தோனி விளம்பரம் பண்ணியும் யாருமே இந்த கம்பெனி காரை வாங்கலயே!

சிட்ரோயன் இந்தியா பிப்ரவரி 2025 இல் விற்பனையில் வீழ்ச்சியைக் கண்டது, 268 கார்களை மட்டுமே விற்றுள்ளது, போட்டி சந்தையில் இருக்கும் சவால்களை எடுத்துக்காட்டுகிறது.

எவ்வளவு வேகமா வந்திச்சோ அதே வேகத்தில் சரியும் ஓலா எலக்ட்ரிக்

எலக்ட்ரிக் கார்கள் (Electric Cars)-ஐ வாங்கும் அளவிற்கு இன்னும் நம் மக்களில் நிறைய பேர் தயாராக இல்லை என்பதை ஒப்புக் கொண்டுதான் ஆக வேண்டும். ஆனால், அதேநேரம் எலக்ட்ரிக் 2-வீலர்களின் விற்பனை மெல்ல, மெல்ல அதிகரித்துக் கொண்டே செல்கிறது. குறிப்பாக, எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் (Electric Scooters)-ஐ வாங்க நிறைய பேர் ஆர்வம் காட்டுகின்றனர். இதன் மூலமாகவே, முழுக்க முழுக்க எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை மட்டும் நம்பி பிஸ்னஸ் செய்யும் ஓலா எலக்ட்ரிக் (Ola Electric) இந்தியாவில் அதிக இரு சக்கர வாகனங்களை விற்பனை செய்யும் டாப்-10 நிறுவனங்களுள் ஒன்றாக இடம்பிடித்துள்ளது.

கார்களை விற்க போராடும் டாடா! எல்லாமே தலைக்கீழா மாறிடுச்சு!

டாடா மோட்டார்ஸ் (Tata Motors), இந்தியாவை சேர்ந்த முன்னணி உள்நாட்டு கார் உற்பத்தி நிறுவனங்களுள் ஒன்று. ஒவ்வொரு மாதமும் அசால்ட்டாக கிட்டத்தட்ட 50 ஆயிரம் கார்களை விற்பனை செய்யக்கூடிய பிரம்மாண்டமான நிறுவனமாக டாடா மோட்டார்ஸ் உள்ளது. ஆனால் என்ன... டாடாவை காட்டிலும் பிரம்மாண்டமான சில நிறுவனங்களும் இந்திய கார் மார்க்கெட்டில் உள்ளன. அவைதான், மாருதி சுஸுகி (Maruti Suzuki) மற்றும் ஹூண்டாய் (Hyundai) ஆகும். நடந்து முடிந்த 2025 பிப்ரவரி மாத விற்பனையில் இந்த வரிசையில் மஹிந்திரா (Mahindra)-வும் இணைந்துள்ளது.

இந்த இவி ஸ்கூட்டரை ஒரே மாசத்துல இவ்வளவு பேர் வாங்கிட்டாங்களா

2025 பிப்ரவரியில், இந்தியாவில் 21,389 யூனிட்களை விற்று பஜாஜ் செட்டக் மின்சார இருசக்கர வாகன விற்பனையில் முன்னிலை வகித்தது. இந்த வளர்ச்சி சுற்றுச்சூழல் நட்பு போக்குவரத்துக்கு ஒரு மாற்றத்தைக் குறிக்கிறது மற்றும் மின்சார வாகன சந்தையில் மாறிவரும் நுகர்வோர் விருப்பத்தையும் வெளிப்படுத்துகிறது.
Advertisement

சீன கார்கள் எல்லாம் இந்தியாவில் இல்லைனு யாருங்க சொன்னா?

பி.ஒய்.டி (BYD), சீனாவை சேர்ந்த முன்னணி எலக்ட்ரிக் கார் (Electric Car) நிறுவனங்களுள் ஒன்று. அண்டை நாடாக இருப்பினும், இந்தியாவில் சீன எலக்ட்ரிக் கார் நிறுவனங்கள் பெரியதாக காலூன்றியது இல்லை. இருப்பினும், பிஒய்டி நிறுவனம் இந்திய சந்தையில் தனது நெட்வொர்க்கை வலுப்படுத்திக் கொண்டே வருகிறது. 2007ஆம் ஆண்டிலேயே இந்தியாவில் மின்சாதன பொருட்களை உற்பத்தி செய்யக்கூடிய நிறுவனமாக நுழைந்து விட்டாலும், பிஒய்டி நிறுவனத்தில் இருந்து முதல் எலக்ட்ரிக் காராக இ6 (e6) கடந்த 2021ஆம் ஆண்டில்தான் அறிமுகம் செய்யப்பட்டது.

