கார்னரிங் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் உடன் 10 லட்ச ரூபாய் கார்கள்

இந்தியாவில் பத்து லட்ச ரூபாய்க்கும் குறைவான விலையில் பல கார்கள் கார்னரிங் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (CSC) எனப்படும் எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC) அல்லது எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி புரோகிராம் (ESP) அம்சங்களுடன் கிடைக்கின்றன. டாடா பன்ச், டாடா நெக்ஸான், மாருதி சுஸுகி டிசையர் போன்ற பிரபலமான கார் மாடல்கள் இதில் அடங்கும். இதனாலேயே இந்த கார்கள் சிறந்த பாதுகாப்பு மதிப்பீடுகளைப் பெற்றுள்ளன. CSC அல்லது அதற்கு சமமான ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் அம்சத்துடன் கிடைக்கும் சில சிறந்த கார்களை இனி பார்க்கலாம். இவற்றின் விலையும் பத்து லட்ச ரூபாய்க்குள் உள்ளது.

லைசன்ஸ் எல்லாம் தேவையே இல்ல... மொத்த டாப்-ஸ்பீடே 25kmph தான்

எலெக்ட்ரிக் இருசக்கர மற்றும் மூன்று சக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஜெலியோ இ-மொபிலிட்டி (Zelio E-Mobility), தனது வளர்ச்சியில் ஆண்டுதோறும் இரு மடங்காக முன்னேறி வருகிறது. தற்போது, இந்த நிறுவனம் தனது ஈவா (Eeva) ஸ்கூட்டர் வரிசையில் மூன்று மேம்படுத்தப்பட்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்தி, இந்தியாவின் குறை-வேக (டாப்-ஸ்பீடு மணிக்கு 25கிமீ) எலெக்ட்ரிக் வாகனப் பிரிவில் தனது இருப்பை வலுப்படுத்தி உள்ளது.

உலகமே தமிழ்நாட்டை ஆச்சரியமா பாக்க போகுது!

தமிழ்நாட்டின் (Tamil Nadu) தலைநகர் சென்னையை (Chennai) ஆசியாவின் டெட்ராய்டு (Detroit of Asia) என்பார்கள். ஏனெனில் இங்கு ஏராளமான ஆட்டோமொபைல் நிறுவனங்கள் நிரம்பி வழிகின்றன. இதில், டிவிஎஸ் (TVS) குறிப்பிடத்தக்க ஒன்றாகும். சென்னையை தலைமையிடமாக கொண்டுதான் டிவிஎஸ் நிறுவனம் இயங்கி வருகிறது.

கடைசியில் தலைமையக கட்டிடத்தையே விற்ற நிசான் கம்பெனி!!

நிசான் (Nissan) நிறுவனம் ஜப்பானில் உள்ள அதன் யோகோஹாமா தலைமையகக் கட்டிடத்தை 97 பில்லியன் யென் (தற்போதைய நிலவரப்படி சுமார் ரூ.5,598 கோடி) விலைக்கு விற்றுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கை, இந்த ஜப்பானிய கார் நிறுவனம் தற்போது எதிர்கொள்ளும் சவால்களில் இருந்து மீள்வதற்கான ஒரு முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.
Advertisement

ஒருமுறை சார்ஜ் பண்ணிட்டா 109கிமீ-க்கு கவலையே வேண்டாம்!

இந்திய சந்தையில் நியூமரஸ் (Numeros) நிறுவனம் தனது புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் (Electric Scooter) ஆக 'என்-ஃபர்ஸ்ட்' (n-First)-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. முதல் 1,000 வாடிக்கையாளர்களுக்கு ரூ.64,999 (எக்ஸ்-ஷோரூம்) என்கிற அறிமுக விலையில் இந்த புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஸ்கூட்டருக்கான முன்பதிவுத் தொகை ரூ.499 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த விஷயம் மட்டும் வெளிய வந்துச்சுனா மாருதி, டாடாலாம் காலி!

இந்திய வாடிக்கையாளர்கள் தற்போதெல்லாம் கார்களின் பாதுகாப்பு வசதிகளுக்கு (Safety Features) அதிக முக்கியத்துவம் வழங்குகிறார்கள். பாரத் என்சிஏபி (Bharat NCAP) மற்றும் குளோபல் என்சிஏபி (Global NCAP) போன்ற அமைப்புகளின் மோதல் சோதனைகளில், ஒரு கார் எவ்வளவு பாதுகாப்பு ரேட்டிங் (Safety Rating) வாங்கியுள்ளது? என்பதை பொறுத்துதான், அந்த காரை வாங்கலாமா? அல்லது வேண்டாமா? என்ற முடிவையே ஒரு சில வாடிக்கையாளர்கள் எடுக்கின்றனர்.

