இந்தியாவில் மக்கள் அதிக பேரால் வாங்கப்படும் ஹோண்டா ஸ்கூட்டர்

என்னதான் புதியது புதியதாக ஸ்கூட்டர்கள் வந்தாலும், நம் இந்திய மக்களுக்கு கியர்களை கொண்ட பைக்குகள் என்றால்தான் எப்போதுமே ஆர்வம் அதிகம் ஆகும். இருப்பினும், அதேநேரம் ஸ்கூட்டர்களை வாங்குவோரும் இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் இருக்கின்றனர். அதாவது, அந்த அளவிற்கு நம் இந்தியா ஆனது மிக பெரிய 2-வீலர் சந்தையாக விளங்குகிறது. கடந்த மே மாதத்தில் மட்டும் ஸ்கூட்டர் மாடல் ஒன்று கிட்டத்தட்ட 2 லட்சம் யூனிட்களும், மற்றொரு ஸ்கூட்டர் மாடல் கிட்டத்தட்ட 1 லட்ச யூனிட்களும் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அவை என்னென்ன? என்பதையும், கடந்த மே மாதத்தில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்ட டாப்-10 ஸ்கூட்டர்களை பற்றியும் இனி பார்க்கலாம், வாங்க.

சாலை மொத்தத்தையும் அலறவிட்ட லம்போர்கினி கார் டிரைவர்!!

விலையுயர்ந்த கார் அல்லது பைக்கை வைத்து இருந்தாலே சிலருக்கு எங்கிருந்துதான் அந்த தலைகனம் வரும் என்றே தெரியாது. சாலை மொத்தமும் தனக்கு தான் சொந்த என்கிற அளவிற்கு வேகமாக செல்வது, வளைந்து வளைந்து செல்வது என சாலையை தெறிக்கவிடுவதை பார்த்திருக்கிறோம். போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளில் கூட புகுந்து புகுந்து செல்வர். அதிலிலும் லம்போர்கினி (Lamborghini) காரை வைத்திருப்பவர்களை பற்றி எல்லாம் சொல்லவே தேவையில்லை. இந்திய சாலைகளுக்கு லம்போர்கினி கார்கள் ஏற்றவை இல்லை என சொல்லிக் கொண்டே சாலையில் தாறுமாறாக செல்வர்.

ரூ14 லட்சத்திற்கு நம்பர் பிளேட் வாங்கிய தொழிலதிபர்!

இமாச்சல பிரதேச மாநிலத்தை சேர்ந்த ஒருவர் சமீபத்தில் ஒரு தனது ரூ1 லட்சம் மதிப்பிலான ஸ்கூட்டிக்கு ரூ14 லட்சம் மதிப்பில் நம்பர் பிளேட்டை வாங்கி பொருத்தியுள்ளார். இந்த செய்தி தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இவ்வளவு காஸ்ட்லியான நம்பர் பிளேட்டை அவர் ஏன் பொருத்தினார்? இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

100 கிமீ மைலேஜ் தரும் பைக் விலையை ஒரே அடியா கொறச்சுட்டாங்க

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் பைக்குகளில் ஒன்று பஜாஜ் ஃப்ரீடம் 125 சிஎன்ஜி (Bajaj Freedom 125 CNG). உலகின் முதல் சிஎன்ஜி பைக் (World's First CNG Bike) என்ற பெருமை இதற்கு உண்டு. இந்த பைக்கில் பொருத்தப்பட்டிருப்பது, 125 சிசி சிங்கிள் சிலிண்டர் ஏர் கூல்டு இன்ஜின் ஆகும்.
Advertisement

லிட்டருக்கு 18கிமீ மைலேஜ் தரும்னு சொன்னா நம்பவே முடியல!

ஹோண்டா கார்ஸ் (Honda Cars), ஜப்பான் நாட்டை சேர்ந்த உலகளவில் பிரபலமான கார் நிறுவனம். ஜப்பான் கார் நிறுவனங்கள் என்றாலே இந்தியாவில் ஓரளவிற்கு தாக்குப்பிடிக்க கூடியவை. ஹோண்டா நிறுவனமும் ஆரம்பத்தில் இந்தியாவில் வரவேற்பை பெற்றது. ஆனால், தற்போதைக்கு இந்தியாவில் வெறும் மூன்றே மூன்று ஹோண்டா கார் மாடல்கள் மட்டுமே விற்பனை செய்யப்படுகின்றன. ஹோண்டா சிட்டி (City) செடான் காருக்கு இந்தியா உள்பட உலகம் முழுக்கவே வரவேற்பு உள்ளதால், சிட்டி கார் மட்டும் இந்தியாவில் கடந்த பல வருடங்களாக தொடர்ந்து விற்பனையில் உள்ளது. இதுதவிர்த்து, அமேஸ் (Amaze), எலெவேட் (Elevate) என்கிற இரு ஹோண்டா கார்களும் இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்றன.