வெறும் 25 ஆயிரம் கையில இருந்தா ஆட்டோவை சொந்தமாக்கலாம்

பஜாஜின் கோகோ மின்சார மூன்றுசக்கர வாகனம், மேம்பட்ட அம்சங்களுடன் ரூ. 3.26 லட்சத்தில் இருந்து தொடங்கும் விலையில் அறிமுகமாகிறது, பயண வசதியை மேம்படுத்துகிறது.

இந்த ஒரு டெக்னாலஜி-காகவே இந்த புதிய கேடிஎம் பைக்கை வாங்கலாம்

கேடிஎம் (KTM), ஆஸ்திரியாவை சேர்ந்த உலகளவில் பிரபலமான பைக் நிறுவனம் என்பதை நான் கூற வேண்டியது இருக்காது என நினைக்கிறேன். இந்தியாவில் பஜாஜ் நிறுவனத்துடன் இணைந்து செயல்பட்டுவரும் கேடிஎம் நிறுவனம் ஒவ்வொரு வருடமும் அதன் பைக்குகளை அப்டேட் செய்வதை மறப்பது இல்லை. அந்த வகையில், அடுத்ததாக மேம்படுத்தப்பட்ட 2025 கேடிஎம் 390 ட்யூக் (390 Duke) பைக் மிக விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. ஷோரூம்களுக்கு வர துவங்கியுள்ள புதிய 390 ட்யூக்கின் விற்பனை ஒரு சில கேடிஎம் டீலர்ஷிப் ஷோரூம்களில் ஏற்கனவே துவங்கப்பட்டு விட்டதாக கூட கூறப்படுகிறது.

சாதாரண டிரெஸ்ல கார்ல போனது அவங்களா!

இந்தியாவில் திரையுலக நடிகைகளை அடிக்கடி சொகுசு கார்களில் (Luxury Cars) பயணம் செய்வதை காண முடியும். திரைப்படங்கள் மற்றும் விளம்பரங்களில் நடிப்பதற்கு ஒரு சில நடிகைகள் கோடி கணக்கில் சம்பளம் பெறுகின்றனர். எனவே மிகவும் விலை உயர்ந்த சொகுசு கார்களை வாங்குவது என்பது அவர்களுக்கு மிகவும் எளிமையான ஒரு விஷயமாக இருக்கிறது. குறிப்பாக பல்வேறு மொழிகளின் திரைப்படங்களில் நடிக்கும் நடிகைகள் எங்கு சென்றாலும் சொகுசு கார்களைதான் பயன்படுத்துகின்றனர். அந்த சமயங்களில் எடுக்கப்படும் அவர்களின் வைரல் வீடியோக்கள் (Viral Videos), சமூக வலை தளங்களில் பரவுவது வாடிக்கையாக உள்ளது.
Advertisement

கம்மி பெட்ரோல்ல ரொம்ப நாள் ஓடும் யமஹா பைக் வந்தாச்சு!

இந்தியாவின் முதல் ஹைப்ரிட் மோட்டார் சைக்கிள், 2025 யமஹா எப்.ஜேடு-எஸ்.பி.ஐ ஹைப்ரிட், 1,44,800 ரூபாய்க்கு, எரிபொருள் சிக்கனம் மற்றும் செயல்திறன் ஆகியவற்றிற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.

25 வருஷத்துக்கு பின் மொத்தமா வேற உருவத்தில் வரும் டாடா கார்!

டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனம் அடுத்ததாக மார்க்கெட்டில் அறிமுகம் செய்ய பல்வேறு புதிய கார்களை தயார் செய்து வருகிறது. அவற்றுள் ஒன்று, டாடா சியார்ரா (Sierra) ஆகும். சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற பாரத் மொபிலிட்டி எக்ஸ்போ 2025 (Bharat Mobility Expo 2025) கண்காட்சியில் காட்சிக்கு நிறுத்தப்பட்ட டாடா சியார்ரா காரின் தோற்றம் இவ்வாறுதான் இருக்கும் என்பதை வெளிக்காட்டும் விதமாக இந்த காரின் படம் ஒன்று இணையத்தில் கசிந்துள்ளது. 2025 டாடா சியார்ரா காரின் கிராஃபிக்ஸ் படமாக தற்போது இணையத்தில் லீக் ஆகியுள்ள படம் உள்ளது.