நீர் நிரம்பிய டம்ளர் வைத்து நடத்தப்பட்ட சோதனை ஓட்டம்!

இந்திய ரயில்வேயின் எதிர்காலத் திட்டமான வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலின் அதிவேக சோதனை வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. மேற்கு மத்திய ரயில்வே சவாய் மாதோபூர்-கோட்டா-நாக்டா பிரிவில் நடத்திய இந்தச் சோதனையின்போது, ரயில் மணிக்கு 180 கி.மீ. வேகத்தை எட்டியது.

டீசர் வீடியோ விட்டதுக்கே மார்க்கெட் கதிகலங்கி போயிருச்சு!

இந்திய சந்தையில் கடந்த 1991ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட கார் டாடா சியரா (Tata Sierra). ஆனால் கடந்த 2003ம் ஆண்டிலேயே டாடா சியரா காரின் விற்பனை நிறுத்தப்பட்டு விட்டது. இருப்பினும் சுமார் 22 ஆண்டு கால இடைவெளிக்கு பிறகு, டாடா மோட்டார்ஸ் நிறுவனம், சியரா காரை மீண்டும் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது.
Advertisement

3 லட்சம் எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனை செய்வது சும்மா இல்ல!!

இந்தியாவின் நம்பர் 1 மின்சார வர்த்தக வாகன உற்பத்தியாளரான மஹிந்திரா லாஸ்ட் மைல் மொபிலிட்டி லிமிடெட் (MLMML), 3 லட்சம் மின்சார வாகன விற்பனை என்ற மாபெரும் மைல்கல்லை எட்டியுள்ளது. இதன் மூலம் மின்சார வாகன சந்தையில் ஒரு புதிய அத்தியாயத்தை MLMML தொடங்கியுள்ளது. இந்தியாவின் வர்த்தக மின்சார வாகன பிரிவில் இந்த சாதனையை எட்டிய முதல் அசல் உபகரண உற்பத்தியாளர் (OEM) மஹிந்திரா ஆகும். இது, நிலையான இறுதி-மைல் போக்குவரத்தில் மஹிந்திராவின் தலைமையை எடுத்துக்காட்டுகிறது.

காரில் இந்த விளக்கு இல்லாம தான் சிலர் தவிக்குறாங்க!!

கார்னரிங் விளக்குகள் என்பவை, கார்களின் முகப்பு விளக்குகள் அல்லது ஃபாக் விளக்குகளுடன் இணைக்கப்படும் துணை விளக்குகளாகும். இவை தானாகவே செயல்பட்டு, கார் திரும்பும் திசையில் ஒளியைப் பாய்ச்சி, பார்வைக்குத் தெரியாத பகுதிகளை மேம்படுத்த உதவுகின்றன. குறைந்த வேகத்தில் பயணிக்கும் போதும், ஓட்டுநர் ஸ்டீயரிங் சக்கரத்தைத் திருப்பும் போதும் அல்லது டர்ன் இண்டிகேட்டர் சிக்னலை பயன்படுத்தும் போதும் இந்த விளக்குகள் இயங்குகின்றன.

இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு இப்படி ஒரு பரிசா!

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி சமீபத்தில் நடைபெற்ற ஐசிசி மகளிர் உலக கோப்பையை (ICC Women's World Cup) வென்றது. நவி மும்பையில் (Navi Mumbai) நடைபெற்ற இறுதி போட்டியில், தென் ஆப்ரிக்க (South Africa) மகளிர் அணியை வீழ்த்தி, இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, சாம்பியன் பட்டத்தை வென்றது.

மத்திய அரசு பார்த்து பார்த்து அமைத்து வரும் விரைவுச்சாலை!!

இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் லட்சியமான திட்டங்களில் ஒன்றான டெல்லி- மும்பை விரைவுச்சாலையில் இன்னும் பல பிரிவுகள் கட்டுமான பணியில் இருந்தாலும், அதன் கணிசமான பகுதி ஏற்கனவே பயன்பாட்டிற்கு வந்துவிட்டது மற்றும் இதுதான் நாட்டின் மிக நீளமான விரைவுச்சாலை ஆகவும் விளங்குகிறது. இந்த விரைவுச்சாலை 2026 மார்ச் மாதத்திற்குள் முழுமையாக கட்டி முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Advertisement

புக் பண்ண ஒவ்வொருத்தரும் ஜாலியா வீட்டுக்கு ஓட்டினு போறாங்க!

