புதிய பிஎம்டபிள்யூ பைக்கை எந்த வேரியண்ட்டில் வாங்குவது?

பி.எம்.டபிள்யூ மோட்டார்ராட் (BMW Motorrad) நிறுவனத்தில் இருந்து புதியதாக எஃப் 450 ஜிஎஸ் (F 450 GS) என்கிற அட்வென்ச்சர் ரக மோட்டார்சைக்கிள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் உதவியுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த பைக் ஆனது முன்பு விற்பனையில் இருந்த பிஎம்டபிள்யூ ஜி 310 ஜிஎஸ் (G 310 GS) என்கிற அட்வென்ச்சர் பைக்கின் இடத்தை நிரப்பும் பொருட்டு விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

காரில் பயணிக்கும்போது குமட்டலை தவிர்ப்பது எப்படி?

Top 10 Tips To Beat Motion Sickness — Now Travel Without Worrying.

சிந்தெட்டிக் ஆயில் Vs சாதாரண ஆயில்: சிறந்தது எது?

Read in Tamil: Mineral Oil vs Synthetic Oil: Advantages And Disadvantages.

 

பஜாஜ் ஃப்ரீடம் 125 CNG பைக் வேரியன்ட்கள் மற்றும் விலை

உலகின் முதல் மற்றும் ஒரே CNG பைக் எது என்பதை தனியே சொல்லத் தேவையில்லை. பஜாஜ் ஃப்ரீடம் 125 (Bajaj Freedom 125) தான் அது. பெட்ரோல் மற்றும் CNG என இரண்டு வகையான எரிபொருள்களிலும் இயங்கும் திறனுடன், பெட்ரோல் மற்றும் CNG-க்கு தனித்தனி டேங்குகளுடன் இந்த பைக் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இந்த பைக் இப்போது எத்தனை வேரியன்ட்களாக, என்ன விலையில் விற்பனை செய்யப்படுகிறதென்று தெரியுமா? வாங்க பார்க்கலாம்.
Advertisement

எத்தனை பேரை உள்ளே ஏற்றுனாலும் இன்னும் இடம் கொடுக்கும்!

எம்ஜி மெஜஸ்டர் (MG Majestor) கார் இந்திய சந்தையில் ஏப்ரல் 27ஆம் தேதியான இன்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது. ஜே.எஸ்.டபிள்யூ எம்ஜி மோட்டார் (JSW MG Motor) நிறுவனத்தின் புதிய ஃபுல்-சைஸ் எஸ்யூவி (Full-size SUV) காரான மெஜஸ்டர், ஏற்கனவே வெளியீடு செய்யப்பட்டுவிட்ட நிலையில், விலைகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு கார் இன்று விற்பனைக்கு கொண்டுவரப்பட உள்ளது.

ஒரே சமயத்தில் 8- 9 பேர் போகக்கூடிய 7 புதிய எம்பிவி கார்கள்!

எஸ்யூவி (SUV) வகை கார்களுக்கு ஒருபக்கம் மார்க்கெட் தொடர்ந்து பெரியதாகி கொண்டு வரும் நிலையில், மறுப்பக்கம் எம்பிவி (MPV) வகை கார்களுக்கும் மார்க்கெட் தொடர்ந்து விரிவடைந்து வருகிறது. ஏனெனில், உட்புறத்தில் அதிக இடவசதியை வழங்கும் எம்பிவி வகை கார்களை வாங்கவும் கடந்த சில வருடங்களில் பலர் விரும்ப ஆரம்பித்துள்ளனர். அதனை பயன்படுத்திக் கொள்ளும் விதமாக, விரைவில் இந்திய சந்தையில் விற்பனைக்குவர உள்ள எம்பிவி கார் மாடல்களை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

கார் மெயின்டெனன்ஸுக்கு இந்த 5 டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க!!

நம் அனைவரும் புதியதாக ஒரு காரை வாங்க வேண்டும் என்பது வாழ்நாள் இலட்சியமாக இருக்கலாம். இதனை சிலர் நிறைவேற்றி இருப்பீர்கள், சிலர் இன்னமும் கனவு கண்டு கொண்டுதான் இருப்பீர்கள். இது அவரவர் பொருளாதார சூழ்நிலையை பொறுத்தது. ஏனெனில் பொதுவாகவே, காரை வாங்குவது என்பதும், அதனை முறையாக பயன்படுத்துவது என்பதும் செலவு மிகுந்த விஷயமாக பார்க்கப்படுகிறது.

பிஎம்டபிள்யூ எஃப் 450 ஜிஎஸ் பைக் ஓட்டுவதற்கு எப்படி இருக்கு?

