ரோட்டில் இயங்கும் மினி சொகுசு கப்பல்! விலை எவ்வளவு தெரியுமா?
ஆட்டோமொபைல்
- 9 month, 12 days ago
லெக்ஸஸ் இந்தியா தனது RX வரிசையில் புதிய எக்ஸ்குவிசிட் (Exquisite) மாடலை அறிமுகப்படுத்தி, ஆடம்பர SUV பிரிவில் வாடிக்கையாளர்களுக்கு ஒரு எளிதான மற்றும் மலிவான புதிய தேர்வை வழங்கியுள்ளது. புதிய RX 350h எக்ஸ்குவிசிட் வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ. 89.99 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த மாடலுடன் கூடுதலாக, ரூ. 2.03 லட்சம் செலுத்தி 21-ஸ்பீக்கர் கொண்ட மார்க் லெவின்சன் (Mark Levinson) பிரீமியம் ஆடியோ சிஸ்டத்தை விருப்பத் தேர்வாகப் பெறலாம்.