1 கி.மீக்கு ஒரு ரூபாய்க்கும் குறைவாக தான் செலாகும்!

மோந்த்ரா எலெக்ட்ரிக் நிறுவனம் இந்தயிாவில் குறைந்த விலையில் எலெக்ட்ரிக் சரக்கு ஆட்டோவை அறிமுகப்படுத்தியுள்ளது. இது கம்பஷன் இன்ஜின் வாகனங்களுக்கு இணையான வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வாகனம் குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

மிடில்-க்ளாஸ் குடும்பங்கள் கொண்டாடும் விலை குறைவான கார்!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் (Maruti Suzuki Swift). இந்த ஹேட்ச்பேக் (Hatchback) ரக கார் இந்திய சந்தையில் 20 ஆண்டுகளை நிறைவு செய்து, 21வது ஆண்டில் தற்போது அடியெடுத்து வைத்துள்ளது.

கோடி ரூபாய் கொடுத்து வாங்கும் காரில் கூட பாதுகாப்பு இல்ல!!

மெர்சிடிஸ்-பென்ஸ் (Mercedes-Benz), இந்தியாவில் சொகுசு கார்களை அதிகம் விற்பனை செய்யும் நிறுவனம். கோடி ரூபாய் மதிப்பிலான கார்களை ஒவ்வொரு மாதமும் ஆயிரக்கணக்கில் விற்பனை செய்யக்கூடிய நிறுவனமாக மெர்சிடிஸ்-பென்ஸ் உள்ளது. இருப்பினும், இத்தகைய நிறுவனத்துக்கு கூட சில நேரங்களில் கஷ்ட காலம் வர தான் செய்கிறது. உலகளவில் இந்த 2025ஆம் ஆண்டில் மட்டும் காரில் பிரச்சனை இருப்பதாக அவற்றை சரிச்செய்து கொடுக்க ஆறு முறை மெர்சிடிஸ் நிறுவனம் அதன் குறிப்பிட்ட சில கார்களை வாங்கிய கஸ்டமர்களை திரும்ப அழைத்துள்ளது. இதில் ஆறாவது முறை அழைப்பு தற்போதுதான் அழைக்கப்பட்டுள்ளது.
Advertisement

நல்ல காரை திடீர்ன்னு சேல்ஸ்ல இருந்து நிப்பாட்டிட்டாங்க!

வால்வோ நிறுவனத்தின் எஸ்90 என்ற மிட்சைஸ் சொகுசு செடான் காரை இந்நிறுவனம் தற்போது இந்தியாவில் விற்பனையில் இருந்து நிறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த காரை அந்நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ வெப்சைட்டிலிருந்து நீக்கியுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

டூவீலர் வாங்கறப்ப 2 ஹெல்மெட் தரலேன்னா சட்டய புடிச்சு கேளுங்க

இந்தியாவில் சாலை விபத்துக்களில் (Road Accidents) 100 பேர் உயிரிழக்கிறார்கள் என்றால், அதில் 44 பேர், டூவீலர்களில் பயணம் செய்தவர்களாக உள்ளனர். எனவே டூவீலர்களில் பாதுகாப்பு வசதிகளை (Safety Features) அதிகரிப்பதற்கான முயற்சிகளில் மத்திய அரசு தற்போது மிகவும் தீவிரமாக உள்ளது.

காருக்குள் எதை செய்ய கூடாதோ அதை கரெக்ட்டா செய்றாங்க!!

ஆற்றல்மிக்க மற்றும் பெரிய அளவிலான எஸ்யூவி ரக கார்கள் வந்த பிறகு தொலைத்தூர பயணங்களை மேற்கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகி விட்டது. அவ்வப்போது இவ்வாறான தொலைத்தூர பயணங்களை மேற்கொள்வதற்காகவே சிலர் தங்களது எஸ்யூவி கார்களை அதற்கேற்ப மாற்றிக் கொண்டுள்ளதையும் பார்த்து இருக்கிறோம். அந்த வகையில் இங்கு ஒரு பீகார் மாநிலத்தை சேர்ந்த பாடகி ஒருவர் தனது மஹிந்திரா எக்ஸ்யூவி700 (Mahindra XUV700) காரை படுக்கை வசதி உடன் மாற்றி உள்ளார். இருப்பினும், அவரது இந்த செயல் கண்டனங்களுக்கு உள்ளாகி உள்ளது. என்ன நடந்தது? வாருங்கள் அதனை பற்றி இங்கே இந்த தொகுப்பில் பார்ப்போம்.

