ஏபிஎஸ் உடன் 2025 பஜாஜ் பல்சர் என்.எஸ்125 பைக்!!

பஜாஜ் ஆட்டோ (Bajaj Auto), இந்தியாவின் முன்னணி 2-வீலர் நிறுவனங்களுள் ஒன்று. பஜாஜின் அடையாளமே அதன் பல்சர் (Pulsar) பைக்குகள் எனலாம். இதனாலேயே அவ்வப்போது புது, புது பல்சர் பைக்குகளை அறிமுகம் செய்ய பஜாஜ் மறப்பது இல்லை. அந்த வகையில், பல்சர் என்.எஸ்125 (NS125) பைக்கில் புதியதாக ஏபிஎஸ் (ABS) வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய பல்சர் என்.எஸ்125 பைக்கை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

இதுக்கு 32,000 அபராதமா! ராயல் என்பீல்டு ஓனர் அதிர்ச்சி!

வாகனங்களில் நம்பர் பிளேட் எப்படி இருக்க வேண்டும்? என்பதை மோட்டார் வாகன சட்டம், 1988 தெளிவுபடுத்துகிறது. நம்பர் பிளேட்கள் எந்த நிறத்தில் இருக்க வேண்டும்? என்ன ஃபாண்ட் பயன்படுத்தப்பட வேண்டும்? என அனைத்து விஷயங்களும் மோட்டார் வாகன சட்டம், 1988-ல் தெளிவாக கூறப்பட்டுள்ளன. ஆனால் ஒரு சில வாகன உரிமையாளர்கள் இதை எல்லாம் பொருட்படுத்துவதில்லை. தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப நம்பர் பிளேட்களை டிசைன் செய்து கொள்கின்றனர். இது சட்ட விரோதமான செயல் என்பதை அவர்கள் உணர்வது இல்லை.

பல்சரை ஓரம்கட்டபோகும் ஹோண்டா பைக் வந்தாச்சு!

ஹோண்டா மோட்டார்சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா, ரூ. 1,68,499 விலையில் NX200 என்ற அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிளை அறிமுகப்படுத்தியுள்ளது. இது மேம்பட்ட தொழில்நுட்பம் மற்றும் சக்திவாய்ந்த செயல்திறனை கொண்டுள்ளது.

இந்தியாவே எதிர்பார்த்த கார்களின் புக்கிங் இன்று துவங்குகிறது

மகிந்திரா தனது எலக்ட்ரிக் ஓரிஜின் SUV வரிசையை விரிவுபடுத்தும் வகையில் BE 6 மற்றும் XEV 9e ஆகியவற்றை அறிமுகப்படுத்தியுள்ளது. விரைவில் பதிவு தொடங்கும், சிறந்த செயல்திறன் விவரக்குறிப்புகளை வழங்குகிறது.
Advertisement

நம்பர் 1 இ-காராக மாறிய விண்ட்ஸர் இவி! ஓ... இதுதான் காரணமா..

எலெக்ட்ரிக் கார் (Electric Car)-ஐ வாங்கலாம்னு இருக்கீங்களா?.. இந்தியாவின் பெஸ்ட் செல்லிங் எலெக்ட்ரிக் கார் மாடல் எது என உங்களுக்கு தெரியுமா?.. இதைதான் நீங்கள் தேடிக் கொண்டிருக்கின்றீர்கள் என்றால் உங்கள் தேடலை நிறுத்திக் கொள்ளுங்கள். இந்தியாவின் பெஸ்ட் செல்லிங் எலெக்ட்ரிக் கார் மாடல் எம்ஜி விண்ட்ஸர் இவி (MG Windsor EV) ஆகும். ஆமாங்க, இந்தியாவில் மிக அதிகமாக இந்த கார் மாடலே விற்பனையாகிக் கொண்டிருக்கின்றது. முன்னதாக இந்த இடத்தை டாடா நெக்ஸான் இவி (Tata Nexon EV) அலங்கரித்து வந்தது குறிப்பிடத்தகுந்தது.

யாருக்கும் தெரியாமல் கமுக்கமா போன வெளிநாட்டு கார்!!

