வாங்க வந்த காரை விட ஷோரூமுக்கு ஓட்டி வந்த கார் விலை அதிகம்!!
ஆட்டோமொபைல்
- 1 year, 6 month, 12 days ago
ஒருவரது வாழ்க்கை எப்போது எவ்வாறு மாறும் என்றே யூகிக்க முடியாது என்பதால், எவரையும் தர குறைவாக நினைப்பது தவறு. நேற்று வரை கேலி செய்யப்பட்டு வந்தவர்கள் இன்று புகழின் உச்சிக்கு சென்று சம்பவங்களை எல்லாம் தினசரி வாழ்க்கையில் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். அவ்வாறு ஒரு சமயத்தில் இணையத்தில் மக்களின் கேலி, கிண்டலுக்கு ஆளாகிக் கொண்டிருந்தவர், ரூ.10 லட்சத்திற்கும் அதிகமான விலையில் புதியதாக பிராண்ட்-நியூ காரை வாங்கும் அளவிற்கு சென்றுள்ளார். அவரை பற்றியும், அவர் வாங்கியுள்ள காரை பற்றியும் தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.