பணக்காரங்களுக்காகவே இந்த காரை கொண்டு வந்திருக்காங்க!

டொயோட்டா நிறுவனம் தனது புதிய லேண்ட் க்ரூஸர் 300 எஸ்யூவி காரில் ஹைபிரிட் வேரின்டை ஆஸ்திரேலிய மார்கெட்டில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கார் லேண்ட் க்ரூஸர் மாடலில் வரும் முதல் ஹைபிரிட் காராகும். இந்த கார் உலகம் முழுவதும் பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஆஸ்திரேலியாவில் இந்த கார் அறிமுகுமாகியுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
Advertisement

ஒவ்வொரு நாளும் 10,000 பேர் வாங்கும் இந்த பைக்கை தெரியுமா?

உலகிலேயே இருசக்கர வாகனங்கள் அதிகம் விற்பனையாகும் நாடுகளுள் இந்தியா முன்னிலை வகிக்கிறது. அந்த அளவிற்கு நம் நாட்டில் ஒவ்வொரு மாதமும் இலட்சக்கணக்கிலான 2-வீலர்கள் விற்பனையாகுகின்றன. கடந்த மே மாதத்திலும் அதே நிலை தான் தொடர்ந்துள்ளது. கடந்த மே மாதத்தில் அதிக பேரால் வாங்கப்பட்ட முதல் 10 2-வீலர்கள் மட்டுமே சுமார் கிட்டத்தட்ட 12 இலட்சம் வாகனங்கள் ஆகும். சரியாக சொல்ல வேண்டுமென்றால், முதல் 10 இடங்களில் உள்ள 2-வீலர்களின் ஒட்டுமொத்த விற்பனை எண்ணிக்கை மட்டும் 11 லட்சத்து 84 ஆயிரத்து 386 ஆகும். வழக்கத்தை காட்டிலும் இது அதிகமா? அல்லது குறைவா? என்பதை பற்றிய விரிவான விபரங்களையும், அந்த டாப்-10 2-வீலர்களை பற்றியும் இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

ஃபோக்ஸ்வேகன் கோல்ப் ஜிடிஐ காரை இளம் வயதில் டெலிவிரி பெற்றவர்

ஃபோக்ஸ்வேகன் (Volkwagen) நிறுவனத்தில் இருந்து சமீபத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட பவர்ஃபுல்லான செயல்திறன்மிக்க கார், கோல்ஃப் ஜிடிஐ (Golf GTI) ஆகும். ஃபோக்ஸ்வேகன் கோல்ஃப் காருக்கு உலகம் முழுக்கவே ரசிகர்கள் நிறைய பேர் இருக்கும் நிலையில், இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருப்பது செயல்திறன்மிக்க கோல்ஃப் ஜிடிஐ கார் ஆகும். இந்தியாவில் வெறும் 150 கோல்ஃப் ஜிடிஐ கார்களை மட்டுமே விற்பனை செய்ய திட்டமிட்டுள்ள ஃபோக்ஸ்வேகன் நிறுவனம், இந்த காரின் டெலிவிரிகளை சமீபத்தில்தான் துவங்கியது. அதாவது, விலையுயர்ந்த ஃபோக்ஸ்வேகன் கோல்ஃப் ஜிடிஐ கார்களை புக் செய்த வாடிக்கையாளர்களுக்கு டெலிவிரி கொடுக்கும் பணிகள் சமீபத்தில்தான் துவங்கப்பட்டன.

டொயோட்டால 31 கிமீ மைலேஜ் குடுக்கற காரா!