இந்திய கல்யாண ஊர்வலத்தில் வேற்று கிரக வாசிகளின் ஸ்பேஸ்ஷிப்!

இந்தியாவின் முன்பெல்லாம் திருமண ஊர்வலங்களில் குதிரைகள் பயன்படுத்தப்படும். குதிரை மீது மணமகன் கம்பீரமாக அமர்ந்து வருவார். ஆனால் தற்போதெல்லாம் இந்திய மக்களின் திருமண ஊர்வலங்களில் குதிரைகளை காண முடிவதில்லை. அதற்கு பதிலாக வாகனங்களை பயன்படுத்துகின்றனர். பூக்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில், மணமகனை அமர வைத்து ஊர்வலமாக அழைத்து வரும் வழக்கம்தான் தற்போது பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த ஊர்வலத்திற்கு பெரும்பாலும் சாதாரண கார்களைதான் இந்திய மக்கள் பயன்படுத்துகின்றனர். ஆனால் இந்தியர்களின் ஒரு திருமணத்தில் தற்போது டெஸ்லா சைபர்டிரக் (Tesla Cybertruck) பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஒரு ரூபாய் கூட ரேட்ட கூட்டல! இந்த கார் இப்ப ரொம்ப சேஃப்டி

டொயோட்டா இன்னோவா ஹைக்ரோஸ், அதன் வலுவான ஹைப்ரிட் வகைகளில் புதுமையான தொழில்நுட்பத்துடன் நடப்பவர்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் அகௌஸ்டிக் வாகன எச்சரிக்கை அமைப்பை கொண்டுள்ளது.
Advertisement

ஸ்பெளண்டர் பைக் இப்ப பழைய மாதிரி மாறிடுச்சு!

மேம்படுத்தப்பட்ட பிரேக்கிங், புதிய வண்ணங்கள் மற்றும் போட்டி விலையில் வரும் 2025 ஹீரோ ஸ்ப்ளெண்டரை கண்டுபிடி. அதன் அம்சங்கள் மற்றும் சந்தை நிலை பற்றி மேலும் அறிக.

வாங்கிய ஒரே வாரத்தில் சின்னாபின்னமான 90 லட்ச ரூபா கார்!

சொந்தமாக ஒரு புதிய காரை வாங்க வேண்டும் என்பது பலருக்கும் கனவு. குறிப்பாக ஆடி (Audi), மெர்சிடிஸ் பென்ஸ் (Mercedes Benz) மற்றும் பிஎம்டபிள்யூ (BMW) போன்ற ஜெர்மனி நிறுவனங்களின் சொகுசு கார்களை வாங்க வேண்டும் என்பதை பலரும் வாழ்நாள் லட்சியமாக வைத்துள்ளனர். இந்த லட்சியத்தை அடைவதற்காக அவர்கள் கடின உழைப்பையும் வெளிப்படுத்துகின்றனர். அப்படி கடின உழைப்பின் மூலம் வாங்கப்பட்ட விலை உயர்ந்த கார், யாரோ ஒருவருடைய அலட்சியத்தால் சேதம் அடைந்தால் எப்படி இருக்கும்? கண்டிப்பாக இது மன வருத்தத்தை ஏற்படுத்தும் ஒரு விஷயம்தான் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை.

மக்கள் கார் எல்லாம் வாங்கவே கூடாதுனு நெனைக்குறாங்களா என்ன..?

சி.என்.ஜி வாகனங்கள் (CNG Vehicles)-ஐ வாங்கும் மக்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பெட்ரோல்/ டீசல் எரிபொருளுக்கு பதிலாக மாற்று எரிபொருளை கொண்டுவர முயற்சிக்கும் மத்திய அரசாங்கத்தின் திட்டங்களில் சிஎன்ஜியும் ஒன்றாக உள்ளது. இதனாலேயே சிஎன்ஜி எரிபொருள் மீதான வரியை முடிந்தவரையில் குறைவாக நிர்ணயிக்க முயற்சித்து வருகிறது. மாநில அரசாங்கங்களும் அதே எண்ணத்துடன் தான் உள்ளன என்றாலும், சில அரசாங்கங்கள் அதிக வருவாய்க்காக சிஎன்ஜி மீதான வரிகளை சமீப காலத்தில் அதிகரித்துள்ளன. அந்த வரிசையில் தற்போது ஒரு மாநில அரசாங்கம் சிஎன்ஜி மீதான வரியை அதிகரிக்க போவதாக, தனது மாநில பட்ஜெட்டில் தெரிவித்துள்ளது.