2024ஆம் ஆண்டில் இத்தாலியின் மிலனில் நடந்த EICMA கண்காட்சியில், பி.எம்.டபிள்யூ மோட்டார்ராட் (BMW Motorrad) நிறுவனம் எஃப் 450 ஜிஎஸ் (F 450 GS) பைக்கின் கான்செப்ட்டை காட்சிப்படுத்தியது. நடுத்தர எடை கொண்ட அட்வென்ச்சர் பைக் (Adventure Bike) பிரிவில் ஒரு புதிய பிஎம்டபிள்யூ ஜிஎஸ் பைக் வரவிருப்பதை இது உணர்த்தியது. ஒரு வருடம் கழித்து, பிஎம்டபிள்யூ தனது வாக்குறுதியை நிறைவேற்றி, முன்பு விற்பனையில் இருந்த ஜி310 ஜிஎஸ் (G 310 GS) பைக்கிற்குப் பதிலாக, டிவிஎஸ் (TVS) உடனான கூட்டு முயற்சியில் உருவாக்கப்பட்ட பிஎம்டபிள்யூ எஃப் 450 ஜிஎஸ் பைக்கை சமீபத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது.
Advertisement

இவ்ளோ கம்மியான விலையில் இன்னொரு 7 சீட்டர் காரா!

பிரான்ஸை (France) சேர்ந்த ரெனால்ட் (Renault) நிறுவனம் இந்திய சந்தையில் தற்போது சுறுசுறுப்பாக செயல்பட தொடங்கியுள்ளது. முன்பு ரெனால்ட் நிறுவனம் ஒட்டுமொத்தமாக 3 கார்களை மட்டுமே இந்திய சந்தையில் விற்பனை செய்து வந்தது. அவை ரெனால்ட் க்விட் (Renault Kwid), ரெனால்ட் கைகர் (Renault Kiger) மற்றும் ரெனால்ட் ட்ரைபர் (Renault Triber) ஆகியவை ஆகும்.

லிட்டருக்கு 19 கிமீ மைலேஜ் தரும் காரை மேம்படுத்தும் மாருதி!

மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனத்தில் இருந்து அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்படும் கார்களுள் பிரெஸ்ஸா (Brezza) ஒன்றாகும். மாருதி சுஸுகியின் சப்-காம்பாக்ட் எஸ்யூவி (Sub-Compact SUV) ரக காரான இது இந்த 2026ஆம் ஆண்டில் புதிய ஃபேஸ்லிஃப்ட் (Facelift) அப்கிரேடை பெற உள்ளது. இந்த நிலையில், புதிய பிரெஸ்ஸா ஃபேஸ்லிஃப்ட் கார் அறிமுகத்திற்கு முன்னதாக சோதனை ஓட்டத்தின்போது அடையாளம் காணப்பட்டுள்ளது.

டாடா சியரா டர்போ பெட்ரோல் இன்ஜின் மைலேஜ் விவரங்கள்

தங்களது மிட்-சைஸ் எஸ்யூவி மாடலான சியராவில் மூன்று இன்ஜின் தேர்வுகளை டாடா கொடுத்துள்ளது. 1.5 லிட்டர் டீசல், 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் பெட்ரோல் ஆகிய மூன்று இன்ஜின் தேர்வுகளைக் கொடுத்துள்ளத. இதில் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் பல ஆண்டுகளாக டாடாவின் மற்ற கார் மாடல்களிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜினோ அந்நிறுவனம் முற்றிலும் புதிதாக உருவாக்கியது.

33 கிமீ மைலேஜ்! விலை வெறும் 5.79 லட்சம் மட்டுமே!

இந்திய சந்தையில் கடந்த சில வருடங்களாகவே எஸ்யூவி ரக கார்கள்தான் (SUV Cars), முழுமையாக ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இதன் காரணமாக செடான் ரக கார்களுக்கு (Sedan Cars) வரவேற்பு குறைந்து விட்டது. ஆனால் ஹேட்ச்பேக் ரக கார்களின் (Hatchback Cars) விற்பனை தொடர்ந்து சிறப்பாகவே இருந்து வருகிறது.
Advertisement

லாங் டிராவல் அடிக்கடி மேற்கொள்ள ஏற்ற 6 பைக்குகள்!

பைக்கில் அவ்வப்போது தொலைத்தூர பயணங்களை மேற்கொள்ளும் வழக்கம் நம்மில் பலரிடம் உள்ளது. ஆனால், தொலைத்தூர பயணங்களுக்கு எந்த மோட்டார்சைக்கிள்கள் ஏற்றவையாக இருக்கும் என்பது சிலருக்கு தெரியவில்லை. அனைத்து பைக்குகளிலும் தொலைத்தூர பயணங்களை மேற்கொள்ளலாம் என நினைக்கின்றனர். ஆனால் உண்மையில், குறைந்த சிசி என்ஜின் கொண்ட பைக்குகள் தொலைத்தூர பயணங்களுக்கு ஏற்றவை அல்ல.