இந்திய சந்தையில் வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் பிரீமியம் ஹேட்ச்பேக் (Premium Hatchback) ரக கார்களில் ஒன்று டொயோட்டா க்ளான்சா (Toyota Glanza). நடப்பு 2025ம் ஆண்டு மே மாதம் டொயோட்டா க்ளான்சா காரின் விற்பனை எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

மொத்த பேரும் வாங்க விரும்பும் காரையா மஹிந்திரா மாற்ற போகிறது

மஹிந்திரா (Mahindra) நிறுவனத்தில் இருந்து தற்சமயம் சிறப்பாக விற்பனையாகும் கார்களுள் தார் (Thar) ஒன்றாகும். 3-கதவு தார் மற்றும் 5-கதவு தார் ராக்ஸ் என இரு விதமான வெர்சன்களில் தார் வாகனங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. கடந்த 2020ஆம் ஆண்டு இறுதியில் அறிமுகம் செய்யப்பட்ட 3-கதவு தார் வாகனத்திற்கு ஓரளவிற்கு சிறப்பான வரவேற்பு கிடைத்துவந்த நிலையில், கடந்த 2024ஆம் ஆண்டில் 5-கதவு தார் ராக்ஸ் வாகனத்தை மஹிந்திரா அறிமுகம் செய்தது. தார் ராக்ஸின் அறிமுகத்திற்கு பிறகு மஹிந்திரா தார் வாகனங்களின் விற்பனை மேலும் அதிகரிக்க ஆரம்பித்தது. கடந்த சில மாதங்களாக, மாதத்திற்கு 10 ஆயிரம் தார் வாகனங்களை அசால்ட்டாக மஹிந்திரா விற்பனை செய்து வருகிறது.
Advertisement

2030க்குள் இதை செஞ்ச தீருவோம்னு முடிவெடித்த மத்திய அரசு!

இந்தியா வரும் 2030ம் ஆண்டிற்கும் பயோ எனர்ஜி தேவையில் 50 சதவீதத்தை தானே உற்பத்தி செய்யும் என மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின்கட்கரி தெரிவித்துள்ளார். இது எந்த அளவிற்கு இந்தியாவிற்கு உதவப்போகிறது. ஏன் இதை இந்தியா செய்ய நினைக்கிறது? விரிவான விபரங்களை இங்கே காணலாம் வாருங்கள்.

நடக்க போற பயங்கரத்தை காரின் பின்னால் எழுதி வைத்த உரிமையாளர்!

இந்திய சாலைகளில் பயணம் செய்யும்போது, வாகனங்களின் பின்னால் வித்தியாசமான வாசகங்களை நீங்கள் பார்க்கலாம். இதில், சில வாசகங்கள் சமூக வலை தளங்களில் வைரல் ஆவது வாடிக்கையாக உள்ளது. இந்த வரிசையில் தற்போது ஒரு வாசகம் சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

ஒரே சுங்க சாவடி வழியா போய்ட்டு திரும்பிவந்தா 2 முறை கட்டணமா?

இந்தியா உள்பட எந்தவொரு நாட்டின் பொருளாதாரத்தையும் தீர்மானிக்க கூடிய முக்கியமான இடத்தில் நெடுஞ்சாலைகள் உள்ளன. அவை தற்போது விரைவான போக்குவரத்துக்கு ஏற்ப மாற்றப்பட்டு, அதற்கேற்ப பெயரும் விரைவுச்சாலைகள் என மாற்றப்பட்டுள்ளது. விரைவான போக்குவரத்தை பெற வேண்டுமெனில், அதற்கேற்ப சாலையும் தரமானவை ஆக இருக்க வேண்டியது அவசியமாகும். ஏனெனில், அப்போதுதான் விபத்து-இல்லா போக்குவரத்தை பெற முடியும். நெடுஞ்சாலைகள் மற்றும் விரைவுச்சாலைகளை தரமானவைகளாக அமைப்பதற்கும், புதியதாக வெவ்வேறு பகுதிகளில் அமைப்பதற்கும் நிறைய பணம் செலவாகும். மேலும், போடப்படும் சாலைகளை தொடர்ந்து பராமரிப்பதற்கும் பணம் தேவை. அதுவும், நம் இந்தியா போன்ற பரந்து விரிந்த நாட்டில் பல லட்ச கோடிக்கணக்கில் பணம் தேவைப்படும்.

ஹெல்மெட் போடாம வந்தவரை அவமானப்படுத்திய போலீசார்!

இந்தியாவில் டூவீலர் வாகன ஓட்டிகள் பலர் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஒட்டி சட்ட விதிமுறை மீறல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இப்படியாக சட்ட விதிமுறை மீறலில் ஈடுபட்ட ஒருவருக்கு டிராஃபிக் போலீசார் வித்தியாசமான பாடம் கற்று கொடுத்த வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவை பலர் பகிர்ந்து வருகின்றனர். இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
Advertisement

இவங்கலாம் ஒரு பைசா கூட டோல்கேட் கட்டணம் கட்ட வேண்டாம்!