டொயோட்டா லேண்ட் க்ரூஸர் பிராடோ Toyota Land Cruiser Prado), வெளிநாட்டுகளில் ஏற்கனவே விற்பனையில் உள்ள விலையுயர்ந்த டொயோட்டா கார். இது நம் இந்தியாவில் காட்சி தந்துள்ளது. இந்தியாவில் டொயோட்டா லேண்ட் க்ரூஸர் பிராடோ கார் விரைவில் அறிமுகம் செய்யப்படலாம் என ஒரு பேச்சு உள்ளது. இந்த நிலையில் இந்தியாவில் இந்த கார் கொண்டுச் செல்லப்பட்டுள்ளது. கார் ஓட்டிச் செல்லப்படவில்லை, லாரி ஒன்றில் கொண்டு செல்லப்பட்டுள்ளது. அப்போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று யூடியூப் (Youtube)-இல் வெளியாகி உள்ளது. என்னவா இருக்கும்? வாருங்கள் அதனை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

சார்ஜிங் பாயிண்ட்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் டாடா.இவி

டாடா மோட்டார்ஸ் (Tata Motors), இந்தியாவின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனம் என்பது நம் எல்லாருக்குமே தெரிந்த விஷயம். இந்தியாவில் எலக்ட்ரிக் கார் (Electric Car)-கள் விற்பனையில் கடந்த சில வருடங்களாகவே ஈடுப்பட்டுவரும் நிறுவனம் டாடா ஆகும். இன்னும் சொல்லப்போனால், இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் எலக்ட்ரிக் கார்களை விற்பனை செய்யக்கூடிய நிறுவனமாகவும் டாடா மோட்டார்ஸ் விளங்குகிறது. இந்த நிலையில், நாட்டில் சார்ஜிங் நிலையங்களின் எண்ணிக்கையை தற்போது இருப்பதை காட்டிலும் இரு மடங்கு அதிகரிக்க போவதாக டாடா மோட்டார்ஸ் அறிவித்துள்ளது.

மாருதி காரால் கரப்பான் பூச்சி போல குப்புற கவிழ்ந்த டாடா கார்

இரும்புப் பெட்டகத்திற்கே சவால் விடுக்கும் அளவிற்கு அதிக பாதுகாப்பைத் தரக் கூடியதாக டாடா (Tata Motors) நிறுவனம் தயாரிக்கும் கார்கள் இருக்கின்றன. அப்பேற்பட்ட டாடா நிறுவன காரையே, மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனத்தின் தயாரிப்பு ஒன்று விபத்தில் கரப்பான் பூச்சியைப் போல கவிழ்த்து போட்டு இருப்பதாக அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதை உறுதிப்படுத்தும் விதமாக இந்த விபத்து சம்பவத்திற்கு பின்னர் எடுக்கப்பட்ட வீடியோ இணையத்தில் வெளியாகி இருக்கின்றது.
Advertisement

இளம் பாடகர் வாங்கிய 2 கோடி மதிப்பிலான ரேஞ்ச் ரோவர் வோக் கார்

ரேஞ்ச் ரோவர் (Range Rover) கார்களுக்கு உலகம் முழுவதிலும் வரவேற்பு உள்ளதை பற்றி நான் கூற வேண்டியது இருக்காது என நினைக்கிறேன். ஏனெனில், அந்த அளவிற்கு சினிமா பிரபலங்கள் போட்டிக் போட்டுக் கொண்டு ரேஞ்ச் ரோவர் கார்களை வாங்குவதை தொடர்ச்சியாக நமது செய்தி தளத்தில் பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் தற்போது இளம் பாடகர் ஒருவர் ரேஞ்ச் ரோவர் காரை வாங்கியுள்ளார். யார் அந்த பாடகர் என்பதையும், அவர் வாங்கியுள்ள ரேஞ்ச் ரோவர் காரை பற்றியும் இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

விஜய்க்கு ஜோடியா நடிச்சிட்டு சாதாரண கார்ல போறாங்க!

