுவனங்களில் ஒன்று நிஸான் (Nissan). இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் 2 கார்களை மட்டுமே நிஸான் நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. அவை நிஸான் மேக்னைட் (Nissan Magnite) மற்றும் நிஸான் எக்ஸ் ட்ரெயில் (Nissan X-Trail) ஆகியவை ஆகும்.