இந்தியாவின் நெடுஞ்சாலைகளில் பயணம் செய்யும் மக்களுக்கு, டோல்கேட் கட்டணம் (Toll Gate Fees) மிகப்பெரிய சுமையாக இருந்து வருகிறது. அதுவும் அடிப்படை வசதிகள் எதுவும் முறையாக செய்யப்படாமலேயே, டோல்கேட்களில் அதிக கட்டணம் வசூல் செய்யப்படுவதாக மக்கள் குற்றச்சாட்டுக்களை முன் வைத்து வருகின்றனர்.

25 வருஷமா இந்த காரை யூஸ் பண்ணுற அந்த ஓனரை பார்த்தே ஆகனும்!!

மாருதி 800 (Maruti 800) காரை பற்றி அறியாதவர்கள் யாரும் இருக்க மாட்டீர்கள் என நினைக்கிறேன். ஏனெனில், அந்த அளவுக்கு 1980, 90 சமயங்களில் இந்தியா முழுக்க மிக பிரபலமாக இருந்த கார். கடந்த பல தசாப்தங்களாக விற்பனையில் ஆதிக்கம் செலுத்திவந்த இந்துஸ்தான் அம்பாசடாருக்கு (Hindustan Ambassador) முடிவுரை எழுதியது மட்டுமில்லாமல், இப்போது இன்றைய கால மாடர்ன் உலகிலும் மாருதி 800 கார் வேறு உருவத்தில் தொடர்ந்து விற்பனையில் இருப்பதுதான் இதில் ஆச்சிரியமான விஷயம் ஆகும். மாருதி 800 காரின் பெயரில் உள்ள 800 என்பது அதில் பொருத்தப்படும் 800சிசி பெட்ரோல் என்ஜினை குறிக்கிறது.

டெஸ்லா கார் இந்தியாவிற்கு சீக்கிரம் வந்துடும் போலயே!

டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் தனது காலடி தடத்தை எடுத்து வைக்க தயாராகி வரும் நிலையில் தற்போது இந்தியாவில் இந்த நிறுவனத்தின் கார்கள் ஆங்காங்கே காணப்படுகிறது. இப்படியாக கர்நாடக மாநிலத்தில் தற்காலிக பதிவெண் உடன் சில டெஸ்லா கார்கள் பார்க்கிங்கில் நிற்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

ஆக்டிவா இ ஸ்கூட்டரை விற்க ஹோண்டா எடுத்த முடிவு!!

ஹோண்டா ஆக்டிவா இ (Honda Activa E), சமீபத்தில் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் விற்பனைக்கு வந்த புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் (Electric Scooter). இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் நம்பர் ஒன் ஸ்கூட்டராக விளங்கும் ஹோண்டா ஆக்டிவாவின் எலக்ட்ரிக் வெர்சனாக களமிறக்கப்பட்டதினாலேயே அறிமுகத்திற்கு முன்பாக ஆக்டிவா இ ஸ்கூட்டருக்கு மக்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்ப்பு உருவானது. ஆனால், அந்த எதிர்பார்ப்புகளை எல்லாம் ஹோண்டா ஆக்டிவா இ எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பூர்த்தி செய்ததா என கேட்டால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். இது, ஆக்டிவா இ எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் கடந்த மாதங்களின் விற்பனை எண்ணிக்கைகளை பார்த்தாலே தெரிய வருகிறது.
Advertisement

வெளிநாட்டுகாரங்களுக்கு தான் இந்த காரோட மவுசு தெரியுது!

இந்தியாவில் கடந்த 2023ம் ஆண்டு மத்தியில் மாருதி நிறுவனம் தனது ஜிம்னி காரை விற்பனைக்கு கொண்டு வந்தது. இந்த கார் விற்பனைக்கு வந்தது. முதல் இந்தியாவில் விற்பனையாகிறதோ இல்லையோ வெளிநாட்டிற்கு அதிக அளவில் ஏற்றுமதியாகி வருகிறது. இந்த ஆஃப்ரோடர் கார் இந்தியாவிலும் அதிக விற்பனையாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வெளிநாட்டில் விற்பனை அதிகரித்துள்ளது பலரை ஆச்சரியப்படுத்தியுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.