திரைப்பட நடிகைகள் பெரும்பாலும் மிகவும் விலை உயர்ந்த சொகுசு கார்களில்தான் பயணம் செய்வார்கள். குறிப்பாக விமான நிலையங்களுக்கு வரும்போதும், விமான நிலையங்களில் இருந்து வீடு அல்லது ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு செல்லும்போதும், நடிகைகள் மிகவும் விலை உயர்ந்த கார்களை பயன்படுத்துவதை நாம் அடிக்கடி பார்க்கலாம். விமான நிலையங்கள் என்பதால், அப்போது பொதுமக்கள் உள்ளிட்ட நபர்களால் எடுக்கப்படும் வீடியோக்கள் வைரலாக பரவும். இந்த வரிசையில் பிரபல நடிகை ஒருவரின் வைரல் வீடியோ (Viral Video) ஒன்று தற்போது வேகமாக பரவி வருகிறது.

பயண நேரத்தை 10மணி நேரம் வரை குறைக்க போகும் புதிய ரயில்..

புதிய அதி-வேக ரயிலை பயன்பாட்டிற்குக் கொண்டு வருவதற்கான வேலையில் அரசு களமிறங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அந்த புதிய அதிக வேக ரயில், சென்னை - ஹைதராபாத் இடையேயான பயணத்தை வெறும் 2 மணி நேரங்களிலேயே மேற்கொள்ளும் அளவிற்கு அதிக வேகத்தில் இயங்கக் கூடியது இருக்கும் என தற்போது வெளியாகி இருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தகவல் ரயில் பயணிகளை மட்டுமல்லாமல் விமான பயணிகளின் கவனத்தையும் மிகப் பெரிய அளவில் கவர்ந்திருக்கின்றது.

ஓய்வு பெற்ற பிறகுதான் எல்லாம் கை கூடுது! இது யார் தெரிகிறதா?

எம்ஜி மோட்டார் (MG Motor) நிறுவனத்தில் இருந்து அறிமுகம் செய்யப்பட்டு மொத்த இந்திய கார்கள் மார்க்கெட்டையே புரட்டிப் போட்ட எலக்ட்ரிக் கார், விண்ட்சர் இவி (Windsor EV) எனலாம். ஏனெனில், அந்த அளவிற்கு விலை குறைவான எலக்ட்ரிக் காராக விண்ட்சர் இவி விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில் இத்தகைய காரை முன்னாள் இந்திய ஹாக்கி (Hockey) வீரர் தற்போது வாங்கியுள்ளார். யார் அந்த ஹாக்கி வீரர் என்பதையும், அவர் வாங்கியுள்ள எம்ஜி எலக்ட்ரிக் காரை பற்றியும் இனி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம், வாங்க.
Advertisement

இந்தியா வருகிறது சீன தேசத்து கடல் சிங்கம்!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள கார்களில் ஒன்று பிஒய்டி சீலயன் 7 (BYD Sealion 7). இது சீனாவை சேர்ந்த பிஒய்டி நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார் (Electric Car) ஆகும். ஜனவரி மாதம் நடைபெற்ற 2025 ஆட்டோ எக்ஸ்போவில், பிஒய்டி சீலயன் 7 எலெக்ட்ரிக் கார் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. அதே நேரத்தில் இந்த எலெக்ட்ரிக் காருக்கு முன்பதிவுகளை (Bookings) ஏற்கும் பணிகள் கடந்த ஜனவரி 18ம் தேதி தொடங்கப்பட்டன. விருப்பம் உள்ள வாடிக்கையாளர்கள் 70 ஆயிரம் ரூபாயை செலுத்தி பிஒய்டி சீலயன் 7 எலெக்ட்ரிக் காரை முன்பதிவு செய்து கொள்ளலாம்.

ஏசி வசதியுடன் ஐசிஎஃப்-இல் தயாரான லோக்கல் ரயில்! சென்னைக்கா!!

வந்தே பாரத் மற்றும் சென்னை மெட்ரோ ரயில்களுக்கு சவால் விடும் வகையில் லோக்கல் இஎம்யூ ரயில் தயார் செய்யப்பட்டு இருக்கின்றது. ஏசி வசதி மற்றும் பல அட்வான்ஸ்டு வசதிகளுடன் இந்த ரயில் செய்யப்பட்டு இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. சென்னையில் உள்ள ஐசிஎஃப் ரயில் பெட்டி தொழிற்சாலையிலேயே இந்த ரயில் தயார் செய்யப்பட்டு இருக்கின்றது. தென் இந்தியாவில் தயார் செய்யப்படும் முதல் ஏசி வசதிக் கொண்ட லோக்கல் இஎம்யூ ரயில் இதுவே ஆகும்.