தரைமட்ட விலையில் ஃபோக்ஸ்வேகன் இவி கார் வருது!

வோக்ஸ்வாகன் 2027 இல் அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய மலிவு மின்சார வாகனமான ID. EVERY1 ஐ வெளியிட்டுள்ளது, இது EV அணுகல் மற்றும் புதுமைப்படுத்துதலை மேம்படுத்துகிறது.
Advertisement

இந்த காரை வாங்கிய அந்த ஒருத்தரை பார்க்கனும் போல இருக்கு!!

ரோல்ஸ்-ராய்ஸ் (Rolls-Royce), உலகின் எவரொருவரும் வாங்க துடிக்கும் கார்களை உருவாக்கும் பழமையான அல்ட்ரா-லக்சரி கார் நிறுவனம். பெரும் செல்வந்தர்கள் கூட வாங்க விரும்பும் காராக ரோல்ஸ்-ராய்ஸ் கார்கள் விளங்குகின்றன. இன்னும் சொல்லப்போனால், பெரும் செல்வந்தர்களால் மட்டுமே ரோல்ஸ்-ராய்ஸ் கார்களை வாங்க முடிகிறது. ஏனெனில் அவற்றின் விலைகள் அந்த அளவிற்கு பல கோடி ரூபாய்களில் அதிகமாக நிர்ணயிக்கப்படுகின்றன. இதனாலேயே, இந்தியாவில் வருடத்திற்கு 50 - 60 கார்கள் விற்பனையாகினாலே ரோல்ஸ்-ராய்ஸ் நிறுவனம் மகிழ்ச்சி அடைந்துவிடும். இத்தகைய ரோல்ஸ்-ராய்ஸ் நிறுவனத்தில் இருந்து எலக்ட்ரிக் கார் (Electric Car) ஒன்றும் இந்தியாவில் விற்பனை செய்யப்படுகிறது.

முக்காடு போட்டுனு போனால் மட்டும் விட்ருவோமா - எம்ஜி மஜெஸ்டர்

எம்ஜி மோட்டார் (MG Motor), சீனாவின் SAIC மோட்டார் நிறுவனத்தின் கீழ் செயல்படும் பிரிட்டிஷ் கார் நிறுவனம் ஆகும். இந்தியாவில் சமீபத்தில்தான் பிரபலமான ஜே.எஸ்.டபிள்யூ (JSW) நிறுவனத்துடன் இணைந்து செயல்பட துவங்கியது. இந்த கூட்டணிக்கு பிறகு இந்தியாவில் எம்ஜி மோட்டாரின் செயல்பாடுகள் யாவும் அப்படியே மொத்தமாக மாறிவிட்டன என்றுதான் சொல்ல வேண்டும். குறிப்பாக, எலக்ட்ரிக் கார் (Electric Car)-களில் எம்ஜி மோட்டார் அதிக கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளது. அதிலிலும் குறிப்பாக, கோமெட் இவி (Comet EV), விண்ட்சர் இவி (Windsor EV) போன்ற விலை குறைவான எலக்ட்ரிக் கார்கள் எம்ஜி மோட்டாரில் இருந்து அறிமுகமாகின.

இப்ப வெறும் 17பேர் தான் வாங்கிருக்காங்க!

MPV பிரிவில் கடுமையான போட்டியின் மத்தியில், 17 வாடிக்கையாளர்களை மட்டுமே ஈர்த்து, மகிந்திரா மராஸோ பிப்ரவரி 2025 இல் 66% விற்பனை குறைவை எதிர்கொள்கிறது.

பெற்றோருக்கு வெளிநாட்டில் இருக்கும் மகனின் சர்பிரைஸ் கிஃப்ட்

பெற்றொருக்கு பரிசுகளை வழங்குவது என்பது எந்தவொரு மகன்/ மகளுக்கும் மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்வாகும். அவ்வாறு கொடுக்கும் பரிசுகளை சர்பிரைஸ் (Surprise)-ஆக பெற்றொருக்கு கொடுக்கும்போது மகிழ்ச்சி இன்னும் அதிகமாக இருக்கும். அவ்வாறுதான், இங்கு ஒருவர் தனது பெற்றொருக்கு சர்பிரைஸ் பரிசாக டொயோட்டா ஹைரைடர் (Toyota Hyryder) காரை வாங்கிக் கொடுத்துள்ளார். அப்போது ஷோரூமில் எடுக்கப்பட்ட வீடியோவில், மகன் மற்றும் பெற்றொருக்கு இடையே அன்பு மழை வழிந்தோடி உள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம். வாருங்கள் செய்திக்குள் போகலாம்.
Advertisement

31 கிமீ போக வெறும் 83 ரூபாதான் செலவாகுமா!