ஓலா எலெக்ட்ரிக் (Ola Electric) நிறுவனம், 5.2kWh பேட்டரி கொண்ட தனது எஸ்1 புரோ+ (S1 Pro+) எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டெலிவிரியை இன்று அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது. இந்த வாகனத்தில், ஓலா நிறுவனத்தின் உள்நாட்டு தயாரிப்பான 4680 பாரத் செல் (Bharat Cell) பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளது. அதிக தூரம் பயணம் செய்யும் திறன், சிறந்த செயல்பாடு மற்றும் மேம்பட்ட பாதுகாப்பை வழங்கக்கூடிய இந்த 4680 பாரத் செல் பேட்டரிகளை முழுக்க முழுக்க தனது தொழிற்சாலையிலேயே உற்பத்தி செய்து, எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் பொருத்த உள்ளதாக சில மாதங்களுக்கு முன் ஓலா நிறுவனம் அறிவித்தது.

35கிமீ-க்கு பெடல் யூஸ் பண்ண தேவையில்ல... இமோட்டோராட் எக்ஸ்1

இந்தியாவின் நம்பகமான எலெக்ட்ரிக் வாகன பிராண்டுகளில் ஒன்றான இ-மோட்டோராட் (EMotorad) நிறுவனம், தனது பிரபலமான எக்ஸ்1 (X1) எலெக்ட்ரிக் சைக்கிளின் புதிய மேம்படுத்தப்பட்ட பதிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. மேம்படுத்தப்பட்ட பேட்டரி மற்றும் புதிய வண்ணங்களுடன், எக்ஸ்1 இந்தியாவில் மலிவான மற்றும் நம்பகமான எலெக்ட்ரிக் சைக்கிள்களுக்கான புதிய தரநிலைகளை தொடர்ந்து செட் செய்து வருகிறது.

31 நாளில் 6.5 லட்சம் பேர் இந்த கம்பெனி வண்டிய வாங்கிட்டாங்க!

ஹோண்டா டூவீலர் நிறுவனம் கடந்த அக்டோபர் மாத விற்பனை விபரங்களை வெளியிட்டுள்ளது.அதன்படி இந்நிறுவனம் கடந்த அக்டோர் மாத விற்பனையில் வளர்ச்சியை சந்தித்துள்ளது. இந்நிறுவனம் ஏற்றுமதியில் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. அதை ஈடுகட்டும் அளவிற்கு உள்ளூர் விற்பனை அதிகமாகியுள்ளது. இது குறித்தவிரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

கடலை மிட்டாய் விக்கற மாதிரி கார்களை வித்துட்டு இருக்காங்க!

இந்தியாவின் நம்பர்-1 கார் உற்பத்தி நிறுவனமாக உள்ள மாருதி சுஸுகி (Maruti Suzuki), விற்பனையில் மிக பிரம்மாண்டமான மைல்கல் (Sales Milestone) ஒன்றை கடந்துள்ளது. இந்திய சந்தையில் ஒட்டுமொத்தமாக 3 கோடி (3 Crore) கார்கள் விற்பனை என்பதுதான் அந்த மைல்கல் ஆகும்.
Advertisement

இந்திய ஹீரோ பைக்கை பார்த்து ஆடிப்போன இத்தாலியர்கள்!

EICMA 2025 நிகழ்வில், உலகம் முழுவதிலும் இருந்து பல இருசக்கர வாகன நிறுவனங்களின் புதிய தயாரிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இத்தாலி நாட்டில் மிலன் என்கிற பகுதியில் நவம்பர் 9 வரையில் நடைபெறவுள்ள இந்த கண்காட்சியில் பல இந்திய நிறுவனங்களும் பங்கேற்றுள்ளன. அந்த வகையில், ஹீரோ மோட்டோகார்ப் (Hero Motocorp) நிறுவனத்தில் இருந்து காட்சிக்கு நிறுத்தப்பட்டுள்ள புதிய எக்ஸ்பல்ஸ் 210 டக்கார் எடிஷன் (XPulse 210 Dakar Edition) பைக் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

டீசலில் 24 கி.மீ மைலேஜ் தரும் எஸ்யூவி காரா?

ஹூண்டாய் நிறுவனம் இந்தியாவில் தனது வென்யூ காரை தற்போது அப்டேட் செய்து வெளியிட்டுள்ளது.இந்த கார் பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் ஆப்ஷன்களுடன் கிடைக்கிறது. இதில் நாம் டீசல் ஆப்ஷவனை பற்றி மட்டும் தான் இங்கே காணப்போகிறோம். இ்நத காரின் டீசல் ஆப்ஷனிற்கு போட்டியாக மார்கெட்டில் டாடா நெக்ஸான் மற்றும் கியா சைரோஸ் ஆகிய கார்கள் விற்பனையாகி வருகிறது. இதில் எந்த கார் நல்ல மைலேஜ் தருகிறது என்ற விபரங்களை காணலாம் வாருங்கள்.

மாருதி, டாடாவை நடுங்க வைத்த ஹூண்டாயின் புதிய கார்!