டிக்கெட் கேன்சல் பண்ணா இவ்வளவும் பணம் பிடிப்பாங்களா?

ரிசர்வேஷன் கட்டணங்கள் மற்றும் ஜிஎஸ்டி உட்பட இந்திய ரயில்வே டிக்கெட் ரத்து செய்வதற்கான திரும்பப் பெற முடியாத கட்டணங்களைப் பற்றி அறிக. வெவ்வேறு வகுப்புகளுக்கு என்ன கட்டணங்கள் பொருந்தும் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.

இன்னோவா கார் என்றாலே கடன் வாங்கியாச்சும் வாங்கிவிடும் மக்கள்

டொயோட்டா (Toyota), ஜப்பானை சேர்ந்த பிரபலமான கார் தயாரிப்பு நிறுவனம். சுஸுகி (Suzuki) உடன் இணைந்து செயல்பட்டுவரும் டொயோட்டா, இந்தியாவிலும் கார்கள் விற்பனையில் முன்னணியில் உள்ளது. நம் நாட்டில் ஒவ்வொரு மாதமும் டொயோட்டா கார்களின் விற்பனை ஆனது அதிகரித்து வருகிறது. அந்த வகையில் கடந்த 2025 ஜனவரி மாதத்தில் எத்தனை டொயோட்டா கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன என்பதை பற்றி தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம். வாருங்கள் செய்திக்குள் போகலாம்.
Advertisement

அம்பானிக்கு இவ்ளோ கடவுள் பக்தியா.. வாடக காருல போயிருக்காரு!

உத்தரபிரதேசத்தின் பிரக்யராஜில் எங்கு பார்த்தாலும் இப்போது மக்கள் தலையாகவே தெரிகின்றது. பெங்களூருவின் டிராஃபிக்கையே மிஞ்சும் அளவிற்கு இந்தியாவின் இந்த சிறிய நகரத்தில் தற்போது டிராஃபிக் பலமடங்காக அதிகரித்துக் காணப்படுகின்றது. அங்கு நடைபெறும் மஹா கும்ப மேளாவில் கலந்துக் கொள்ள மக்கள் கூட்டம் படையெடுத்துக் கொண்டிருக்கின்றது. ஆகையால், வழக்கமாக ஆக போக்குவரத்து நேரமும் பன்மடங்காக அதிகரித்திருக்கின்றது. அயோத்தியில் இருந்து பிரக்யராஜ்க்கு செல்ல பொதுவாக வெறும் 4 மணி நேரம் வரை ஆகும்.

ஒன்னே முக்கா கோடி ரூபா காரில் பிரபல நடிகை!

இந்தியாவை கடந்து உலகம் முழுக்க பிரபலமாக உள்ள நடிகைகளில் ஒருவர் பிரியங்கா சோப்ரா (Priyanka Chopra). கடந்த 2002ம் ஆண்டு விஜய் (Vijay) நடிப்பில் வெளியான தமிழன் (Thamizhan) திரைப்படத்தில் பிரியங்கா சோப்ரா நடித்திருந்தார். இதுதான் பிரியங்கா சோப்ராவின் முதல் திரைப்படம். அதற்கு பிறகு அவர் தமிழ் திரைப்படங்களில் தலைகாட்டவே இல்லை. ஹிந்தி மற்றும் ஆங்கில மொழி படங்களில் பிஸியாகி விட்டார். தற்போது 42 வயதாகும் பிரியங்கா சோப்ரா, உலகம் முழுக்க கொண்டாடப்படும் நடிகைகளில் ஒருவராக மாறி விட்டார்.

147 கி.மீ பாதை தெரியாமல் சென்ற சரக்கு ரயில்!

264 எஸ்யூவிகளை ஏற்றிச் சென்ற ஒரு ரயில், 147 கி.மீ தூரம் தடம் மாறிச் சென்றது. மத்தியப் பிரதேசத்தின் கந்த்வா ரயில் நிலையத்தில், தீவிர எச்சரிக்கை காரணமாக, பேரழிவு தவிர்க்கப்பட்டது.

காரை ரோட்டோரம் பார்க் பண்ணா இப்படிலாம் கூட ஆகுமா!