இந்திய சந்தையில் பிரீமியம் ஹேட்ச்பேக் ரக கார்களுக்கு (Premium Hatchback Cars) தனி டிமாண்ட் உள்ளது. ஹூண்டாய் ஐ20 (Hyundai i20), டொயோட்டா க்ளான்சா (Toyota Glanza) மற்றும் டாடா அல்ட்ராஸ் (Tata Altroz) என ஏராளமான பிரீமியம் ஹேட்ச்பேக் ரக கார்கள் இருந்தாலும் கூட, இந்த செக்மெண்ட்டில் முழுமையாக ஆதிக்கம் செலுத்தி கொண்டிருப்பது என்னவோ மாருதி சுஸுகி பலேனோதான் (Maruti Suzuki Baleno). நடப்பு 2025ம் ஆண்டு பிப்ரவரி மாதமும் கூட, இந்தியாவின் பிரீமியம் ஹேட்ச்பேக் செக்மெண்ட்டில் மாருதி சுஸுகி பலேனோ காரின் ஆதிக்கம் தொடர்ந்துள்ளது.

போலி சுங்கச்சாவடினு எப்படியெல்லாம் யோசிக்குறாங்க பாருங்க!!

சுங்கச்சாவடி கட்டணங்கள் (Toll Booth Fees) நாட்டின் சாலைகளை மேம்படுத்துவதற்கும், அவற்றை தொடர்ந்து பராமரிப்பதற்கும் மிக முக்கியமான தேவை ஆகும். பொருளாதாரத்தில் வளர்ந்த நாடுகள் கூட சுங்கச்சாவடி கட்டணங்களை வாகன ஓட்டிகளிடம் இருந்து வசூலிக்கின்றன. அதிலிலும், நம் இந்தியா போன்ற நாட்டில் சுங்கச்சாவடி கட்டணங்களை வசூலிக்காமல், புது புது நெடுஞ்சாலைகளை அமைக்கவே முடியாது என்கிற நிலைமை உள்ளது. ஆனால், மக்களிடம் இருந்து அதிக சுங்கச்சாவடி கட்டணங்கள் வசூலிக்கப்படுவதாக அரசாங்கம் மீது ஒரு தவறான பார்வை நம் மக்களிடையே உள்ளது.

28 நாளில் 3000 பேர் இந்த காரை வாங்கிட்டாங்க!

பிப்ரவரி 2025 இல், மகிந்திராவின் மின்சார எஸ்யூவிகள், அதிக தேவை மற்றும் புதுமையான அம்சங்களால் இயக்கப்பட்டு, ஒரு சாதனை விற்பனையைப் பதிவு செய்து, பிராண்டின் சந்தை வலிமையை வெளிப்படுத்தின.

0% வட்டியில் இவி காருக்கு கடன் வழங்கும் பெரிய நிறுவனம்!

ஐரோப்பாவில் வாடிக்கையாளர் ஆர்வம் குறைந்து போராட்டங்கள் எழுந்த நிலையில், விற்பனையை அதிகரிக்க டெஸ்லா 0% வட்டி கடன் மற்றும் இலவச வாழ்நாள் சார்ஜிங் வழங்குகிறது.
Advertisement

33 கிமீ மைலேஜ் குடுக்கற காரோட விலை இவ்ளோதானா!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக திகழ்ந்து கொண்டுள்ள கார்களில் ஒன்று மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் (Maruti Suzuki Swift). கடந்த 2005ம் ஆண்டு மே மாதம் மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் கார் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. கிட்டத்தட்ட 20 வருடங்கள் கடந்த பின்னரும் கூட, இந்திய சந்தையில் மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரின் விற்பனை எண்ணிக்கை ஒவ்வொரு மாதமும் தொடர்ந்து சிறப்பாக இருந்து வருகிறது. இது நடப்பு 2025ம் ஆண்டு பிப்ரவரி மாதமும் தொடர்ந்துள்ளது.