புதிய தலைமுறை ஹூண்டாய் வெனியூ (New Gen Hyundai Venue) கார், நேற்று (நவம்பர் 4) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் புதிய தலைமுறை வெனியூ காரின் ஒரு சில வேரியண்ட்களுக்கான (Variants) விலைகளை மட்டுமே ஹூண்டாய் நிறுவனம் நேற்று வெளியிட்டது.

சொகுசு பங்களா மாதிரி காரை தயாரித்த மஹிந்திரா!

மஹிந்திரா நிறுவனம் தனது 7 சீட்டர் எலெக்ட்ரிக் காராக எக்ஸ்இவி 9எஸ் என்ற காரை அறிமுகப்படுத்தப்போவதாக ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்நிலையில் இந்த கார் குறித்த புதிய டீசரை வெளியிட்டுள்ளது. இது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த எக்ஸ்இவி9எஸ் காரில் என்ன இருக்கிறது? இதில் உள்ள அம்சங்கள் என்ன? டீசல் இடம்பெற்றுள்ள தகவல்கள் என்ன? விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
Advertisement

மீண்டும் BSA தண்டர்போல்ட்... இப்போ முற்றிலும் புதிய டிசைனில்

பி.எஸ்.ஏ (BSA) நிறுவனம் தனது முதல் அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிளான பிஎஸ்ஏ தண்டர்போல்ட் 334 ஏடிவி (Thunderbolt 334 ADV)-ஐ இத்தாலியில் நடைபெறும் EICMA 2025 கண்காட்சியில் காட்சிப்படுத்தி உள்ளது. இது, பிஎஸ்ஏ பிராண்டின் நான்காவது புதிய மாடலாகவும், பாண்டாம் 350 (Bantam 350) மற்றும் ஸ்க்ராம்ப்ளர் 650 (Scrambler 650) பைக்குகளின் வெளியீட்டிற்குப் பிறகு வெளிவரும் பைக்காகவும் உள்ளது.

பழைய காரை விட விலை ஜாஸ்தியா இல்லையா?

ஹூண்டாய் நிறுவனம் தனது வென்யூ மற்றும் வென்யூ என்லைன் ஆகிய கார்களை அப்டேட் செய்து வெளியிட்டுள்ளது. இதில் பல்வேறு விதமான அப்டேட்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் இந்த அப்டேட் செய்யப்பட்ட காரின் 3 வேரியன்ட்களுக்கு மட்டுமே விலை வெளியிடப்பட்டுள்ளது. இதே நிலையில் பழைய காரின் வேரியன்ட் வாரியிலான விலை விபரங்களையும், புதிய காரின் விலை விபரங்களையும் நாம் இங்கே ஒப்பிடப்போகிறோம்.

வாய்ஸ் கண்ட்ரோல் உடன் கார் வாங்கினால் கார் ஓட்டுற சுகமே தனி!

இந்தியாவில் பத்து லட்ச ரூபாய்க்கும் குறைவான விலையில் கிடைக்கும் பல கார்களில் வாய்ஸ் கமாண்ட்ஸ் (Voice Commands) வசதி மற்றும் நவீன இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்கள் (Infotainments Systems) வழங்கப்படுகின்றன. டாடா பன்ச், ஹூண்டாய் எக்ஸ்டர், மாருதி சுஸுகி ஃபிரான்க்ஸ் போன்ற கார்கள் இதில் முக்கிய இடத்தைப் பிடிக்கின்றன. அத்தகைய, வாய்ஸ் கமாண்ட் வசதியுடன் கூடிய பிரபலமான கார்கள்...

ராயல் என்பீல்டின் புதிய கிளாசிக் 650 125வது ஆனிவர்சரி எடிசன்

ராயல் என்ஃபீல்டு (Royal Enfield) நிறுவனம், இத்தாலியில் நடைபெற்றுவரும் 2025ஆம் ஆண்டிற்கான EICMA கண்காட்சியில் இதுவரை இல்லாத பிரத்யேக மாடலான கிளாசிக் 650 125வது ஆண்டுவிழா பதிப்பை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த மோட்டார்சைக்கிள் வெறும் வாகனம் மட்டுமல்ல, 125 ஆண்டுக்கால ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் பாரம்பரியத்தின் அடையாளமாக திகழ்கிறது.
Advertisement

இந்திய தயாரிப்பை வாங்க உலக நாடுகள் வரிசை கட்டி நிக்க போகுது!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் பைக்குகளில் ஒன்று ராயல் என்பீல்டு புல்லட் (Royal Enfield Bullet). தற்போதைய நிலையில் 350 சிசி வெர்ஷனில் மட்டுமே ராயல் என்பீல்டு புல்லட் பைக் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால் கூடிய விரைவில் இதன் 650 சிசி வெர்ஷன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம்.