கார் உரிமையாளர்கள் சந்தித்து வரும் மிக மோசமான பிரச்னைகளில் ஒன்று பார்க்கிங். குறிப்பாக, நகரங்களில் வசிப்பவர்களே இந்த சிக்கலுக்கு அதிகம் ஆளாகின்றனர். அதேவேளையில், முறையற்ற பார்க்கிங்கே பல்வேறு போக்குவரத்து பிரச்னைகளுக்கு காரணமாக இருக்கின்றன என்பதை நாம் இங்கே ஒப்புக் கொண்டுதான் ஆக வேண்டும். இதனாலேயே முறையற்ற பார்க்கிங் விஷயத்தில் காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுத்து வருகின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே முறையற்ற பார்க்கிங் மீது நடவடிக்கை எடுப்பதாகக் கூறி ஓர் போலீஸ் கான்ஸ்டபிள் மிகப் பெரிய மோசடியில் ஈடுபட முயற்சித்த சம்பவம் அரங்கேறி இருக்கின்றது.
Advertisement

தமிழகத்திற்கு அடிக்கப்போகுது ஜாக்பாட்!

இந்திய பிரதமர் மோடி மற்றும் எலான் மஸ்க் இந்தியாவில் டெஸ்லாவின் நுழைவு மற்றும் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணைய சேவையின் தொடக்கம் பற்றி விவாதிக்க உள்ளனர்.

உலகை அண்ணாந்து பாக்க வைத்த இந்தியாவின் குட்டி விமானம்!

கர்நாடக மாநில தலைநகர் பெங்களூர் நகரில், ஏரோ இந்தியா 2025 (Aero India 2025) நிகழ்ச்சி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் இன்று காலை (பிப்ரவரி 13), ஹெச்டிடி-40 (HTT-40) விமானத்தில், பாஜக (BJP) முக்கிய தலைவர்களில் ஒருவரும், பெங்களூர் தெற்கு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான தேஜஸ்வி சூர்யா (Tejasvi Surya) பயணம் செய்தார். இந்தியாவின் ராணுவ விமான போக்குவரத்தில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படும் ஹெச்டிடி-40 விமானத்தில் தேஜஸ்வி சூர்யா சுமார் 30 நிமிடங்கள் பயணித்தார்.

ரகசியமாக நடந்த இஸ்ரோ ராக்கெட் இன்ஜின் சோதனை!

இஸ்ரோ, ககன்யான் பயணத்தின் வெற்றி மற்றும் எதிர்கால விண்வெளி ஆய்வுகளுக்கு முக்கியமான சிஇ-20 இயந்திரத்தின் வெற்றிட ஏற்றம் சோதனையை வெற்றிகரமாக நடத்தியது.

ரோட்டுல ஆக்ஸிடென்ட் நடக்குறதுக்கு இதுவும் ஒரு காரணம்!

சமீபத்திய ஆய்வு மேம்படுத்தப்பட்ட டிரைவர் உதவி அமைப்புகளை மதிப்பீடு செய்து, டிரைவிங் பாதுகாப்பை சமரசம் செய்யக்கூடிய க்ரூஸ் கன்ட்ரோலுடன் தொடர்புடைய ஆபத்துகளை கண்டறிந்துள்ளது.
Advertisement

வெறும் 90 ஆயிரம் ரூபாய் தான்! 2025 ஹோண்டா ஷைன் 125 அறிமுகம்

ஹோண்டா மோட்டார்சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா (Honda Motorcycle & Scooter India) நிறுவனத்தில் இருந்து மிகுந்த வரவேற்புக்கு மத்தியில் விற்பனை செய்யப்படும் பைக்குகளுள் ஒன்று, ஷைன் 125 (Shine 125) ஆகும். இதனாலேயே இந்த பைக்கை அவ்வப்போது அப்டேட் செய்ய ஹோண்டா நிறுவனம் மறப்பது இல்லை. அந்த வகையில், தற்போது ஷைன் 125 பைக் மேம்படுத்தப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பைக்கில் முக்கியமாக ஒபிடி2பி அப்டேட் (OBD2B Update) கொண்டுவரப்பட்டுள்ளது. புதிய 2025 ஹோண்டா ஷைன் 125 பைக்கை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.