பென்ஸ் காரை வாங்கும் தொகையில் இத்தனை கார்களை வாங்கலாமா?

மெர்சிடிஸ்-பென்ஸ் (Mercedes-Benz) நிறுவனத்தில் இருந்து பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் புதிய 'சிஎல்ஏ எலெக்ட்ரிக்' (CLA Electric) கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பென்ஸ் காராக இருப்பினும், இதன் அறிமுகத்திற்கு பலத்த எதிர்பார்ப்பு உருவானதற்கு காரணம், இது இந்தியாவிலேயே விலை குறைவாக பென்ஸ் காராக களமிறக்கப்பட்டுள்ளது. அதுவும், எலெக்ட்ரிக் பென்ஸ் கார் ஆக...

இந்த 6 எஸ்யூவி கார்களை விட்டால் பெஸ்ட் ஆப்ஷன் எதுவும் இல்ல!

நிமிர்ந்த கம்பீரமான தோற்றம் மற்றும் அதிக உட்புற இடவசதிக்காக எஸ்யூவி (SUV) வகை கார்களின் விற்பனை சமீப ஆண்டுகளில் வெகுவாக அதிகரித்துள்ளது. இதனாலேயே இன்றைய காலக்கட்டத்தில் சாலைகளில் அதிகளவில் எஸ்யூவி கார்களை பார்க்க முடிகிறது. இதற்கேற்ப கார் நிறுவனங்களும் புது, புது எஸ்யூவி கார்களை தொடர்ச்சியாக அறிமுகம் செய்து வருகின்றன.

டிவிஎஸ் எக்ஸ்.எல் பைக் வாங்கும் விலையில் புதிய இ-ஸ்கூட்டர்!

செலியோ இ-மொபிலிட்டி (Zelio E-Mobility) நிறுவனம் அதன் புதிய கிரேசி (Gracy) எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை 2026ஆம் ஆண்டை முன்னிட்டு அப்கிரேட் செய்து அறிமுகம் செய்துள்ளது. டெல்லியில் பாரத் மண்டபத்தில் நடைபெற்ற ரைடுஆசியா இவி எக்ஸ்போ 2026 (RideAsia EV Expo 2026) கண்காட்சியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை பற்றிய விரிவான விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.
Advertisement

மாருதி சுஸூகி இக்னிஸ் ஹேட்ச்பேக்கிற்கான சலுகைகள்

இந்தியாவில் மாருதி சுஸூகி நிறுவனம் விற்பனை செய்து வரும் விலை குறைவான கார் மாடல்களுள் ஒன்று இக்னிஸ் (Ignis) ஹேட்ச்பேக். இதனை தங்களுடைய ப்ரீமியம் டீலர்ஷிப் நெட்வொர்க்கான நெக்ஸா ஷோரூம்கள் மூலம் அந்நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. இந்த ப்ரீமியம் ஹேட்ச்பேக் காரை தற்போது சலுகைகளுடன் குறைவான விலையில் வாடிக்கையாளர்கள் வாங்கலாம்.

இந்தியாவில் 4 புதிய பைக்குகளை வெளியிடும் கிளாஸிக் லெஜெண்ட்ஸ்

சில நாட்களுக்கு முன்பு இந்தியாவில் இரண்டு பைக் மாடல்களை வெளியிட்ட கிளாஸிக் லெஜெண்ட்ஸ் (Classic Legends) நிறுவனம், இந்தியாவில் மேலும் நான்கு புதிய பைக் மாடல்களை வெளியிடவிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சில நாட்களுக்கு முன்பு தான் இந்தியாவில் 'BSA ஸ்கிராம்பிளர் 650' மற்றும் அப்டேட் செய்யப்பட்ட 'யெஸ்டி ஸ்கிராம்பிளர் 350' ஆகிய பைக் மாடல்களை வெளியிட்டது கிளாஸிக் லெஜெண்ட்ஸ்.

இந்த டிவிஎஸ் பைக்கை வெறும் 5 பேர்தான் வாங்கியிருக்காங்க!

இந்திய சந்தையில் ஒரு சமயத்தில் வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்த பைக்குகளில் ஒன்று டிவிஎஸ் ஸ்டார் சிட்டி ப்ளஸ் (TVS Star City Plus). இதன் விற்பனை தற்போது நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. ரஸ்லேன் தளத்தில் வெளியாகியுள்ள சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) இதை நமக்கு தெளிவாக எடுத்து காட்டுகிறது.

உங்கள் காரில் ஏற்படும் சத்தத்தை நிறுத்த என்ன வழி?

ரோல்ஸ் ராய்ஸ் காரில் உலகின் சொகுசு அம்சங்கள் நிறைந்த வாகனங்களில் ஒன்று. அந்த கார் தயாரிக்க பயன்படுத்தப்படும் பாகங்கள் பெரும்பாலும் விலை மதிப்பு மிக்க பாகங்களாக இருக்கின்றன. இந்த காரின் சொகுசுக்கு முக்கிய காரணம் காரில் இருந்து எந்த சத்தமும் வராதது தான். இந்த கார் ஆன்னில் இருக்கிறதா இல்லையா என்பது கூட தெரியாத அளவிற்கு இருக்கும்.

Advertisement

மஹிந்திரா XUV 3XO எஸ்யூவியில் CNG பவர்ட்ரெயின் விரைவில்

மாருதி, டாடா மோட்டார்ஸ், டொயோட்டா, ரெனோ, நிஸான் ஆகிய நிறுவனங்களைத் தொடர்ந்து மஹிந்திராவும் CNG மார்க்கெட்டில் கால் பதிக்கவிருக்கிறது. தற்போது பெட்ரோல், டீசல் மற்றும் எலெக்ட்ரிக் ஆகிய பவர்ட்ரெயின்களுடன் கார் மாடல்களை மஹிந்திரா விற்பனை செய்து வரும் நிலையில், CNG பவர்ட்ரெயின் கொண்ட கார்களையும் விற்பனை செய்வதில் அந்நிறுவனம் அதிக ஆர்வம் காட்டுவதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

ஃபார்ச்சூனருக்கு போட்டியாக எம்ஜி கார் - ஓட்டுவதற்கு எப்படி?

எம்ஜி மோட்டார் (MG Motor) நிறுவனம், பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 (Bharat Mobility Global Expo) கண்காட்சியில் இந்திய சந்தைக்கான பல்வேறு புதிய கார்களை அறிமுகப்படுத்துவதாக அறிவித்தது. அவற்றுள், எம்ஜி சைபர்ஸ்டர் (Cyberster) என்கிற எலெக்ட்ரிக் கன்வெர்டிபிள் ஸ்போர்ட்ஸ் கார் மற்றும் எம்ஜி எம்9 (M9) என்கிற எலெக்ட்ரிக் எம்பிவி கார்கள் ஏற்கனவே சந்தைக்கு வந்துவிட்டன. ஆனால், ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக எதிர்பார்க்கப்படும் எம்ஜி மெஜஸ்டர் (MG Majestor) எஸ்யூவி, தற்போது இறுதியாக களமிறங்க தயாராக உள்ளது.

நிஸான் கார்கள் லீஸ் அல்லது சந்தா திட்டம் அறிமுகம்

இந்தியாவில் பல்வேறு வகைகளிலும் தங்களது வணிகத்தைப் பெருக்க முயற்சி செய்து வருகிறது நிஸான். அந்த வகையில் புதிய முயற்சியாக, இந்தியாவில் தாங்கள் விற்பனை செய்து வரும் கார் மாடல்களை லீஸ் (Lease) அல்லது சந்தா முறையில் வழங்கும் அம்சத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறது. இந்தியாவில் தற்போது மேக்னைட் (Magnite) மற்றும் கிராவைட் (Gravite) ஆகிய இரண்டு மாஸ் மார்க்கெட் கார் மாடல்களை நிஸான் விற்பனை செய்து வருகிறது.

ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 35 கிமீ மைலேஜ் தரும் கார்

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் (Maruti Suzuki Fronx). மிகவும் கவர்ச்சிகரமாக டிசைன் (Design) செய்யப்பட்டுள்ள காரணத்தாலும், ஏராளமான அதிநவீன வசதிகள் (Features) வழங்கப்படுவதாலும், இது இந்தியாவில் ஒவ்வொரு மாதமும் மிகவும் அதிகமாக விற்பனையாகி வரும் கார்களில் ஒன்றாக உள்ளது.
Advertisement

புதிய எலெக்ட்ரிக் பென்ஸ் காரை எந்த வேரியண்ட்டில் வாங்குவது?

மெர்சிடிஸ்-பென்ஸ் (Mercedes-Benz) நிறுவனம் இந்தியாவில் அதன் புதிய 'சிஎல்ஏ எலெக்ட்ரிக்' (CLA Electric) காரை விற்பனைக்கு அறிமுகப்படுத்தி உள்ளது. முன்பு விற்பனையில் இருந்த சிஎல்ஏ காரின் அடுத்த பரிணாம வளர்ச்சியாக, எலெக்ட்ரிக் காராக இது கொண்டுவரப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனத்தில் இருந்து இந்தியாவில் விற்பனை நிறுத்தப்பட்ட ஏ-கிளாஸ் லிமௌசைன் (A-Class Limousine) மற்றும் இ.க்யூ.ஏ (EQA) மற்றும் இ.க்யூ.பி (EQB) கார்களின் இடத்தை நிரப்பும் பொருட்டும் இது விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.